Friday, July 1, 2022

எரிபொருளைப் பதுக்குவதால் ஏற்படும் ஆபத்து.


   தட்டுப்பாடு, விலை ஏற்றம், பதுக்கல்  இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளன.ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் விலை ஏற்றுவதற்காக பதுக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படை.  பொருட்களைப் பதுக்கக்கூடாது, விலை ஏற்றக் கூடாது. அரசாங்கத்தில் அதற்கென ஒரு துறை உள்ளது.கடிமையான சட்ட திட்டங்களுடன் அரச  உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களையும் மீறி பதுக்கல், விலை ஏற்றம் அட்டகாசமக  நடைபெறுகிறது.

விலைகள் உயரும் என எதிர்பார்க்கப்பட்டால், மக்கள் பதுக்கி வைப்பதற்கு ஆதாரங்களைத் தேடுவார்கள். பொருட்களை வாங்குவதற்கு பணம், பதுக்கி வைக்க இடம் மற்றும் வசதிகள் தேவை சில பொருட்கலைப் பதுக்க முடியாது இன்னும் சில பொருட்கலை நீண்டகாலத்துக்கு பாதுக்கி வைக்க முடியாது. பதுக்கி வைப்பதற்கான வளங்கள் சமமற்ற முறையில் இருப்பதா தால், ஏழைகள் பதுக்கி வைக்க முடியாது. ஒரு பற்றாக்குறை பொருளாதாரத்தில், ஏழைகள் பதுக்கி வைக்க முடியாது மற்றும் பஞ்சங்கள் பொதுவாக ஏழைகளை முதலில் மற்றும் பெரும்பாலானவை பாதிக்கின்றன. விலைகள் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்டால், பங்குகள் சந்தைக்கு மாற்றப்பட்டு விலைகள் வேகமாகவும் ஆழமாகவும் வீழ்ச்சியடைகின்றன. எந்த திசையிலும், விலைகள் மாறும் விகிதம் மற்றும் உயர்வு/ வீழ்ச்சியின் உயரம்/ஆழம் ஆகியவை விலையில் ஏற்படும் மாற்றத்தின் எதிர்பார்ப்புகளின் வேகத்தைப் பொறுத்தது. அரிசியின் விலையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்று ஒரு பெரிய அரிசி ஆலையாளர் கூறுகிறார்.

விலைவாசி உயர்வு, பதுக்கல் மற்றும் வரிசைகளுக்கு முதல் காரணம் மக்களின் கைகளில் வருமானம் மற்றும் சேமிப்பு தொடர்பாக பொருட்கள் மற்றும் சேவைகளின் பற்றாக்குறை ஆகும்.

 

 

 

தட்டுப்பாடு என செய்தி வெளியானதும் சிலர் பொருட்களை வாங்கி சேமிப்பில் வைப்பார்கள். வசதி இல்லாதவர்கள்  கிடைத்த்தை அவித்து சமாளிப்பார்கள். உணவுப் பொருட்களை பதுக்கி வைத்த காலம்  போய் எரிபொருளைப் பதுக்கும் காலம் வந்துள்ளது. வாகனத்தில் உள்ள எரிபொருளை  கலன்களில் சேமித்து விட்டு  எரிபொருள் வாங்குபவர்களின் தொகை அதிகரித்துள்ளது.  அதிக விலைக்கு அதனை விற்பனை செய்து புதிய வருமானத்தை உருவாக்கி உள்ளார்கள்.  எரிபொருள் விற்பனையாளர்கள் சிலரும் இதற்கு உடந்தையாக உள்ளனர்.பெற்றோலைப் பதுகுவது மிகப்பெரிய ஆபத்தானது பதுக்கி வைத்த பெற்றோல் எரிந்து  உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. இத்ச்ன்சித் தெரிந்து பதுக்கி வைத்து உயிருடன் விளையாடுகிறார்கள். பதுக்கி வைக்கும்  பெற்றோல் ஆவியாகிவிடும் என்பது பலருக்குத் தெரியாது.

  பரல் கணக்கில் பதுக்கி வைத்த டீசல் கைப்பற்றப்படுகிறது.  எரிபொருள் நிலைய ஊழியர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு இன்றி அவற்றைப் பதுக்கி வைக்க முடியாது. எரிபொருளைப் பதுக்குவதற்கு உதவுபவர்களின் அனுமதி இரத்துச் செய்யப்பட வேண்டும். இவை எல்லாம் செய்திகளாக வருகின்றன.விசாரனையின் முடிவில் தண்டனை வழங்கும்  செய்தி வரும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. 

No comments: