Thursday, January 12, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 51


 தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான  பஞ்சு அருணாசலத்துடன்  இணைந்து படங்களைத் தயாரித்தவர்கள்  பெருத்த இலாபமடைந்தனர். ஆனால், பஞ்சு அருணாசலத்துக்கு இலாபத்தினால்  பெரும் நன்மை ஏற்படவில்லை.

பிரியா படத்தில் நடிப்பதற்கு சிவகுமார் ஒப்புக்கொண்டார். தொடர்ச்சியாக வெளிநாட்டில் படபிடிப்பு என்பதால் வேறு படங்கள் பாதிக்கபடும் என்பதால் விலகினார். 

  ராஜண்ணாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘ஏன் தமிழிலும் அம்பரீஷையே போடுங்களேன்’ என்றார்.   ராஜண்ணாவுக்கு `ப்ரியா’ கதை எதுவும் தெரியாது. பஞ்சுவும் நானும் அம்பரீஷைச் சந்தித்தது இல்லை. அவர் எப்படி நடிப்பார் என்றும் எனக்குத் தெரியாது. ‘படத்துல சிவகுமார் சார் கேரக்டர் பெருசுய்யா. அதை எப்படிய்யா அவர் தாங்குவார்?’ என பஞ்சு அருணாசலம் கேட்டார் . ‘தமிழ் வெர்ஷன்ல ரஜினி போர்ஷனை அதிகமாக்கி, அம்பரீஷ் போர்ஷனைக் குறைச்சுக்கங்க’ என அதற்கும் அவரே யோசனை சொன்னார். காரணம் எல்லாரையும்போல அவருக்கும் ரஜினியைப் பிடிக்கும்.

தமிழ், கன்னடம் இரண்டு மொழிகளிலும் நாம்தான் நடிக்கிறோம் என அறிந்த அம்பரீஷுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். பிறகு திரைக்கதையைத் திருப்பி எழுதினேன். கதைப்படி அம்பரீஷும் ஸ்ரீதேவியும் காதலர்கள். அவர்கள் இருவரையும் சேர்த்துவைப்பது ரஜினி. ஆனால் ‘ப்ரியா’வில் சிவகுமார்  இல்லை என்பதால், ரஜினிக்கான காட்சிகளை அதிகமாக்கினார்கள்.. அதில் ஒன்று `ஹே... பாடல் ஒன்று...’ என்ற ரஜினி-ஸ்ரீதேவிக்குமான டூயட். ‘எப்படி அவங்க ரெண்டு பேருக்கும் டூயட் வரும்?’ என்ற உங்களின் சந்தேகத்தையே படத்தில் இயக்குநராக நடிக்கும் தேங்காய் சீனிவாசனிடம் அவரின் அசோசியேட் கேட்பது போலவும், ‘யோவ்... அது இமேஜினேஷன் டூயட்யா’ எனச் சொன்ன பிறகு இந்தப் பாடல் வருவதுபோலவும் எழுதினார்.

‘ப்ரியா’ படத்தைப் பொறுத்தவரை சுஜாதா   வருத்தப்பட்டதிலும் நியாயம் உள்ளது. காமெடி, சீரியஸ், சென்டிமென்ட் என படத்தில் எல்லாமும் இருக்கும். ஓப்பனிங், முடிவு அவர் கதைப்படிதான் இருக்கும். நடுவில்பஞ்சு மாற்றங்கள் செய்தார்.  இதற்கு முன்பே அவரின் ‘காயத்ரி’ கதையை நான் எடுத்தபோது ‘புளூ ஃபிலிம் எடுக்கிறார் பஞ்சு’ என என்னைச் சொன்னதுபோல, அவரிடம், ‘நீங்க எழுதின அற்புதமான ஒரு விஷயத்தை ‘காயத்ரி’ கதையில் கோட்டைவிட்டுட்டாங்க. கதையில் உயிரோட்டமே இல்லாமல் பண்ணிட்டார் பஞ்சு’ எனச் சொல்லியிருக்கிறார்கள். 

அவரின் கதையைப் படமாக்குவது பற்றி அவரிடம் கேட்டபோது இரண்டு மாதிரியும் அவர் பதில் சொல்லியுள்ளார். ஒரு கேள்வி பதில் பகுதியில்... ‘நாவலைப் படமா எடுக்கிறதுல தப்பே இல்லை. அது படம் எடுக்கிறவரின் சொந்த முடிவு. என் நாவல்ல கணேஷ்-வசந்த் 20 பக்கத்துக்குப் பேசிட்டே இருப்பாங்க. சினிமாவுல 20 பக்கத்துக்குப் பேசிட்டிருக்கிற சீனை எவனாவது பார்த்துட்டிருப்பானா?’ என எழுதியவர், பிறகு, ‘சிலர் எல்லாம் ஏன் சினிமாவுக்குக் கதை கொடுத்தீங்கனு கேக்குறாங்க. நம்ம கதையை இப்படிக் கெடுத்துட்டாங்களேனு வருத்தமா இருக்கு. என்ன பண்றது? சரி அவங்க வாங்கிட்டாங்க. அவங்க இஷ்டத்துக்கு எடுக்குறாங்க’ என்றும் எழுதியுள்ளார்.

‘ப்ரியா’ கதையை நான் வாங்கிய சமயத்தில்   அட்வான்ஸாகக் கொடுத்த  பணத்தைத் தவிர மீதி தரவேண்டிய பணம்   அவருக்குப் போய்ச் சேரவில்லை. ‘சிரிக்கச் சிரிக்கப் பேசுவாங்க. ஆனால், வேறு மாதிரி நடந்துப்பாங்கனு சினிமாக்காரங்களைப் பற்றி சொல்வாங்க. நீங்ககூடவா சார் இப்படி?’ என மொத்தமே நாலு வரியில் பஞ்சு அருணாசலத்துக்குக்  ஒரு கடிதம் எழுதிவிட்டார் சுஜாதா.  . அவருக்கு மீதிப் பணம் போய்ச்சேரவில்லை என்ற விஷயமே, எனக்கு அவரின் கடிதத்தைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. அவர் எங்கு இருக்கிறார் என விசாரித்தபோது,  பெங்களூரில் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கு இருந்த ராஜண்ணாவிடம், ‘இன்னைக்கு சாயங்காலம் ஏழரைக்குள்ள பணம் கொடுத்து ரசீது வாங்கிட்டு வரணும்’பஞ்சு அருணாசலம்  சொன்னார் . அதேபோல அவரும் சுஜாதாவைத் தேடிக் கண்டுபிடித்து, பணத்தைக் கொண்டுபோய் சேர்த்தார்

படத் தயாரிப்பில் மற்றவர்களோடு இணைந்து ஈடுபட்டதில் ஏகப்பட்ட கசப்பு. ‘அன்னக்கிளி’, `கவிக்குயில்’, `ப்ரியா’ இவை மூன்றும்,  தம்பி சுப்புவுடன் சேர்ந்து பஞ்சு அருணாசலம் பண்ணின படங்கள். சுப்புவை, அவர்தான் தான் தயாரிப்பாளர் ஆக்கினார். நடிகர்-நடிகைகள், டெக்னீஷியன்கள் புக் பண்ணுவது தொடங்கி, எல்லா வேலைகளையும்  பஞ்சு அருணாசலம்  ஏற்பாடு செய்தார். தம்பிதானே அன அலட்சியத்தால் சம்பளம் பற்றி எதையும் வெளிப்படையாகப் பேசவில்லை. 

  `அன்னக்கிளி’ மிகப் பெரிய வசூல். ஆனால் பஞ்சு அருணாசலத்துக்கு தம்பி சுப்பு எதுவும் கொடுக்கவில்லை. . கேட்டால், ‘ ‘கவிக்குயில்’ பட லாபத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றான். ஆனால், ‘கவிக்குயில்’ படம் நஷ்டம். அதை முழுவதையும்அவரே அடைத்தார்.  தம்பிதான் இப்படி என்றால், தயாரிப்பாளர் பாஸ்கருடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப்பில் பண்ணின ‘காயத்ரி’ பட லாபத்தையும் கொடுக்கவில்லை வில்லை. அதில் வந்த லாபத்தில் அவர் வீடு வாங்கினார்.

இனி பார்ட்னர்ஷிப்பே வேண்டாம். நாமே தனியாக படம் எடுப்போம்என முடிவுசெய்துப்ரியாஎடுக்கத் திட்டமிட்டார் பஞ்சு அருணாசலம்.  பூஜை போடவில்லை, ஷூட்டிங் போகவில்லை. அவ்வளவுதான். மற்றபடி ரஜினி உள்பட எல்லா ஆர்ட்டிஸ்ட்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்து வெளிநாட்டில் படம் எடுக்கத் திட்டமிட்டார்.  படப்பிடிப்புக்குத் திட்டமிட்டு இருந்தோம். அந்தச் சமயத்தில் ஊரில் இருந்து பஞ்சுவின்  அம்மா போன் பண்ணினார். நான் தனியாகப் படம் பண்ணும் விஷயத்தை சுப்பு , அம்மாவிடம் சொல்லி அழுது புலம்பினார்.தாய்க்காக சுப்புவையும் பங்காளியாக்கினார்.

எதையும் என்னிடம் கேட்காத அம்மாவே கேட்கிறார்... பண்ணுவோம்என நினைத்து, மீண்டும் தம்பியுடன் இணைந்துப்ரியாவைத் தயாரித்தார் பஞ்சு அருணாசலம். படம் மிகப் பெரிய வெற்றி. ‘இனி யார் சொன்னாலும் அண்ணன் நமக்காகப் படம் பண்ண மாட்டார்என நினைத்தானோ என்னவோ, வந்த வரை லாபம் என நினைத்து தியேட்டர் மூலம் வந்த லாபம், இந்தி, தெலுங்கு  உரிமை என அந்தப் படம் மூலம் வந்த ஒட்டுமொத்த லாபத்தையும் எடுத்துக் கொண்டான். அதன் மூலம் வந்த பணத்தில் அவருடைய   தம்பிகள் சொந்தமாக வீடு வாங்கினார்கள். ஆனால், பஞ்சு அருணாசலம்  தொடர்ந்து குடியிருந்தது அதே தி.நகர் மூசா தெரு வாடகை வீட்டில்தான்.

நடிகர்-நடிகைகள், டெக்னீஷியன்கள் என என் நண்பர்கள் அனைவருக்கும் நான் ஏமாற்றப்படும் விஷயம் தெரியும். ‘நீங்க முட்டாள்தனமா பண்றீங்க. நீங்களே சொந்தமா படம் பண்ணவேண்டியதுதானே. நாங்க என்ன உங்க தம்பிக்காகவா உங்களோட வொர்க் பண்றோம். உங்களுக்காகத்தானே பண்றோம்என என்னை சத்தம்போடுவார்கள். ‘சொந்தம்பந்தம் வேறு, தொழில் வேறு. தம்பிகளுக்கு உதவ வேண்டும் என்றால், வேறு வகையில் செய்வோம். இனி தொழிலில் அவர்களை அனுமதிக்கக் கூடாதுஎன முடிவுசெய்து, சொந்தமாகத் தொடங்கிய கம்பெனிதான், ‘பி. ஆர்ட் புரொடக்ஷன்ஸ்.

அது கமல், ரஜினி இருவரும் சேர்ந்து நடித்துக்கொண்டு இருந்த சமயம்.  முதல் தயாரிப்பிலேயே இருவரையும் சேர்த்து வைத்து ஒரு படம் பண்ண விரும்பி அவர்களிடம் கால்ஷீட் கேட்டார்.இருவரும் ஒரு வருடம் கழித்து கால்ஷீட் கொடுத்தனர்.    அந்த இடைப்பட்ட ஒரு வருடத்தில் அவர்கள் சேர்ந்து நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அப்போது, `ரஜினி, கமல் இருவரும் இனி சேர்ந்து நடிப்பது இல்லை என்று அவர்கள் பேசி முடிவுசெய்து இருக்கிறார்கள். நீங்கள் ரெடியாக வைத்துள்ள கதை ரஜினி, கமல் இருவரில் யாருக்கு பொருத்தமாக இருக்கிறதோ அவரை வைத்து இந்தப் படத்தை எடுத்து விடுங்கள். இன்னொருவரை வைத்து அடுத்த படம் எடுத்துக்கொள்ளலாம்என்று அவர்கள் சொன்ன தகவலை இயக்குநர் எஸ்பி.முத்துராமன் பஞ்சு அருணாசலத்திடம்  சொன்னார். ‘அவங்க சேர்ந்துதானே படம் பண்ண மாட்டாங்க. இருவரும் தந்துள்ள கால்ஷீட்டை மாற்ற வேணாம்னு சொல்லுங்க. இருவரையும் வைத்து ஒரே சமயத்தில் தனித்தனியாக பண்றேன்என்றார்.. அவர்களும் .கே சொல்ல இருவருக்கும் நான் பண்ணின படங்கள்தான்கல்யாணராமன்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’. இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

அதற்கு முன்னர் `காயத்ரி' படம் தொடங்கிய சமயத்தில் பஞ்சு அருணாசலத்தின் ராஜண்ணா `தமிழில் பெரிய நடிகரை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும்' என ஆசைப்பட்டார். அப்போது இரூவரும்  சேர்ந்து தொடங்கிய படம்தான்கவரிமான்’. சிவாஜி  , ஸ்ரீதேவி உள்பட அந்தப் படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் . அதற்கும் எஸ்பி.முத்துராமன் சார்தான் டைரக்ஷன். இன்னும் ஒரு வார காலம் படப்பிடிப்பு மீதி இருந்த நிலையில்தச்சோலி அம்புஎன்ற ஒரு மலையாளப் பட ஷூட்டிங்கில் நடந்த விபத்தில் சிவாஜி சார் காயமடைந்து ஓய்வில் இருந்தார். அதற்குள்  `காயத்ரி', `ப்ரியா'வெளியாகி  ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘கல்யாணராமன்ஷூட்டிங் தொடங்கி முக்கால்வாசி முடிந்துவிட்டது. ஆறு மாத ஓய்வுக்குப் பிறகுகவரிமான்படத்துக்காக சிவாஜி   கால்ஷீட் தந்திருந்தார். அப்போது முத்துராமன்   ஆறிலிருந்து அறுபதுவரைபடப்பிடிப்பில் பரபரப்பாக இருந்தாலும் அவர் அசரவில்லை. ஏவி.எம்-ல் வேறொரு ஃப்ளோரில்கவரிமான்க்கு செட் போட்டு ஒரே சமயத்தில் அந்தப் படத்தையும்ஆறிலிருந்து அறுபதுவரைபடத்தையும் மாறி மாறி படப்பிடிப்பு நடத்தி யாருடைய கால்ஷீட்டையும் வீணாக்காமல் இரண்டு படங்களையும் முடித்தார்.

  ஆறிலிருந்து அறுபவதுவரையும், ‘கல்யாணராமனும் இரண்டு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகின. அவற்றைத் தொடர்ந்து  கவரிமான்வெளியானது . இந்த மூன்று படங்களுமே பெரிய அளவில் வெற்றிபெற்றன. இவற்றின் மூலம் நல்ல லாபம் கிடைத்தது . அந்தப் பணத்தில்தான் பஞ்சு அருணாசலம் தங்கைகளுக்குத் திருமணம் செய்தார்.

No comments: