Saturday, January 14, 2023

ஈஸ்டர்ஞாயிறு தாக்குதலில் பாதிக்கபப்ட்டவர்களுக்கு நஷ்ட ஈடு


 2019 ஆம் ஆண்டு இலங்கையை  உலுகிய ஈஸ்டர் ஞாயிறு  தாக்குதல் சம்பவத்தின் வடுக்கள்  இன்னமும் மறையவில்லை.   ஈஸ்டர் ஞாயிறு  தாக்குதலால்  வெளிநாட்டவர்களும்  இறந்தார்கள், காயமடைந்தார்கள் ஆகியால் உலகமே அந்தச் சம்பவத்தை அச்சத்துடன் நோக்கியது.

 ஈஸ்டர் தாக்குதலால் மக்கள் பாதிக்கப்பட்ட அதே வேளையில் அன்றைய ஜனாதிபதி மைத்திரிக்கும், பிரதமர் ரணிலுக்கும் இடையிலானமுரண்பாடு வெளிச்சத்துக்கு வந்தது.  இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெறப்போவதாக வெளிநாட்டு புலனாய்வு அரிக்கையிட்டும் ஏன் தடுக்கவில்லை எனா ஜனாதிபதியும், பிரதமரும்  முரண்படனர்.

ஈஸ்டர்   ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தனது இரு பிள்ளைகளை இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலாத்துறை வர்த்தகர் ஜனக விதானகே, இரு கத்தோலிக்க மதகுருமார், ஷெங்ரில்லா ஹோட்டலில் குண்டுத் தாக்குதலில் சிக்கிய சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க, கத்தோலிக்க மதத் தலைவர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட 12 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோவும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயாவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் முன்னிலையாகியுள்ளார்.

ஏனைய பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன், ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி துலிந்த வீரசூரிய, சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன, சட்டத்தரணி கே.வி.எஸ். குனசேகரராஜன் உள்ளிட்டோர் முன்னிலையாகினர்.

இந்நிலையில், பிரதிவாதிகளில் ஒருவராகப் பெயரிடப்பட்டிருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக அவ்வழக்குகளை முன்னெடுத்து செல்ல முடியாது என உயர்நீதிமன்றம் கடந்த 2022 செப்டம்பர் 26 ஆம் திகதி அறிவித்தது.

பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு எதிராக அரசமைப்பின் 35 (1) உறுப்புரை பிரகாரம் வழக்கொன்றை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அறிவித்து உயர்நீதிமன்றம் அதனை அறிவித்திருந்தது. அவ்வாறான பின்னணியிலேயே இந்த மனுக்கள் தொடர்பிலான விசாரணைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், தீர்ப்பு   வழங்கப்படது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா ரூ.75 மில்லியன் செலுத்த வேண்டும் எனவும்,  முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ரூ. 50 மில்லியன் செலுத்த வேண்டும் எனவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக செலுத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில், 269 பேர் கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

   ஈஸ்ட ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமானவர்களை தண்டிக்க கூடுதல் நடவடிக்கை அவசியம்.  குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கபப்ட வேன்டும்.  தேசிய பாதுகாப்பு என்பது தனிப்பட்ட  ஒருவரின் முடிவல்ல. ஆட்சி மாரினாலுக் தேசிய பாதுகாப்புக் கொள்கை மாற்றமடையக் கூடாது.  ஆனால்,  அன்றைய ஆட்சியாளர்கள் தேசிய பாதுகாப்பில் போதிய கவனம் செலுத்த வில்லை. பொறுப்புக் கூறுவதிலிருந்து பின் வாங்கியதுடன்  ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர். தேசிய பாதுகாபில் இன, மத  பிளவுகள்  இருக்கக் கூடது.

நிறைவேற்ரு அதிகாரம்  கொண்ட ஜனாதிபதியாக  இருந்த்போது  மைத்திரி ஆடியா ஆட்டத்துக்கு நீதிமன்றம் சூடு  போட்டுள்ளது. பாதுகாப்பிச் சபைக் கூட்டங்கலுக்கு அன்றைய பிரதமர் ரணிலை அழைப்பதில்லை. ரணிலுடன் அலோசனை நடத்துவதில்லை.இவை எல்லாம் அதிகாரம் அவரது கையில் இருந்தபோது நடைபெற சம்பவங்கள்.  இப்போ அதிகாரம், பதவி எல்லாம் பறிபோய் முன்னாள் என்ற பெயர் ஒட்டிக்கொண்டுள்ளது. அந்த முன்னாளுக்கான சலுகைகள் எதனையும் நீதிமன்றம் கொடுக்கவில்லை. இந்தத் தீர்ப்பு பல  முன்னாள் களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments: