Monday, July 4, 2022

சென்டர் கோர்ட் நூற்றாண்டு விழா

உலகப்புகழ்  பெற்ற விம்பிள்டன் சென்ரர் கோர்ட்  மைதானத்தின் நூற்றாண்டு விழா ஜூலை 3 ஆம் திகதி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டின் நான்காவது சுற்றுப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு டென்னிஸில் மிகவும் பிரபலமான புல்வெளியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக விம்பிள்டனில் உள்ள சென்டர் கோர்ட்டில் கடந்த காலமும் நிகழ்காலமும் ஒன்றாக நின்றன.

பிரிட்டனின் ஹீதர் வாட்சன், ஜேர்மனியின் ஜூல் நீமியர் இடையேயான போட்டிக்கு முன்னதாக, பிபிசியின் முதன்மை தொகுப்பாளரும் 1976 பிரெஞ்சு ஓபன் வெற்றியாளருமான சூ பார்கர் ஆண்கள் , பெண்கள் ஒற்றையர் பிரிவில் முந்தைய வெற்றியாளர்களை வரவேற்றார்.

  21 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற நோவக் ஜோகோவிச், நெதர்லாந்து வீரர் டிம் வான் ரிஜ்தோவன், ,20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ரோஜர் ஃபெடர்,  ஆறு முறை வெற்றியாளராக வீனஸ் வில்லியம்ஸ் கலந்து கொண்டார், ஆனால் ஏழு முறை சாம்பியனான அவரது சகோதரி செரீனா கலந்து கொள்ளவில்லை.

ஒன்பது முறை வெற்றியாளரான மார்டினா நவ்ரதிலோவாவும், கோவிட்௧9 காரணமாக, ஜேர்மனிய கிரேட் ஸ்டெஃபி கிராஃப்பைப் போலவே பங்கேற்கவில்லை, இருப்பினும் இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

22 முறை ஆண்கள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ரஃபேல் நடால், தனது மூன்றாவது விம்பிள்டன் பட்டத்திற்காக போட்டியிட்ட இத்தாலியின் லோரென்சோ சோனேகோவை வீழ்த்திய மறுநாள் சென்டர் கோர்ட்டில் நின்றார்.

அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க பில்லி ஜீன் கிங், பாட் கேஷ், ராட் லேவர், ஸ்டீபன் எட்பெர்க் மற்றும் பிஜோர்ன் போர்க் போன்ற பிற வீரர்களுடன் நின்றார்.

சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ்,மகளிர் ஒற்றையர் பிரிவு டிராவில் இன்னும் இருக்கும் ரோமானிய வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments: