Monday, January 9, 2023

தேர்தலும் பேச்சுவார்த்தையும்


 உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களை நடத்துவதர்கு அரசாங்கம் தயாராக  உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 2023 ஜனவரி 18 முதல் 21 ஜன., 2023 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மனதில் என்ன  இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவது தேர்தல் முடிவுதான். துரதிர்ஷ்ட வசமாக  இலங்கையில் அப்படி ஒரு நிலை இல்லை. இடைத் தேர்தல் இல்லாமையால் மக்களின் மனதில் இருப்பதை அரசியல்வாதிகள் அறியமுடியாத நிலை உள்ளது.

தேர்தலுக்கு அரசியல்வாதிகள் தயாராக இருக்கும் நேரத்தில்  தமிழ்  அரசியல் தலைவர்களுடன்  ஜனாதிபதி ரனில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.  சுதந்திரதினத்துகு முன்னர்  கமிழ் மக்களின்  பிரச்சைனையைத் தீர்க்கப்போவதாக ஜனாதிபதி ரனில் அறிவித்துள்ளார்.

இலங்கையின் வாழும் மக்கள்  கடும் பொருளதார நெருக்கடியில் சிக்கி இருப்பதால் தேர்தல் செலவுகளைத் தாங்கிக்கொள்ளும் சக்தி இருக்கிறதா என்ற கேள்விக்கு யாரும் சரியாகப் பதில் சொல்லவில்லை.

தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாதேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் செய்யபோகும் செலவுகள் இதில் அடக்கப்படவில்லை.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செலவுகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் ஜீ.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செலவுகளை 8 பில்லியன் ரூபாவிற்குள் கட்டுப்படுத்த முயற்சிக்கப்படும் எனவும், 10 மில்லியன் மற்றும் அதனிலும் கூடுதல் தொகை செலவிடப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.  இன்ரைய  விலை வாசி உயர்வினால்  இது சாத்தியமாகாது என்பது தெளிவாகிறது. 10 பில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வார நாளில் நடத்துவதன் மூலம் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய போக்குவரத்து செலவு, மேலதிக நேர கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு செலவுகளை குறைக்க முடியும் எனவும்  இந்த தேர்தலுக்காக 200,000த்திற்கு குறைந்தளவு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், கடந்த 2018ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 250,000மாக காணப்பட்டுள்ளது.நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்டு இவ்வாறு தேர்தல் செலவுகளை முடிந்தளவு மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணைக்குழுவிற்குள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் பிளவு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற அரசாங்கம் தீர்மானத்துள்ளதாக அரசாங்கத்தின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரான சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவுடன் ஒரு அணியும், இதற்கு மாறான நிலைப்பாட்டை கொண்டுள்ள மற்றுமொரு அணியும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக இரண்டு நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளதால், அதனை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு தரப்பு தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதுடன் மற்றைய தரப்பு நிதி இல்லாத காரணத்தினால், தேர்தலை நடத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பது இந்த பிளவுக்கு காரணம் எனக்கூறப்படுகிறது.நிதி வழங்கப்படும் என நிதியமைச்சு உறுதிமொழியை வழங்கும் வரை தேர்தல் தினத்தை அறிவிக்க வேண்டாம் என ஒரு தரப்பினர் கூறியுள்ளனர்.

தேர்தலுக்காக வரவு செலவுத்திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் 12 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது. இரண்டு பில்லியன் ரூபா குறைவாக இருப்பதால், தேர்தல் செலவை முற்றாக ஈடு செய்ய முடியாது என கூறப்படுகிறது.எவ்வாறாயினும் தேர்தல் நடத்தப்படும் போது தேவையான நிதியை நிதியமைச்சு வழங்கும் என்ற நம்பிக்கையும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இருப்பதாக அதன் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை தேர்தல் ஆணைக்குழுவின் முழுமையான இணக்கப்பாட்டுடனேயே வேட்புமனுக்கள் கோரப்படும் திகதிகளை அறிவித்ததாக ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.இதனடிப்படையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மேற்கொள்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

 தேர்தலை நடத்துவதர்கு அரசாங்கம் தயாராக  இல்லை என எதிர்க் கட்சிகள்  குற்றம் சுமத்தியுள்ளன.

வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அரசியலில் மக்கள் கோபம் பெருகியுள்ள நிலையில், தேர்தலைத் தவிர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம்  முயற்சி செய்யலாம்.   தேர்தலை ஒத்திவைக்கும் ஒரு மோசமான நடவடிக்கையின் சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது.

தேர்தல்கள் மக்கலின் எதிரொலி ஆகும்.  அவை அரசியலில் பதட்டத்தைத் தணிக்கவும், அதன் மூலம் அரசியல் எழுச்சிகளைத் தடுக்கவும் உதவுகின்றன. தேர்தல் ஒத்திவைப்பு எப்பொழுதும் பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்துகிறது. 1975 இல், ஸ்ள்FP தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஒரு பொதுத் தேர்தலை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தது மேலும் மேலும் செல்வாக்கற்றதாக மாறியது. ஐக்கிய தேசியக் கட்சி 1977ல் ஆறில் ஐந்தில் ஒரு பெரும்பான்மையைப் பெற்றதன் விளைவாக, அதை எல்லா விதத்திலும் தவறாகப் பயன்படுத்தியது. ஜே.ஆர்.ஜெயவர்தன அரசாங்கம் 1982 பொதுத் தேர்தலை ஒரு பாரிய மோசடியான வாக்கெடுப்பு மூலம் மாற்றியமைத்தது மற்றும் இரண்டாவது ஜே.வி.பி எழுச்சிக்கு வழி வகுத்தது.  

தேர்தல் பேச்சுவார்த்தை இரண்டும் தொடருமா அல்லது கைவிடப்படுமா என்பது அடுத்த வாரத்தில் வெளிச்சத்துக்கு வந்து விடும்.

No comments: