Sunday, April 8, 2012

எதிர்க்கட்சிகள் சிதறியதால் உற்சாகத்தில் ஜெயலலிதா

சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றி பெற்றதனால் ஜெயலலிதாவின் பார்வை இந்திய நாடாளுமன்றம்நோக்கித் திரும்பியுள்ளது. இந்தியப் பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவுக்கு உண்டு என்று சோ போன்ற அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்து வருவதனால் இந்தியப் பிரதமர் ஆகும் ஆசை ஜெயலலிதாவின் மனதில் துளிர்விடத் தொடங்கியுள்ளது.
இந்திய தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாரதீய ஜனதாக் கட்சியும் மாநிலங்களில் செல்வாக்கை இழந்து வருகின்றன. அண்மையில் நடைபெற்ற 5 மாநிலங்களின் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. பாரதீய ஜனதாக் கட்சியும் பெருமைப்படக் கூடிய வகையில் வெற்றிபெறவில்லை. மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணியாகப் போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டõல் அதில் ஜெயலலிதாவும் பிரதான பங்காளியாக இருப்பார். சுழற்சி முறையில் பிரதமராகும் வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு கிடைக்கலாம். சுழற்சி முறையிலான பிரதமர் பதவியை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது தேர்தலின் பின்னரே தெரியவரும்.
தமிழக எதிர்க்கட்சிகள் சிதறிக்கிடப்பதனால் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அதிக தொகுதியில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் இடைத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. அண்மையில் நடந்த இடைத் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகள் பல மடங்கு குறைந்துள்ளன. சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்டுப்பணத்தை இழந்துள்ளது. இத் தேர்தல் முடிவுகள் ஜெயலலிதாவுக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
வைகோவும் டாக்டர் ராமதாஸும் செல்வாக்கிழந்துள்ளனர். பிரதான கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய வைகோவையும் டாக்டர் ராமதாஸையும் கண்டு தமிழகத்தின் பிரதான கட்சிகள் பயந்த காலம் மலையேறிவிட்டது. தனித்து நின்றால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை வைகோவும் டாக்டர் ராமதாஸும் உணர்ந்துள்ளார்கள். எதிர்காலத்தில புதிய கூட்டணி ஒன்று உருவாகுவதற்கு சங்கரன் கோவில் இடைத் தேர்தல் முடிவு காரணமாக அமையும் என்பது வெளிப்படையானது.
வைகோவையும் டாக்டர் ராமதாஸையும் இணைப்பதற்கு ஜெயலலிதா விரும்பமாட்டார். ஆகையினால், அவர்கள் இருவரும் கருணாநிதியுடன் கைகோர்க்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. வைகோ, ராமதாஸ் ஆகியோரின் உதவி இல்லாமல் ஜெயலலிதாவை வீழ்த்த முடியாது என்பது கருணாநிதிக்கு நன்கு தெரியும். தமிழக ஆளுங்கட்சியாக இருந்துக் கொண்டே ஆட்டிப்படைக்கும் ஜெயலலிதா மத்திய அரசில் புகுந்தால் நிலைமை விபரீதமாகிவிடும் என்பதை கருணாநிதி நன்கு உணர்ந்துள்ளளார். ஆகையினால் வைகோவையும் ராமதாஸையும் ஆதரிப்பøதத் தவிர, வேறு வழி கருணாநிதிக்கு இல்லை.
கூட இருந்@த விஜயகாந்துக்கு குழிபறித்து விட்டார் ஜெயலலிதா. விஜயகாந்தின் செல்வாக்கு இவ்வளவுதான் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுடன் இணைந்ததால் ஏற்பட்ட அவலம் @பாதும் ஜெயலலிதாவுடன் இனியும் கூட்டணி தேவையில்லை என்பதில் உறுதியாக உள்ளார் விஜயகாந்த். ஆகையினால், விஜயகாந்தைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை ஏனைய கட்சித் தலைவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் ஜெயலலிதாவுக்குத்தான் அச்சுறுத்தலாக இருந்தது. தனது இராஜதந்திரத்தின் மூலம் அந்த அச்சுறுத்தலினால் தவிடு பொடியாக்கி விட்டார் ஜெயலலிதா.
தமிழகத்தில் இடதுசாரிகளின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இடதுசாரிகளைக் கைவிட்டு விட்டனர். இடதுசாரிகள் விஜயகாந்துடன் ஒட்டிக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் செல்வாக்கில்லாத இடது சாரிகளால் எதுவித மதிப்பும் ஏற்படப் போவதில்லை என்பதை ஜெயலலிதாவும் கருணாநிதியும் இவர்களைக் கவனத்தில் எடுக்க மாட்டார்கள்.
உடன் பிறவாச் சகோதரி சசிகலாவை மன்னித்த ஜெயலலிதா சசிகலாவின் உறவினர்களை மன்னிக்கத் தயாராக இல்லை. தமிழக முதல்வரை நம்பி தன் புருஷனை கைவிட்டுள்ள சசிகலா கணவன் சிறையிலே வாடிக் கொண்டிருக்க ஜெயலலிதாவுடன் மீண்டும் இணைந்துள்ளார் சசிகலா. சசிகலாவின் தன்னிலை விளக்க மன்னிப்பு அறிக்கையில் மனமிரங்கிய ஜெயலலிதா அவரை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொண்டார். ஆனால், பழைய அதிகாரங்களும் செல்வாக்கும் சசிகலாவுக்கு இருக்குமா என்பதுசந்தேகமே.
ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்குக் காரணமானவர்களில் சசிகலாவும் ஒருவர் என்பது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் சிலரது அசைக்க முடியாத நம்பிக்கை. சசிகலாவை ஜெயலலிதா விரட்டியதால் மகிழ்ச்சியடைந்து, பட்டாசு கொளுத்தி, இனிப்பு வழங்கியவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். பிரிக்க முடியாதது எது என்று திருவிளையாடல் பாணியில் கேள்வி கேட்டால் ஜெயலலிதாவும் சசிகலாவும் என்@ற தமிழகத்தில் பலர் பதிலளிப்பார். ஆகையால், இவர்களின் பிரிவு நிரந்தரமானதல்ல விரைவில் இருவரும் இணைவார்கள் எனவும் பலரும் எதிர்பார்த்தார்கள். அது போன்றே ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களின் பிரிவும் இணைவும் கட்சிக்குள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. சசிகலாவை விரும்பாதவர்கள் அவரை அனுசரித்து போவதைத் தவிர வேறு வழி இல்லை.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மா

வீரகேசரிவாரவெளியீடு08/04/12

Saturday, April 7, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 27

சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறு வயதில் பிரிந்த அண்ணனும் தங்கையும் ஒரே கல்லூரியில் படித்து காதலித்து மண மேடையில் இருக்கும் விபரீத கதையுடன் 1955 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நல்லவன். விபரீதமான திரைக்கதையைக் கொண்ட இப்படம் மிகவும் நிதானமாகப் படமாக்கியதால் விமர்சனங்களிலிருந்து தப்பியது.
தாய் தந்தையற்ற அண்ணனும் தங்கையும் ஊர் ஊராக அலைந்து வாழ்கின்றனர். விதி இருவரையும் பிரிக்கிறது பாதிரியார் வீட்டில் அடைக்கலம் புகுகிறார். கண்ணப்பன் என்ற அண்ணனுக்கு பீற்றர் என்று பெயர் சூட்டுகின்றார் பாதிரியார். செல்வந்தர். வி.கே. ராமசாமி அநாதையான சிறுமியைத் தத்தெடுக்கிறார். மரகதம் என்ற சிறுமிக்கு சுந்தரி என்று பெயரிடுகிறார். வி.கே.ராமசாமி.
அண்ணன் தங்கை இருவரும் வளர்ந்து ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். பீற்றராக ஆர்.எஸ்.மனோகரும் சுந்தரியாக ராஜ சுலோசனாவும் நடித்தனர். மனோகரும் ராஜசுலோசனாவும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு வைத்தனர். நட்பு காதலாக மாறுகிறது. ராஜசுலோசனா மனோகரை விரும்புவதை வி.கே.ராமசாமியின் மனைவி விரும்பவில்லை தனது தம்பிக்கு ராஜ சுலோசனாவை திருமணம் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்கிறார்.
பைத்தியக்காரன் எம்.என்.நம்பியாரின் மனைவி மனோகரின் மீது ஆசைப்படுகிறாள். அவள் திருமணம் முடியாதவள் என நினைத்த மனோகர் நம்பியாரின் மனைவியின் வலையில் விழுகிறார். ஒரு நாள் இரவு இருவரும் ரகசியமாகச் சந்திக்கும் போது அகப்பட்டு விடுகின்றார்கள். அவமானத்தினால் மனோகர் ஊரை விட்டு ஓடி விடுகிறார். ஊரை விட்டு ஓடிச் சென்ற மனோகர் வி.கே.ராமசாமியின் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்கிறார். தனது கடும் உழைப்பினால் அரிசி ஆலையை உயர்த்துகிறார். தனது மகளுக்கு மனோகரைத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். வி.கே.ராமசாமி
மனோகரை வளர்த்த பாதிரியாருக்கு தகவல் அனுப்பப்படுகிறது. திருமண மேடையில் மனோகரும் ராஜசுலோசனாவையும் மணக்கோலத்தில் இருக்கும் போது அங்கு வந்த பகதூர் என்பவர் திருமணத்தை நிறுத்தச் சதி செய்கிறார். அப்போது தான் மனோகரும் ராஜசுலோசனாவும் சகோதரர்கள் என்ற உண்மை தெரிய வருகிறது. அதனால் திருமணம் நடைபெறவில்லை. உண்மைய உணர்ந்து அனைவரும் ஒற்றுமையாகின்றனர்.
ஏ.கே.துரை எஸ்.ராகவன் ஆகியோர் இணைந்து கதை எழுத ஏ.எஸ்.நாராயணன் வசனம் எழுதினார். இசை எம்.எஸ்.ஞானமணி ஒளிப்பதிவு ஜி.சந்திரன் ச‌ன்னாஸ் புரடக்ஷன் தயாரிப்பில் இப் படத்தை திருவேங்கடம் இயக்கினார்.
ரமணி
மித்திரன்08/04//12

Friday, April 6, 2012

திரைக்குவராதசங்கதி 27



ரஜினியுடன் அம்பிகா முதலில்இணைந்து நடித்த படம் "எங்கேயோகேட்டகுரல்'' ஆக்ஷன் நடிப்பில் அதிககவனம் செலுத்தி இளம் உள்ளங்களின்மனதில் குடிகொண்டிருந்த ரஜினிமுற்றிலும் வித்தியாசமாக நடித்தப்படம் எங்கேயோ கேட்ட குரல்.முதியவரான ரஜினியை ரசிகர் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் முதலில் எழுந்தது. 20 வயதான அம்பிகாமுதியவராகநடிப்பாரா என்று இன்னொரு சந்தேகமும் எழுந்தது. படத்தின் வெற்றிதோல்வியை ரஜினி ரசிகர்களின் கையில்கொடுத்துவிட்டு படப்பிடிப்பை விறுவிறுவெனநடத்தினார்கள்.அம்பிகாவின் தங்கையாக அவருடையதங்கை ராதா நடித்தார். ரஜினியின் காலில்விழுந்துஅழும்காட்சியில்கிளிசரின்இல்லாமல்தத்ரூபமாகநடித்தார்அம்பிகா.அப்படத்தின்காட்சிப்படிஅம்பிகாஇறந்துவிடுகிறார்அவருடைய உடலுக்கு தீ வைப்பதற்காக வரட்டி அடுக்குவார்கள். அதைப் பார்த்த அம்பிகாவின்தகப்பனும் தாயும் உண்மையிலேயேஅழுது விட்டார்கள்.பெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான எங்கேயோகேட்ட குரல் பெரும் வெற்றி பெற்றது. ரஜினியுடன் அம்பிகாவுக்கும் அப்படம் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது. 1982 ஆம்ஆண்டு ஆவணி மாதம்14ஆம்திகதிஎங்கேயோகேட்ட குரல் வெளியானது.அதே நாளில் தான் கமல்ஹாசன், அம்பிகாஜோடியாக நடித்தசகலகலாவல்லவனும்வெளியானது.இரண்டுபடங்களும்இருபெரும்ந‌டிகர்களின்படம்இரண்டிலும்அம்பிகாதான் நாயகி.


சகல கலாவல்லவன் வெள்ளி விழா கொண்டாடியது.சகலகலாவல்லவன்ப‌டப்பிடிப்பின்போதுஅம்பிகாவின்சிறுவயதில்என்னுடன்நடிக்கிறாயாஎன‌க்கேட்டதைகமல்ஞாபகப்படுத்துவார். கமல் கூறியது போலவே தமிழ்த்திரை உலகை தனது கையில்சிலகாலம்அம்பிகாவைத்திருந்தார்.காக்கிச்சட்டை,உயர்ந்தஉள்ளம்காதல்பரிசுகடல்மீன்கள்ஆகியபடங்களில்கமலும்அம்பிகாவும் ஜோடி சேர்ந்து நடித்தனர்.இளம் நடிகர்களுடன் நடித்த அம்பிகாவாழ்க்கை என்ற படத்தில் சிவாஜியின்ஜோடியாக நடித்தார். யதானநடிகர்திலகத்துக்குஇணையாகவயதானவேடத்தில்அம்பிகா நடித்தார். கருடா சவுக்கியமாஎன்ற படத்தில் நடிகர் திலகத்தின் மகளாகவும் வெள்ளை ரோஜா படத்தில் நடிகர்திலகத்தின் மகன் பிரபுவின் காதலியாகவும் நடித்தார்வாழ்க்கைபடத்தில்முதன் முதலாகநடிகர்திலகத்துக்குஜோடியாகநடித்தார்.நடிகர்லகத்துடன்நடிப்பதற்குமிகவும்தயங்கினார்.அம்பிகாவினுடையதயக்கத்தைநடிகர்திலகம்போக்கினார்நடிகர்திலகத்துடன்அம்பிகாநடிக்கும்முதலாவதுகாட்சிபடமாக்கப்பட்டதுநடிகர்திலகம்அம்பிகாவுக்குத்தைரியம்கொடுத்தார்.ஒருடேக்கிலேயேஓகேயானதுஅம்பிகாமிகவும்சந்தோஷப்பட்டார்.அம்பிகாவின் ஜோடியாக நடித்த ரவீந்திரன் இப்படத்தில் அம்பிகாவின் மகனாகநடித்தார். சிறுவயதில் அம்பிகாவுடன் பலபடங்களில் நடித்த தீபா,அம்பிகாவின்மருமகளாக நடித்தார். வாழ்க்கை அம்பிகாவின் பெயர் சொல்லும்வெற்றிப் படமானது. அதன் பின்னர் திருப்பம், தாம்பத்தியம் ஆகிய படங்களில் நடிகர் திலகத்தின்ஜோடியாக அம்பிகா நடித்தார்.
சிவகுமார், அம்பிகா ஜோடியாக நடித்தபடங்களில் ஒன்று நான்பாடும்பாடல்.இப்படத்தின்இறுதிக்காட்சியில்சிவகுமாரின்கன்னத்தில்அம்பிகாஅடிக்கவேண்டியகாட்சியைப்பட‌மாக்குவதற்காக அனைவரும் தயாராக இருந்தனர்.அம்பிகாவிடம் அடி வாங்குவதற்குசிவகுமார் தயாராக இருந்தார். சிவகுமாரின் கன்னத்தில் அடிப்பதற்கு அம்பிகாதயாராகஇல்லைஎல்லோரும்எவ்வளவோ வற்புறுத்தியும் அம்பிகா அடிக்கவில்லை. சிவகுமாருக்கு அம்பிகா அடிப்பது போல கையை ஓங்கி சிவகுமாரின்கன்னத்தில் மெதுவாக வைத்தார்.அக்கினிபர்வதம் என்ற படத்தில்சத்தார் என்பவர் அம்பிகாவின்கன்னத்தில் அடிப்பது போல்காட்சி படமாக்கப்பட்டபோது சத்தார் உண்மையிலேயே மிகவும்பலமாக அம்பிகாவின் கன்னத்தில்அடித்தார். அந்தஅடியின்வலியில்துடித்த அம்பிகா அதேபோன்ற நிலைவேறு எவருக்கும் வரக்கூடாது என்பதனால்அடிக்கும் காட்சியில் பின் வாங்கிவிடுவார்

.அம்பிகாவுக்கும் குதிரைக்கும் ஒருபோதும் ஒத்துவராது. ரஜினியின் மாவீரன்படத்தில் குதிரைச் சவாரி செய்தபோதுகுதிரையால் விழுந்து காயமடைந்தார்.கமலுடன் நடித்தகடல்மீன்கள் படப்பிடிப்பின் போது குதிரையிலிருந்து விழுந்துகாயமடைந்தார்.படிக்காதவன் படத்தில் ரஜினியின்ஜோடியாகஅம்பிகாநடித்தார்அப்படத்தில்ரஜினியின்அண்ணனாகந‌டிகர்திலகம்நடித்தார்.நடிகர் திலகத்தின் ஜோடியாகவயதான பாத்திரத்தில் அம்பிகா நடித்திருந்தார். வயதான நடிகர்திலகத்தின்ஜோடியாகராதாநடித்தமுதல் மரியாதைபெரு வெற்றிபெற்றது. அதில் நடித்த ராதாவும் மிகச் சிறந்த நடிகை என்று போற்றப்பட்டார்.லலிதா பத்மினி சகோதரிகளுக்குப் பின்னர்தமிழ்த்திரைஉலகைதமதுக‌ட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தசகோதரிகள் அம்பிகா ராதா. இருவரும்நடித்த பல படங்கள்வெற்றிபெற்றன.எங்கேயோகேட்டகுரல்,ள்ளைரோஜாஇதயக்கோயி,மனக்கணக்கு,காதல்பரிசு,தாம்பத்தியம்ணாநஅண்ணாநகர்முதல்தெருஆகியபடங்டங்களில்இருவரும்இணைந்து நடித்தனர்.அம்பிகாவும் ராதாவும் ஒரே நேரத்தில் திரைப்படங்களில்நடித்த போதிலும் இருவரிடமும் வாய்ப்புஇருந்ததேதவிரபொறாமைஇருக்கவில்லை.அம்பிகாசினிமாவைமறந்துகுடும்பம் நடத்துகிறார். ராதா தன் மகளைசினிமாவில் புகுத்துவதற்கான ஏற்பாடுகளில்மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
ரமணி
மித்திரன்12/09/2006
85





Thursday, April 5, 2012

திரைக்குவராதசங்கதி 26

தமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்து நடித்துள்ளனர்.
பாட்டு, நடிப்பு, ஆகியவற்றில் அம்பிகாவுக்கும், ராதாவுக்கும் ஈடுபாடு அதிகம். அம்பிகாதான் மூத்த பெண். அடுத்தவர் சந்திரிகாதிரைப்படத்துக்காக இவர் பெயரைபா ரதிராஜாராதா என்ற மாற்றினார்.அர்ஜுன் புதுநெல்லு புதுநாற்று படத்தின்கதாநாயகன் ராமார்ஜுன். சுரேஷ் பரதேசி தெலுங்குப் படத்தின் கதாநாயகன்.அம்பிகாவின் குடும்பம் கலைக்குடும்பம் என்பதில் தவறில்லை. சினிமா மீது சிறு வயதிலேயே நாட்டம்கொண்ட அம்பிகாவுக்கு நினைவாற்றல்மிக அதிகம். காலையில் வானொலியில் ஒலிபரப்பாகும். லலித சங்கீதம்நிகழ்ச்சியின் பாடல்களை எழுதிப் பாடமாக்குவார். பாடசாலையில் நடைபெறும் பாட்டுப் போட்டிகளில் முதல் பரிசைப் பெறுவார். அவருடன் போட்டிபோட்டுப் பாடும் ஆண் ஒருவர் பெண்
குரலில் பாடி முதல் பரிசைப் பெறும்போது அம்பிகாவுக்கு இரண்டாம் பரிசுதான் கிடைக்கும். அம்பிகாவின் சகோதரி ராதாவும் அம்பிகாவுக்குச் சளைத்தவரல்ல.பாட்டுப் போட்டிகள் பலவற்றில் பாடி ராதாவும் முதல் பரிசு பெற்றிருக்கிறார்.மிமிக்கிரி, கவிதை, நடிப்பு, நடனம் ஆகியபோட்டிகளில் பங்கு பற்றிய அம்பிகா பலபரிசுகளைப் பெற்றிருக்கிறார். சிறுமியாக
இருக்கும் போதே தாயாரை வற்புறுத்தி சினிமாப் படப் பிடிப்புக்குச் செல்வார். கமல்,சோமன் பாபு ஆகியோர் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு ஒன்றைப் பார்ப்பதற்குஅம்பிகா தாயாருடன் சென்றார்.அம்பிகாவைக் கண்ட கமல் நீ ரொம்பஅழகா இருக்கிறாயே என்னுடன் நடிக்கிறாயா? ஸ்ரீ வித்தியாபோல் இருக்கும் நீஎ திர்காலத்தில் பெரியநடிகையாக வரலாம் றார்.தயக்கம் எதுவும் இல்லாமல்கமல் கேட்டத்திற்குஉடனேஆம் என்று பதிலளித்தார்
அம்பிகா. மலையாளப்பட உலகில் நடிகைஷீலாகொடிகட்டிப் பறந்த காலம், அப்போதுஷீலாவின் நடிப்பினால் கவரப்பட்ட அம்பிகாதானும் ஷீலாவைப் போல் சிறந்த நடிகையாக வர வேண்டும் என்று விரும்பினார்.அம்பிகாவின்நடிப்பு ஆர்வத்தைக் கண்ட தாயார் பட அதிபர் சுப்பிரமணியனைச் சந்தித்து தன் மகள்அம்பிகாவுக்கு வாய்ப்புக் கொடுக்கிறீர்களா
என்று கேட்டார், அவரும் உடனே அம்பிகாவுக்குமேக்கப் டெஸ்ட் செய்து பார்த்தார்.அம்பிகாவின் அழகும் நடிப்பும் அவருக்குப்பிடித்து விட்டது. அவர் தயாரித்துக் கொண்டி
ருந்த கோட்டாணிக்கராஎன்றபட‌த்தில்குழந்தைநட்சத்திரமாக அம்பிகா அறிமுகமானார்.சிறு வயதில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அம்பிகா நடித்தார். பருவம் வந்ததும் நடிப்பை நிறுத்தி விட்டார். எம். முகுந்தன் என்ற பிரபல எழுத்தாளரின்கீதாஎன்றநாவல்ரைப்படமாவதற்குரிய ஏற்பாடுநடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்படத்தைத் தயாரிக்கப் போகும் கம்பனி அப்படத்தில்அம்பிகா நடிக்க வேண்டும் என்றுவிரும்பி அம்பிகாவின் வீட்டிற்கு ஆட்களைஅனுப்பியது.படக் கொம்பனியைச் சேர்ந்தவர்கள் சென்றபோதுஅம்பிகாதியேட்டரில்ப‌டம்பார்த்துக்கொண்டிருந்தார்.தியேட்டருக்குத் தகவல்சென்றதும் படம்பார்த்தகுறையில்அம்பிகாப‌ப‌திரும்பி விட்டார். அம்பிகாவின் பூரண சம்மதத்துடன்ஒப்பந்தம் கைச்சாத்தானது.ந‌டிகை பத்மினியின் உறவினர் ஒருவரான அம்பிகாமலையாளப்உடலகில்இருந்தார்.இன்னொருஅம்பிகா வந்தால் பெயர்ப் பிரச்சினைவரும்என்பதனால்அம்பிகாவின் பெயரைமாற்றுவதற்கு முயற்சி செய்தார்கள். சீதா, பிருந்தா, பிரியா, சந்தியா எனப் பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அம்பிகாவும் அவரது தாயாரும் பெயரை மாற்ற விரும்பவில்லை.அம்பிகா, நடித்த படம் வெற்றிபெற்றதும் புதியஅம்பிகாவைத்தேடிடய்ப்புகள்குவியத்தொடங்கின.மலையாளப் படங்களில்நடித்து வந்த அம்பிகாவை தமிழ் சினிமா இரு கரம் நீட்டி வரவேற்றது. 1979 ஆம் ஆண்டுசுதாகர், ஷோபா நடித்த சக்களத்திஎன்றபடத்தின்இரண்டாவதுகதாநாயகியாக தமிழுக்குஅறிமுகமானார்அவரதுமுதலாவதுப‌டம்அதிகமாகப் பேசப்படவில்லைஅந்த7நாட்கள்வெளியானதும்அம்பிகாவின்அலை அமோக மாகியது.மலையாளப்பெண்ணான அம்பிகா தமிழ்ப் பெண்ணாகவும்த‌மிழரானபாக்கியராஜ்மலையாளத்தவனாகவும் நடித்த அந்த 7 நாட்கள் பெருவெற்றி பெற்றது.மலையாளம் கலந்த தமிழ்பேசிந‌டித்தபாக்கியராஜ்வ்வொருவசனத்தையும் பேசிவிட்டு தான் சரியாகப்பேசுகிறேனாஎன்றுஅம்பிகாவைக் கேட்பார்.அப்படத்தின் இயக்குநர் பாக்கியராஜ்.கணவனா? காதலனா? என்ற மனப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் அம்பிகாவின்நடிப்பை சகல தரப்பினரும் பாராட்டினார்கள். அப்படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களைகதிரையின்நுனியில் இருத்தியதுபாக்கியராஜைக்காதலிக்கும்அம்பிகாச‌ந்தர்ப்பவசத்தால் ராஜேஸுக்கு மனைவியாகிறார்அம்பிகாவின் காதலைப் பற்றித்தெரிந்தராஜேஸ்அவரைபாக்கியராஜுடன்இணைக்கமுயற்சி செய்கிறார். கணவனின் சொற்படிதாலியைக் கழற்றிவிட்டு காதலனுடன் அம்பிகா செல்வாரா? இல்லையா? எனற‌மனப்போராட்டம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.அந்த 7 நாட்கள் கிளைமாக்ஸ் காட்சி எப்படிஅமையவே ண்டும் என்பதைபாரதிராஜாவிடம்பாக்கியராஜ்லந்துலோசித்தார்.அந்த 7 நாட்கள் இறுதிக் காட்சிபடமாவதற்குஒரு மாதம்சென்றது. அக்காட்சியில்எப்படிநடிக்கவேண்டும்ன்றுரதிராஜாஅம்பிகாவுக்கு நடித்துக்காட்டினார்.பாரதிராஜாவின்கப்பிரமாண்டமானவெற்றிப் படங்களில் ஒன்று அலைகள் ஓய்வதில்லை.அப்படத்தின் நாயகியாக அம்பிகாவைத்தான்பாரதிராஜா தேர்வு செய்தார். அம்பிகாவின்குடும்பப்ப‌டத்தைப்பார்வையிட்டபாரதிராஜாவின் கண்ணில் ராதா புதிய ஒளியாகத் தெரிந்தார்.அலைகள் ஓய்வதில்லைஎன்றப‌டத்தில்ராதாவைறிமுகப்படுத்தபாரதிராஜா விரும்பினார். ஆனால் படத்தில்நடிக்கராதாவிரும்பவில்லை. படித்துஆசிரியையாகவேண்டும்என்றேராதாவிரும்பினார்.விதி ராதாவை நடிகையாக்கியது பாரதி ராஜாவின் அலைகள்ஓ ய்வதில்லை படத்தில் அறிமுகமான ராதாவும்கார்த்திக்கும் தமிழ்த்திரை உலகத்தில்தமதுதிறமையைவெளிப்படுத்தினர்.
ரமணி

மித்திரன் 03/09//2006
84


Tuesday, April 3, 2012

திரைக்குவராதசங்கதி 25

தமிழ்த்திரை உலகில் வித்தியாசமானபடங்களைத் தந்தவர்களில் ஒருவர் டி.என்.பாலு அவர் தயாரித்து இயக்கிய "சட்டம்என் கையில்' என்றபடம் பல நாட்களைத்தாண்டி வெற்றிகரமாக ஓடியது. அப்படத்தின்நூற்றாண்டு விழா 21.10.1978 இல்நடைபெற்றது. அப்படத்தில் நடித்தவர்களுக்கும் படத்தின் வெற்றிக்குக் காரணமாகஇருந்தவர்களுக்கும் கலைஞர் கருணாநிதியின் கையால் விருது வழங்க டி.ஆர்.பாலுஏற்பாடு செய்தார்.தமிழக முதல்வராக அன்று வீற்றிருந்த மக்கள்திலகம் எம்.ஜி.ஆருக்கு அழைப்புக் கொடுப்பதற்காக முதல்வர் அலுவலகத்தைத்
தொடர்பு கொண்டு பலமுறை முயற்சித்தார்டி.என்.பாலு. முதல்வர் அலுவலகத்திலிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை.தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருக்கையில் எதிர்க் கட்சியைச் சேர்ந்த கருணாநிதிகையால் விருது வழங்கப்படுவதையும்,அந்த விழாவுக்கு முதல்வர் விருந்தினராகச்செல்வதையும் முதல்வர் அலுவலகம் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால்தான் இந்தஇழுத்தடிப்பு நடைபெற்றது
.முதல்வர் எம்.ஜி.ஆரைச் சந்திக்க முதல்வர்அலுவலகம் ஒப்புதல்தராததால் சோர்வடையாத டி.என்.பாலு, அழைப்பிதழைத் தபால்மூலம் அனுப்பி வைத்தார். சட்டம் என்
கையில் படத்தின் நூறாவது நாள் விழா நடப்பதற்கு முதல் நாள் இயக்குநர் டி.என். பாலுவின் வீட்டினுள் புகுந்த பொலிஸார் மதுவிலக்கு சட்டப்படி அவரைக் கைது செய்தனர்.
டி.என்.பாலு கைது செய்யப்பட்டதன் பின்னணிஎன்னவென்று அனைவருக்கும் தெரியும். காலையில் டி.என்.பாலு விடுதலைசெய்யப்பட்டபோதும் மீண்டும் அவரைக்கைது செய்ய பொலிஸார் முயற்சித்தனர்.ஆனால் டி.என்.பாலு தலைமறைவாகிவிட்டார். விழா நடைபெறுமா என்ற எண்ணம்ஏற்பட்டது. என்றாலும் விழா திட்டமிட்டபடிநடைபெறும் என்று விழா ஏற்பாட்டாளர்கள்அறிவித்தனர். இயக்குநரை பொலிஸார்தேடுகின்றனர். இயக்குநர் இல்லாமல் விழாநடக்குமா என்ற கேள்விக்கும் இயக்குநர்இல்லையென்றாலும் நூறாவது நாள் விழா
திட்டமிட்டபடி நடைபெறும் என்று விழாஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.
திட்டமிட்டபடி விழா ஆரம்பமானது. அப்போது எங்கிருந்தோ இயக்குநர் டி.என்.பாலுமேடையில் தோன்றினார். கலைஞர்களும்,பார்வையாளர்களும் உற்சாகமடைந்தனர்.
தம்மால் தேடப்படும் இயக்குநர் டி.என்.பாலு மேடையில் இருக்கும் செய்தி பொலிஸாரின் காதுக்கு கிட்டியது. அவரைக் கைதுசெய்வதற்கான ஏற்பாட்டுடன் பொலிஸார்
விழா மண்டப வாசலில் தயாராக இருந்தனர்.கலைஞரின் கையால் கலைஞர்களுக்குவிருது வழங்கும் நிகழ்ச்சிசிறப்பாக முடிந்தது. அந்த மண்டபத்தில் இருந்தவர்கள் எதிர்
பார்த்த கிளைமாக்ஸ் மாறியது.இயக்குனர் டி.ஆர். பாலுவைகைது செய்வதற்கு பொலிஸ்மண்டப வாசலில் காத்திருந்தபோது அவர் பின் வாசலால் சென்றுவிட்டார். இதனை சட்டம் என்
