Monday, January 2, 2023

விடைபெறும் 2022 எதிர்பார்ப்புடன் 2023


 இலங்கை அரசியலில் மிகுந்தபாதிப்பை ஏற்படுத்திய ஆண்டாக 2022  பதியப்பட்டுள்ளது. பொதுமக்களின் எதிர்ப்பினால்பிரதமர், ஜனாதிபதி ஆகிய இருவரும் பதவியில் இருந்து  இராஜிநாமச் செய்தார்கள் 100 நாட்களுக்கு  மேலான மக்கள்  போராட்டத்துக்கு முன்னால் அரசியல் செல்வாக்கு மண்டியிட்டது.கொரோனாவில் இருந்து மெது மெதுவாக வெளியேறிய மக்களை பொருளாதாரப் பிரச்சனை  குப்புற விழுத்தியது.

2022 மார்ச் மாதத்தில், இலங்கையில் ஜனாதிபதி  கோட்டாபயவுக்கு எதிரான மக்கள்   போராட்டம் ராஜபக்சவின்  குடும்பஆட்சிக்கு எதிரான போராட்டங்களாகத் தொடங்கப்பட்டன. இலங்கையின் பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்ததற்காக அரசாங்கம் விமர்சிக்கப்பட்டது, இது அடுத்தடுத்த பொருளாதார நெருக்கடி மற்றும் கடுமையான பணவீக்கம், நாள்தோறும் மின்தடை, ,எரிபொருள், உள்நாட்டு எரிவாயு, பிற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு என்பன்வற்றாஇல் அரசாங்கத்தின் மீது மக்கள்  கடும் எதிர்ப்பை வெலிபடுத்தினார்கள். ராஜபக்ஷவின் குடும்பத்தை அரசியலில் இருந்து தூக்கி எறிவதற்காக் மக்களி எழுச்சிகொண்டார்கள்.  ராசபக்ச குடும்பத்தின் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாகும் "கோட்டா  கோ ஹோம் ", "ராசபக்ச  கோ காலிமுகத்திடல் போராட்டம்  இலங்கை அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. அரசியல்வாதிகள் அனைஅவரும் மக்கள்  போராட்டத்துக்கு முன்னால் பெட்டிப்பாம்பாக அடங்கினார்கள்.ராஜபக்ஷவின்  ஆதரவாளர்கள்  போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் காலிமுகத்திடல் களேபரமானது.

 2022 ஏப்ரல் 3  பிரதமர் மகிந்த ராசபக்சவைத் தவிர, கோட்டாபய அமைச்சரவையில் இருந்த 26 உறுப்பினர்களும், பதவி விலகினர். 2022 மே 9 இல், பிரதமர் மகிந்த ராசபக்ச தனது பதவியில் இருந்து விலகினார்.[30] அமைதியான போராட்டங்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டு பதவி விலகியதாக மகிந்த கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 2022 ஜூன் 9   பசில் ராஜபக்ச தனது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார்.  2022 ஜூலை 9 அன்று, போராட்டக்காரர்கள் கொழும்பு நகரில் உள்ள ஜனாதிபதி  மாளிகையை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றினர்.


 2022 ஜூலை 13 புதன்கிழமை அதிகாலை ஜனாதிபதியும்  அவரது மனைவியும் மாலைதீவிற்கு வான்படை வானூர்தியில் சென்று அங்கிருந்து சவூதியா ஏர்லைன் மூலம் தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்றனர்.

 மகிந்த ராஜினாமாச் செய்ட்ததும் ரணில் பிரதமரானார். வெளிநாட்டில் இருந்த  கோட்ட பதவி  விலகியதால் தனி ஒருவனன ரணில் ஜனாதிபதியானார்.  கோட்டாவின் அரசில் அமைச்சரானவர்கள்  ரணிலின் தலைமையில் அமைச்சரானார்கள்.

அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு இலங்கையின்  பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளியது. இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து உருவான பல்வேறு வகையான நெருக்கடிகளால் மக்கள்  பாதிக்கப்பட்டனர்.  அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவியது.பற்றாக்குறை  இலங்கைக் கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பல்களில் இருந்து பொருட்களை  இறக்குமதி செய்ய முடியாத நிலை உருவாகியது.   கடன் சுமையால்  பழைய கடன்கலைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது .இலங்கைகுக் கடன் வழங்கும் நாடுகள் கைவிரித்தன. 

ரணில்  ஜனாதிபதியானதை போராட்டக்காரர்கள் விரும்பவில்லை.  இந்த ஆண்டு ஒரு முக்கியமான ஆண்டாக இருந்தாலும், அதை முக்கியமானதாக மாற்றிய காரணங்கள் மிகப் பெரிய மாற்றங்களின் ஆரம்பம் மட்டுமே என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

 ரணில் தலைமையிலான அரசாங்கம்  பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தோன்றினாலும், அது மக்களின் நம்பிக்கையை இன்னும் பெறவில்லை.  கொள்கைகளுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை அல்லது ஆய்வு இல்லாமை. அரசியல் படிநிலையின் ஊழல். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஆண்டு, அரசியல் மாற்றத்தை கோருவதன் மூலம், அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்துவதற்கான தங்கள் சக்தியை மக்கள் உணர்ந்துள்ளனர், மேலும் வலுவான முன்மாதிரியும் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி இன்னும் வெகு தொலைவில் உள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் பெட்ரோலுக்கான வரிசைகள் ஆகியவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் முறிவின் மிகவும் வெளிப்படையான அறிகுறிகளாகும். தொழில்நுட்ப ரீதியாக இந்த பொருட்களை இப்போது வாங்க முடியும் என்றாலும், அவற்றின் விலைகள் விண்ணைத் தொட்டுள்ளன. செப்டம்பரில் மட்டும், பணவீக்கம் ஏறத்தாழ 70% உயர்ந்தது, அதே சமயம் ஏழை மக்களை இன்னும் அதிகமாகப் பாதிக்கும் உணவுப் பணவீக்கம் ஆண்டுக்கு 90% அதிகமாக உயர்ந்தது.

இதன் விளைவாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின்  மதிப்பீட்டின்படி மக்கள் தொகையில் கால் பகுதிக்கும் அதிகமானோர் உட்பட பல இலங்கையர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை அனுபவித்து வருகின்றனர். இப்போதைக்கு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட பாரிய போராட்டங்கள் இன்னும் மீண்டும் நடக்கவில்லை. இதற்கிடையில், உழைக்கும் மக்களும், நடுத்தர வர்க்கத்தின் பெருகிய முறையில் வறிய பிரிவுகளும் ஒரு நிலையான அரசியல் மற்றும் பொருளாதார தீர்வைக் கண்டறிவதற்கான கேள்வியுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

 . அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலுகுத் தயாராகிவிட்டனர்.  தமிழ் மக்களின்  பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ரணில் சபதம் எடுத்துள்ளார்.

  அரசியல்வாதிகள் நிலையற்ற  கொள்கைகளுடன்  இருக்கிறார்கள்.   ரணில் என்ன செய்யப்போகிறார். ரணிலுகு எதிராக அரசியல் செய்பவர்களின் நோக்கம் என்ன என்பதை 2023  இல்   மக்கள் தெரிந்துகொள்வாகள்.

2023  ஆண்டு நிச்சயமாக சவாலானதாக இருக்கும்.   இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததை விட இப்போது மக்கள் அதிக விருப்பமும் உறுதியும் கொண்டுள்ளனர், 2023 மக்கள் நட்பு, பொறுப்பு, ஊழலற்ற அரசாங்கத்தியே மக்கள் விரும்புகிறார்கள்.

 


No comments: