இலங்கை அணிக்கு எதிராக அசாம் மாநிலம் கவுகாத்தியில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த கோலி பல வேறு சாதனைகளிப் படைத்துள்ளார். 113 ஓட்டங்களில் ஆட்டமிழந்த கோலி சுமார் ஒன்ரரை வருடங்கலின் பின்னர் சதம் அடித்தார்.
சதங்களில் 20 சதங்கள் உள்நாட்டில் அடிக்கப்பட்டவை. விராட்கோலி அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் இலங்கை அணிக்கு எதிராக 84 போட்டிகளில் இதுவரை
8 சதங்களை ஒருநாள் போட்டியில் விளாசியிருந்தார். விராட்கோலி 48 ஒருநாள் போட்டிகளில்
ஆடி 9 சதங்களை விளாசி அசத்தியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் சொந்த நாட்டில் அடித்த 20 ஒருநாள் போட்டி சதங்கள்
160 இன்னிங்சில் அடித்தார். விராட்கோலி 99 இன்னிங்சில் 20 சதங்களை விளாசி அசத்தியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், விராட்கோலி ஆகியோருக்கு பிறகு சொந்த நாட்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரராக 14 சதங்களுடன் ஹம்லா உள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 12,500 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற
பெருமையையும் விராட்கோலி படைத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை சமன் செய்து வரும் விராட்கோலி
அவுஸ்திரேலியா , வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் தலா 9 சதங்களை
அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரும் அந்த அணிகளுக்கு எதிராக தலா 9 சதங்களை விளாசியுள்ளார்.
விராட்கோலி தற்போது ஒருநாள் போட்டிகளில் 12 ஆயிரத்து 584 ஓட்டங்களுடன் உள்ளார். இலங்கை முன்னாள் கப்டன் மகேல ஜயவர்தன 12650 ஓட்டங்களுடன் உள்ளார். விராட்கோலி இந்த தொடரிலே அவரின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
கப்டன் தசுன் சனகா அதிரடியாக இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டார். வெற்றி பறிபோனாலும் குறைந்தபட்சம் சதத்தை நெருங்கி கடைசி ஓவரில் 98 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடினார். அவருடைய சதத்துடன் போட்டி நிறைவு பெறும் என்ற அனைவரும் முடிவுக்காக காத்திருந்த நிலையில் கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி 4வது பந்தில் சனகவை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அதன் காரணமாக போட்டியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டதுடன் சனாக்கா ஏமாற்றமடைந்த நிலையில் அதை சோதிப்பதற்காக நடுவரும் 3வது நடுவரை அணுகினார். இருப்பினும் அப்போது வேகமாக ஓடி வந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் “மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு போராடும் அவரை சதமடிக்க விடாமல் அவுட்டாவதற்கு இது சரியான வழியல்ல” என்று சிரித்த முகத்துடன் முகமது சமியிடம் பேசி சமாதானப்படுத்தினார். முகமது ஷமி தாமாகவே நடுவரிடம் சென்று தாம் முன்வைத்த அவுட்டை வாபஸ் பெறுவதாக கூறினார். அதை தொடர்ந்து கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்த பவுண்டரிகளுடன் 12 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்தார் சனாக 108* (88)
No comments:
Post a Comment