Saturday, January 7, 2023

அண்ணாமலையின் அட்டகாசத்தால் பா.ஜ. கவுக்கு நெருக்கடி


 ஊடக வெளிச்சம் தன்மீது  இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை செய்யும் அலப்பறைகளை  பாரதீய ஜனதாவின் தமிழக்  மூத்த தலைவர்கள் ரசிக்கவில்லை. அண்ணாமலை அதைப்பற்ரிக் கவலைப் படாமல் தன்னை எதிர்ப்பவர்களையும், விமர்சிப்பவர்களையும் மிரட்டுகிறார்.

தமிழகத்தில் பாரதீய ஜனதாவை வளர்க்கப்பாடுபட்ட தலைவர்களை கிள்ளுக் கீரையாக நினைக்கிறார் அண்ணாமலை. அண்ணாமலையின் அடக்கமற்ற நடவடிக்கையால் ஏற்படப்போகும்  பின்னடைவை மூத்த தலைவர்கள்  உணர்ந்துள்ளனர். 2026 ஆம் ஆண்டுவரை அண்ணாமலைதான் தமிழக பாரதீய ஜனதாத் தலைவர் என டில்லி மேலிடம்  முடிவு செய்துள்ளது.

பத்திரிகையாளர்கள்  கேட்கும்  கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அவர்களுடன்  முரண்படுவது அண்ணாமலைக்கு வாடிக்கையாகிவிட்டது. நீ எந்த சனல் பேரைச் சொல்லு பேரைச் சொல்லி கேள்வி கேள் என பத்திரிகையாளர்கள்  மீது அண்ணாமலை பாய்வது மாநிலத் தலைவருக்கு அழகல்லை. உடன் இருப்பவர்கள் யாரும் அவருக்கு நல்லதை எடுத்துச் சொல்லத் தயங்குகிறார்கள்.யூரியூப் வைத்திருப்பவர்கள் எவரும் பத்திரிகையாளர்கள் அல்ல என்பதே அண்ணாமலையின்  முடிவு.

வேறு கட்சிகளில் இருந்து  பாரதீய ஜனதாவுக்குச் சென்றவர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து  வெளியேறுகிறார்கள்.அண்ணாமலை வைத்ததுதான் சட்டம். அவரை மீறி எதனையும் செய்ய முடியாது என்பதால் அவர்கள் வெயேறிவிட்டார்கள்.

திமுக-விலிருந்து வெளியேறி பா..-வில் இணைந்த திருச்சி சூர்யா சிவா, தமிழக பா..-வின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்துப் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், ``சொந்தக் கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்... இந்த ஹைனாக்களுக்கு அழகுபார்க்கக் கட்சியில் மாநிலப் பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு எனக் குரிப்பிட்டார். இதனைப் பொறுக்க முடியாத அண்ணாமலை  காயத்ரி ரகுராமை  கட்சியில் இருந்து இடை நிறுத்தினார்.

 திருச்சி சூர்யா சிவாவின் ஆடியோ விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைத்தும், காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருவதால், கட்சியில் அவர் வகித்துவரும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்துக்கு நீக்கப்படுகிறார் எனவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அவரைச் சுற்றி பல்வேறு சலசலப்புகள் தொடர்ந்தன. இந்த நிலையில், திருச்சி சூர்யா சிவா, பா..-விலிருந்து வெளியேறினார். அதேபோல் காயத்ரி ரகுராமும்  கட்சியின் இருந்தும்  வெளியேறிவுட்டார்,

`பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததற்காக, ஆறு மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டது என்ன நியாயம்... எல்லா இடங்களிலும் வளர்ந்தால் கீழே தள்ளிவிடத்தானே பார்ப்பார்கள்... தேர்தல் வரப்போகிறது. சிலர் சீட் கேட்கப் போகிறார்கள். அவர்களுக்குப் போட்டியாக இருக்கும்போது நிச்சயம் தள்ளிவிடத்தானே பார்ப்பார்கள்... அதனாலேயே கட்சிக்கு எதிராக நான் செயல்படுவதுபோல், ‘குருமூர்த்தி கும்பல்... தி.மு. ஸ்லீப்பர் செல்...’ என்று தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். இதையெல்லாம் தாண்டி மீண்டும் வருவேன்" எனக் காயத்ரி ரகுராம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், ``மிகுந்த மனவேதனையுடன் தமிழக பா..-விலிருந்து வெளியேறும் முடிவை எடுத்திருக்கிறேன். ஏனெனில், எனது புகார் தொடர்பாக ஒரு விசாரணை நடத்தக்கூட வாய்ப்பளிக்கப்படவில்லை. சம உரிமை கிடையாது. பெண்களுக்கு மரியாதையும் இல்லை. அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை யாருமே கண்டுகொள்ளவில்லை. உண்மையான தொண்டர்கள் அண்ணாமலையால் விரட்டியடிக்கப்படுவதுதான் நடந்துகொண்டிருக்கிறது

பா..-வுக்கு என்னுடைய வாழ்த்துகள். நான் இந்த அவசர முடிவு எடுப்பதற்கு அண்ணாமலைதான் காரணம். இனி அவரைப் பற்றி பேசப்போவதில்லை. ஏனெனில், அவர் தரம் தாழ்ந்த தந்திரக்காரர். கடந்த எட்டு ஆண்டுகளாக என்னுடன் பணியாற்றிய அனைத்துத் தொண்டர்களுக்கும் எனது நன்றி. தமிழக பா..-வில் பெண்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். மரியாதை இல்லாத இடத்தில் இருக்க வேண்டாம்.

போலீஸாரிடம் புகார் பதிவுசெய்யத் தயாராக இருக்கிறேன். அண்ணாமலை மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர் ஒரு மோசமான பேர்வழி. எனக்கு எதிராகச் செயல்பட்டுவரும் வார் ரூம் பற்றியும் புகார் அளிப்பேன். நீதி தாமதிக்கப்படுவது என்பது அது மறுக்கப்படுவதற்குச் சமம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காய்த்ரி ரகுராம். “அண்ணாமலை தலைவராக வந்த பிறகு தான் பெண்களுக்கு பிரச்னைகள் வருகிறது. தமிழிசை சவுந்தரராஜன், எல். முருகன் தலைவராக இருந்த போது இதுபோன்ற பிரச்னை வந்தது இல்லை. கடந்த இரண்டு மாதங்களாக பல பிரச்னைகளை சந்தித்து வந்தேன். அதற்கான முறையாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை. விசாரணை இல்லாமல் என்னை தற்காலிகமாக நீக்கியுள்ளனர்.

இதற்கு முன்பு வீடியோ ஆடியோ பிரச்னை பாஜகவில் எப்போது வந்தது. நான் கலகம் செய்து விட்டேன் என்று சொல்கிறார். இவர் எவ்வளவோ கலகம் செய்து வருகிறார். நான் தவறு செய்தால் என்னிடன் ஆதாரத்துடன் தெரிவியுங்கள், அண்ணாமலை எப்போதுமே ஆதாரம் இல்லாமல் தான் பேசுகிறார். இனிமேல் பாஜகவில் நான் சேரமாட்டேன், எந்தக் கட்சி அழைத்தாலும் இணைந்து மக்கள் பணியாற்றுவேன்எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பா..-வில் சமீபகாலமாகத் திரும்பிய பக்கமெல்லாம் பாலியல் புகார்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. கே.டி.ராகவனில் தொடங்கிய இந்தப் புகார், கேசவவிநாயகம், திருச்சி சூர்யா சிவா, டெய்சி சரண் எனத் தொடர்ந்து அலிஷா அப்துல்லாவிடம் வந்து நிற்கிறது. “இந்த அஸ்திரங்கள் இத்தோடு நிற்கப்போவதில்லை. இன்னும் நிறைய இருக்கிறது. ஒவ்வொன்றாக வெளிவரும்என்று அதிர்ச்சி கிளப்புகிறார்கள் கமலாலய வட்டாரத்தில்.

தமிழக பாஜகவின் தலைவராக முன்னாள் .பி.எஸ். அதிகாரியான அண்ணாமலையை கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டார்.

தலைவராக பதவிவேற்ற நாள் முதல் எதிர்கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைப்பது, அதிரடியான கருத்துக்களை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடுவது என பரபரப்பான வேலைத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். அண்ணாமலை. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு வங்கியை இரட்டை இலக்கமாக மாற்ற வேண்டும் முனைப்புடன் செயல்பட்டு வரும் அண்ணாமலை, சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் உள்ளாகி வருகிறார்.

 சர்ச்சைகளின் நாயகனாக அண்ணாமலை திகழ்கிறார். காயத்ரி ரகுராமுக்கு முன்பே அண்ணாமலையின் தலைமை குறித்து பலரும் புகார் கூறியிருக்கிறார்கள். ஆபாச ஆடியோ, வீடியோ கலாசாரம் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இப்போதுதான் தலை தூக்கி இருக்கிறது. இதற்கு முன்பாக பாஜகவில் தலைவராக இருந்த யாரும் இது போல நடந்து கொண்டதில்லை.

 முன்னாள் பாஜக தலைவரான இல.கணேசன் சிறந்த தமிழ் பற்றாளர், கலைஞரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் பண்பாளராக அவர் இருந்தார். 5 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பாஜகவின் தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் பணியாற்றிய போது செய்தியாளர்களுடன் மோதல் போக்கு இருந்தது கிடையாது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின்  ஊடகங்கள் ஜெயலலிதாவைப் பேட்டி எடுத்தன.  ஜெயலலிதாவின்  ஊடகம் கருணாநிதியைப் பேட்டி எடுத்தது. அப்போது இது போன்ர முரண்பாடுகள் தோன்றவில்லை. குஷ்பு போன்றவர்கள்  இந்த விவகாரத்தில் அமைதியாக  இருக்கிறார்கள். காயத்ரிக்கு உதவ அங்கு யாருமே  இல்லை.

மூத்த தலைவர் பொன்.  ராதாகிருஷ்ணனும் அண்ணாமலைகு  எதிராகப்  புகார் சொல்லியுள்ளார். மேலிடம் எதனையும் கவனத்தில்  எடுக்கவில்லை. தேர்தல் சமயத்தில் இது பெரும் விவகாரமாக  மாறும் என்பதில் ஐயம் இல்லை.

No comments: