Saturday, July 30, 2022

மக்களின் விருப்பமும் ரணிலின் எதிர் பார்ப்பும்

இலங்கையில் பராளுமன்றத் தேர்தல் நடைபெற்று  மகிந்த  பிரதமரான போது ரணிலின் அரசியல் சூனியம் என்றே விமர்சகர்கள் தெரிவித்தனர். மகிந்தவின்  பிரதமர் பதவியை பரித்து ரணிலிடம் கொடுக்கப்பட்டபோது அதிர்ஷட தேவதை தன் பக்கம் இருப்பதை  ரணிலின் பக்கம்  இருப்பது எவராலும் ஊகிக்க முடியவில்லை.

தலைக்கு வந்தது தலைப்பாகையுடன்  போனது போல் ராஜபக்ஷ குடும்பத்து பதவிகள் எல்லாம் கைவிட்டுப் போயின. ரணில்  ஜனாதிபதியானதும், புதிய அமைச்சர்கள் தேர்வும்  ராஜபக்ஷ குடும்பம் அரசியலில்  இன்னமும் உயிர்ப்புடன்  இருப்பதை  வெலிப்படுத்தின. மொட்டு கட்சியின் ஆசீர்வாதம் இருந்தபடியால்தான் ரணில் ஜனாதிபதியானார். அவருடைய அமைச்சரவையிலும் மொட்டுக்கட்சியின் ஆசி பெற்றவர்களே  உள்ளனர்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கப்போவதாகக்கூறும் ஜனாதிபதி, தனது பதவியைத் தொடரும் வகையிலும் காய் நகர்த்தி வருகிறார். கோட்டாபய பதவியைத் துரந்த பின்னர் ஏதாவது ஒரு  மாற்ரம்  ஏர்படும் என அப்பாவிப் பொது மகன்  நினைத்தான். அவனது நினைப்பு எல்லாம் தவிடு பொடியானது. பதவி மாற்றம் ஏற்பட்டதே  தவிர அத்தியாவசியப் அத்தியாவசியப்  பொருட்கள்  கிடைக்கவில்லி. எரிபொருளுக்கான வரிசைகுறையவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானி அறிவித்தலில், புதிய அமைச்சர்களின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் மற்றும் இதுவரை அமைச்சரவை உறுப்பினர்கள் நியமிக்கப்படாத அமைச்சுக்களை பொறுப்பேற்றுக் கொண்டார். எனவே, அவர் நிதி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், பெண்கள், குழந்தைகள் விவகாரம் மற்றும் சமூக அதிகாரமளித்தல், துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து, முதலீட்டு ஊக்குவிப்பு ஆகிய துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சராக உள்ளார். 

 புதிய அமைச்ச்ரவையில் பெண்களுக்கு இடம் கொடுக்கபப்டவில்லை.   கடந்த அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் மீண்டும் அமைச்சர்களாகியுள்ளனர். பெண்பிரதிநிதித்துவத்துக்கு இடம் கொடுக்கப்படவில்லை.  இலங்கையின் சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள், மற்றும் முடிந்தவரை அமைச்சர் நியமனங்களில் பாலின விகிதம் பிரதிபலிக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இனியும் காலம் தாழ்த்தாமல் இந்தப் பிரச்னையை மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எடுத்துச் சொல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஞ்சித் சியம்பலாபிட்டிய ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெற்றிடமான பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் எம்.பி ஒருவரை தெரிவு செய்யுமாறு ரணில் விக்ரமசிங்க, மே மாதம் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றத்திற்கு அழைப்பு விடுத்தார். அவரது நிலைப்பாட்டைபரும் ஆதரித்தார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசாங்க எம்.பி.க்கள் வேறுவிதமாக நம்பினர்-அவர்கள் பகுத்தறிவற்றவர்கள்-மற்றும் அந்த பதவிக்கு எதிர்க்கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட பெண் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார்.

மக்களின் போராட்டம் ரணில், தினேஷ்  குணவர்த்தன, பிரேம்ஜயந்த ஆகியோருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கியுள்ளது.  ஜனாதிபதி, பிரதமர் , சபைத் தலைவர்  ஆகிய பதவிகள் தமக்குக் கிடைக்கும் என் வர்கள் கனவிலும் நினைத்திருக்க மட்டார்கள்.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை  முன் வைக்கப்பட்டுள்ளது.  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கும்  ஜனாதிபதி ரணிலுக்கும் இடையிலான கலந்துரையாடலில் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக  ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் சீர்படுத்தப்படுவதற்குப் பதிலாக  அதிர்ஷ்டலாபம்  மூலம் சிலர் அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும்.  நாட்டின்  பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்கு  புதிய அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.

சர்வகட்சி அரசாங்கம் எனபது நாட்டில் அமைச்சரவையை விஸ்தரிப்பதற்கு உதவுமே தவிர  பொருளாதாரத்தைக் கட்டி எழுபுவதற்கு எந்த வகையிலும்  உதவபோவதில்லை.

இலங்கையில் நிலவி வரும் அன்னிய செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, கடும் மின் வெட்டுகள், கடன் பிரச்சனை என பலவற்றையும் எதிர்கொண்டுள்ளது. எரிபொருள் மட்டும் அல்ல, எரிவாயு, உணவு பொருட்கள், மின்சாரம் என எல்லாவற்றிற்கும் பற்றாக்குறையே இருந்து வருகின்றது. ஆக இலங்கைக்கு இது அவசரமாக தேவைப்படும் உதவியாக உள்ளது.  இலங்கை அரசு 1948-க்கு பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது

இந்த இக்கட்டான நிலையில் இருந்து இலங்கையை மிட்கும்  பொறுப்பு    அரசிடம்  உள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டால் ரணிலின்  தலைமைத்துவம் பேசப்படும்.  இல்லையேல் அரசியலில் அவர் காணாமல் போய்விடுவார்.

 

 

No comments: