தமிழகத்தில் தாமரை மலரும் என்ற தமிழிசையில் விருப்பத்துக்கு முரண்பாடாக அண்ணாமலை செயற்படுகிறார். தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவராக தமிழிசை, இருந்தபோது அக் கட்சி தமிழகத்தின் பேசு பொருளாகியது. அந்த இடத்துக்கு அண்ணாமலை வந்த பின்பு நிலைமை தலைகீழாகிவிட்டது.
தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவரான அண்ணாமலை தனக்கென ஒரு படையை உருவாக்கி உள்ளார். மூத்த உறுப்பினர்கள் அண்ணாமைக்கு எதிராக டில்லிக்கு புகாரளித்துள்ளனர். அவை எவையும் கவனத்தில் எடுக்கப்படவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், தமிழக பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இடையே உள்ள பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.அண்ணாமலை மீது ஏகப்பட்ட நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்களாம். ஆனால், தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷின் ஆதரவு அவருக்கு இருப்பதால், அதை வெளியில் சொல்லவே பயப்படுகிறார்களாம். கட்சியைவிட தானே பெரியவன் என்று அண்ணாமலை நினைக்கிறார். கள அரசியல் தெரியாத ஒருவரிடம் கட்சியைக் கொடுத்தால் என்னவாகும் என்பதை டில்லித் தலைவர்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை. கட்சிக்குள் இருப்பவர்களை வேவு பார்ப்பதற்கென ஒரு குழுவை அண்ணாமலை அமைத்துள்ளார்.
கட்சியின் மூத்த உறுப்பினரான கே.டி.ராகவனின் அந்தரங்க லீலைகளை வீடியோவாக வெளியிட்டு அவரை ஓரம் கட்டிவிட்டார்.காய்த்திரி ரகுராம், திருச்சி சூர்யா போன்றோரும் அண்ணாமலையால் பாதிக்கப்பட்டு கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். அண்ணாமலையின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட பலர் பாரதீய ஜனதாவில் இருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர். தமிழக பாரதீய ஜனதாவின் தொழில் நுட்பக்குழு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தஞ்சமடைந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் அண்ணாமலையை முன்னிறுத்தி செய்திகளை வெளியிட்ட தொழில் நுட்பகுழுவின் வெளியேற்றம் அண்ணாமலைக்கு மட்டுமல்லாது பாரதீய ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தமிழக பாரதீய ஜனதாவின் ஐடி விங் மாநில செயலாளராக இருந்த நிர்மல் குமார் கடந்த ஞாயிற்று கிழமை அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு அக்கட்சியில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாமலை திமுக அமைச்சருடன் ரகசியமாக பேசுகிறார், மனநலம் குன்றியவர் போல் நடந்துகொள்கிறார், பாஜகவினரை செருப்பாக பயன்படுத்துகிறார் 420 மலை என பல்வேறு குற்றச்சாட்டுகளை நிர்மல் குமார் சுமத்தினார். நிர்மல்குமாரை கட்சியில் சேர்த்ததற்கு பாஜக மாநில விளையாட்டு மற்ரும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவரான அமர்பிரசாத் ரெட்டி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "அதிமுக கூட்டணியில் இருக்கும்போது இப்படி செய்திருக்க கூடாது. பாஜகவில் இருந்து விலகுபவர்களை அதிமுக அரவணைக்க கூடாது. தமிழ்நாட்டின் வருங்காலம் பாஜகதான். அண்ணாமலை தலைமையில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் என்று டிவிட்டரில் தெரிவித்தார்.
பாஜக ஐடி விங் மாநில செயலாளராக இருந்த திலிப் கண்ணன்,
பாஜக ஓபிசி பிரிவின் மாநில செயலாளர் ஜோதி, பாஜக முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் ஆகியோரும் பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அடுத்தடுத்த விலகலால் தமிழ்நாடு பாஜக அதிர்ச்சியில் உள்ளது.
தமிழ்நாடு பாஜகவின் உட்கட்சி பூசல் உச்சகட்டமாக வெடித்திருக்கிறது. தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் நிர்வாகிகள் அதிமுகவில் இணைவதால் கூட்டணியிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 10-ந் தேதி பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா தமிழ்நாடு வருகை தர உள்ளார்.
தமிழ்நாடு பாஜகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன் விலகி அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து பாஜக ஐடிவிங்கில் இருந்து நிர்மல் குமார், திலீப் கண்ணன் ஆகியோரும் விலகினர்.தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை மிக கடுமையாக விமர்சித்தே பலரும் வெளியேறி வருகின்றனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில்
பாரதீய ஜனதா மட்டும்தான் எஞ்சி உள்ளது. இந்த நிலையில் கூட்டணிக்
கட்சியில் இருந்து வெளியேறுபவர்களை
இணைத்துக் கொள்வது
கூட்டணித் தர்மத்துக்கு
விரோதமானது. அவர்களை
இணைப்பதனால்
பாரதீய ஜனதாவ்ன் தயவு தேவை இல்லை என்ற சமிக்ஞை
ஒன்றை எடப்பாடி வெளிப்படுத்தி உள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகதின் தய்வு பாரதீய ஜனதாவுக்கு கண்டிப்பாகத் தேவை. இத்தனை களேபரங்களுக்கிடையிலும்
பரதீய ஜனதாவுடனான கூட்டணி தொடரும் என
ஜெயக்குமார் சொல்லியுள்ளார்.
எடப்பாடியின் படத்தை பாரதீய ஜனதாவினர் எரிக்கின்றனர், அவரைத் துரொகி என்கின்றனர். அண்ணாமலையின் படத்தை அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் எரிக்கின்றனர், அவரைத் துரோகி என்கின்றன.
பாரதீய ஜனதாக் கட்சித் தலைமையும், அண்னா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையும் இதனைக் கண்டிக்கவில்லை.
தமிழக பரதீய ஜனதாக் கட்சித் தலைவரான அண்ணாமலை தான் தேசியத் தலைவர்
என்ற இறுமாப்பில்
இருக்கிறார். கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா
போன்ற தலைவர் தான் என அகம்பாவத்துடன் கூறுகிறார். அவர்கள்
தொண்டர்களால் தெரிவு
செய்யப்பட்ட தலைவர்கள்.
மக்களால் தெரிவான
முதலமைச்சர்கள். தமிழக பாரதீய ஜனதாத் தலைவர் ந்ன்பது நியமனப் பதவி என்பது அரசியல் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த
உண்மை. பாரதீய ஜனதாக் கட்சியின்
நிர்வாகிகள் மேலும் பலர் அதிமுகவில் இணைவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பாரதீய ஜனதாவினரை
சேர்ப்பதற்காகவே, எடப்பாடி பழனிச்சாமி தனியாக ஒரு டீம் அமைத்திருக்கிறாராம்.. இந்தக் குழுவினர்தான்,
குறிப்பாக அண்ணாமலையால் பாதிக்கப்பட்டு அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுடன் கடந்த சில நாட்களாகவே பேச்சுவார்த்தை நடத்தி வந்திருக்கிறார்கள். பாரதிய ஜனதாவின்
உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் லதா, உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு ஒன்றிய தலைவர் வைதேகி ஆகியோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்
இணைந்துள்ளனர். இந்த இணைப்பு இனி தொடரும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக்
தலைவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர். இப்படி ஒரு டீமையே உருவாக்கி, எடப்பாடி டீம் வேலை பார்த்து வருவது பல தரப்பினரையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறதாம். பாரதீய ஜனதாவை
உடைத்து அண்ணாமலைக்கு
அதிர்ச்சி கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு செயல்பட்டு வருவதை, டெல்லி மேலிடமும் கவனித்து வருவதாக சொல்கிறார்கள்.
ஈரோடு இடைத்தேர்தல் நேரத்தில் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தவர் அண்ணாமலை. தனக்கு எதிராக
எடப்பாடி
காய் நகர்த்துவதால்
திடீரென
ஓ. பன்னீர்ச்செல்வத்தை சந்தித்தார் அண்ணாமலை.
பன்னீர்ச்செல்வத்தின் தாயாரி இறந்து
இரண்டு
வாரங்கலின்
பின்னர் துக்கம் விசாரிக்கப்போய் இருக்கிறார் அண்ணாமலை.
எடப்பாடி,பன்னீர்,சசிகலா,தினகரன் ஆகிய நால்வரும் இணைந்து தேர்தலைச் சந்திக்க
வேண்டும் என்பதே பாரதீய ஜனதாவின் விருப்பம். எடப்பாடி
அதற்குச் சம்மதிக்கவில்லை. அவர்கள்
இணைந்தால் தனது தமைமைகு ஆபத்து என்பதை அவர் நன்கு உணர்ந்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல்
முடிவு தோல்வி என்றாலும் தனக்குச் சாதகமாக இருக்கும் என எடப்பாடி மலைபோல் நம்பி இருந்தார். கட்டுப்பணம் கிடைக்குமா
கிடைக்காதா என்ற நிலைமை
பிற்பகல் 4 மணி வரை நீடித்தது. தேர்தல் முடிவு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திகு பலத்த அடியாக
விழுந்தது. 30 சத வீதமாக
இருந்த செல்வாக்கு 24 சதவீத்மாகி உள்ளது. இந்த வாக்குகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கானது மட்டுமல்ல.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டைகுள் காங்கிரஸ் கட்சி வரலாற்று
வெற்றியைப் பெற்றுள்ளது.எம்.பிக்கள், சட்டசபை உறுப்பினர்கள், வட்ட, மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் எடப்பாடியின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்.
இரட்டை இலை கிடைத்தும் தொண்டர்கள் எடபாடியைக் கைஇட்டுள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றாக் கழகத்துக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையிலான உரசல் இப்போதைக்குத் தீராது. அடுத்த தேர்தல் நெருங்கும் போது இரண்டு கட்சிகளும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
No comments:
Post a Comment