Wednesday, March 15, 2023

சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் ரஷ்ய வீரர்கள்


 இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெறும் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (ஐபிஏ) மகளிர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், நாட்டின் கொடியின் கீழ் போட்டியிட 12 வீராங்கனைகளை ரஷ்யா அனுப்பியுள்ளது.

உக்ரைனில் நடந்த போருக்கு பதிலளிக்கும் விதமாக IBA விதித்த தடைகள் காரணமாக கடந்த ஆண்டு பதிப்பில் இருந்து ரஷ்யா தடைசெய்யப்பட்ட பின்னர் ரஷ்ய தேசியக் கொடியுடன் விளையாடும் முதல் சந்த்ர்பம் இதுவாகும்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) பரிந்துரைகளுக்கு மாறாக IBA தடையை நீக்கிய பிறகு, இந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் ரஷ்ய தேசிய சின்னங்கள் அணிவதற்கும், கீதம் இசைப்பதற்கும் எந்த தடையும் இருக்காது.

வியாழன் மார்ச் 16 முதல் மார்ச் 26 வரை  போட்டிகள்  நடைபெறும். அமெரிக்கா, பிரிட்டன் ,உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகள் புறக்கணிக்கும் வகையில் இந்த சர்ச்சைக்குரிய முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

மாஸ்கோவின் ஷெரெமெட்டியோ விமான நிலையத்தில் இருந்து கடந்த திங்கட்கிழ்மை புறப்பட்ட‌ தேசிய அணியை அனுப்ப விளையாட்டு வீரர்களின் உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் ரஷ்ய கொடிகள் மற்றும் சுவரொட்டிகளை தாங்கி ஆதரவு தெரிவித்ததாக ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ அரசு செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது .

12 பேர் கொண்ட அணியில், 2019 உலக தங்கப் பதக்கம் வென்றவரும், 2018-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியனுமான எகடெரினா பல்ட்சேவா, 50 கிலோகிராம் பிரிவில் போட்டியிடுகிறார் 

  உலக சாம்பியன்ஷிப்பில் அணி "இரண்டு அல்லது மூன்று பதக்கங்களை"  பெறும் என   எதிர்பார்ப்பதாக ரஷ்ய குத்துச்சண்டை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் Tatyana Kiriyenko கூறினார்.

 2019 ஆம் ஆண்டு ஐரோப்பிய தங்கப் பதக்கம் வென்ற யூலியா சும்கலகோவா, 48 கிலோவுக்குட்பட்ட பிரிவில் ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.

2019 ஆம் ஆண்டு உலக வெள்ளிப் பதக்கம் வென்ற லியுட்மிலா வொரொன்ட்சோவா மற்றும் 2019 ஆம் ஆண்டு ஐரோப்பிய வெள்ளிப் பதக்கம் வென்ற கரினா தசபெகோவா ஆகியோர்   57 கிலோ ,54 கிலோவுக்கு கீழ் பிரிவுகளில் போட்டியிடும் அணியில் உள்ளனர்.

அன்னா ஏட்மா, நடேஷ்டா கோலுபேவா, நடாலியா சிச்சுகோவா, அசாலியா அமினேவா, அனஸ்தேசியா டெமுர்ச்சியான், அனஸ்டாசியா ஷமோனோவா, சால்டனாட் மெடெனோவா , டயானா பியாடக் ஆகியோரும்  போட்டியிடும் குழுவில் இடம் பிடித்துள்ளனர். அடங்குவர்.

No comments: