உதைபந்தாட்டத்தில் 2022 ஆம் ஆண்டு விளையாடி தமது அணியை முன்னேற்றிய வீரர்கள். இது சிரப்பாகச் செயற்பட்ட வீரர்களின் பட்டியல்.
லயோனல் மெஸ்ஸி :
உலகின் தலைசிறந்த உதைபந்தாட்ட வீரரும் கால்பந்தாட்ட வீரரும். உலகக்
கிண்ண சம்பியனாகிய ஆர்ஜெண்ரீனா அணியின் கப்டனுமாகிய
மெஸ்ஸி நடப்பாண்டின் சிறந்த வீரராக உள்ளார். ஆர்ஜென்ரீனா, பி.எஸ்.ஜி. அணிக்காக ஆடி
வருகிறார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
மெஸ்ஸிக்கு நிகரான தற்போதைய
உலகின் ஒரே வீரராக கருதப்படுபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போத்துக்கல் அணிக்காகவும்
கிளப் அணிக்காகவும் ஆடி வரும் ரொனால்டோவிற்காக உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள்
உள்ளனர்.
கிளியன் எம்பாப்பே:
மெஸ்ஸி, ரொனால்டோவிற்கு பிறகு நடப்பு உலகக் கிண்ணப் போட்டியில் நெய்மரை காட்டிலும் அதிகளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்
எம்பாப்பே. ஆர்ஜென்ரீனாவிற்கு இறுதிப்போட்டியில் ஒற்றை ஆளாக இருந்து மரண பயத்தை காட்டியவர்
எம்பாப்பே என்பது அந்த போட்டியை பார்த்த அனைவருக்கும் புரியும். 24 வயதே ஆன எம்பாப்பே
பி.எஸ்.ஜி அணிக்காக கிளப் போட்டியில் ஆடி வருகிறார். பிரான்ஸ் நாட்டு வீரரான இவர் மொத்தமாக
268 கோல்களை விளாசியுள்ளார். மெஸ்ஸி, ரொனால்டோவைப் போல மிகப்பெரிய புகழை எம்பாப்பே
அடைவார் என்பதில் சந்தேகமில்லை.
நெய்மர்
உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு மெஸ்ஸி, ரொனால்டோவிற்கு
பிறகு நன்கு பரிச்சியமான பெயர் நெய்மர். பிறேஸில் நாட்டின் நட்சத்திரமான நெய்மருக்கு
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் பிறேஸில் நாட்டிற்காக மட்டுமில்லாமல்
கிளப் போட்டிகளில் பி.எஸ்.ஜி. அணிக்காக ஆடி வருகிறார்.
ராபர்ட் லேவண்டோஸ்கி:
சிறந்த கால்பந்தாட்ட வீரராக ராபர்ட் போலந்து நாட்டைச் சேர்ந்தவர்.
கிளப் அணியில் பார்சிலோனா அணிக்காக ஆடி வருகிறார். இவர் இதுவரை 636 கோல்களை விளாசியுள்ளார்.
கெவின் டி ப்ரூனே:
பெல்ஜியத்தின் தலைசிறந்த இளம் வீரர் கெவின் டி ப்ரூனே. இவர் கிளப்
போட்டிகளில் மான்செஸ்டர் அணிக்காக ஆடி வருகிறார். வளர்ந்து வரும் வீரரான இவர் இதுவரை
161 கோல்களை விளாசியுள்ளார்.
முகமது சாலா:
எகிப்து நாட்டின் முக்கிய வீரர் முகமது சாலா. இவர் கால்பந்தாட்ட
கிளப் போட்டிகளில் லிவர்பூல் அணிக்காக ஆடி வருகிறார். இவர் இதுவரை 296 கோல்களை விளாசியுள்ளார்.
கரீம் பென்ஜெமா:
பிரான்ஸ் நாட்டின் முக்கிய வீரர்களில் ஒருவர் கரீம் பென்ஜேமா. கிளப்
போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடி வருகிறார். இவர் பிரான்ஸ் மற்றும் ரியல் மாட்ரிட்
அணிக்காக இதுவரை 447 கோல்களை அடித்துள்ளார்.
ஹாரி கேன்:
இங்கிலாந்து நாட்டில் பிறந்த ஹாரிகேனுக்கு தற்போது 29 வயதாகிறது.
இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இங்கிலாந்து நாட்டிற்காகவும், கிளப் போட்டிகளில்
டோட்டேன்ஹாம் அணிக்காகவும் ஆடியுள்ளார். இவர்
இதுவரை 330 கோல்களை அடித்துள்ளார்.
எர்லிங் ஹாலந்து:
2000ம் ஆண்டு பிறந்த எர்லிங் ஹாலந்து நார்வே நாட்டைச் சேர்ந்தவர்.
மிகவும் இளவயது முதலே கால்பந்தில் அசத்தி வருகிறார். வளர்ந்து வரும் இளம் வீரரான எர்லிங்
ஹாலந்து மான்செஸ்டர் சிட்டி அணிக்காக ஆடி வருகிறார். நார்வே நாட்டின் சர்வதேச அணிக்காகவும்
ஆடியுள்ளார். இவர் இதுவரை 199 கோல்களை அடித்துள்ளார்.
No comments:
Post a Comment