கையில் டைரக்டர் சட்டத்தை தன்கையில் எடுத்துக் கொண்டு போய்விட்டார் என கலைஞர் வேடிக்கையாக விழாவில் குறிப்பிட்டார்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாஸன் எழுதிய வாழ்க வாழ்கவே வளமார் நமதுதிராவிட நாடு என்றபாடல் தமிழகத்தில்எங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.அப்பாடலினால் கவரப்பட்டகலைஞர் தான் வசனம் எழுதும் "பராசக்தி' என்ற படத்தில் அப்பாடலைச் சேர்க்கவிரும்பினார்.அப்பாடலின் உரிமையை புரட்சிக்கவிஞர் பாரதிதாசனிடமிருந்து பெறும் பொறுப்பையும்ஏற்றுக் கொண்டார்.புதுவையில் உள்ள புரட்சிக்கவிஞரின் இல்லத்துக்கு கலைஞர்சென்ற போது அவரை அன்புடன் அழைத்து நலம் விசாரித்தபின்னர் கலைஞர் வீடு தேடி
வந்த காரணத்தைக் கூறினார்.பராசக்தி படம் பற்றியகதையையும் அதற்கு வசனம்தான் எழுதுவதாகவும் அப்படத்தில் அவர் எழுதிய வாழ்கவாழ்கவே வளமார் திராவிடநாடு என்ற பாடல் அப்படத்தில்இடம் பெற வேண்டும் என்று தாம்விரும்புவதாகக் கூறினார்.புரட்சிக் கவிஞரின் பாடலுக்குரியபணத்தை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுத்தருவதாகவும் கலைஞர் உறுதியளித்தார்கலைஞரின் வேண்டுகோளைச்செவிமடுத்த புரட்சிக் கவிஞர் அதிர்ச்சியும் ஆனந்தமுமடைந்தார். திராவிடநாடு என்ற சொல் நாடகம், பாடல் சினிமா ஆகிய துறைகளில் தணிக்கை செய்யப்பட்டிருந்த அக்காலத்தில் திராவிடத்தைவாழ்த்தும்பாடல் சினிமாவில்வருமா என்ற ஐயம்புரட்சிக்கவிஞருக்குஏற்பட்டது.கலைஞரின் வேண்டுகோளை ஏற்ற புரட்சிக்க
விஞர் அப்பாடலுக்கு பணம் வேண்டாம்என்றும் அதற்காகத்தான் பணம் தரத் தயாராக இருப்பதாகவுமகூறினார்.பராசக்தி படத்தில்புரட்சிக்கவிஞரின்பா டல்ஒலிப்பதி வுசெய்யப்ப
டும்போதுஅ வ ரு ம்அங்கு இருக்கவேவ ண் டு ம்என்று அழைப்புவிடுத்தார்கள். சேலத்தில் உள்ள மார்டன்தியேட்டரில் ஒரு பாடல்எழுதிக் கொடுத்து விட்டு
புரட்சிக் கவிஞர் நேரே சென்னைக்குச்சென்றார். சென்னையில் உள்ளஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு அவரை அழைத்துச்சென்றார் கலைஞர்.கலைஞரும், புரட்சிக் கவிஞரும் சென்ற
கார் ஏ.வி.எம். ஸ்ரூடியோ வாசலுக்குச் சென்றபோது அங்கே சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அவர்கள் சென்ற கார் வாசலில் நிறுத்தப்பட்டது.எதற்காக கார் நிறுத்தப்பட்டது என்று கேட்டபோது பாடல் ஒன்று ஒலிப்பதிவாகிறது.கரின் சத்தம் ஒலிப்பதிவைப் பாதிக்கும்என்று கூறப்பட்டது.வாசலில் கார்நிறுத்தப்பட்டு ஒலிப்பதிவுக்குகாரின் சத்தம் இடைஞ்சல் என்று கூறப்பட்டதும். புரட்சிக்கவிஞருக்கு கோபம் எல்லைமீறியது. "அப்படி என்ன பெரிய ஒலிபதிவுக்கருவி' என்று மறித்தவரைக் கோபத்துடன்கேட்டார்.புரட்சிக்கவிஞரை கலைஞர் சமாதானப்ப
டுத்தினார். அப்பொழுதுதான் தனது மனதைத்திறந்து கோபத்துக்கான காரணத்தைக்கூறினார் புரட்சிக்கவிஞர்.சேலத்தில் ஒரு பாட்டு எழுதிக் கொடுத்தேன். "கமழ்ந்திடும் பூவிலெல்லாம் தேனருவி..' என்று ஒரு பாடலை எழுதிக் கொடுத்தேன். அந்த ஒலிப்பதிவாளர் பாடல் வரியைமாற்றச் சொன்னார். ஏனென்று கேட்டபோதுஅந்த ஒலிப்பதிவுக்கருவி "ழ' தரத்தை ஒலி
ப்பதிவு செய்யாதாம். ஆகையினால் அந்தஎழுத்துக்காக வரியையே மாற்றச் சொன்னார். பின்னர்தான் "குலுங்கிடும் பூவில் எல்லாம்..' என மாற்றிக் கொடுத்தேன்' என்றார்.
புரட்சிக் கவிஞரின் கோபமும் நியாயமானதுதான். என்றாலும் அப்பாடல் பழைய ரசிகர்களின் மனதில் இன்றும் ரீங்காரம் இடுவதும் உண்மைதான்.
ரமணி
மித்திரன் 26/08/2006

Sunday, April 1, 2012

மனம் திறந்தார் சசிகலாமன்னிப்பாரா ஜெயலலிதா?

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்ற கோட்பாட்டை ஜெயலலிதா மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் போலிருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்னர் ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட உடன் பிறவா சகோதரி சசிகலா மீண்டும் அவரைச் சந்தித்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இச்சந்திப்புப் பற்றி இருவருமே உத்தியோகபூர்வமாக வாயைத் திறக்கவில்லை. அப்படி ஒரு சந்திப்பு நடைபெறவில்லை என்று இருவரும் மறுக்கவுமில்லை.
சசிகலாவின் மீதும் அவரது உறவினர்கள் மீதும் ஜெயலலிதா மிகுந்த ஆத்திரத்தில் இருந்தார். அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை களை எடுத்தார். எனக்கும் கழகத்துக்கும் துரோகம் செய்தவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்களை மன்னிக்க மாட்டேன் என்று பகிரங்கமாகக் கூறினார். ஜெயலலிதாவின் கோபப் பார்வை தம் மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் தவித்தார்கள். ஜெயலலிதா சசிகலா பிரிவு நிரந்தரமான நாடகமா என்ற சந்தேகமும் மேலோங்கியது.
சசிகலாவின் கணவர் நடராஜன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சவால் விடுத்தார். ஆனால் சசிகலாவோ ஜெயலலிதாவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பெங்களூரில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கில் சாட்சியமளிக்க சசிகலா எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜெயலலிதாவை விட்டுக் கொடுக்கவில்லை. நீதிமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜெயலலிதாவுக்கு சாதகமாகவே சாட்சியமளித்தார் Œசிகலா.
ஜெயலலிதாவை விட்டு சசிகலா நிரந்தரமாக பிரிந்து விட்டார் என்ற எண்ணம் மேலோங்கி இருந்த வேளையில் சசிகலா வெளியிட்டிருக்கும் தன்னிலை விளக்க அறிக்கை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவிற்கு (ஜெயலலிதா) அர்ப்பணித்து விட்டேன். இனியும் எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவிற்குப் பணி செய்து அக்காவுக்கு உதவியாக இருக்கவே நான் விரும்புகின்றேன். 24 வருடங்களாக அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த நான் கடந்த டிசம்பர் மாதம் அக்காவைப் பிரிந்து வெளியேறிய பின்னர் தான் என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் சிலர் எனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி சில விரும்பத்தகாத செயற்பாடுகளில் ஈடுபட்டனர் என்பதை அறிந்தேன். அக்காவுக்கு எதிரான சில சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இவை எல்லாம் எனக்குத் தெரியாமல் நடந்தவை என்பது தான் உண்மை. அக்காவின் எதிரிகள் எனக்கும் எதிரிகளே என்று சாரப்பட சசிகலா விடுத்த அறிக்கையில் ஜெயலலிதா சசிகலா உறவு மீண்டும் மலருமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.
சசிகலாவின் பத்திரிகை அறிக்கைக்கு ஜெயா தொலைக்காட்சி முக்கியத்துவம் கொடுத்ததனால் சசிகலாவின் எதிரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சசிகலாவை ஜெயலலிதா விரட்டிய பின்னர் துணிவுடன் சசிகலாவைப்பற்றி புகார் செய்தவர்கள் அச்சத்திலுள்ளனர். சசிகலாவும் ஜெயலலிதாவும் இணைந்தால் தங்கள் எதிர்காலம் சூனியமாகி விடும் என்று கலங்குகின்றனர். சசிகலாவின்த‌டாலடியினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த பிரமுகர்கள் பலர் மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவார்கள் என்ற இருந்தது எதிர்பார்ப்பு. சசிகலா மீதான திடீர் பாசத்தினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால் அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
சசிகலா வெளியிட்ட இந்த அறிக்கையின் பின்னணியில் ஜெயலலிதா இருப்பாரோ என்ற சந்தேகமும் உள்ளது. ஜெயலலிதாவின் ஒப்புதல் இல்லாமல் சசிகலாவின் அறிக்கைக்கு ஜெயா தொலைக்காட்சி முக்கியத்துவம் கொடுத்திருக்காது. ஜெயா தொலைக்காட்சியின் சகல செய்திகளும் ஜெயலலிதாவின் பார்வைக்குட்பட்டே ஒளி பரப்பாகின்றன. ஆகையினால் இந்த அறிக்கையின் பின்னணியில் ஜெயலலிதா இருக்கக்கூடும் என்ற சந்தேகம் நிலவுகின்றது.
ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து சசிகலா விரட்டப்பட்ட போது இது நிரந்தரமான பிரிவு இல்லை என்ற கருத்து இருந்தது. நடராஜன், திவாகரன், ராவணன் ஆகிய மூவர் சிறையில் உள்ளனர். மகா தேவனைப் பொலிஸ் தேடுகிறது. கைதுப் பட்டியலில் சசிகலாவும் இருப்பதாகச் செய்திகள் வெளிவந்த வேளையில் தான் மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார் சசிகலா. ஜெயலலிதாவின் மௌனம் கலைந்தால் தான் சசிகலாவின் எதிர்காலம் பற்றிய நிலை தெரிய வரும்.
இ@த@வளை அரசியல் ரீதியாக அடி வாங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மீண்டும் ஒரு பேரிடி விழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர் என்.நேருஜி சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டதனால் திருச்சி கொந்தளித்துப் போயுள்ளது. பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ள ராம ஜெயத்துக்கு தொழில் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல எதிரிகள் உள்ளனர். காலையில் வழமைபோல் உடற் பயிற்சிக்காக நடந்து சென்ற ராமஜெயம் உரிய நேரத்துக்கு வீடு திரும்பவில்லை. அவரது தொலைபேசியும் செயலிழந்தது. இது பற்றி கேள்விப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர். கல்லறை அருகே நீர் நிரம்பிய புதர் பகுதியில் கை கால் கட்டப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் ராமஜெயத்தின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சி மாறியதும் திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் மீது பல வழக்குகள் பதிவாகின. முன்னாள் அமைச்சர் ஆர்.கே.என்.நேரு மீதும் அவரது தம்பி மீதும் நில மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறை சென்ற இருவரும் பிணையில் விடுதலை பெற்றனர். தமக்கெதிரான வழக்குகளை சட்டப்படி சந்திக்கப் போவதாக இருவரும் தெரிவித்தனர். இந்த நிலையில் ராமஜெயம் கொலை செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கலாக இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பிரபல தொழில் அதிபர் துரைராஜாவுக் கும் ராமஜெயத்துக்கும் தொழில் ரீதியாக பகை இருந்தது. 2007ஆம் ஆண்டு துரைராஜாவும் அவரது தம்பி சக்திவேலும் காரில் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ராமஜெயம் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். பஞ்சாயத்துக் காரணமாகவும் ராமஜெயத்துக்கு எதிர்ப்புக்கள் உள்ளன. இந்தக் கோணத்திலும் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சியில் நேருவின் வெற்றிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுச்சிக்கும் பிரதான காரணியாக இருந்தது ராமஜெயம். ராமஜெயத்தின் கொலை காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையேயான பகை பெரிதாக உருவெடுத்துள்ளது.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மா

வீரகேசரிவாரவெளியீடு01/04/12

Wednesday, March 28, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 26


7ஜி ரெயின் போ காலனியில் வசிக்கும் . ரவிகிருஷ்ணா அங்கு குடியேறிய சோனியா அகர்வாலைத் துரத்தித் துரத்திக் காதலிக்கிறார். ரவி கிருஷ்ணாவின் காதலை ஏற்க மறுத்த சோனியா அகர்வால் அவரை அவமானப்படுத்துகிறார். அவமானங்களைத் தாங்கிக் கொண்டு தொடர்ச்சியாக காதலிக்கும் ரவி கிருஷ்ணாவிடம் தன்னை இழக்கிறார் சோனியா அகர்வால்.
செல்வராகவனின் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான இப்படத்துக்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. அபரிமிதமான பாலியல் காட்சிகள் உள்ள படம் என்று பத்திரிகைகள் விமர்சனம் செய்தன. பத்திரிகைகள் புலம்பித் தள்ளினாலும் இளைஞர் பட்டாளத்தைத் திரை அரங்குக்கு அழைத்த பெருமையை செல்வ
ராகவன் பெற்றார்.
ரெயின்போ காலனியின் வசிக்கும் ரவி கிருஷ்ணாவும் அவரது நண்பர்களும் அரட்டை அடிப்பதையே முழு நேரமாகச் செய்வார்கள். வேலை இன்றி அலையும் இவர்கள் பஸ் நிலையம், கல்லூரி வாசல் போன்ற இடங்களில் காணும் பெண்களைக் கிண்டல் செய்வதைப் பெருமையாக நினைப்பார்கள். ரெயின்போ காலனியில் சோனியா அகர்வாலின் குடும்பம் குடியேறியது. சோனியா அகர்வாலைக் கண்டதில் இருந்து ரவி கிருஷ்ணாவின் வாழ்க்கை முறை மாறியது. சோனியா அகர்வாலைக் காதலிக்கத் தொடங்குகிறார் ரவி கிருஷ்ணா.
ரவி கிருஷ்ணாவும் அவரது நண்பர்களும் செய்யும் கலாட்டாக்களினால் வெறுப்படைந்த சோனியா அகர்வால் ரவி கிருஷ்ணாவின் காதலை ஏற்க மறுக்கிறார். சோனியா அகர்வாலை காதலிப்பதால் ஏற்படும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு தனது காதலை வெளிப்படுத்துகிறார் ரவிகிருஷ்ணா. ரவிகிருஷ்ணா மீது தனக்குக் காதல் வரவில்லை என்று உறுதியாகக் கூறிய சோனியா அகர்வால் அவரது வாழ்க்கையில் புதிய அத்தியாயம் ஒன்றை ஏற்படுத்துகிறார். ரவி கிருஷ்ணாவுக்கு வேலை பெற்றுக் கொடுக்கிறார் சோனியா அகர்வால். ரவி கிருஷ்ணா வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுகிறார். ஆனால் ரவி கிருஷ்ணாவின் மீது சோனியாவுக்கு காதல் ஏற்படவில்லை. சோனியா அகர்வாலுக்கு திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. திருமணத்தை சோனியா அகர்வால் விரும்பவில்லை. ரவி கிருஷ்ணாவைக் காதலிக்காத சோனியா அகர்வால் இன்னொருவரை திருமணம் செய்யவும் விரும்பவில்லை.
சோனியா அகர்வாலின் மனம் குழம்பித் தவிக்கிறது. தன்னைக் காதலிக்கும் ரவி கிருஷ்ணாவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அ@த@வளை இன்னொருவனுக்குக் கழுத்தை நீட்டவும் விரும்பவில்லை. ரவி கிருஷ்ணாவை கூட்டிக்கொண்டு வேறு ஊருக்குச் செல்கிறார் சோனியா அகர்வால். ஹோட்டல் அறையில் தன்னை ரவி கிருஷ்ணாவுக்கு விருந்தாக்குகிறார். வீடு திரும்பும் போது விபத்தில் இறக்கிறார் சோனியா அகர்வால்.
திரைக்கதையும் காட்சிகளும் பாலியல் உணர்வைத் தூண்டினாலும் இளைஞர்களின் ஆதரவால் பெரு வெற்றி பெற்று செல்வராகவன் என்ற இயக்குனரை அடையாளம் காட்டியது 7 ஜி ரெயின் போ காலனி. ஏ.எம்.ரத்தினம் தயாரித்த இப்படத்தின் மூலம் அவரது இளைய மகன் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகமானார். அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு காட்சிகளை துல்லியமாக மனதில் பதித்தது.
இப்படத்தைப் போன்றே பாடல்களும் ரசிகர் மனதில் ஒட்டிக் கொண்டது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியான கண்பேசும் வார்த்தைகள், கனா காணும் காலங்கள், நினைத்து நினைத்துப் பார்த்தால், ஜனவரி மாதம் பூப்பனி விழும் நேரம், நாம் வயதுக்கு வந்தோம், இது போர்க்களமா ஆகிய நா.முத்துக்குமாரின் பாடல்களை முணுமுணுக்காதவர்களே இல்லை.
ரமணி



மித்திரன்01/04//12