Monday, July 25, 2022

'ரம்பிள் இன் தி ஜங்கிள்' பெல்ட்டின் விலை $6.1 மில்லியன்


 முஹம்மது அலியின் 1974 ஆம் ஆண்டு "ரம்பிள் இன் தி ஜங்கிள்" ஹெவிவெயிட் டைட்டில் ஃபைட்டின் சாம்பியன்ஷிப் பெல்ட் ஞாயிற்றுக்கிழமை ஏலத்தில் $6.18 மில்லியனுக்கு விற்கப்பட்டது.

டல்லாஸில் உள்ள ஹெரிடேஜ் ஏலத்தின்படி, இண்டியானாபோலிஸ் கோல்ட்ஸ் உரிமையாளர் ஜிம் இர்சே பெல்ட்டிற்கான கடுமையானபோட்டியில் வென்றார்.

ஞாயிற்றுக்கிழமை ஒரு ட்வீட்டில், தற்போது நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராக் இசை, அமெரிக்க வரலாறு மற்றும் பாப் கலாச்சார நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றின் தொகுப்பிற்காக அவர் பெல்ட்டைப் பெற்றதாக இர்சே உறுதிப்படுத்தினார்.

இந்த பெல்ட் ஆகஸ்ட் 2 ஆம் திகதி சிகாகோவின் நேவி பியர் ,செப். 9 ஆம் திகதி இண்டியானாபோலிஸில் காட்சிக்கு வைக்கப்படும்.

"இரண்டு ஏலதாரர்கள் இந்த பெல்ட்டின் மீது குரிவைத்து கடுமையாகப் போராடினார்கள். பல மணிநேரங்களுக்குப் பிறகு, இது ரம்பிளுக்கு தகுதியான போர் என்பதை நிரூபித்தது" என்று ஹெரிடேஜின் விளையாட்டு ஏலங்களின் இயக்குனர் கிறிஸ் ஐவி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

1974 சண்டை குத்துச்சண்டையின் மறக்கமுடியாத தருணங்களில் ஒன்றாகும். ஆப்பிரிக்க நாடான ஜயரில் ஹெவிவெயிட் பட்டத்தை மீண்டும் கைப்பற்ற பயமுறுத்தும் ஜார்ஜ் ஃபோர்மேனுடன் அலி மோதினார்.  எட்டாவது சுற்றில் நாக் அவுட்டில் நடந்த சண்டையில் அலி வெற்றி பெற்றார்.

No comments: