இந்தியாவில் நடைபெறும்
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக கோடிக்கணக்கில்
ஏலத்தில் வாங்கப்பட்ட
சில வீரர்கள் வெளியேறியதால் அணிகள் அதிர்ச்சியடைந்துள்ளன.
காயம்,
உடல்தகுதியின்மை போன்ற காரணங்களினால் சில
வீரர்கள் வெளியேறினர். ஐபிஎல் இல்
கிடைக்கும் பணத்தை விட நாட்டுக்கு
விளையாட வேண்டும் என சில வீரர்கள் ஐபிஎல் க்கு குட்பை சொல்லியுள்ளனர்.
இங்கிலாந்து அணியின் முன்னணி அதிரடி துவக்க வீரரான ஜொனி
பேர்ஸ்டோ இந்த வருட ஐபிஎல்
போட்டிகளில் தான் விளையாடப்போவதில்லை என்று
அறிவித்துள்ளார்.ஆஷஸ் தொடரில் பங்கேற்கும்
போது நல்ல உடல் தகுதியுடன்
இருக்க வேண்டும் என்பதன் காரணமாகவே அவர்
ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக
அறிவித்துள்ளார். ஜொனி பேர்ஸ்டோவை ஏலத்தைன் வாங்கிய தற்போது
பஞ்சாப் அணிக்கு பின்னடைவு
ஏற்பட்டுள்ளது.
சென்னை
சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள
பென் ஸ்டோக்ஸ் பிற்பகுதியில்
நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட
மாட்டேன் என்றும் கடைசி சில
போட்டிகளை தவிர்த்து விட்டு ஆஷஸ் தொடருக்கான
பயிற்சியை மேற்கொள்ள இருப்பதினால் பிளேஆப் சுற்றுக்கு முன்னதாகவே
ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி நாடு திரும்ப விடுவேன்
என்று அறிவித்துள்ளார். சென்னை
அணியில் இடம் பெற்றிருந்த நியூஸிலாந்து
அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்
கைல் ஜேமிசன் காயம் காரணமாக
வெளியேறினார்.மற்றொரு இளம் வேகப்பந்து
வீச்சாளரான முகேஷ் சவுத்ரி சிஎஸ்கே
அணியில் இருந்து காயம் காரணமாக
வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜூலை
மாதம் காயமடைந்த ஜஸ்பிரித்
அதன் பின் 2 முறை காயமடைந்து
மீண்டும் வெளியேறினார் தற்போது அறுவை சிகிச்சை
மேற்கொண்டுள்ள பும்ரா 2023 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவார்
என்பதால் இந்த ஐபிஎல் தொடரில்
இலாதது மும்பைக்கு
பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது
அவுஸ்திரேலியாவின்
வேகப்பந்து வீச்சாளரான ஜே ரிச்சர்ட்சன்
1.5 கோடிக்கு மும்பையால் வாங்கப்பட்டார். உள்ளூர்
தொடரில் காயத்தை சந்தித்த இவர்
2023 ஐபிஎல் தொடரில் இருந்து
விலகியுள்ளார்.பும்ரா இல்லாத மும்பைக்கு
மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
2021 முதல்
ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின்
கப்டனாக செயல்பட்டு
வரும் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம்
சந்தித்த கார் விபத்தால் காயமடைந்துள்ளார். 2023 ஐபிஎல்,
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், 2023 உலகக்கோப்பை ஆகிய முக்கிய தொடர்களில்
விளையாட மாட்டார். அவர் இல்லாததால் டெல்லி
அணி ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது.
10 கோடிக்கு
ராஜஸ்தானால் வாங்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா காயமடைந்ததால்
ஐபிஎல் இல்
விளையாடமாட்டார். இவர் 2008க்குப்பின் ராஜஸ்தான் இறுதிப்
போட்டியில் விளையாட முக்கிய
பங்காற்றினார். அதனால் இந்திய அணிக்காகவும்
தேர்வாகி கணிசமான போட்டிகளில்
இவர் 2023 ஐபிஎல் தொடரில் விலகியது
மட்டுமல்லாமல் 2023 உலகக் கோப்பையில் விளையாடுவதும்
சந்தேகம்.
இங்கிலாந்தின்
அதிரடி ஆல் ரவுண்டரானவில் ஜேக்ஸ்சை
பெங்களூரு அணி 3.2 கோடி என்ற
பெரிய தொகைக்கு வாங்கியது. பங்களாதேஸுக்கு எதிரான ரி20 தொடரில் தொடைப்பகுதியில் காயத்தை
சந்தித்து வெளியேறிய அவர் தனது முதல்
ஐபிஎல் தொடரில் களமிறங்குவதற்கு முன்பாகவே
விலகியுள்ளார்.
நிலையில் சென்னை அணியின் இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சவுத்ரி, லக்னோ அணியின் முக்கிய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மோசின் கான், கொல்கத்தா அணியின் கப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பெங்களூரு அணியின் முக்கிய மிடில் ஆர்டர் வீரர் ரஜத் படிதர், பெங்களூரு அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment