Wednesday, March 29, 2023

அவுட் கொடுக்க மறுத்த அம்பயர்கள்

 இலங்கை,நியூஸிலாந்து ஆகியவற்றுக்கு இடையே ஈடன்பாக் மைதானத்தில்  நடந்த ஒருநாள் போட்டியில் பேல்ஸ்   விழுந்தும் அம்பயர்கள் ரன் அவுட் கொடுக்காதது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ப்ளக் டிக்னர் வீசிய 18வது ஓவரின் 4வது பந்தை எதிர்கொண்ட இலங்கை வீரர்  கருணரத்ன  அடித்துவிட்டு இரண்டு ஓட்டங்கள் எடுக்க முயற்சி செய்தார். தம்மிடம் கொடுத்த பந்தை பிடித்த ப்ளாக் டிக்னர் ஸ்டம்பைத் தட்டிவிட்டு  அவுட் கேட்டார். அதைத்தொடர்ந்து அதை மூன்றாவ‌து  வது நடுவர் பெரிய திரையில் சோதித்த போது   கருணரத்ன‌ டைவ் அடித்து வெள்ளைக்கோட்டை தொடுவதற்கு   முன்பாகவே ப்ளாக் டிக்னர் பந்தை ஸ்டம்ப்பில் சரியாக அடித்தது தெரிய வந்தது. அதனால் 3வது நடுவர் அவுட் கொடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வேளையில் ஆட்டமிழப்பு இல்லை என  3 ஆவது நடுவர் அறிவித்தார்.

  பெய்ல்ஸில் இருந்த மின் விளக்குகள் எரியவில்லை. அதன் காரணமாக அது அவுட் இல்லை என்று 3வது நடுவர் அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.பற்றி செயலிழந்ததால் ஆட்டமிழப்பு மருக்கப்பட்டது. ஆரம்பக் காலங்களில் வெறும் மரத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த ஸ்டம்ப்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்த்தப்படும் ரன் அவுட்டை எவ்வளவு சோதித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்காகவே மின் விளக்குகளுடன் கூடிய ஸ்டம்ப்கள் நவீன கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படுகின்றன.

இலங்கைக்கு எதிரான முதலாவது  ஒருநாள்  போட்டியில்  198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற நியூஸிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. 275 ஓட்டங்களைத்  துரத்திய இலங்கை  19.5 ஓவர்களில் 76 ஓட்டங்கள் எடுத்து  தோல்வியடைந்தது.

நியூஸிலாந்து வீரர்களான  ஹென்றி சிப்லே 5 விக்கெற்களையும், ப்ளாக் டிக்னர் , டார்ல் மிட்சேல் ஆகியோர் தலா 2 விக்கெற்களையும்  எடுத்தனர்.

2015ஆம் ஆண்டு டுனிடின் மைதானத்தில் நடைபெற்ற 6வது ஒருநாள் போட்டியில் எடுத்து  120 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனையாகும். 316 எனும் இமாலய இலக்கை  விரட்டிய  இலங்கை சகல விக்கெற்களையும் இழந்து 195 ஓட்டங்கள்    எடுத்தது.

No comments: