Wednesday, March 1, 2023

பீபாவின் சிறந்த வீரர் மெஸ்ஸி சிறந்த வீரங்கனை அலெக்ஸியா புடெல்லாஸ்


   2022 ஆம் ஆண்டின் சிறந்த பீபாஆடவர் விருதை ஆர்ஜென்ரீனாவின் லியோனல் மெஸ்ஸி வென்றார். லியோனல் மெஸ்ஸி - 52 புள்ளிகள்கைலியன் எம்பாப்பே - 44 புள்ளிகள் ,கரீம் பென்சிமா - 34 புள்ளிகள்

ஆர்ஜென்ரீனாவின் தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி சிறந்த ஆடவர் பயிற்சியாளருக்கான விருதையும், எமிலியானோ மார்டினெஸ் சிறந்த ஆண்களுக்கான கோல்கீப்பர் விருதையும், ஆர்ஜென்ரீனா ரசிகர்கள் சிறந்த ரசிகர் விருதையும் முதன்முறையாக வென்றனர்.2022 ஆம் ஆண்டின் சிறந்த  மகளிர் வீராங்கனைக்கான விருதை ஸ்பெயினின் அலெக்ஸியா புடெல்லாஸ் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வென்றார்.

பீபாதலைவர் கியானி இன்ஃபான்டினோவின் தொடக்க உரைக்குப் பிறகு, டிசம்பர் 29, 2022 அன்று தனது 82 வயதில் காலமான பிறாஸிலிய ஜாம்பவான் பீலேவுக்கு வீடியோ அஞ்சலியுடன் விழா தொடங்கியது.பீலேவின் மனைவி மார்சியா அயோகி பிரேசிலிய ஜாம்பவான் ரொனால்டோ மற்றும் ஜனாதிபதி இன்ஃபான்டினோ ஆகியோரிடமிருந்து சிறப்பு அங்கீகார விருதைப் பெற்றார்.

சிறந்த மகளிர் கோல்கீப்பராக இங்கிலாந்தின் மேரி ஏர்ப்ஸ், சிறந்த மகளிர் பயிற்சியாளராக இங்கிலாந்து பெண்கள் தேசிய அணியின் சரினா விக்மேன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.நவம்பர் 6, 2022 அன்று தனது அணியான வார்டா போஸ்னன் மற்றும் ஸ்டால் ரெஸ்ஸோவுக்கு இடையேயான போட்டியில், கோல் அடித்த போலந்தின் கால்பந்தாட்ட வீரர் மார்சின் ஓலெக்ஸி,   புஸ்காஸ் விருதை (சிறந்த கோல்) வென்றார். ஃபேர் பிளே விருதை ஜார்ஜியாவைச் சேர்ந்த லூகா லோச்சோஷ்விலி வென்றார்.

No comments: