Sunday, July 3, 2022

அன்று யுவராஜ் சிங் இன்று பும்ரா ஒரு ஓவரில் அதிக ஓட்ட சாதனை


 இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே  2021இல் துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில்   இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது இரத்து செய்யப்பட்ட போட்டி தற்போது பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. 

1 ஆவது வீரராகக் களம் இறங்கிய பும்ரா ஒரு ஓவரில் 35  ஓட்டங்கள் அடித்து புதிய சாதனை படைத்தார்.இந்தியாவின் ப்டனாக செயல்படும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு  இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியை பறக்க விட்டார். அதனால் பும்ராவுக்கு எதிராக பவுன்சரால் அச்சுறுத்த முயன்ற ஸ்டூவர்ட் பிராட் அடுத்தடுத்து 2 நோ-பால் வீசினார். அதற்காக அசராத பும்ரா பவுண்டரியும் சிக்சரும் பறக்க விட்டு 2, 3, 4 ஆகிய பந்துகளில் அடுத்தடுத்த ஹாட்ரிக் பவுண்டரிகளை தெறிக்கவிட்டு 5-வது பந்தில் மெகா சிக்சரை பறக்க விட்டு கடைசி பந்தில் ஒரு ஓட்டம் எடுத்தார்.

4, 5, 7, 4, 4, 4, 6, 1 என ஒரே ஓவரில் 35 ஓட்டங்களை தெறிக்கவிட்ட ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற முரட்டுத்தனமான வரலாற்று உலக சாதனை படைத்தார்.  சிராஜ் ஆட்டமிழந்ததால் இறுதியில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்கள்  கூட ஒரு ஓவருக்கு 20 – 30 ஓட்டங்கள் அடிப்பது கடினம். ஆனால் துடுப்பாட்டம்  பற்றி பெரிதாக தெரியாமல் 10-வது இடத்தில் களமிறங்கிய   தன்னை அச்சுறுத்த முயன்ற ப்ராட்க்கு தக்க பதிலடி கொடுத்த ஜஸ்பிரித் பும்ரா 35 ஓட்டங்களை பறக்கவிட்டு ஜாம்பவான் பிரையன் லாரா, ஜார்ஜ் பெய்லி, கேஷவ் மஹராஜ் (தலா 28 ஓட்டங்கள்) ஆகியோரது உலக சாதனையை முறியடித்து இந்த அபார சாதனை படைத்துள்ளது அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

டெஸ்ட் ,ரி20 என 2 வகையான கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிகஓட்டங்களை வாரி வழங்கிய வள்ளல் பவுலராக ஸ்டூவர்ட் பிராட் பரிதாப சாதனையும் படைத்துள்ளார். கடந்த 2007இல் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற ரி20 உலக கிண்ணப் போட்டியில்   ஸ்டூவர்ட் ப்ராடை பிரித்து மேய்ந்து இந்தியாவின் யுவராஜ் சிங் 6 பந்துகள் 6 சிக்ஸர்கள் அடித்து 36 ஓட்டங்கள் பறக்க விட்டு உலக சாதனையை படைத்ததை ரசிகர்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள். அந்த நிலைமையில் இதை பார்த்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இது பும்ராவாயுவராஜ் சிங்கா என்று கலகலப்புடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரி20 கிரிக்கெட்டில் கைரன் பொல்லார்ட் இலங்கையில் அகிலா தனஞ்சயாவை 36 ஓட்டங்களை அடித்து சாதனை படைத்தாலும் அடித்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 35 அடிப்பதெல்லாம் நூற்றாண்டில் ஒரு முறை கூட நடைபெறாத சம்பவமாகும்.

No comments: