Monday, January 30, 2023

மகளிர் கிண்ண உதைபந்தாட்ட பந்து அறிமுகம்


 அவுஸ்திரேலியா,நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் ஜூலை மாதம் நடைபெறும் மகளிர்  உலகக்கிண்ண உதைபந்தாட்ட பந்து சிட்னியில் அறிமுகப்படுத்தப்பட்டது  OCEAUNZ என்று பந்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இது அவுஸ்திரேலியா ,நியூஸிலாந்தின்   கலாச்சாரங்களை வெளிப்படுத்துகிறது.

 "OCEAUNZ இன் வடிவமைப்பு இரண்டு   நாடுகளின் தனித்துவமான இயற்கை நிலப்பரப்புகளால் ஈர்க்கப்பட்டுள்ளது, Aotearoa நியூஸிலாந்தின் பரந்த மலைகள் மற்றும் இந்தியப் பெருங்கடலுடனான அவுஸ்திரேலியாவின் தொடர்பைக் கொண்டது.

 பழங்குடியின கலைஞர் செர்னி சுட்டன் , மவோரி கலைஞரான ஃபியோனா கோலிஸ் ஆகியோர் பந்தை வடிவமைத்ததாக பீபா அறிவித்துள்ளது.   2022 ஆம் ஆண்டு உலகக்கிண்ண‌ பந்தைப் போலவே இணைக்கப்பட்ட தொழில்நுட்பத்தையும் OCEAUNZ கொண்டுள்ளது. இது போட்டி அதிகாரிகளுக்கு உடனடித் தரவை வழங்குகிறது.

2023 மகளிர் உலகக் கிண்ணப் போட்டி  ஜூலை 20 ஆம் திகதி ஆரம்பமாகிறது.  தொடக்க ஆட்டத்தில் நியூஸிலாந்து நோர்வேயை எதிர்கொள்கிறது, ஓகஸ்ட் 20 ஆம் திகதி சிட்னியில் இறுதிப் போட்டி நடைபெறும்.

No comments: