Thursday, March 9, 2023

வரலாறு படைக்குமா ரோகித்தின் படை

இந்தியாஅவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது   கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் இன்றுவியாழக்கிழமை, 9ம் திகதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வேறு எந்த சர்வதேச அணியும் சாதிக்க முடியாத ஒரு வரலாற்று சாதனையை படைக்க காத்திருக்கிறார்கள். அந்த என்ன வகையான சாதனை என்று இங்கு பார்க்கலாம்.


2013-ம் ஆண்டு முதல், சொந்த மண்ணில் இந்தியா தொடர்ந்து 15 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அகமதாபாத் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால், தொடர்ச்சியாக 16வது டெஸ்ட் தொடரை கைப்பற்றும். உலகில் வேறு எந்த அணியும் சொந்த மண்ணில் தொடர்ந்து 10 டெஸ்ட் தொடர்களை வென்றதில்லை.

அவுஸ்திரேலியா சொந்த மண்ணில் இரண்டு முறை தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. மறுபுறம் மேற்கு இந்திய  அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.


சொந்த மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக வென்ற டெஸ்ட் தொடர் விபரம் பின்வருமாறு:-

அவுஸ்திரேலியா: இந்தியா 4-0 (4), பிப்ரவரி 2013
மேற்கு இந்திய தீவுகள்: இந்தியா 2-0 (2), நவம்பர் 2013
தென்ஆப்பிரிக்கா: இந்தியா 3-0 (4), நவம்பர் 2015
நியூசிலாந்து: இந்தியா 3-0 (3), செப்டம்பர் 2016
இங்கிலாந்து: இந்தியா 4-0 (5), நவம்பர் 2016
வங்கதேசம்: இந்தியா 1-0 (1), பிப்ரவரி 2017
அவுஸ்திரேலியா: இந்தியா 2-1 (4), பிப்ரவரி 2017
இலங்கை: இந்தியா 1-0 (3), நவம்பர் 2017
ஆப்கானிஸ்தான்: இந்தியா 1-0 (1), ஜூன் 2018
மேற்கு இந்தியத் தீவுகள்: இந்தியா 2-0 (2), அக்டோபர் 2018
தென்ஆப்பிரிக்கா: இந்தியா 3-0 (3), அக்டோபர் 2019
பங்களாதேஷ்: 2019 நவம்பர் 2-0 (2), இந்தியா
இங்கிலாந்து: இந்தியா 3-1 (4), 2020-2021
நியூசிலாந்து: இந்தியா 1-0 (2), 2021
இலங்கை: இந்தியா 2-0 (2), 2022.

 

 

No comments: