Tuesday, July 12, 2022

உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியனான 94 வயது பாட்டி


 உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூன் 29 முதல் ஜூலை 10 வரை ஃபின்லாந்தின் டாம்பயர் நகரத்தில் நடைபெற்றது. இது35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கான தடகளப் போட்டித் தொடராகும். 

டாம்பயரில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீற்றர்ர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவைச் சேர்ந்த 94 வயதான பகவானி தேவி தங்கப் பதக்கம் வென்றார். அவர் 100 மீற்றர் இலக்கை 24.74 வினாடிகளில் கடந்து வெற்றிவாகை சூடினார்.

  அவர் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீற்றர் ஸ்பிரிண்ட் போட்டியில் 24.74 வினாடிகளில் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். விளையாட்டில் சாதனை புரிவதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை பகவானி தேவி நிரூபித்துள்ளது உண்மையிலேயே பாராட்டுக்குரிய முயற்சி!," என்று விளையாட்டுத் துறை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ட்வீட் செய்தது.

தடகளம் மட்டுமின்றி குண்டு எறிதல் பிரிவிலும் அவர் வெண்கலப் பதக்கத்துடன் மொத்தமாக மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

No comments: