இந்தியா , அவுஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் – கவாஸ்கர் போட்டியில் என்ன நடக்கும் என்பதை முதலிலேயா கணித்த தினேச் கார்த்திக்கை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். போக்ளே ஒரு படி மேலே பொய் அவரை பாராட்டியுள்ளார்..
தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட்டு போட்டிகளின் நுணுக்கமான விஷயங்களை ரசிகர்களுக்கு புரியும் வகையில் பேசி வருவது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும் பிரபல கிரிக்பஸ் இணையத்தில் வல்லுனராகவும் செயல்பட்டு வரும் அவரிடம் இப்போட்டி துவங்குவதற்கு முன்பாக அவுஸ்திரேலியா எவ்வளவு ஓட்டங்கள் அடிக்கும் என்று பிரபல தொகுப்பாளர் ஹர்சா போக்ளே கேட்டார்.
அதற்கு இத்தொடரில் “இந்தியா அவுஸ்திரேலியாவை 360 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்த நினைக்கும். ஆனால் அவர்கள் அதையும் தாண்டி வாய்ப்புள்ளது” என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்தார். அதே போல் 2வது நாள் முடிவில் இந்தியா எத்தனை விக்கெட்கள் இழந்திருக்கும் என்று ஹர்ஷா போக்லே கேட்டார். அதற்கு “இந்திய அணியின் கண்ணோட்டத்தில் அவர்கள் 3 விக்கெட்டுகளுக்கு மேல் இழக்க மாட்டார்கள்” என்று கூறினார். இறுதியில் அவர் சொன்னது போலவே முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 360ஓட்டங்களை தாண்டி 480 எடுத்த நிலையில் 2வது நாள் முடிவில் மீண்டும் அவர் சொன்னது போல இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 289/3 ஓட்டங்கள் எடுத்தது.
அவருடைய கணிப்புகள் கிட்டத்தட்ட அச்சு அசலாக நடந்ததால் வியப்படைந்த க்ரிக்பஸ் அந்தப் பிரத்தியேக தருணங்களை வீடியோவாக உருவாக்கி அதில் பிரபல நகைச்சுவை காட்சியை இணைத்து கலாய்த்து தினேஷ் கார்த்திகை பாராட்டியுள்ளது. குறிப்பாக கடைசியில் தினேஷ் கார்த்திக் கணிப்பதில் கிங் என்பதால் நாம் தலைவணங்க வேண்டும் என்றும் கிரிக்பஸ் இணையம் பாராட்டியுள்ளது. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தினேஷ் கார்த்திக் நன்றி தெரிவித்துள்ளார்.
அதே போல் 2வது நாளில் 2 இந்திய வீரர்கள் சதமடிப்பார்கள் என்று ட்விட்டரில் அவர் மார்ச் 11ஆம் திகதி வெளியிட்ட கணிப்பும் கிட்டத்தட்ட கணிப்பும் 2 நாட்களில் நடந்து உண்மையானது. அதைப் பார்த்து வியப்படையும் ரசிகர்கள் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை தாண்டி மிகச்சிறந்த வர்ணனையாளராக வல்லுனராக நீங்கள் அசத்துவதாக தினேஷ் கார்த்திக்கை பாராட்டி வருகிறார்கள்.
No comments:
Post a Comment