இலங்கை அரசியலில் எந்தக் காலமும் இல்லாத ஒரு நிலை அரசியலில் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தில் இருந்து சுதந்திரக் கட்சி வெZளியேறும் என்று. மைத்திரி தெரிவித்திருக்கிறார். கட்சியில் இருந்து மத்திரியை அப்புறப்படுத்தப் போவதாக சந்திரிகா தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் காலை வார சுதந்திரக் கட்சி தயாராக இல்லை என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால தெரிவித்துள்ளார்.
ஒரு கட்சியில் உள்ள மூன்று
மூத்த அரசியல்வாதிகள் மூன்று விதமான கருத்துக் களைத் தெரிவித்துள்ளனர்.
ராஜபக்சக்களின் ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுனக் கட்சியோடு இணைந்து அந்த அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்தால், முன்னாள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்க வேண்டுமென
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினரின் மகளுமான
சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரனதுங்க தெரிவித்துள்ளார். தற்போது ஸ்ரீலங்க சுதந்திரக்
கட்சியின் தலைவராகவும் கட்சியின் மூத்த உறுப்பினராகவும் இருக்கும் மைத்திரிபால சிறிசேன,
மகிந்த ராஜபக்சவை 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பிரதமராக்கி 52 நாட்கள் நடத்திய அரசியல்
நாடாகம் பெரும் சபாக்கேடு என்றும் கூறினார்.
பண்டாரநாயக்கவின் கட்சியை
மகிந்தவும், மைத்திரியும் சிரளித்துவிட்டனர் எனத் தெரிவித்த சந்திரிகா பன்டாரநாயக்க
குமாரதுங்க. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில்
இணைய வேண்டாம் என சந்திரிகா கூறியதை மைத்திரி கேட்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சிக்கு உரிய மரியாதையை ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுன கொடுக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லைமைத்திரியின் செயற்பாட்டால் அரசியல் அரங்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி காணாமல் போய்விட்டதாக சந்திரிகா கருதுகிறார். அதனை மீட்டெடுக்க வேன்டிய கடப்பாடு அவருக்கு இருக்கிறது.
தனது தகப்பன் உருவாக்கிய க்டசியை மீட்டெடுக்க வேன்டும், அல்லது புதிய அணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதில் சந்திரிகா
குறியாக இருக்கிறார்.அதற்காக கொழும்பில் உள்ள முக்கியச்த சந்திரிகாவின் முயற்சி வெற்றி பெறூவது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் தங்கி உள்ளது. ரணிலும் சஜித்தும் ஆளுக்கொரு பக்கம் இருக்கின்றனர்.
அவர்கள் இருஅவ்ரும் ஒரு நேர் கோட்டில் வரமாட்டார்கள். ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி மைத்திரியின் பிடியில் உள்ளது. சந்திரிகா, மைத்திரி,ரணில்,
சஜித் ஆகிய நால்வரும் இன்றிணைந்தால்தான் எதிர்க் கட்சி பலமாக இருக்கும்.
அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு முரண்பட்டுள்ள
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களையும், ரணில், சஜித் ஆகியோரின்
இரு பிரதான எதிர்க்கட்சிகளில் உள்ள மூத்த உறுப்பினர்கள் சிலரையும் இணைத்தே புதிய அரசியல்
அணியை உருவாக்க சந்திரிகா முற்படுவதாகக் கூறப்படுகின்றது.
எதிர்க்கட்சிகளிடையே தற்போது
முரண்பாடுகள் உருவாகியுள்ள சூழலில், அரசாங்கத்துக்குள் இருந்து முரண்படும் சிறிய கட்சிகள்
வெளியேறி எதிர்க் கட்சிகளோடு இணைய முடியாதவொரு பின்னணியிலேயே, சந்திரிகா புதிய அரசியல்
அணியை உருவாக்குவது குறித்துக் கலந்துரையாடி வருகின்றார். ர்கள் சிலருடன் அவர் கலந்துரையாடினார்.
அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள
அரசியல் கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து புதிய பொது கூட்டணியை உருவாக்குவதற்கான
முயற்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளது.இது குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த
சில மாதங்களாக இடம்பெறுவதாக தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள
அரசியல் கட்சிகள் அதிலிருந்து விலகி பொதுக்கூட்டணியில் இணைவதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளன
எனவும் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் ஏற்கனவே பல பிரிவுகளாக
பிளவுபட்டுள்ளது- சிலர் பதவியிலிருந்தவாறே அரசாங்கத்தின் கொள்கைகளிற்கு எதிராக செயற்படுகின்றனர்.அரசாங்கத்தில்
இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அரசாங்கத்தின் கொள்கைகள் தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களிற்கு
வெளியிட்டுள்ள கருத்துக்கள் மூலம் சமீபகாலத்தில் இந்த பிளவு வெளிப்படையாக தெரியவந்துள்ளது.
அமைச்சரவையின் ஆதரவுடன் கைச்சாத்திடப்பட்ட
யுகதனாவி உடன்படிக்கை நீதிமன்றத்தின் முன்னால் உள்ளது - மூன்று அமைச்சர்கள் அதற்கு
எதிராக நீதிமன்றம் சென்றுள்ளனர்.2019 ௨020 ஜனாதிபதி பிரதமர் தேர்தல்களில் அரசதலைவர்களிற்கு
கிடைத்த ஆதரவை இல்லாமல் செய்வதற்காக அரசாங்கத்தின் தலைவர்களிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும்
நடவடிக்கை அரசாங்கத்திற்குள் இடம்பெறுவது குறித்து தெரியவந்துள்ளது.
அரசாங்கத்தின் ஒரு பகுதியாகயிருந்தவாறு
அரசாங்கத்தின் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் அதன் கொள்கைகளை விமர்சிப்பது
ஒழுக்கரீதியான நடவடிக்கையாக என ஜனாதிபதி சமீபத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் புதிய அரசியல்
கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது- அந்த கட்சி பல அரசியல் கட்சிகளுடன்
வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.
எனினும் இந்த கூட்டணிக்கு பொதுவேட்பாளராக தலைமை தாங்குவார்
என்ற விடயத்திற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லைஇது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
எதிர்கால தேர்தல்களில் போட்டியிடுவதற்கு
ஏற்ற வகையில் புதிய அரசியல் கூட்டணி தொடர்பான இறுதிமுடிவுகள் இந்த வருடத்திற்குள் எடுக்கப்படும்
என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சந்திரிகா,சஜித்,ரணில் ஆகிய மூவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் உரிய இலக்கை அடைய முடியும்.
No comments:
Post a Comment