Sunday, May 20, 2012

அசுர பலத்துடன் ஜெயலலிதாஆதரிப்பாரின்றி விஜயகாந்த்

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் ஒதுங்கி இருக்கும் நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துத் தனது கட்சி வேட்பாளரைக் களமிறக்கியுள்ளார் விஜயகாந்த். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் இரு முனைப் போட்டி நடைபெறுவது உறுதியாகியுள்ளது. ஜெயலலிதாவின் கடைக் கண் பார்வையால் தமிழக சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவராக வீற்றிருக்கும் விஜயகாந்த் இன்று ஜெயலலிதாவைத் தனித்து நின்று எதிர்க்க துணிந்துவிட்டார்.
இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைவதுண்டு. ஆட்சி அதிகாரம் அரச இயந்திரம் அனைத்தும் முடக்கி விடப்படுவதால் எதிர்க்கட்சி இடைத் தேர்தலில் வெற்றி பெறுவது முயற்கொம்பாகவே அமையும். திராவிட முன்னேற்ற ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்ற கழகமும் கூட்டணி கட்சியான காங்கிரசும் வெற்றி பெற்றன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் நடைபெற்ற திருச்சி மேற்கு சங்கரன் கோயில் ஆகிய இடைத் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றியை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சியான மாக்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டைத் தொகுதியில் வெற்றி பெற்றது. கூட்டணி தர்மத்தின்படி  புதுக்கோட்டைத் தொகுதியை மாக்ஸிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்.
தமிழகத் தேர்தல் முடிந்ததும் கூட்டணிக் கட்சிகளை ஒதுக்கி வைத்தார் ஜெயலலிதா. விஜயகாந்தும் இடதுசாரிகளும் ஜெயலலிதாவினால் ஓரம் கட்டப்பட்டனர். தமிழகத்தின் செல்வாக்கு இல்லாத கட்சித் தலைவர்களைத் தன் அருகில் வைத்துள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதா அவமானப்படுத்துவதைப் பொறுக்க முடியாத விஜயகாந்தும் மாக்சிஸ்ட் கட்சி தலைவர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி முறிவடைந்த நிலையில் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தனது வேட்பாளரைக் களமிறக்கியுள்ளார் விஜயகாந்த். தமிழக அரசியல் கட்சிகள் புதுக்கோட்டை இடைத் தேர்தலை புறக்கணித்த நிலையில் ஜெயலலிதாவை எதிர்த்து நிற்கிறார் விஜயகாந்த்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் விஜயகாந்தின் வேட்பாளரக்கு மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு வழங்கும்.  ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்குவது சந்@தக@ம.  தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தியிருந்தால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததினால் பொது வேட்பாளர் என்பது பேச்சளவிலேயே நின்று விட்டது.
விஜயகாந்தும் கருணாநிதியும் மனம் விட்டுப் பேசி இருந்தால் புதுக்கோட்டையில் பொது வேட்பாளரை நிறுத்தி இருக்க முடியும். இருவருக்கும் இடையேயான கௌரவப் பிரச்சினையால் அண்ணா திராவிட முன்னேறக் கழகத்தின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக சட்ட சபைத் தேர்தல் பிரசாரத்தின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கருணாநிதியையும் மிக மோசமாகத் தாக்கிப் பேசினார் விஜயகாந்த். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசாரப் பீரங்கியாகச் செயல்பட்ட வடிவேல் விஜயகாந்தைத் தரக்குறைவாகப் பேசினார்.
இந்த நிலையில் யார் முதலில் இறங்கி வருவதென்ற போலி கௌரவத்தினால் பொது வேட்பாளர் அடிபட்டுப் போய்விட்டது. புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும்படி விஜயகாந்த்துக்கு கோரிக்கை விடுத்தால் எதுவித நிபந்தனையும் இன்றி ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருக்கிறார் கருணாநிதி. ஆதரவு தெரிவிக்காத நிலையிலும் விஜயகாந்தின் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர் பொது வேட்பாளர் போன்றே களத்தில் நிற்கிறார். அவருக்கு ஆதரவு வழங்குவதாக கருணாநிதி, வைகோ டாக்டர் ராமதாஸ் திருமாவளவன் போன்ற தலைவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைய வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓராண்டு ஆட்சியின் பின்னர் நடைபெறப் போகும் புதுக்கோட்டை இடைத் தேர்தல் தமிழகத்தின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் சர்ச்சை, முல்லை பெரியாறு விவகாரம், தமிழகத்தில் அடிக்கடி நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளையும் தாண்டி வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளார் ஜெயலலிதா.
தமிழக எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தன்னந்தனியாக புதுக்கோட்டை இடைத் தேர்தலைச் சந்திக்கிறார் விஜயகாந்த். தேர்தல் தோல்வி என்பது விஜயகாந்துக்குப் புதிதல்ல. தோல்வி உறுதி என்று தெரிந்து கொண்டே தேர்தலைச் சந்திப்பவர் விஜயகாந்த். புதுக்கோட்டையிலும் அப்படி ஒரு நிலை ஏற்படச் சந்தர்ப்பம் உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது புதுக்கோட்டையில் போட்டியிட்ட பெரியண்ணன் மூவாயிரம் வாக்குகளினால் தோல்வியடைந்தார். ஆகையினால் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பேன் என்று விஜயகாந்த் கூறியிருந்தால் புதுக்கோட்டை இடைத் தேர்தல் சூடு பிடித்திருக்கும்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களின் போலிக் கௌரவத்தினால் புதுக்கோட்டை இடைத் தேர்தல் வெற்றியை கொண்டாட ஜெயலலிதா தயாராகி விட்டார்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு20/05/12

