இந்தியன் ப்ரீமியர் லீக் (ஈPள்)எனப்படும் ஆடவர் ஐபிஎல் ரி20 கிறிக்கெற் போட்டி மார்ச் 31ம் திகதி தொடங்கி மே 28ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ள 16வது சீசன் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.
சிஎஸ்கே,
ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா
நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி
கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,
மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
ஆகிய அணிகள் விளையாடுகின்றன.
2023 சீசன் ஐபிஎல்
தொடரின் முதல் ஆட்டத்தில் 4 முறை
சாம்பியனான எம்.எஸ்.டோனி
தலைமையிலான சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியனான ஹர்திக்
பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும்
மார்ச் 31ம் திகதி குஜராத்
மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள உலகின்
மிகப் பெரிய ஸ்டேடியமான நரேந்திர
மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.லீக் ஆட்டங்கள் மே
21ம் திகதி வரை நடைபெறவுள்ளன.
கடைசி லீக் ஆட்டம் பெங்களூர்
எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்கிறது.
அடுத்த
இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
உள்ளது. சிஎஸ்கே 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் சம்பியன்
ஆகியுள்ளது. முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறை
(2012, 2014) சம்பியானது .
ஐதராபாத் அணி ஒரு முறை
(2016) வென்றுள்ளது.
வலுவான
அணியாக இருந்தபோதிலும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்,
பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்னும்
சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. திறமையான
கப்டனாக செயல்பட்ட விராட் கோலியின் பெங்களூர்
ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இதுவரை ஒரு
முறை கூட சாம்பியன் பட்டம்
வென்றதில்லை.
2008ஆம் ஆண்டில்
இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும்,
ராஜஸ்தான் ராயல்ஸும் மோதியது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ்
வென்றது.
2009இல் டெக்கான்
சார்ஜஸ் அணி வென்றது. பைனலில்
அந்த அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
மோதியது.
2010இல் சிஎஸ்கே
சாம்பியன் ஆனது. மும்பை இந்தியன்ஸ்
ரன்னர் அப்பாக வந்தது.
2011இல் மீண்டும்
பைனலுக்கு முன்னேறிய போதிலும் சிஎஸ்கேவிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்து
இரண்டாவது இடம் பிடித்தது பெங்களூர்
அணி.
2012 ம் ஆண்டில்
கொல்கத்தா நைட் ரைடர்ஸும், 2013ம்
ஆண்டில் மும்பை இந்தின்ஸும் சாம்பியன்
ஆகின. அந்த இரண்டு ஆண்டுகளும்
சிஎஸ்கே ரன்னர் அப் ஆனது.
2014ம் ஆண்டு
கொல்கத்தா மீண்டும் சாம்பியன் ஆகி அசத்திய அதே
நேரம், கிங்ஸ் லெவன் பஞ்சாப்
முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியிருந்தது.
2015இல் மும்பை
இந்தியன்ஸ் (சிஎஸ்கே ரன்னர் அப்),
2016இல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (ஆர்சிபி ரன்னர் அப்),
2017இல் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் (ரைசிங்
புனே ஜெயன்ட்ஸ் ரன்னர் அப்) வென்றது.
2018ஆம் ஆண்டில்
சன்ரைசர்ஸ் ஐதராபாத், 2019 இல் சிஎஸ்கே, 2020ம்
ஆண்டில் டெல்லி கேபிட்டல்ஸ், 2021 இல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2022 இல்
ராஜஸ்தான் ராய்ல்ஸ் ரன்னர் அப் ஆகியது.
மும்பை,குஜராத், பெங்களூர் ஆகியவற்றுடன் சென்னை சூப்பர் கிங்ஸ்
விளையாடும் போட்டிகளுக்கான ரிகெற்கள் முடிந்துவிட்டன.
No comments:
Post a Comment