எம்.ஜி.ஆர்,ஏ.வி.எம், திருலோகசந்தர் ஆகிய மூன்று திரை உலகப் புள்ளிகளையும் ஒன்று சேர இணைத்தது " அன்பே வா" திரைப்படம். எம்.ஜி.ஆரின் படத்தில் இருக்கும் ஃபார்முலா எதுவும் இல்லை. அன்பே வா எம்.ஜி.ஆர்ன் படம்தான் ஆனால், அதிலே திருலோகசந்தரின் எண்ணம் மட்டுமே இருந்தது. திருலோகசந்தரின் மீது நம்பிக்கை வைத்து அவர் சொன்னபடி நடித்தார் எம்.ஜி.ஆர்.
உலகெங்கிலும் வெற்றிகரமாக ஓடிய, ராபர்ட் பேட்ரிக் மல்லிகன் இயக்கிய
ஹாலிவுட் ஆங்கிலப்படம் 'கம் செப்டம்பர்' (1961). அந்தப் படம் சென்னையிலும் சக்கைப்போடு
போட்டது. அதன் இசையும் உலகப் புகழ் பெற்றது. அந்தப் படத்தின் கதையை மிகச் சாதுரியமாகத்
தழுவி தமிழில் ‘அன்பே வா’ திரைக்கதை உருவாக்கப்பட்டது.
அப்போது எம்ஜிஆர் நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ (1965) வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. எனவே, திரைப்பட விநியோகஸ்தர்கள் எம்ஜிஆர் படம் ஒன்றைத் தயாரிக்குமாறு ஏவிஎம் நிறுவனத்தினரை நிர்பந்தித்தார்கள். எம்ஜிஆருக்கும் ஏவிஎம் படத்தில் நடிக்க விருப்பமிருந்தது. எனவே, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு செட்டியாரிடம் கேட்டார்கள் பிள்ளைகள். செட்டியார் ஒப்புதலளித்தார்.
எம்ஜிஆரைச் சந்தித்தார்கள்
செட்டியாரின் பிள்ளைகள் 1966 ஜனவரி 14 அன்று
பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்று சொன்னர்கள் அதற்கு
எம்ஜிஆர் . எம்ஜிஆர் சம்மதித்தார். முதலில் 3 லட்சம் சம்பளம் கேட்டார் எம்ஜிஆர்.
சம்பளத்தை மூனேகால் லட்சமாக உயர்த்திக் கேட்டார். அப்போது ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த
‘நான் ஆணையிட்டால்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் எம்ஜிஆர். அந்தப் படத்தைத்தான்
1966 பொங்கலுக்கு வெளியிடத் திட்டம். ஆனால், வீரப்பனை விட்டுக்கொடுக்கச் சொல்லிவிட்டார்
எம்ஜிஆர். எல்லாம் ஏற்கப்பட்டு ஒப்பந்தமானது. படப்பிடிப்பு தொங்கியது.
ஏவிஎம் தயாரித்த முதல்
வண்ணப்படம் ‘அன்பே வா’. கதை சிம்லாவில் நகர்வதாக இருந்தாலும் முக்கால்வாசிப் படப்பிடிப்பை
ஊட்டியிலேயே எடுத்து முடித்தார்கள். ஐந்தே ஐந்து நாட்கள்தான் சிம்லாவில் ஷூட்டிங்.
ஏ.சி.திருலோகசந்தரின் திரைக்கதை மிக அற்புதமாக இருந்தது. எம்ஜிஆரின் இயல்பான நடிப்பு
படத்தின் கதைக்குப் பலம் சேர்த்தது. அழகுப் பதுமையாக விதவிதமான ஆடைகளில் வந்த நாயகி
சரோஜாதேவி கொஞ்சுமொழி பேசியும் நாயகனுடன் சண்டையும் ஊடலுமாகவும் ரசிகர்களின் கவனம்
பெற்றார்.
மாலை நேரங்களில் படப்பிடிப்பு முடிந்ததும் எம்ஜிஆர் ஏதேனும் ஒரு
செயலில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எல்லையில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த
இந்திய ராணுவ வீரர்களை ஒருநாள் போய்ப் பார்த்தார் எம்ஜிஆர். அப்போது பயங்கரமான குளிர்.
தமிழ்நாட்டு ஜவான்கள் எம்ஜிஆரை அடையாளம் கண்டுகொண்டு மிகவும் நெகிழ்ந்துபோனார்கள்.
அப்போது ராணுவ வீரர்களுக்காக நிதி திரட்டிக்கொண்டிருந்தார்கள்.
அந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் பேசினார். ”ராணுவ வீரர்களுக்காக இங்கே
எவ்வளவு நிதி சேருகிறதோ அதே அளவு தொகையை நான் என் தனிப்பட்ட அன்பளிப்பாகத் தருகிறேன்”
என்று அப்போது அறிவித்தார். யாருமே அதை எதிர்பார்க்கவில்லை. ராணுவத்தினர் மகிழ்ச்சியில்
கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். பிறகு அந்தத் தொகை எவ்வளவு எனத் தெரிந்துகொண்டு தனது
சம்பளத்தில் கழித்துக்கொள்ளுமாறு சொல்லி ஏவிஎம் நிறுவனத்தாரிடம் பணத்தைப் பெற்று ராணுவத்தினருக்கு
வழங்கிவிட்டார் எம்ஜிஆர். இது அப்போது சிம்லா முழுவதும் மகிழ்ச்சிச் செய்தியாகப் பரவி
அங்கே பலரும் அப்போதே எம்ஜிஆரின் ரசிகர்களாகிவிட்டார்கள்.
ஏவிஎம் சரவணனுக்குக் குளிர் தாங்காமல் கடுமையான தொண்டை வலி வந்துவிட்டது. உடல் நடுக்கத்தில் வேறு அவதிப்பட்டார். அதனால் ஒருநாள் படப்பிடிப்பின்போது தனது காருக்குள்ளேயே முடங்கிக்கிடந்தார் சரவணன். எம்ஜிஆருக்கு இது தெரியவந்ததும் என்ன செய்தார் தெரியுமா? ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் ஒரு மப்ளரைச் சுற்றியபடி சூடான பாலை எடுத்துக்கொண்டு சரவணன் இருந்த காருக்குப் போனார். கார் கதவைத் தட்டினார். சரவணன் அதிர்ந்துபோனார்.
அன்பே வா திரைப்படத்திற்காக 72 நாட்கள் கால்ஷீட் கொடுத்த எம்ஜிஆர்
முதலில் சம்பளமாக ரூ. 3 லட்சமும் அதன் பிறகு ரூ.25 ஆயிரமும் பெற்றுக்கொண்டார். ஏவிஎம்
நிறுவனத்துடனும், இயக்குநர் திருலோகச்சந்தருடனும் இணைந்து எம்ஜிஆர் பணியாற்றிய ஒரே
திரைப்படம் அன்பே வா மட்டுமே.அன்பே வா திரைப்பட கதாநாயகியாக முதலில் ஜெயலலிதா ஒப்பந்தம்
செய்யப்பட்டார். பின்னர் சரோஜா தேவி நடித்தாஅர். திரைப்படத்தில் இடம்பெற்ற புதிய வானம்
பாடல் காட்சியின் ஒரு கட்டத்தில் எழுத்தாளர் சாவி தோன்றியிருப்பார் என்பது தெரிந்திராத
செய்தி. சரோஜாதேவியின் தந்தையாக நடிக்க முதலில் தங்கவேலுவை எம்ஜிஆர் சிபாரிசு செய்ய,
டி.ஆர் ராமச்சந்திரனை நடிக்க வைத்தார் ஏவிஎம். எனினும் தனது எண்ணத்தை டி.ஆர்.ராமச்சந்திரனிடம்
தெரிவிக்க வேண்டாம் என கூறினார் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் ஒரு சமயம் செட்டிற்குசென்றபோது செட் போடப்பட்ட வீட்டிற்கு தரையில் ஸ்டிக்கரை ஒரு
ஊழியர் கொண்டிருந்தார்.அவரை பார்த்த எம்ஜிஆர் அவரை வாரி அணைத்து கட்டிக் கொண்டார்.
அதன் பின் தன்னுடன் வந்த உதவியாளரை அழைத்து இவருக்கு தேவையானதை வாங்கி கொடு என்று அந்த
ஊழியரை உதவியாளரிடம் அனுப்பி வைத்து கண்கலங்கி நின்றார். நான் நாடகங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துக்
கொண்டிருந்த போது அவர் தான் நாடகத்தில் ஹீரோவாக நடிப்பார் என்று உதவி இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடக் கூறி கண் கலங்கினார் எம்.ஜி.ஆர். அடுத்த நாளில்
இருந்து அந்த ஊழியர் வேலைக்கு வரவில்லையாம். எம்ஜிஆர் அவருக்கு எதாவது உதவிகளை கண்டிப்பாக
செய்திருப்பார். அதனால் தான் வராமல் இருப்பார் என்று இந்த தகவலை எஸ்.பி.முத்துராமன்
கூறினார்.
“என்ன இது புது வழக்கம்? எனக்காக நீங்கள் எதற்கு இப்படிச் சிரமப்படுகிறீர்கள்?
யாரிடமாவது கொடுத்து அனுப்பியிருக்கலாமே...” என்றார் பதற்றத்தோடு.
“ஆமாம்... யாரிடமாவது கொடுத்து அனுப்பியிருக்கலாம்தான். ஆனால், நீங்கள் சாக்குப்போக்கு சொல்லி பாலைக் குடிக்காமல் இருந்துவிடுவீர்களே. அதனால்தான் நானே கொண்டுவந்தேன். இப்போது நீங்கள் மறுக்காமல் குடிப்பீர்கள். உங்கள் தொண்டை வலிக்கு இந்தச் சூடான பால் ரொம்ப நல்லது. குடியுங்கள்...” என்றாராம் எம்ஜிஆர்.
No comments:
Post a Comment