அவுஸ்திரேலியா,நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்கான நிழைவுச் சீட்டுகள் அரை மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜூலை 20 ஆம் திகதி ஆக்லாந்தில் தொடங்கி ஆகஸ்ட் 20 ஆம்
திகதி சிட்னியில் இறுதிப் போட்டியுடன் முடிவடைகிறது.இதுவரை 120 நாடுகளில் உள்ள ரசிகர்கள் டிக்கெட்டுகளை
வாங்கியுள்ளனர் என்று பீபா தெரிவித்துள்ளது.
"அமெரிக்கா, இங்கிலாந்து,
கட்டார், ஜேர்மனி, சீனா, கனடா, அயர்லாந்து
குடியரசு ,பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வசிக்கும்
ரசிகர்கள் அதிகளவு நுழைவுச் சீட்டுகளை
வாங்கியுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு
பிரான்ஸில் நடந்த கடைசி போட்டிக்கான
விற்பனையை முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸில்
1.13 மில்லியன் நுழைவுச் சீட்டுகள் விற்கப்பட்டன.
இந்த
ஆண்டு மகளிர் உலகக் கிண்ணப்
போட்டியில் முதன்முறையாக 32 நாடுகள் பங்கேற்கின்றன.இன்னும்
பல டிக்கெட்டுகள் பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டியுள்ளது, மேலும் பல நுழைவுச்
சேட்டுகள் மாதங்களில்
விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை
20 ஆம் திகதி அயர்லாந்திற்கு
எதிராக அவுஸ்திரேலியாவின் தொடக்க குரூப் பி
போட்டியை தற்போது 45,000 பேர் பங்கேற்கும் அலையன்ஸ்
ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த நிலையில், ஸ்டேடியம் ஆஸ்திரேலியாவிற்கு மாற்றலாமா என்பதை பீபா தற்போது
ஆராய்ந்து வருகிறது.
ஆக்லாந்தில்
உள்ள ஈடன் பார்க் மைதானத்தில்
குரூப் ஏ பிரிவில் நார்வேயுடன்
விளையாடும் போது, இணை நடத்துபவர்களான
நியூசிலாந்து போட்டியை முன்னதாக தொடங்கும்.
இரண்டு முறை நடப்பு சாம்பியனான அமெரிக்கா ஹட்ரிக் சம்பியனாகும் எதிர்பார்ப்பிப் உள்ளது. 32 அணிகள் கொண்ட போட்டியில் மொராக்கோ, பிலிப்பைன்ஸ் ,ஸாம்பியா, அயர்லாந்து , வியட்நாம் ஆகிய ஐந்து நாடுகள் முதன் முதலாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன.
No comments:
Post a Comment