Friday, July 8, 2022

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா பின்னடைவு

 ஐசிசி துவக்க டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பழம்பெருமை பேசியே   நியூசிலாந்திடம் கோப்பையைத் தாரை வார்த்த இந்திய அணி இந்த முறை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறுவது பெரிய சவால்தான்.

தற்போது அவுஸ்திரேலியா அணி 9 போட்டிகளில் 6 இல் வென்று 3 ட்ராவுடன் 84 புள்ளிகளுடன் வெற்றி சதவீதம் 77.78 உடன் முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 7-ல் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 60 புள்ளிகளுடன் வெற்றி சதவீதம் 71.43 உடன் 2ம் இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் அணி 7-ல் 3வெற்றி, 2 ட்ரா, 2 தோல்வி என்று 44 புள்ளிகளுடன் 52.38% உடன் 3ம் இடத்தில் உள்ளது. 4வதாக இந்தியா 12-ல் 6-ல் வெற்றி, 4ல் தோல்வி 2 ட்ரா 75 புள்ளிகளுடன் 52.08 வெற்றி சதவீதத்துடன் 4ம் இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை உள்ளது அதன் பிறகுதான் 7ம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது.

வெளிநாட்டு  3 தொடர் தோல்விகள் இப்போது இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கனவை லேசாக ஆட்டிப்பார்த்துள்ளது. இதோடு 40%   சம்பள அபராதத்துடன் 2 புள்ளிகளையும் ஸ்லோ ஓவர் ரேட்டில் இழந்துள்ளது. இதனால் 4ம் இடத்துக்கு பாகிஸ்தானுக்குக் கீழே வந்து விட்டது.

இந்த நிலைமையில் இந்தியா எப்படி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்ற  கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த ஆண்டின் இறுதி டெஸ்ட் போட்டிக்கு முன் இந்தியாவுக்கு இன்னும் 6 டெஸ்ட் போட்டிகளே மீதமுள்ளன. பங்களாதேஷில் 2 டெஸ்ட் போட்டிகள், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகள் உள்ளன.

இந்த 6 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வென்றாக வேண்டும். ஸ்லோ ஓவர்ரேட் விவகாரமெல்லாம் இல்லாமல் வெற்றி பெற்றால் இந்தியா 72 புள்ளிகளைப் பெறும். இதன் மூலம் 68.05% வெற்றி விகிதமாக உயரும். இப்படி முடிந்தால் முதலிடத்தில் முடியும். ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா என்பது தெரியவில்லை. 

மாறாக முதலிடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு இன்னும் 10 போட்டிகள் மீதமுள்ளன. இலங்கைக்கு எதிராக 1, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3, இந்தியாவுக்கு எதிராக 2. இந்தியாவிடம் 0௪ என்று தோற்பது கடினம், அப்படியே தோற்றாலும் மீதமுள்ள 4 டெஸ்ட்களை வென்று அவுஸ்திரேலிலிய முதலிடத்தைத் தக்க வைக்க முடியும்.இந்தியா முதலிடம் வர வேண்டுமெனில் அவுஸ்திரேலியா குறைந்தது 4 போட்டிகளில் தோல்வி அடைந்து ஒன்றில் ட்ரா செய்ய வேண்டும்.

தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளில் ஆட வேண்டும் இதில் நிச்சயம் இங்கிலாந்து இப்போது ஆடும்படியான அதிரடி முறையில் ஆடி 3லும் வெற்றி பெறும் என்றே நாம் கருத இடமுண்டு. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 ஆட வேண்டும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஆட வேண்டும். இந்த போட்டிகளின் மூலம் 62 புள்ளிகளை தென் ஆப்பிரிக்கா பெற வேண்டும். மீதமுள்ள 8-ல் 5ஐ தென் ஆப்பிரிக்கா தோற்றால் இந்தியாவுக்கு கீழ் வந்து விடுவார்கள் .

பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளில் ஆட வேண்டும் நியூசிலாந்துக்கும் நமக்கும் நடந்த கதிதான் இவர்களுக்கும் நடக்கும். நியூசிலாந்துக்கு எதிராக 2, இலங்கைக்கு எதிராக 2. இந்தப் போட்டிகளில் 6-ல் வென்றால் பாகிஸ்தான் டாப் இடத்துக்குச் செல்லும். 

 

No comments: