Monday, January 9, 2023

உலகக்கிண்ணத்தில் முதல் பாலஸ்தீன பெண்நடுவர்


 

பீபா மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில்  நடுவராகப் பணியாற்றும் முதல் பாலஸ்தீனிய சர்வதேச கால்பந்து நடுவர் என்ற பெருமையை ஹெபா சாடியா பெற்றுள்ளார். இந்த சாதனையைப் படைத்த முதல் அரபு பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

2022 ஆம் ஆண்டு வியட்நாமில் நடந்த ஆசியக் கிண்ண கூட்டமைப்பு  நடத்தும் போட்டிகளின் கோப்பை போட்டிகளின் நடுவராக ஹெபா சாடியா  தேர்ந்தெடுக்கப்பட்டார்.  கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கு நடுவராக இருந்தார்.

சாடியா பாலஸ்தீனிய யர்மூக் அகதிகள் முகாமில் நடுவராக பணியாற்றத் தொடங்கினார், அங்கு அவர் பாலஸ்தீனிய பெற்றோருக்குப் பிறந்தார்.பல்கலைக்கழகத்தில், உடற்கல்வியில் டமாஸ்கஸில் படித்தபோது விளையாட்டில் நிபுணத்துவம் பெற்றார்.

கடந்த ஆண்டு பாலஸ்தீன டிவி ஸ்போர்ட்ஸ் மற்றும் யூத் சேனலுக்கு அளித்த பேட்டியில், "நடுவர்கள் குழுவொன்றைப் பயிற்சி செய்வதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன், அவர்களில் பெண்கள் இல்லை என்பதை கவனித்தேன்.நான் அதைப் பற்றி அவர்களிடம் கேட்டபோது, அவர்களுடன் நான் சேர பரிந்துரைத்தார்கள், அதனால் நான் நடுவரானேன் " என்றார்.

சாடியா முதலில் நான்காவது அதிகாரியாக சிரிய உதைபந்தாட்டச் சங்கத்தில் பணிபுரிந்தார், ஆனால் 2012 இல் நாட்டில் உள்நாட்டுப் போர் வெடித்தபோது மலேசியாவிற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.மலேசியாவின் உதைபந்தாட்டச்சங்கத்துடன் பணிபுரிந்த பிறகு, அவர் சுவீடிஷ் உதைபந்தாட்ட கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார், அங்கு அவர் தனது சர்வதேச நடுவர் பேட்ஜை 2016 இல் பெற்றார். 

ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 20 வரை அவுஸ்திரேலியா , நியூசிலாந்து ஆகிய நாடுகலில்  நடைபெற உள்ள 2023 பீபாமகளிர் உலகக் கிண்ணப் போட்டியில்  சாடியா பணியாற்ற உள்ளார்.

 

உலகக்கிண்ணம்,உதைபந்தாட்டம்,அவுஸ்திரேலியா,நியூஸிலாந்து

No comments: