Saturday, July 3, 2021

பெல்ஜியத்தை வீழ்த்தியது இத்தாலி பெனால்டியில் வென்றது ஸ்பெய்ன்

மியூனிக்கில் நடைபெற்ற யூரோ கிண்ண  கால்பந்து காலிறுதிப் போட்டியில்  2-1 என்ற கோல் கணக்கில் தரப்பட்டியலில்  முதல்  இடத்தில்  இருக்கும் பெல்ஜியத்தை வீழ்த்தி யூரோ 2020 அரையிறுதிக்கு முன்னேறியது இத்தாலி.

நிகோலோ பாரெல்லா 31வது நிமிடத்தில் ஒரு கோலையும் லாரென்சோ இன்சிக்னி 44வது நிமிடத்தில் வெற்றிக்கான 2வது கோலை அடிக்க பெல்ஜியம் அணியில் இடைவேளைக்கு சற்று முன் மேலதிக‌ நேரத்தில் நட்சத்திர வீரர் ரொமிலு லுகாகு பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.

பெல்ஜியம் அணியின் கோல்டன் தலைமுறை என அழைக்கப்படும் வீரர்களுக்கு இது பிரியாவிடை போட்டி என்றே இது கருதப்படுகிறது. கெவின் டி புரூய்ன், ரொமிலு லுகாகு, யூரி டைலிமான்ஸ், தோக்ரன் ஹசார்ட் இவரது சகோதரர் ஈடன் ஹசார்ட் ஆகியோர் அடுத்த யூரோ தொடரில் ஆடுவார்களா என்பது சந்தேகம். அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணப்  போட்டியில்  இவர்கள்  விளையாடுவார்கள்.

பெல்ஜியம் வீரர் ஈடன் ஹசார்டு காயத்தினால் வெளியேற இளம் வீரர் ஜெரமி டோக்கு களமிறங்கினார். பந்தை இத்தாலி கோல் பகுதிக்குள் பெனால்டி பகுதிக்கு அருகே இத்தாலியின் டை லாரென்சோ, மின்னல் ஆட்டம் ஆடிய ஜெரமி டோக்குவை தள்ளி விட்டார், இது பெல்ஜியத்துக்கு பெனால்டியைச் சாதகமாக்க போதுமான தள்ளலாக இருக்கவே, பெனால்டி கொடுக்கப் பட்டது. லுகாக்கு அதனை கோலாக மாற்றினார்.

இரண்டாவது பாதியிலும் இத்தாலியின் அபார ஆட்டம் தொடர்ந்தது. ஆனால் பெல்ஜியமும் சோடை போகவில்லை எதிர்த்தாக்குதல் தொடுத்தது. லுகாகு கோல் அடித்து விடுவேன் என்று தொடர்ந்து இத்தாலியை அச்சுறுத்தினார். 

சென்ட் பீட்டர்ஸ்பர்கில் நடைபெற்ற யூரோ தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஸ்பெயின் அணி 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 

8வது நிமிடத்தில் ஸ்பெயினின் ஒரு கார்னர் கிக்கை   திசைத்திருப்பி விடும் முயற்சியில் சுவிட்சர்லாந்து வீரர் சகாரியா தங்கள் கோலுக்குள்ளேயே அடிக்க சேம்சைடு கோலினால் ஸ்பெயின் 1-0 என்று முன்னிலை பெற்றது.

 சுவிட்சர்லாந்து வீரர் ரிமோ ஃப்ராய்லருக்கு சிவப்பு காட்டப்பட்டு  வெளியேற சுவிஸ் அணி 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டது. 68வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின்   செட்ரான் ஷகீரி அபாரமாக ஒரு கோலை அடிக்க‌ முழு நேரத்தில் 1-1 என்று சமன் ஆகி கூடுதல் நேரத்துக்குச் சென்றது.

கூடுதல் நேரத்தில் ஸ்பெயினின் தாக்குதல் ஆட்டத்தில் சுமார் 12 கோல் முயற்சிகளை சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் சோமர் அயராது தடுத்தார். ஸ்பெயினும் சில ஷாட்களை சொத்தையாக கோல் நோக்கி அடித்தனர். அல்லது வெளியே அடித்தனர். ஆனால் எம்பியும், டைவ் அடித்தும், பிரமாதமாகக் கணித்தும் சுவிஸ் கோல் கீப்பர் சோமர் ஒரு சுவராக அங்கு நிற்க ஸ்பெயினால்  கோல்  அடிக்க  முடியவில்லை.

பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயின் வீரர்கள் செர்ஜியோ பஸ்கெட்ஸ் மற்றும் ரோட்ரி ஆகியோர் பதற்றத்தில் கோல்களைத் தவற விட்டனர், ஒன்றை சோமர் அபாரமாகத் தடுக்க ஒரு ஷாட் கோல் போஸ்ட்டில் பட்டு திரும்பியது, ஆனால் ஸ்பெயின் அணியில் ஜெரார்ட் மொரீனோ, டேனி ஆல்மோ தங்கள் ஷூட்டை சரியாக கோலாக மாற்ற கடைசி ஷாட்டை மிகேல் ஆயர்சபால் கோலுக்குள் திணிக்க ஸ்பெயின் 3-1 என்று வெற்றி பெற்றது. மாறாக சுவிட்சர்லாந்தின் மேனுவெல் அகாஞ்சி மற்றும் ஃபேபியன் ஸ்கார் ஆகியோர் சொத்தையாக கோலை நோக்கி அடிக்க ஸ்பெயின் கோல் கீப்பர் உனய் சைமன் தடுத்தார், மற்றொரு இளம் வீரர், குழந்தை முக ரூபென் வார்கஸ் கோல் போஸ்டுக்கு மேலே அடித்து சொதப்பினார். ஒருவர் மட்டுமே கோல் அடிக்க 3-1 என்று ஸ்பெயின் போராடி வென்றது. 

No comments: