Wednesday, March 29, 2023

ஒலிம்பிக் தன்னார்வத் தொண்டர்களுக்கு அழைப்பு

பரிஸ் 2024 ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளில் கடமையாற்றுவதற்காக 45,000 தன்னார்வத் தொண்டர்களை நியமிக்கப்போவதாக பரிஸ்2024 போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். 

ஜனவரி 1, 2024 அன்று 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்,   பிரெஞ்ச் , ஆங்கிலம் பேசுபவர்கள்  இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மே 3 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்.

பார்வையாளர்கள் ,அங்கீகாரம் பெற்றவர்களை வரவேற்று வழிநடத்துதல், விளையாட்டுப் பிரதிநிதிகளுக்கு உதவுதல், விளையாட்டு வீரர்களுடன் போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் பத்திரிகை நடவடிக்கைகளுக்கு உதவுதல், அங்கீகாரம் பெற்றவர்களைக் கொண்டு செல்வது, நேரக்கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல், உபகரண விநியோகத்தில் பங்கேற்பது மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள்.

அனைவருக்கும் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற பாரிஸின் லட்சியத்திற்கு ஏற்ப, குறைந்தபட்சம் 3,000 மாற்றுத் திறனாளிகளுக்கு சந்தர்ப்பம்  வழங்க  உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 "ஊனமுற்றவர்கள் பெரும்பாலும் தங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள் மற்றும் இந்த நிகழ்வுகள் அனைத்திலிருந்தும் தங்களை ஒதுக்கிவைக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள்," என்று பிரான்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கான மந்திரி ஜெனிவிவ் டேரியஸ்செக் கூறினார். "இங்கே நாங்கள் அவர்களிடம், 'இல்லை, மாறாக, நீங்கள் விலக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, எங்களுக்கு நீங்கள் தேவை' என்றும் கூறுகிறோம்."

பரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2024 ஆம் ஆண்டு  ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 11 வரையிலும், பாராலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரையிலும் நடைபெற உள்ளன.

No comments: