இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தா தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக வீறுகொண்டெழுந்த போராட்டத்தால் இலங்கையின் அரசியலில் மாற்றம் ஏற்பட்டது. அரசியல் மாற்றத்தால் பொது மக்கள் எந்த விதமான நன்மையையும் பெறவில்லை. ஆனால், ஆனால், அரசியல்வாதிகள் மீண்டும் அமைச்சரானார்கள். இன்னும் சிலர் அமைச்சுப் பதவிக்காகக் காத்திருக்கிறார்கள்.
அரசியல் புயல் ஓய்ந்தபோது ரணில்
ஜனாதிபதியனார்.
போராட்டங்கள்
உச்சக்கடம் அடைந்திருந்த
போது போராட்டங்களுக்குத் தடை விதிக்கப்போவதில்லை
என்று அறிவித்தார். தொழிற்சங்கங்களும், பல்கலைக் கழக மாணவர்களும் , எதிர்க் கட்சிகளும் போராட்டங்களை
தொடர்ச்சியாக நடத்துகின்றனர். இந்தப் போராட்டங்கள் ஜனாதிபதிக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளன.போராட்டங்களைத் தடுப்பதற்கு ஜனாதிபதி பல
முயற்சிகளை
முன்னெடுத்தார். அவை எவையும் பயனளிக்கவில்லை.
போராட்டங்களை
ஒடுகுவதற்கு
நீதி மன்றத்தை பொலிஸார்
நாடினர்.
போராட்டங்கள் நடப்பதற்கான அறிவுறுத்தல்களை
நீதிமன்றம் வெளியிட்டது.
போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பொலிஸாரும், பாதுகாப்புபடையினரும் களம் இறக்கப்பட்டனர். மக்களின் பாதுகாவலனான பொலிஸாரும், பயங்கரவாதத்தை முறியடிக்கும் பாதுகாப்புப் படையினரும் போராட்டக் காரர்களை விரட்டுவதில் தமது பலத்தைக் காட்டினர்.
கடந்த
புதனன்று கொழும்பு,களனிப் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் எதிர்ப்பு
களேபரமாக்கி உள்ளது.
மாணவர்களின் போராட்டம் நடத்தும் உரிமைக்காகப் போராடுவதும், அரசாங்கத்தைக் கண்டிப்பதும், காவல்துறையின் அட்டூழியத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அச்சுறுத்துவதும் இயல்பானதே.
புகைக் குண்டு, நிர்த்தாரை
போரட்டத்தை
அரசாங்கம் அடக்கியது.
கணீர் புகைக் குண்டினால் அருகில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாதிக்காப்பட்டனர்.
அரசு நடத்தும் மருத்துவமனைகள் உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன, எனவே அங்கு செய்யப்படும் அறுவை சிகிச்சை நடவடிக்கைகளுக்கு சுகாதார அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தலுக்கு நிதி இல்லாமல் உள்ளது . . நிதி வெட்டுக்களால் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், கண்ணீர்ப்புகைக் கப்பல்களை இறக்குமதி செய்யும் அளவுக்கு அரசிடம் பணம் இருக்கிறது.
காலாவதியான
கணீர் புகைக் குண்டுகளும் அசுத்தமான நீரும்
பாவிக்கப்படதாகக் கருதப்படுகிறது.
போராட்டக்காரர்களைக் கலைக்கப் பயன்படுத்திய கண்ணீர்ப்புகை , தண்ணீர் பற்றிய முழு அறிக்கையை அளிக்குமாறு காவல் கண்காணிப்பாளரிடம் (IGP) தேசிய மக்கள் அதிகாரத்திற்கான வழக்கறிஞர்கள் (NPP), தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ், கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டத்தை கலைக்க பயன்படுத்தப்பட்ட கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்வதற்காக கேள்வித்தாள் அடங்கிய கடிதம் ஒன்றை கையளித்ததாக தெரிவித்த சட்டத்தரணி சுனில் வட்டகல, அந்த அறிக்கையின் அடிப்படையில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
போராட்டக்காரர்களை கலைக்க காலாவதியான கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் அசுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படுவதாக தங்களுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார்.கடந்த வாரத்தில் கண்ணீர்ப்புகைக்கு ஆளான மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், பெரும்பாலான மக்கள் கண்ணீர்ப்புகைக்கு ஆளானதன் பினர் சிக்கல்களை உருவாக்கியுள்ளதாகவும் வத்தகல தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) போராட்டத்தை கலைக்க அனுப்பப்பட்ட இராணுவத்தினர் இரும்பு கம்பிகள் மற்றும் பொல்லுகளை ஏந்தியிருந்தார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.
போராட்டத்தின் போது இராணுவத்தினர் இரும்பு கம்பிகள் மற்றும் கம்புகளை எடுத்துச் செல்லும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
போராட்டத்தை கட்டுப்படுத்துவதில் இலங்கை இராணுவம் ஈடுபடவில்லை என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். போலீஸ், எஸ்டிஎஃப் மற்றும் கலகத் தடுப்புப் படைகள் முன்னணியில் இருந்தன, வீரர்கள் அங்கு நிறுத்தப்படவில்லை.
மேலும் பேசிய அவர், சமூக வலைதளங்களில் வெளியாகும் புகைப்படங்கள் உண்மையானவை என உறுதியாக கூற முடியாது. மேலும், அந்த புகைப்படங்கள் உண்மையில் செவ்வாய்கிழமை (7) இடம்பெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதா என்பதும் கண்டறியப்பட வேண்டியுள்ளது. எனவே, விசாரணையை முடிக்க பல நாட்கள் ஆகும் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அதிருப்தியை வன்முறையில் அடக்குவது ஒரு பயனற்ற செயல் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறியாமல் இருக்க முடியாது. பல சம்பவங்கள் அதற்க் உதாரணமாக உள்ளன. தொழிற்சங்கங்கள் ,மாணவர்கள் உள்ளிட்ட ஜனநாயக ஆதரவுக் குழுக்களின் போராட்டங்களை அடக்குவதர்குப் பதிலாக பதிலாக, அரசியலில் பதற்றத்தைத் தணிக்க ஆர்வமாக இருந்தால், அவர்களை மேசையில் கொண்டு வந்து அவர்களின் எதிர்ப்புகளின் மூல காரணங்களைத் தீர்ப்பது நல்லது. மக்கள் ஜனநாயக ரீதியில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த உள்ள உரிமையை நசுக்கக்கூடாது.
No comments:
Post a Comment