“ சர்வதேச நாணய நிதியத்தின்EFF மானியத்துடன், இலங்கை சர்வதேச அரங்கில் மீண்டும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.இலங்கை இனி ஒரு வங்குரோத்து நாடாக இல்லை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நமது வங்கிகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படும். சர்வதேச நிதி நிறுவனங்கள் நமது வங்கிகளின் கடன் கடிதங்களை மதிக்கும். மற்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்கான அடிப்படை உருவாக்கப்படும். இலங்கை மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீட்டெடுக்கப்படும். சர்வதேச அரங்கில் பல விரிவான வாய்ப்புகள் கிடைக்கும். வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளம் அமைக்கப்படும்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குக்
கிடைத்திருக்கும் கடன் தொகை சாமானியமானதல்ல.
அது கிடைப்பதற்கு பட்ட பாடுகள் கொஞ்ச நல்லமல்ல. 16 முறை
மேற்கொண்ட முஇயற்சிகள் தோல்வியடைந்தனன். 18 ஆவது
முறை எதிர்பார்த்த பலன் கிடைத்துவிட்டது.அனுபவங்கள் தான் வாழ்க்கையின் புதிய
பாடங்கள்> 18 ஆஅவ்து முரை கையேந்தும்
நிலை ஏற்படக்கூடாது. பொருளாதாரத்தை
மேம் படுத்தல், உற்பத்தியை
அதிகரித்தல், , விவசாயம்,
மீன்பிடியை நவீனமயமாக்குதல், இலங்கையை பிராந்திய தளவாட மையமாக மாற்றுதல்,
நமது சுற்றுலாவை மேம்படுத்துதல் போன்ற
பல வேலைத்திட்டங்கள் அணிவகுத்து
நிற்கின்றன.
ஜனாதிபதி
எதிர்பார்த்த கடன் கிடைத்துவிட்டது.
இதனால் ஐக்கிய தேசியக் கட்சி
மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளது. ஜனாதிபதி ரணிலின் பிறந்த
நாலுக்கு முன்னர் கடன் கிடைத்தது.
இது அவருக்கான பரிசுப் பொதியா அல்லது
இலங்கைக்கான பரிசுப்பொதியா எனத்
தெரியவில்லை.
ஜனாதிபதியின்
முன்னால் மிகப் பெரிய பொறுப்புகள் உள்ளன.
நிபந்தனைகள் இலாமல்
கடன் கொடுக்கபப்ட
வில்லை. அந்த நிபந்தனைகள் அமுல்
படுத்தப்படும்போது எழும் பிரசனைகளுக்கு முகம்
கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
போராட்டங்கள்,
வேலை நிறுத்தங்கள் போன்றவற்றை
மாரியளவிம் முன்னெடுக்க
எதிர்க் கட்சிகள் தயார் நிலையில் உள்ளன.
இலங்கையின் தொழிற்சங்கங்களில் பல ஏதோ ஒரு
கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன. தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடுவதைத்
தவிர்த்து அரசியல்
கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் செல்வதால் போரட்டங்களைப் பற்ரிய
மதிப்பீடுகள் தவறாகப்
பார்க்கப்ப்டுகின்றன. அரசாங்கத்தை முடக்குவதற்கு
எதிர்க் கட்சிகள் தொழிற்சங்கங்களை முடுக்கி
விடுகின்றன.
அமைச்சராகும்
ஆசையில் பல எம்பிக்கள்
இருக்கின்றனர். அமைச்சரவையை அதிகரிக்கும்
சந்தர்ப்பம் இப்போதைக்கு
இல்லை. இதுவும் ஜனாதிபதிக்கு ச்ற்று
பின்னடைவாக உள்ளது.
உள்ளூராட்சி சபைத் கேர்தலை உடனடியாக
நடத்துமாஅறு எதிர்க் கட்சிகள் வலியுருத்துகின்றன.
தேர்தலை நடத்த பணம் இல்லை என அரசாங்கம்
கைவிரித்துள்ளது. பணத்தை மிச்சம் பிடிக்க
நினைக்கிறார் ஜனாதிபதி. தேர்தலில் தமது பலத்தைக் காட்ட
எதிர்க் கட்சிகள் கங்கணம் கட்டுகின்றன. தேர்தலை
இப்போதைக்கு நடத்த ஜனாதிபதி விரும்பவில்லை.
பொருட்களின் விலை ஏற்றம் தனக்குப்
பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி உணர்ந்துள்ளார்.
பாண், எரிபொருள்,எரிவாயும், உணவுப்
பொருட்கள் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்ட பின்னரே தேர்தலை
நடத்த ஜனாதிபதி முன் வருவார்.
ரணில் விக்கிரமசிங்க அரசியலில் பல பதவிகளை வகித்துள்ளார். இப்போ அவர் ஜனாதிபதியாக இருக்கிறார். பழைஅய "கேம்" ஆட முடியாது எனச்சொல்லியுள்ளார். அவரை எதிர்ப்பவர்களுக்கு விடும் எச்சரிக்கையாகவும் இது இருக்கலாம். கடனைத் திரும்பச் செலுத்துவதற்கும், நாட்டை முன்னேற்றுவதற்கும் ஜனாதிபதி முக்கியத்துவம் கொடுக்க உள்ளார். எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்கு அவர் தயாராகிவிட்டார்.
No comments:
Post a Comment