அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள
வரிக்கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று வெளிக்கிழமை [3] ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி
பேரணியாக செல்ல முற்பட்ட போது, பொலிஸார் அதற்கு அனுமதிக்கவில்லை, பின்னர் குழுவினர்
ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தின் தன்னிச்சையான
அடக்கு முறை கொண்ட வரிக்கொள்கைக்கு எதிராகவும் , வைத்தியசாலைகளில் மருந்து மற்றும்
உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க வேண்டும் எனக் கோரி தொடர்ச்சியாகப்
போராட்டங்கள் நடை பெறுகின்றன. “கறுப்பு வாரம்” என்ற பெயரின்
தொழிற்சங்கங்கள் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள
வரிக்கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்துநேற்று வெளிக்கிழமை [3] ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி
பேரணியாக செல்ல முற்பட்ட போது, பொலிஸார் அதற்கு அனுமதிக்கவில்லை, பின்னர் குழுவினர்
ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தின் தன்னிச்சையான
அடக்கு முறை கொண்ட வரிக்கொள்கைக்கு எதிராகவும் , வைத்தியசாலைகளில் மருந்து மற்றும்
உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க வேண்டும் எனக் கோரி தொடர்ச்சியாகப்
போராட்டங்கள் நடை பெறுகின்றன. “கறுப்பு வாரம்” என்ற பெயரின்
தொழிற்சங்கங்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்தன. நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டங்கள்,
வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம்
ஆதரவளிக்கும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச்
மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சில தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
பெட்ரோலியம், மின்சாரம்,
துறைமுகங்கள், நீர் வழங்கல், சுகாதாரம், கல்வி மற்றும் வங்கித் துறைகளைச் சேர்ந்த பல
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவுள்ளன.அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
புதிய வரித் திருத்தத்திற்கு எதிராக பல தொழிற்சங்கங்களால் ஆரம்பத்தில் வேலைநிறுத்தப்
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்ட, வேலை நிருத்தம் ஆகியவற்ரினால்
பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள்
முடக்கப்படுகின்றன. வைத்தியசாலை, பாடசாலை,வங்கி,
பெற்ரோலியம், துறைமுகம் ஆகியன போராட்டங்களில் ஈடுபட்டதால்
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA), இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC), இலங்கை மின்சார சபை (CEB), தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB), இலங்கை மத்திய வங்கி (CBSL), அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஆகியவற்றின் தொழிற்சங்கங்கள் ), பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA), இலங்கை வங்கி ஊழியர் சங்கம் (CBEU), மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) ஆகியவை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன, துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், பள்ளிகள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளில் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. வரிக் கொள்கையை அரசு திரும்பப் பெறாவிட்டால், வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கைகளுடன் வேலை நிறுத்தம் தொடரும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்தன.
தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கை வெற்றியடைந்ததாக அறிவித்தாலும், அரசாங்கத்துடன் தொடர்புடைய அல்லது பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் அது தோல்வியடைந்ததாகக் கூறினர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் , வேலைநிறுத்தத்தில் ஒற்றுமை இல்லை என்றும் கோரிக்கைகளில் பெரிய முரண்பாடுகள் இருப்பதாகவும் தெரிவித்தார். ஒரு சில துறைகள் மட்டுமே வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதாகவும், போராட்டத்தை தொடங்கிய தொழிற்சங்கங்கள் சில அரசியல் கட்சிகளின் தேவைகளை நிறைவேற்றுவதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment