உலகின் முன்னணி வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டன் பணவீக்கம், பொருளாதாரச் சரிவு மத்தியிலும் ரெசிஷன் பயத்தில் நடுங்கி இயங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்சன் இராஜிநாமா செய்துள்ளார்.
அமைச்சர்கள்
அடுத்தடுத்து இராஜிநாமாச் செய்தனர். பாராளுமன்றத்தில்
எதிர்கட்சியினர் அதிகப்படியான நெருக்கடியை உருவாக்கினர். இதனால் ஒரே நாளில் பிரிட்டன் அரசு தலைகீழாக மாறியது,
24 மணிநேரத்தில் 4 முக்கிய அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில் பிரிட்டன்
பிரதமர் போரிஸ் ஜோன்சன் பதவி விலகும் அளவிற்கு நெருக்கடி உருவாகியுள்ளது.
பிரிட்டன்
அரசின் துணை தலைமை விப் மற்றும் வீட்டுச்சேவைத் துறையின் கருவூல தலைவரான கிறிஸ் பின்சர்
குடிபோதையில் இரண்டு ஆண்களைத் தவறான இடத்தில் தொட்டதாகவும், இதில் ஒருவர் கிறிஸ் பின்சர்
அலுவலகத்தில் பணியாற்றுபவர். போரிஸ் ஜோன்சன் இந்தச் சம்பவம் பிரிட்டன் பாராளுமன்றத்தில்
நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கும் வரையில் கொண்டு சென்ற நிலையில், கிறிஸ் பின்சர் போரிஸ்
ஜோன்சன்-க்கு மிகவும் நெருங்கியவர் என்பதால் பதவியை இராஜினாமா செய்யக் கூறிவிட்டு எவ்விதமான
நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இதோடு கொரோனா தொற்றுக் காலத்தில் பிரிட்டன் முழுவதும்
லாக்டவுனில் கொரோனா தொற்றுக் காலத்தில் பிரிட்டன் முழுவதும் முடங்கி இருந்த வெலையில்
போரிஸ் ஜோன்சனும், அவருடைய சகாக்களும் (அதில்
பிரிட்டன் நிதியமைச்சரான ரிஷி சுனக்-ம் அடக்கம்) பிரதமர் வீட்டில் மது விருந்து நடத்தினர். போரிஸ் ஜோன்சன் தலைமையில் பிரிட்டன் அரசின் முக்கிய
அமைச்சர்கள் பெரும்பாலானோர் அவர்களுடைய அலுவலகத்தில் மது அருந்தும் வழக்கத்தைக் கொண்டு
உள்ளனர். இது 2020ல் இருந்து பல முறை பத்திரிக்கையாளர்களிடம் பிரிட்டன் அமைச்சர்கள்
சிக்கினர்.
தொற்றுக் கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும்போதே போரிஸ் ஜோன்சன் தனது அலுவலகமான 10 ஆம் இலக்க வாசஸ்தலத்தில் தனது பிறந்த நாள் விருந்து உட்படப் விருந்ளையும், கூட்டத்தையும் நடத்தியுள்ளார். அலுவலகத்தில் மது அருந்தும் நடவடிக்கைக்காகப் பிரிட்டன் பாராளுமன்றத்தின் நடவடிக்கையின் வாயிலாகச் சுமார் 83 பேர் மீது 126 அபராதங்கள் விதிக்கப்பட்டது. முதல் முறையாகப் பிரிட்டன் பிரதமர் அபராதம் கட்டினார்.
இந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாத போரிஸ் ஜோன்சன் அமைச்சரவையில் இருந்து முதலாவதாகப் பிரிட்டன் அரசின் துணை தலைமை விப் மற்றும் வீட்டுசேவை துறையின் கருவூல தலைவரான கிறிஸ் பின்சர் தனது பதவியை ராஜினாமா செய்யப்பட்டார், பின்னர்க் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ரி இதைத் தொடர்ந்து 42 வயதான பிரிட்டன் அரசின் நிதியமைச்சரும், இன்போசிஸ் நிறுவனர் நாராணயமூர்த்தியின் மருமகன் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், போரிஸ் ஜோன்சன் தனது தவறுகளுக்கு மன்னிப்பு கேட்ட சில நொடியில் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான மாநிலச் செயலாளரான சாஜித் ஜாவித்-ம் ராஜினாமா செய்தார். சாஜித் ஜாவித் பிரிட்டன் நிதி துறையிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியலில் ரிஷி சுனக்-கிற்கு 10 வருடம் மூத்தவர். வில் குயின்ஸ் ரிஷி சுனக், சாஜித் ஜாவித் ஆகியோர் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான அமைச்சரான வில் குயின்ஸ் ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். லாரா ட்ராட் வில் குயின்ஸ்-ஐ தொடர்ந்து ஜூனியர் போக்குவரத்து அமைச்சரான லாரா ட்ராட், போரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கையைத் தான் இழந்ததால் பதவி விலகுவதாகக் கூறியுள்ளார். செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் ரிஷி சுனக் ராஜினாமா செய்ததை அடுத்து ஈராக்கில் பிறந்த கல்வித்துறை செயலாளரான நாதிம் ஜஹாவி-யை புதிய நிதியமைச்சராக நியமித்தார்
கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் என சுமார் 54 பேர் இராஜினாமா செய்தனர். இதனால் போரிஸ் ஜோன்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது. இந்தச் சூழலில் போரிஸ் ஜோன்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமர் தேர்வு செய்யும் வரை இடைக்கால பிரதமராகத் தொடர உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். அவர் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. போரிஸ் ஜோன்சன் ராஜினாமா செய்துள்ள நிலையில், அவருக்குப் பதிலாக வேறு யார் பிரதமர் பதவியை ஏற்பார் என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
ரிஷி சுனக்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 42 வயதான ரிஷி சுனக்,
பிரிட்டன் பிரதமராக நியமிக்கப்பட வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது. கொரோனா முடக்க சமயத்தில் சிறு தொழில்கள் மற்றும் ஊழியர்களுக்கு
ஒரு பெரிய உதவி தொகுப்பை அறிவித்ததால் இவர் பிரபலம் ஆனார். இவர் பெரியளவில் சர்ச்சையில்
சிக்கவில்லை என்றாலும் கூட, நாடு முடங்கி இருந்தபோது விருந்தில் கலந்து கொண்டதற்காக போரிஸ் ஜோன்சன் உடன்
இவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. பஞ்சாபைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், இன்ஃபோசிஸ்
நிறுவனர் என்ஆர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பென்னி மோர்டான்ட்
பிரிட்டன் வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டான்ட் வலுவான
பிரெக்ஸிட் பார்வை கொண்டவர். அவருக்கும் கட்சியில் வலுவான சப்போர்ட் உள்ளது. மக்கள்
செல்வாக்கு கொண்டு நல்ல தலைமைப் பண்புகளைக் கொண்ட தலைவராக பென்னி மோர்டான்ட் கருதப்படுகிறார்.
ஜான்சனுக்குப் பின், அந்த இடத்தை இவர் நிரப்பும் வாய்ப்புகள் அதிகம். கடந்த காலங்களில்
இவர் பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். பிரிட்டன் நாட்டின் முதல்
பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெயரையும் பெற்றவர்.
பென் வாலஸ்
பென் வாலஸ் இங்கிலாந்தின் பாதுகாப்புச் செயலாளராக
உள்ளார். செய்தியாளர் சந்திப்பின் போது, சிக்கலான கேள்விகளுக்கும் மழுப்பாமல் நேரடியாக
பளிச் என இவரது பதில்கள் இருக்கும். இதற்காகவே இவருக்கு அங்கு ரசிகர்கள் அதிகம். அவர்
ஸ்காட்ஸ் காவலர்களில் பணியாற்றினார். இப்போது ரஷ்யா-உக்ரைன் போருக்கு இங்கிலாந்தின்
பிரதிநிதியாகவும் உள்ளார். போரிஸ் ஜான்சன் ஆதரவாளராகக் கருதப்படும் இவர், தொடர்ந்து
ராணுவத்திற்கு அதிக தொகையைக் கேட்டு வலியுறுத்தி வரும் நபர்களில் ஒருவர் ஆவர்.
சஜித் ஜாவித்
பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட அமைச்சர் சஜித் ஜாவித்துக்கும் வாய்ப்புகள் அதிகம். கடந்த ஆண்டு லாக்டவுன் சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இவர் சுகாதார அமைச்சரானார். சான்சிலராக இருந்த சமயத்திலும் இவர் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளார். ஜாவித் பிரதமராகத் தேர்வு செய்யும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. இருப்பினும், சமீபத்தில் தான் இவர் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட உள்ளதாகக் கூறி இருந்ததால் என்ன நடக்கும் எனத் தெரியாது.
லிஸ் டிரஸ்
லிஸ் டிரஸ் இப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், போரிஸ் ஜான்சனுக்கு தொடர்ந்து சிக்கலைக்
கொடுத்து வந்தார். பிரெக்ஸிட் மற்றும் உக்ரைன் போரில் பிரிட்டனில் இருந்த வந்த குரல்களில்
முக்கியமானவர். வெளியுறவு செயலாளராக உக்ரைன் போர் சமயத்தில் ரஷ்யத் தொழில் அதிபர்கள்
மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்ததற்காக இவர் புகழைப் பெற்றார்.
மார்கரெட் தாட்சர், டோனி பிளேயர் , தெரசா மே போன்றோரை
போலல்லாமல், வாக்காளர்களைக் காட்டிலும் தங்கள் கட்சிகளால் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்,
போரிஸ் ஜோன்சனால் தலை நிமிர்ந்து வெளியேற முடியவில்லை.ஜோன்சன் தனது ஆளுமை மற்றும் நடத்தையில்
உள்ள குறைபாடுகள் காரணமாக அவமானத்துடன் வெளியேறுகிறார், ஏராளமான அமைச்சர்கள் தங்கள்
ராஜினாமா கடிதங்களில் புகார் அளித்துள்ளனர்.
அவரது பிரதமர் பதவியை முடிவுக்குக் கொண்டுவந்தது கொள்கை தோல்வியல்ல. இது ஏமாற்று வேலைகள் அல்லது க்ரோனி ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்ட பண ஊழல் அல்ல. இது உண்மையில் பார்வைக் குறைபாடு அல்ல. ஜான்சனில் என்ன செய்தார் என்பது அவரது நிலையான குலுக்கல், நெசவு மற்றும் வாத்து. அவரது பிரித்தல். தொடர்ச்சியான ஊழல்கள் - கொரோனா வைரஸ் லாக்டவுன் பார்ட்டிகள், அவரது உத்தியோகபூர்வ குடியிருப்பை புதுப்பித்தல் மற்றும் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு கூட்டாளியை நியமித்தல் போன்றவற்றின் மீதான அவரது முன்கோபங்கள் அவரைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்துள்ளன.
No comments:
Post a Comment