அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சி செய்தபோது மத்திய அரசான பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதுவித பிரச்சனையும் ஏற்படவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடம் ஏறியதும் பரதீய ஜனதாவின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டது. ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக்கியது மத்திய அரசு.
மநில
அரசுக்கும் ,மத்திய அரசுக்கும் இணைப்புப் பாலமாக இருப்பவர்தான்
ஆளுநர். ஆனால், மத்திய
அரசுக்கு இணங்கிபோகாத மாநில
அரசின் கடிவாளத்தை இழுத்துப் பிடிப்பவராகவே பல ஆளுநர்கள் இருக்கிறார்கள். தமிழக ஆளுநர் மெது
மெதுவாக தனது முகத்தைக் காட்டத்
தொடங்கினார். தமிழக அரசு நேரடியாக
முட்டி மோதாமல், அரசியல் ரீதியாக ஆளுநருக்கு
எதிராகக் காய் நகர்த்தியது.
ஆளுநருடன் இணங்கி
போக வேண்டிய நேரங்களில் இணங்கிப்
போனது. எதிர்க்க வேண்டிய
நேரங்களில் துணிச்சலாக
எதிர்த்தது. தமிழகத்துக்கு
வேண்டிய உரிமைகளை பிரதமர்
மோடிகு முன்னால் முதல்வர் ஸ்டாலின் உரத்த குரலில் அறைகூவல்
விடுத்தார். ஆகையால் , ஆளுநருடன் நேரடியாக மோதுவதை
அவர் தவிர்த்து வந்தார்.
தமிழக அரசு
நிறாவேற்ரும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ரவி கிடப்பில்
போட்டார். 2022 ஆம் ஆண்டு செப்ரெம்பரில் நிறைவேற்றப் பட்ட நீட் விலக்கு
மசோதாவை ஆளுநை கவனத்தில் எடுக்கவில்லை.
ஏழு தமிழர்கள் விடுதலையிலும் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்தார். நீதிமன்றம் தலையிட்டு ஏழு பேரையும் விடுதலை
செய்து ஆளுநரைக் கண்டித்தது. இபடி
ஒரு நிலை அரசிலய்வாதிக்கு ஏற்பட்டால்
உடனே இராஜினாமாச்
செய்யும்படி போராட்டம் நடத்தும் எதிர்க் கட்சிகள் கள்ள மெளனம் காக்கின்றன.
இன மத பேதம் இன்றி செயற்பட வேண்டிய ஆளுநர் ஒரு மதத்தின் பிரசாரகராகச் செயற்படுகிறார். சனாதன மத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டாடுகிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ,பாரதீயா ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளைத் தவிர தமிழகக் கட்சிகள் அனைத்தும் ரவிக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றன். தமிழ் நாடு எனச்சொல்லாமல் தமிழகம் எனச் சொல்லும்படி வலியுருத்துகிறார். ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றும் படி சொல்வதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
தமிழக சட்டசபை கூட்டத்
தொடரில் அவர் நடந்துகொண்ட விதம் தமிழக
அரசுடனான உச்சக்கட்ட
மோதலாகப் பர்க்கப்படுகிறது. சட்டசபை
ஆரம்பமாகும் போது அரசின் சாதனைகளை
ஆளுநர் வாசிப்பார். மாநில அரசு எழுதிக் கொடுப்பதைத்தான் ஆளுநர்
வாசிக்க வேண்டும். அதில் எந்த விதமான
மாற்றமும் செய்யக் கூடாது. தமிழக அரசு எழுதிக்
கொடுத்ததைப் படிக்காமல் சில வார்த்தைகளையும் சொற்களையும்
சதனைகளையும் தவிர்த ரவி, சிலவற்றைச்
சேர்த்தார். அதர்கு உடனடியாக சபையில்
பதிலளித்த முதல்வர்
ஸ்டாலின் ஆளுநர் சுயமாக சொன்னவற்றை
அவைகுறிப்பில் இருந்து விலக்கும் தீர்மானத்தை
சமர்ப்பித்தார். சபையின்
என்ன நடக்கிரதென்பதை உதவியாளரைக் கேட்டுத் தெரிந்து கொண்ட ரவி அவசர
அவசரமகச் சபையில் இருந்து வெளியேறினார்.
சபை முடிந்து தேசிய கீதம் இசைக்கும்
வரை ஆளுந இருக்க
வெண்டும் சபை மரபை மீரி
தேசிய கீதத்தை ரவி அவமானப்படுத்தி
விட்டார் என குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் படிக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் ஆளுநர் அதை படிக்காமல் தானாக சில வார்த்தைகளை சேர்த்து, சில வார்த்தைகளை நீக்கி உள்ளார். ஆளுநர் ஆர். என் ரவி தொடக்கத்தில் மட்டும் தமிழ்நாடு என்று கூறிவிட்டு கடைசி கட்டங்களில் தமிழ்நாடு என்று சொல்லாமல் இந்த அரசு என்று கூறியுள்ளார் ஆளுநர் ரவி தனது உரையில் 65வது பத்தியை அப்படியே தவிர்த்து இருக்கிறார். அந்த பத்தியில், சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது, என்ற பகுதியை மொத்தமாக தவிர்த்து உள்ளார். வெளியே எதிர்த்து இருக்கலாம் ஆளுநர் ஆர். என் ரவி இதற்கு ஆளும் தரப்பிடம் இருந்து எதிர்வினையை கண்டிப்பாக எதிர்பார்த்து இருப்பார். எப்படியும் திமுக தரப்பில் இருந்து எதிர்வினை வரும் என்று தெரியும். ஆனால் சட்டசபையிலேயே இந்த எதிர்வினை வரும் என்று அவரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார். பாஜக, அதிமுகவினரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் சட்டசபைக்கு வெளியில் பேட்டி கொடுத்து இருக்கலாம், கண்டன அறிக்கை விட்டு இருக்கலாம். ஆனால் ஸ்டாலின் அதே இடத்திலேயே ஆளுநரை எதிர்த்தார். ஆளுநருக்கு முன்பாகவே அவரின் பேச்சை நிராகரித்து உடனே தீர்மானம் நிறைவேற்றி, அதை வெற்றிபெறவும் வைத்தார். இதனால் சபாநாயகரும் உடனடியாக அரசு எழுதிய உரையை அவை குறிப்பில் பதிவு செய்தார். இங்குதான் பிரச்சனை புதிய வடிவத்தை அடைந்துள்ளது. நீட் மோதல் -தேநீர் விருந்து மூலம் ஆளுநர் ஆர். என் ரவிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையிலான மோதல் அடுத்த கட்டத்தை அடைந்து உள்ளது.
மாநில முதல்வர் எடுக்கும் பதவிப் பிரமாணத்துக்கும் கவர்னரின்
பதவிப் பிரமாணத்துக்கும் வித்தியாசம் உண்டு. ‘அரசியல் சட்டப்படி
நடப்பேன்' என முதல்வர் உறுதிமொழி
எடுப்பார். ஆனால், ‘அரசியல் சட்டத்தைப்
பாதுகாப்பேன், சட்டத்தையும் முழுமனதாகக் காப்பேன். மாநில மக்களின் நலனுக்காக
சேவையாற்றுவேன்' என்று சட்டப்பிரிவு 159-ன்படி
கவர்னர் பதவிப் பிரமாணம் எடுக்கிறார்.
இந்த வகையில் ஒரு மாநிலத்தில்
அவர்தான், அரசியல் சட்டத்தைக் காப்பாற்றும்
பொறுப்பில் இருப்பவர். ஆனால், ‘சனாதன தர்மமே
இந்தியாவைக் காக்கிறது. அரசியல் சட்டம் அல்ல'
என்றும், ‘இந்தியாவை மதச்சார்பற்ற நாடு எனச் சொல்கின்றனர்.
எந்த ஒரு நாடும் ஏதாவது
ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். இந்தியாவும்
விதிவிலக்கல்ல' என்றும் அரசியல் சட்டத்துக்கே
முரணாகப் பேசுவதும் அவர்தான்.ஒரு மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசும், கவர்னரும் தாங்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளின்
அடிப்படையில் மக்களுக்கு சேவையாற்றக் கடமைப்பட்டவர்கள்.
கேரள உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்து அம்மாநில
கவர்னர் ஆரிஃப் முகமது கானை
விமர்சனம் செய்தார். ‘கவர்னரின் விருப்பத்தின் பேரில்தான் அமைச்சர் பிந்து பதவியில் இருக்கிறார்.
கவர்னர் தன் விருப்பத்தை விலக்கிக்கொள்ள
நினைக்கிறார்' என்று கவர்னர் மாளிகை
அறிவிப்பு செய்தது. நல்லவேளையாக சட்ட நிபுணர்கள் தலையிட்டு,
‘மாநில முதல்வரின் பரிந்துரை இல்லாமல் அப்படியெல்லாம் நீங்கள் செய்ய முடியாது'
என்று கவர்னருக்கு அணை போட்டனர். சமீபத்தில்
முதல்வர் பினராயி விஜயன் ஓர்
அமைச்சரை புதிதாக நியமித்தபோது, ‘அவருக்குப்
பதவிப் பிரமாணம் செய்துவைக்க எனக்கு இஷ்டமில்லை. நான்
மறுக்கலாமா' என்றும் சட்ட ஆலோசனை
கேட்டார். ‘அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை' என்று சொன்னபிறகு வேண்டா
வெறுப்பாகப் பதவிப் பிரமாணம் செய்து
வைத்தார். சில பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை
திடீரென அவர் ராஜினாமா செய்யச்
சொன்னதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கோர்ட் தலையிட்டு அவர்களைக்
காப்பாற்றியது.
டெல்லி மாநகராட்சியை பா.ஜ.க-விடமிருந்து முதல்முறையாகக் கைப்பற்றியது ஆம் ஆத்மி கட்சி.
மாநகராட்சியில் நியமன உறுப்பினர்களாக 10 பேரை
நியமிக்கும் உரிமை டெல்லி கவர்னருக்கு
உண்டு. மாநகராட்சி நிர்வாகத்தில் சிறப்பு அறிவும் அனுபவமும்
கொண்டவர்களே நியமன உறுப்பினராக முடியும்
என விதி இருந்தாலும், பா.ஜ.க-வினர்
10 பேரை நியமித்து, ஆம் ஆத்மிக்குக் குடைச்சல்
கொடுத்திருக்கிறார் கவர்னர் வி.கே.சக்சேனா. அது மட்டுமல்ல, டெல்லி
அரசு விளம்பரங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கான
விளம்பரங்கள் போல பயன்பட்டதாகக் குற்றம்
சாட்டி, அந்தக் கட்சியிடமிருந்து 97 கோடி
ரூபாயை வசூலிக்குமாறு டெல்லி தலைமைச் செயலாளருக்கு
உத்தரவிட்டிருக்கிறார். மோடி படத்துடன் மத்திய
அரசு செய்துவரும் விளம்பரங்களுக்கான தொகையை பா.ஜ.க வழங்கியதும், தங்கள்
கட்சியும் பணம் தரும் என்று
பதிலடி தந்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
சத்தீஸ்கர்
கவர்னர் அனுசுயா உகே, தாங்கள்
அனுப்பும் மசோதாக்களில் கையெழுத்து போடாமல் காலம் தாழ்த்துவதாக
காங்கிரஸ் கட்சி முதல்வர் பூபேஷ்
பாகல் போராடிவருகிறார். ஆர்.எஸ்.எஸ்
அமைப்பின் ‘பாஞ்சஜன்யா' இதழின் ஆசிரியராக இருந்த
பல்தேவ் பாய் சர்மா என்பவரை
சத்தீஸ்கர் அரசின் குஷாபாவ் தாக்கரே
பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தராக நியமித்துள்ளார் கவர்னர்.
மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியும் கவர்னர் ஜெகதீப் தன்கரும் மோதிக்கொண்டதைத் தாண்டி இனி எங்கும் நடந்துவிடப்போவதில்லை. தெலங்கானாவில் சந்திரசேகர ராவ்- தமிழிசை சௌந்தரராஜன் மோதல் எல்லாம் அத்துடன் ஒப்பிடும்போது சாதாரணம். தமிழ்நாட்டு மோதலும் சாதாரணமே!ஜெயலலிதா-சென்னா ரெட்டி மோதல் சரித்திரப் பிரசித்தி பெற்றது. ஜெயலலிதவின் தொண்டர்கள் சென்னா ரெட்டிக்கு எதிரகப் போராட்டம் நடத்தி அவரை இரண்டு மணித்தியலம் நடுத்தெருவில் வைத்திருந்தார்கள். ஆளுநர் ரவியுன் பொங்கல் அழைப்பிதழில் தமிழக அரசின் இலச்சினை இல்லை தழ்நடு என இலச்சினை இருப்பதால அதனைத் தவிர்த்துவிட்டார்.சென்னா ரெட்டிக்கு சிம்ம சொப்பனமாக ஜெயலலிதா இருந்தார். தற்போது முதல்வர் ஸ்டாலினும் ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
No comments:
Post a Comment