Thursday, March 2, 2023

2 பந்தில் முடிந்த ரி20 போட்டி

இங்கிலாந்தில் உள்ள தீவு அணியான ஐல் ஆஃப் மேன் அணியை 10 ஓட்டங்களில் ஆட்டமிழக்கச் செய்த ஸ்பெயின் அணி 2 பந்தில் ஆட்டத்தை முடித்து சாதனை புரிந்துள்ளது. இதன் மூலம் ரி20 போட்டிகளில் மிகவும் குறைவான ஓட்டங்கள்  எடுத்த அணி என்ற மோசமான சாதனையை புரிந்துள்ளது ஐல் ஆஃப் மேன் அணி. ஐசிசி ஐரோப்பிய உறுப்பினர் அணிகளான ஐஸ் ஆஃப் மேன் - ஸ்பெயின் அணிகளுக்கு இடையே 6 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் கடைசி போட்டியில் இப்படியொரு அதிசயத்தக்க சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 முதலில் துடுப்பெடுத்தாடிய  ஐல் ஆஃப் மேன் அணி  8.4 ஓவர்களில்  சகலவிக்கெற்களையும் இழந்து 10  ஓட்டங்கள் எடுத்தது.   7 வீரர்கள்  ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இந்த இலக்கை   2 பந்துகளில் எட்டி ஸ்பெயின் வெற்றி பெற்றது. இதன்மூலம் மிகவும் குறைவான ஓட்டங்கள்  எடுத்த அணி என்ற மோசமான சாதனையை ஐல் ஆஃப் மேன் அணியும், 2 பந்தில் வெற்றி பெற்ற விரைவாக போட்டியை வென்ற அணி என்று ஸ்பெயினும் சாதனை புரிந்துள்ளது.

சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பேஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணி 15 ஓட்டங்கள்  அடிலெய்டு ஸ்டைக்ர்ஸ் அணிக்கு எதிராக எடுத்து மிகவும் குறைந்த ஓட்டங்கள்  எடுத்த அணியாக  இருந்தது.

 

No comments: