Sunday, January 22, 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா? நடக்காதா?


 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக அரசியல் வாதிகள் மல்லுக்கட்டிக்கொண்டிருகிறார்கள். ஆலும் கட்சியின் அரசியல்வாதிகள் இப்போதைக்கு தேர்தலை நடத்தக் கூடாது என  பிரசாரம் செய்கிறார்கள். அரசியக் கட்சிகள்  புதிய கூட்டனிகளை அமைத்து கட்டுப்பணம் செலுத்துகின்றன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்துஇ அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் பாதுகாப்பிற்காக குறைந்தது இரண்டு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களாவது ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கடவத்தை பொலிஸாருக்கும்இ கொம்பனித்தீவு பொலிஸாருக்கும் இருவேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

உறுப்பினர்களான கே.பி.பி.பத்திரன மற்றும் எஸ்.பி.திவரத்ன ஆகியோர் ஆணைக்குழுவில் இருந்து விலகாவிட்டால் கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் புதன்கிழமை மாலை மிரட்டல் செய்தி வந்ததாக கூறப்படுகிறது

 இலங்கையின் ஆளும் கூட்டணி தேர்தலில் நிதி ஆதாரங்களின் தேவையற்ற செல்வாக்கைத் தடுப்பதற்காக தேர்தல் பிரச்சார நிதி மசோதா  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஐ.தே.க தலைமையிலான முன்னைய அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைத்ததைப் போன்று இன்றைய தேர்தலும் ஒத்தி வைக்கப்படலாம் என எதிர்க்கட்சிகள்  கூறுகின்றன.  ஒரு வருட தாமதத்துக்குப் பின்னர்    மார்ச் மாதம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீளும் வரை தேர்தலை தாமதப்படுத்த வேண்டும் என ஆளும் கட்சி அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.

  உள்ளூராட்சித்  தேர்தலை ஒத்திவைக்கக்கூடிய நகர்வுகளை ஐக்கிய தேசியக் கட்சியே  சொலத் தொடங்க் உள்ளது.  கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பின் போது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 8,000 லிருந்து 4,000 ஆக குறைக்கப்படும் என ஜனாதிபதி விக்கிரமசிங்க அறிவித்தார். எதிர்க்கட்சிகள், எல்ஜி அமைப்புகளை குறைக்க வேண்டியதன் அவசியத்தை ஒப்புக் கொண்டாலும், ஜனாதிபதியின் நோக்கத்தை சந்தேகிக்கின்றனர். உடனடியாக தேர்தலை ஒத்திவைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

தேர்தலை நடத்துவது உசிதமல்ல என்ற கருத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிலரிடம்  உள்ளது எனச் செய்தி பரவியது. தேர்தல்கள் ஆணையத் தலைவர் புஞ்சிஹேவா ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது தனது ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் கருத்துக்களில் வேறுபாடு இல்லை என்று கூறினார்.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன, ஜனவரி 9 ஆம் திகதி தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, மறு அறிவித்தல் வரும் வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வைப்புத்தொகை பெறுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அன்றே கடிதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார். அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய ஹபுஹின்ன இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாரும் உடனடியாக மறுக்கவில்லை, ஆனால் பின்னர் பிரதமர் ஜனவரி 18 அன்று பாராளுமன்றத்தில் மறுத்தார்.

  தேர்தலை மார்ச் மாதம் நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருந்தது. திட்டமிட்டபடி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றத்திலும் உறுதிமொழி அளித்துள்ளது.

அரசாங்கம் மற்றும் அதன் கூட்டாளிகளின் இந்த நீண்ட நடவடிக்கைகளின் பட்டியல் எளிமையாகவும் மிகத் தெளிவாகவும் அவர்களின் நோக்கத்தைக் காட்டுகிறது. தேர்தல் ஆணையத்தின் தலைவர்   திட்டமிட்டபடி மார்ச் மாதத்தில் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார், அதே மூச்சில் "எதிர்வரும் நாட்களில் ஏதேனும் சட்ட அல்லது அரசியலமைப்பு தடைகள் இருக்குமா என்பது எனக்குத் தெரியாது" என்று கூறினார். . தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில்,   தேர்தல் சட்டத்தில் பல்வேறு வழிகளில் மாற்றங்களை கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பது ஏன் என்பதை யூகித்தால் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு தெரியவரும்.

No comments: