இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதனால் உலக டெஸ்ட் சம்பியன் போட்டியில் விளையாடுவதற்கு அவுஸ்திரேலியா தகுதி பெற்று விட்டது. அவுஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுவதர்கு இந்தியாக்கும்
இலங்கைக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
இந்தியாவில் நடக்கும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 3வது போட்டியில் அவுஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஏற்கனவே இத்தொடரில் நடந்த 2 போட்டிகளில் இந்தியா வென்ற நிலையில், இறுதிப் போட்டிக்குள் நுழைவதில் இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால், இந்தூர் டெஸ்ட் தோல்வி இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதால், தற்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் , 3 ரி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 9ம் திகதி தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தரவரிசையில் 68.52 சதவீத புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 60.29 சதவீத புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்திலும், 53.33 சதவீத புள்ளிகளுடன் 3வது இடத்தில் இலங்கை அணி இருக்கிறது. வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்தின் ஓவலில் நடக்கும் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு தற்போதைய டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து அணியை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி வீழ்த்த வேண்டும்.
இலங்கை அணி நியூசிலாந்தில் 2-0 என்று வெற்றி பெறவில்லை என்றால், இந்தியா அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் வென்றாலும் வெல்லா விட்டாலும் தகுதி பெற்று விடும். மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்தியா – அவுஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டியும் இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியும் மார்ச் 9ம் திக்திதான் தொடங்குகின்றன. இந்த இரு போட்டிகளின் முடிவுகளுக்கவும் இந்திய ரசிகர்களும், இலங்கை ரசிகர்களும் ஆவலாக உள்லார்கள்.
No comments:
Post a Comment