கிறிக்கெற் உலகின் பிரமாண்டமான ஐபிஎல்23 இன்று வெள்ளிக்கிழமை அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆரம்பமாகிறது.
முதல்
போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்,
குஜராத் டைட்டன்ஸ் ஆகியவை மோதுகின்றன.
2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரமாண்டமான முறையில்
ஆரம்பவிழா நடைபெற உள்ளது.ஆரம்பவிழாவில்
நடிகை தமன்னா பங்குபற்றுவார் என அதிகர பூர்வமாக
அரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்மிகா
மந்தனா, டைகர்
ஷெராஃப், கத்ரீனா கைஃப் ,அரிஜித்
சிங் ஆகியோரும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க
விழாவில் பாடகர் அரிஜித் சிங்
இசையமைக்க உள்ளார்.
நடிகை தமன்னா பாட்டியா பங்கேற்பதை ஐபிஎல் அதன் சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தியது. பிசிசிஐ வாய் திறக்காமல் இருந்தபோதிலும், நிகழ்ச்சியில் பங்கேற்க ராஷ்மிகா மந்தனா மற்றும் சிலரை அணுகியதாக ஒரு சலசலப்பு உள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சிறப்பு லேசர் ஷோ நடைபெறவும் வாய்ப்பு உள்ளது. தொடக்க விழா மாலை 6 மணிக்கு தொடங்கி சுமார் 45 நிமிடங்கள் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 அணிகளின்
கப்டன்களும் தொடக்க
விழாவில் கலந்துகொள்ள மாட்டார்கள். இருப்பினும், அனைத்து கப்டன்களும்
புதன்கிழமை நடைபெறும்
கப்டன் சந்திப்புக்காக
அஹமதாபாத்தில் சந்திப்பார்கள்.
வெள்ளியன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தின் போது, குஜராத் டைட்டன்ஸ் கப்டன் ஹர்திக் பாண்டியா , சென்னை சூப்பர் கிங்ஸ் கப்டன் மகேந்திர சிங் டோனி ஆகிய இருவரும் கலந்து கொள்வார்கள் . குஜராத் டைட்டன்ஸ் ,சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான தொடக்க ஆட்ட ரிக்கெற்கள் அனைத்தும் விர்பனையாகி விட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் தனது ரசிகர்கள் முன்னிலையில் சொந்த மைதானத்தில் விளையாடுவது இதுவே முதல் முறை.
No comments:
Post a Comment