Friday, January 13, 2023

பார்வையாளர்கள் வெளியேற்றப்படும் அபாயம்


 

நோவக் ஜோகோவிச்சை குறிவைத்தால், அவுஸ்திரேலிய ஓபன் பார்வையாளர்கள் வெளியேற்றப்படும் அபாயம் இருப்பதாக புதன்கிழமை எச்சரிக்கப்பட்டது.

ஜோகோவிச் தனது கோவிட் தடுப்பூசி நிலைப்பாட்டின் காரணமாக கடந்த ஆண்டு போட்டிக்கு முன்னதாக நாடுகடத்தப்பட்ட பின்னர் அடுத்த வாரம் மெல்போர்னில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாமில் திரும்புவார். தொற்றுநோயின் உச்சத்தில் உலகின் மிக நீண்ட முடக்கத்திட்த் தாங்கிய ஒரு நகரத்தில் அவரது நாடுகடத்தல் விமர்சிக்கப்பட்டது. அவுஸ்திரேலியவில்  அவர் எப்படி வரவேற்கப்படுகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.35 வயதான அவர் கடந்த வாரம் அடிலெய்டு சர்வதேச அரங்கில் அவரது மூலையில் பெரும் கூட்டத்துடன் அன்புடன் வரவேற்கப்பட்டார். அவர் போட்டியை வென்றார்.

அவுஸ்திரேலிய ஓபன் போட்டியின் இயக்குனர் கிரேக் டைலே ஹெரால்ட் சன் செய்தித்தாளிடம் கருத்துத் தெரிவிக்கையி,   "ஜோகோவிச்சை கேலி செய்ய விரும்பும் எந்த ரசிகர்களையும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் வேறொருவரின் இன்பத்தை சீர்குலைத்தால்  அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.    அவர்கள் விலகி இருக்கலாம் அல்லது நாங்கள் அவர்களை வெளியேற்றுவோம்" என்று கூறினார். 

அவுஸ்திரேலிய ஓபன் திங்கட்கிழமை தொடங்குகிறது, ஆனால், லேவர் அரங்கில்  வெள்ளிக்கிழமை நிக் கிர்கியோஸுக்கு எதிராகநடைபெறும் கண்காட்சிப் போட்டியில்  ஜோகோவிச்  விளையாடுகிறார். அந்தப் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டுவிட்டன.   

No comments: