உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் அரசியல் தலைவர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர். இத்தனைகாலமும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்தவர்கள் தேர்தல் என்றதும் பரபரப்பாகியுள்ளனர்.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சி சபைகள்
கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவற்றின் பதவிக்காலம் - மேலதிகமாக ஒரு வருடத்தினால்
நீடிக்கப்பட்டது. உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலதிகமாக ஒரு வருடத்தினால் மட்டும்
நீடிக்கும் அதிகாரம் அதற்குப் பொறுப்பான அமைச்சருக்கு உள்ளது.
இலங்கையில் மொத்தமாக 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. அவற்றில் 340 சபைகளுக்கான தேர்தல்கள் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி நடந்தன. எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அடுத்த வருடமே நடைபெற்றது. அங்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவொன்று நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டமை காரணமாக, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் தனியாக 2019 ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்டது.
உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் 4 வருடங்களாகும்.
அந்த வகையில், எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த ஏனைய அனைத்து சபைகளின் பதவிக் காலமும்
2022 பெப்ரவரி மாதத்துடன் நிறைவுக்கு வந்தன. ஆயினும், உள்ளூராட்சி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள
அதிகாரத்தின் அடிப்படையில், அந்த சபைகளின் பதவிக் காலம் - ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில் 2023 மார்ச் மாதத்துக்குள் உள்ளூராட்சி
சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டிய கடப்பாடு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.
இத்தனை காலமும் அரசியல் தலைவர்களாகப் பவனி வந்தவர்கள்
வேட்பாளர்களைத்தேடி ஊர் ஊராக அலைகிறார்கள். பெண்
வேட்பாளக் கட்டாயம் என்பதால் அரசியல் தலைவர்களின் பார்வை அந்தப் பக்கமும் விழுந்துள்ளது.
வடக்கு ,கிழ்க்கு தமிழ் மக்களின் சனத்தொகையின் விகிதாசாரத்துக்கு அதிகமான கட்சிகள் உள்ளன. யாழ்ப்பானத்தில் திடுதிப்பென புதிய கட்சி ஒன்று அறிவிக்கப்படுகிறது. அரசியல்
கட்சிக்கன கட்டமைப்பு ஏதாவது இருப்பதாகத் தேடிப்பார்த்தால் பூஜ்ஜியம் தான் கிடைக்கும்.
அகில இலங்கை
தமிழ்க் காங்கிரஸ், இலங்கை தமிழ் அரசுக் கட்சி என இரண்டு கட்சிகள் தான் வடக்கு கிழக்கில்
கோலோச்சின. இடது சாரிகளும், வலது சாரிகளும் வடக்கு கிழக்கில் கால் பதிக்க எடுத்த முயர்சிகள்
வீணாயின. ஐக்கிய தெசியக் கட்சியும் சிறீலங்க
சுதந்திரக் கட்சியும் முட்டிமோதி சில
வெற்றிகளைப் பெற்றன்ன.இன்று புற்றீசல்போல் பல கட்சிகள் மிளைத்துவிட்டன. அவற்ரின் பெயரைச் சொன்னால் எளிதில் யாரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். விக்கியின் கட்சி,சித்தார்த்தனின்
கட்சி, சைக்கிள் தம்பிகள் எனச் சொன்னால்தான் மக்கள்
புரிந்துகொள்வார்கள்.
உள்ளூராட்சி
சபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பிரிந்து
போட்டியிடப் போகின்றன. தமிழ் அரசுக் கட்சி தனித்து ஏனைய கட்சிகளிக் கழற்றிவிட்டு தனித்துப்
போட்டியிடுகிறது. மற்றைய கட்சிகளையும் தனித்துப் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டது. இத்தனை காலமும் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருந்த
பங்காளிகள் அதற்குச் சம்மதிக்காமல் போட்டிக் கூட்டணி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.ரெலோ, புளொட் , ஈ.பி.அர்.எல்.எப், தமிழ் தேசியக் கட்சி, ஜனநயகப்
போராளிகள் இணைந்து ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி என்றபெயரில் போட்டியிடுகின்றன. ஆங்கிலத்தில்
D.T..N.A எனக் குறிபிடுகிறார்கள். ரி.என். ஏ யை விட்டுக்கொடுக்க
அவர்கள் தயாராக இல்லை. இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற விக்கி ஐயாவும், மனிவண்ணனும் குழம்பிபோய் வெளியே வந்துள்ளனர். தமிழ்
அரசுக் கட்சி, புதிய கூட்டணி, விக்கியுன் கட்சி
ஆகிய மூன்ரும் தமிழ் வாக்குகளக் கூறுபோடப்போகின்றன. இவர்களால் டக்ளஸும், அங்கஜனும்
பயனடையப் போகின்றனர். போதாக்குறைக்கு பிள்ளையானும்
கருணாவும் வடக்கே வரப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.
சுயேட்சை என்ர கோதாவில்
எத்தனை குழுக்கள் வரப்போகிரதோ தெரியாது.
கூட்டமைப்பு என்ற பலமான பெயரில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டபோதே அறுதிப்
பெரும் பான்மை இல்லாது சில சபைகளை சிங்களக் கட்சிகளுக்குத் தாரை வார்த்தார்கள். அரசியலில்
பரம எதிரியான டக்ளஸின் ஆதரவு சில சபைகளுக்குத்
தேவைப்பட்டது. மேயர், தவிசாளர் பதவிகளுக்கு ஆசைப்பட்டு பாதீடுகளைத்தோற்கடித்து வரலாறு
படைத்தனர்.
தமிழ் தேசியக் கூட்டாமைப்பை அரசியல் கட்சியாகப் பதியவில்லை என்ர குற்றச் சாட்டு உள்ளது. புதிய கூட்டணி அரசியல் கட்சியாகப் பதியப்படுமா என்பது பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. சுழற்சி முறையில் தலைவர் பதவி வழங்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. தலைவர் பதவிக்கு அனைவரும் குறிவைகிறார்கள் போல் தெரிகிறது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்தி வைக்கபப்டலாம் என
எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. சாதக
பாகம் பார்த்த்த் தான் அரசாங்கம் முடிவெடுக்கும்.
No comments:
Post a Comment