மேற்கு இந்தியாவுக்கு எதிரான எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜூலை 22-ஆம் திகதி நடைபெற்றது. ஒரு வருடத்தில் ஏழு கப்டன்கள் என்ற இலங்கையின் சாதனையை இந்தியா சமன் செய்தது.
2022
புத்தாண்டு துவங்கியபோது தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்
தொடரின் 2-வது போட்டியில் அப்போதைய அக்ப்டன் விராட் கோலி காயமடைந்ததால் கேஎல் ராகுல்
கப்டனாக செயல்பட்ட நிலையில் 3-வது போட்டிக்கு விராட் கோலி கப்டனாக திரும்பினார்.
அதன்பின் சொந்த மண்ணில் மேற்கு இந்தியா, இலங்கை ஆகியவற்ற்குக்கு எதிராக நடந்த தொடர்களில்
ரோகித் சர்மா கப்டனாக செயல்பட்ட நிலையில் ஐபிஎல் 2022 தொடருக்கு பின் நடந்த தென்னாபிரிக்க
ரி20 தொடரில் அவர் ஓய்வெடுத்ததால் ரிஷப் பண்ட் கப்டனாக செயல்பட்டார்.
அதை தொடர்ந்து நடந்த அயர்லாந்து ரி20 தொடரில் ஹர்திக்
பாண்டியா கப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்ற நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது
டெஸ்ட் போட்டியில் கடைசி நேரத்தில் ரோகித் சர்மா விலகியதால் ஜஸ்பிரித் பும்ரா கப்டனாக
அறிவிக்கப்பட்டார்.
தற்போது ஷிகர் தவான் 7-வது கப்டனாக செயல்படுவதால் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு
காலண்டர் வருடத்தில் அதிக கப்டன்களைக் கொண்ட அணி என்ற இலங்கையின் ஆல்-டைம் வித்தியாசமான
சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. உலக அளவில் இதற்கு முன் கடந்த 2017இல் இலங்கை அணியில்
வரலாற்றிலேயே முதல் முறையாக அஞ்சலோ மத்யூஸ்,
தினேஷ் சண்டிமால், உபுல் தரங்கா, ரங்கன ஹெரத், லசித் மலிங்கா, சமீரா கபுகேந்திரா,
திசாரா பெரேரா என 7 வீரர்கள் கப்டனாக செயல்பட்டிருந்தார்கள்.
இந்த
2 அணிகளுக்கு அடுத்ததாக ஸிம்பாவே (2017), இங்கிலாந்து (2011), அவுஸ்திரேலியா
(2021) ஆகிய அணிகள் அதிகபட்சமாக தலா 6 கப்டன்களை கொண்டிருந்தன.
இந்திய வரலாற்றிலும் இதற்கு முன் கடந்த 1959இல் வினோ
மன்கட், ஹேமு அதிகாரி, டட்டா கைக்வாட், பங்கஜ் ராய், குலாப்ராய் ராம்சன் ஆகிய 5 வீரர்கள்
கப்டனாக செயல்பட்டிருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
இந்திய அணியில் 7 மாதங்களிலேயே 7 கப்டன்கள் செய்யப்பட்டுள்ளதால் எஞ்சிய 5 மாதங்களில் இதேபோல் புதிய கப்டன் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளது. எனவே இந்த சாதனையை உடைத்து முழுமையாக தன் வசமாக்கவும் இந்தியாவுக்கு வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment