போராட்டம்,ஆர்ப்பாட்டம் என்பன உலகத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. ஆனால், ஒரு சில உலக நாட்டு அரசாங்கங்கள் அவற்றைக் கண்டு பயப்படுகின்றன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய, முன்னாள் பிரதமர் மஹிந்த, முன்னாள் அமைச்சர் பசில் ஆகியோருக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் வெற்றி பெற்றன. ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான போராட்டங்கள் ஆயுத முனையில் அடக்கப்படுகின்றன. போராட்ட செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.
போராட்டத்தை
முன்னெடுக்கும் முக்கிய பிரமுகர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர், கைது செய்யப்படுவதுடன்,
அவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டல் உட்பட கண்காணிப்பு நடவடிக்கைகளும் நடைபெறுவதாக
ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வழக்கறிஞர் நுவான் போபகே, கத்தோலிக்க பாதிரியார் சகோ. அமில ஜீவந்த பீரிஸ், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர ஆகியோர் அரசாங்கத்தின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த
செயற்பாட்டாளர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கும்போது பாதுகாப்புப் படையினர் பின்தொடர்வதாகவும்,
அவர்களுக்கு ஆதரவான நபர்களை அச்சுறுத்த முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக
இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு பஸ்ஸில் பயணித்த சுதந்திர ஊடகவியலாளரும்
,செயற்பாட்டாளருமான வெரங்க புஷ்பிகாவை பொலிஸ் அதிகாரிகள் என சந்தேகிக்கப்படும் ஆறு
பேர் கொண்ட குழு நீல ஜீப்பில் ஏற்றிச் சென்றது என
கொழும்பு காலி முகத்திடலில் உள்ள “ரணில் கோகம” பொதுப் போராட்ட தளத்தின் செயற்பாட்டாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
இதேவேளை,
பல தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள் கடந்த 27 ஆம்
திகதி புதன்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குச் சென்று, தொடர்ந்தும் கைது
செய்யப்பட்டுள்ள செயற்பாட்டாளர்கள் தொடர்பில் தெரிவித்துள்ளதாக “ரணில் கோகம” செயற்பாட்டாளர்கள்
தெரிவித்தனர்.
முன்னாள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட பொது மக்கள் போராட்டம்
தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு கோரி வருகின்றனர்..
இரத்தினபுரி மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயமொன்றில் பொலிஸ் குழுவொன்று சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு, போராட்டத்தின் முக்கிய எதிர்ப்பாளர் கத்தோலிக்க பாதிரியார் சகோ. அமில ஜீவந்த பீரிஸை கண்டதும் கைது செய்ய உத்தரவு இருப்பதாக தேவாலயத்தில் இருந்தவர்களிடம் போலீஸ் குழு கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இரத்தினபுரி காவல்துறையின் அதிகாரி ஒருவர், தாங்கள் அத்தகைய சோதனையை மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி
முகத்திடலில் அண்மையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்
பின்னர் பெரும்பாலான காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள்
இராணுவத்தினரால் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளனர். மேலும் போராட்டத் தளத்தை
மறுசீரமைப்பதில் இருந்து போராட்டக்காரர்களை இராணுவம்
தடுப்பதாக அவர்கள் கூறுகின்றனர். "இந்த
நேரத்தில், நாங்கள் எங்கள் எதிர்ப்பு
மற்றும் எதிர்ப்பு தளத்தை மறுசீரமைத்து மறுசீரமைக்கிறோம்.
இராணுவம், பொலிஸ் மற்றும் விசேட
அதிரடிப்படை இணைந்து
நடத்திய தாக்குதலில் பெரும்பாலான கூடாரங்கள் சேதமடைந்துள்ளன. ஆனால் போராட்டக்காரர்கள் கூடாரத்திற்கான
பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும், அவர்கள்
காலி முகத்திடல் போராட்ட தளத்தின் நுழைவாயில்களில்
இராணுவத்தினரால் மிரட்டப்பட்டனர், ”என்று ஒரு எதிர்ப்பாளர்
தெரிவித்தார்.
சர்வபக்ஷிகா அரகலகருவோ (சர்வ கட்சி கிளர்ச்சியாளர்கள்) கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான 'தானிஸ் அலி' கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டித்துள்ளது.
குருநாகல்,
வபாடா பகுதியைச் சேர்ந்த 31 வயதான அலி, எதிர்ப்பு
இயக்கத்தில் ஈடுபட்டமை தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூன் 20 ஆம் திகதி
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்
குழுவொன்று அங்கு வரவிருந்த நிதியமைச்சகத்தின்
நுழைவாயிலை தடுத்தமைக்காக அலியை கைது செய்யுமாறு
கோட்டை நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.
ஜூன் 09 ஆம் திகதி பொலிஸ்
தலைமையகத்திற்கு வெளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்கள்,
ஜூன் 12 ஆம் திகதி காலி
முகத்திடலில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் (டிஎம்ஐ) பணியாளர்கள் மீது
தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலும் சந்தேக நபர் தேடப்பட்டு
வந்துள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன் விமானம் ஊடாக டுபாய்
செல்ல முற்பட்ட வேளையில் டனிஸ் அலி என்பவர்
கைது செய்யப்பட்டார்.டனிஸ் அலி தொடர்பிமுன்னாள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக்குவது தொடர்பான
போராட்டத்தின் முன்னின்று செயற்பட்ட டனிஸ் அலி, தேசிய
தொலைக்காட்சியான ரூபவாஹினி தொலைக்காட்சிக்குள் புகுந்து, ஒளிபரப்புகளுக்கு தடை விதித்ததுடன், நேரடி
ஒளிபரப்பும் செய்திருந்தார்.
அந்த
குற்றச்சாட்டின் அடிப்படையில் விமான நிலையத்தில் வைத்து
அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது றிப்பிடத்தக்கது.இதற்கமைய தனிஸ் அலி உட்பட
21 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு
குற்றத்தடுப்பு பிரிவினரால் இஸ்மத் மௌலவி கைது
செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னாள்
போராட்டம் ஒன்றை நடத்தியமை, பொது
சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பில்
அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சட்டம்
ஒழுங்கு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி பொராட்டக்காரர்கள் கைது
செய்யபப்டும்போது பாதுகாப்புப்
படைகளுக்கும் அவர்களுக்கும் இடையே பிளவு ஒன்று
உருவாகும். அதனை அரசாங்கம் தனகுச்
சாதகமாக்கப் பார்க்கிறது. போராட்டங்களை ஒடுக்கும்
உபாயங்களில் இதுவும்
ஒன்று.
மக்களின் ஆதரவு போராட்டக்காரர்களுக்கு இருக்கிறது. அவர்கலுக்கு எதிராக மக்களைத் திசைதிருப்பும் வேலைகளையும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. போராட்டத்தை முன்னின்ரு நடத்துபவர்கள் முன்பு சட்டத்தை மீறியவர்கள், அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் போன்ற குற்றச்சாட்டுகள் பரவலாக்கப்படுகின்றன.
இலங்கையில்
நிலவும் பொருளாதார
சிக்கலைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை எதனையும் ஜனாதிபதி
அவசரமாக முன்னெடுக்கவில்லை.
பொதுமக்களின்
வாழ்வாதாரப் பிரச்சினைக்கு தீர்வு
கண்டால்தான் ஜனாதிபதியின் முதல் கடமையாக இருக்க வேண்டும். போராட்டங்களை ஒடுக்க
நினைத்தால் அவை வெகு வேகமாக
வளர்ந்துவிடும் ஆபத்து உள்ளது.
No comments:
Post a Comment