உள்ளூராட்சி சபைத் தேர்தலில்
போட்டியிடுபவர்கள் வெற்ரி பெற்றுவிட்டதாக
நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அநேகமான இடங்களில் வேட்பாளர் தெரிவின் வறட்சி வெளிப்படுகிறது. அவசர அவசரமாக சில வேட்பாளர்கள்
இறக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்க் கட்சித் தலைவர்கள்
மற்றைய தலைவர்கள் மீது குற்றப் பத்திரம் தாக்கல் செய்வதிலேயே குறியாக இருந்தனர்.
ஆகையால் திடுதிப்பென தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்களைத் தேடி அலைந்தனர். ஊர்ப்பக்கம் திரும்பிப்
பார்க்காத தலைவர்கள் சில ஊர்களுக்குச் சென்று
அங்குள்ள பிரபலங்களைத் தம் பக்கம் இழுக்க முயற்சித்தனர்.
பலர் நாசூக்காக மருப்புத் தெரிவித்தனர். மிக முக்கியமாக பெண் வேட்பாளர்களைத் தேடினார்கள். கிடைத்த வேட்பாளர்களுடன் பட்டியலைப் பூர்த்தி செய்தார்கள்.
ஒரு குடும்பத்கில் உள்ளவர்கள்
பல கட்சிகளில் போட்டியிடுகிறார்கள். இதனால் வாக்குகள் பிரிந்து ஊருகுத் தேவை இல்லாத ஒருவர்
வெற்றி பெறும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட
தொழிலதிபர் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு
வெற்றி பெற்றார். இரண்டு வருடங்கள் அவருக்கு தவிசாளர் பதவி வழங்குவதென கனவான் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இரண்டு வருடங்கள் முடிந்த பின்னர் அந்தக் கனவான் பதவி விலக மறுத்துவிட்டார்.
கட்சித் தலைமை விசாரணை செய்தும் அவரை அகற்ற முடியவில்லை. இந்த்த் தேர்தலில் அவர் கட்சி
தாவி போட்டியிடுகிறார்.கடந்த முரை தவிசாளர் பதவிக்காக தவமய் தவமிருந்தவரும் வெறுப்புற்று
வேறு கட்சியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார்.
ஒரு வட்டாரத்தில் அதிக பட்சமாக 1000, 1200 வாக்குகள் இருக்கும்
அந்த வட்டாரத்தில் செல்வாக்கு மிக்கவர்கள்
பல கட்சிகளில் போட்டியிடுவதால் வாக்குகள்
சிதறடிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.
இலங்கை பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், சவாலுக்கு மத்தியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் தேதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலை நடத்தாதிருப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு
வருவதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சுமத்தி வருகின்ற சூழலில், தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவித்துள்ளார்.தேர்தலை நடத்துவதற்கு
தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, தமது கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை
வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகளுக்கு
8,327 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை, இம்மாத இறுதி வாரத்தில்
தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் எஸ்.ஜி.புஞ்சிஹேவா
தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் முடிந்து ஐந்து வாரங்கள் முதல் ஏழு வாரங்கள்
வரை உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென்ற அடிப்படையில் இந்த காலம் குறிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் இரகசிய முயற்சிகள்
பற்றிய ஊகங்களை நிராகரித்த எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல,
தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் நிறைவேற்று ஜனாதிபதிக்குக் கூட இல்லையென்று கூறினார்.
தேர்தல் ஆணைக்குழுவினால் நிறைவுறுத்தப்பட்ட 2022 வாக்காளர் பதிவேடு, எதிர்வரும் உள்ளூராட்சித்
தேர்தலுக்குப் பயன்படுத்தப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வருடப் பதவிக்காக அரசியலின் அடிப்படை அறிவு இல்லாத சிலரும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தேர்தல் முடிந்ததும் கட்சிமாறும் காட்சிகள் அரங்கேறும் என எதிர் பார்க்கலாம்.
No comments:
Post a Comment