Friday, May 18, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 2

ஜப்பான்
லண்டன் ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்கு ஆசிய கண்டத்தில் நடைபெற்ற தகுதி காண் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்ற ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகள் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளன. பேர்லின் 1936, மெல்போன் 1956 ரோக்கியோ 1964 ஒலிம்பிக் போட்டிகளில் ஜப்பான் விளையாடியது. மெக்ஸிக்கோவில் 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஜப்பான் வெண்கலப் பதக்கம் பெற்றது. 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்குப் பின்னர் லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கு ஜப்பான் தகுதி பெற்றுள்ளது.
முதல் சுற்றுப் போட்டியில் 4-3 என்ற கணக்கில் குவைத்திடம் தோல்வியடைந்தது ஜப்பான். மலேஷியா, சிரியா, பஹ்ரேன் ஆகியவற்றுக்கு எதிரான மிக முக்கியமான போட்டிகளில் ஜப்பான் வெற்றி பெற்றது. சிரியாவுக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கிலும் மலேஷியாவுக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்ற ஜப்பான் லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றது.
லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடுவதற்காக எட்டுத் தகுதி காண் போட்டிகளில் விளையாடிய ஜப்பான் 17 கோல்களை அடித்தது. கோல் காப்பாளர் சுசி ஹொண்டா, மத்திய கள வீரர் யுகி ஒட்சு, பின் கள வீரர் ஹிரோகி சகாய் ஆகியோர் மீது ஜப்பான் ரசிகர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

தென் கொரியா
ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் தென் கொரியா அணி தொடர்ச்சியாக எட்டாவது முறையாகப் பங்கு பற்றத் தகுதி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக ஆறாது தடவையாக ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றும் தகுதியை பெற்றுள்ளது. 1948 ஆம் ஆண்டு உதைபந்தாட்டக் களத்தில் களம் புகுந்த தென் கொரியா தனது முதலாவது சுற்றுப் பயணத்தில் 5-3 என்ற கோல் கணக்கில் மெக்ஸிக்கோவை தோற்கடித்தது. 12-0 என்ற கோல் கணக்கில் சுவீடனிடம் தோல்வியடைந்தது.
அட்லாண்டா 2004 இல் உதைபந்தாட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பரகுவேயுடனான போட்டியில் மிகத் திறமையாக விளையாடி 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. ஓமான், கட்டார், சவூதி அரேபியா ஆகியவற்றுடனான தகுதி காண் போட்டிகளில் தென் கொரியா வெற்றி பெற்றது. ஜோர்தானுடனான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கான மூன்றாவது சுற்று தகுதி காண் போட்டியில் தலா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளை சமநிலைப்படுத்தியது. தென் கொரியா எட்டு கோல்களை அடித்தது.
23 வயதுக்குட்பட்ட தென் கொரிய உதைபந்தாட்ட அணி கடைசியாக விளையாடிய 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
பின் கள வீரரான ஹொல் ஜெங்  ஹோ-கிம் போகுங், கூஜா  ஹோ ஆகியோர் எதிரணிகளுக்கு நெருக்கடி கொடுப்பர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் முதன் முதலில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளது ஐக்கிய அரபு இராச்சியம். 1980 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் தகுதி காண் போட்டிகளில் விளையாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இறுதிச் சுற்றில் வெளியேறியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இன்றைய முன்னேற்றத்துக்கு அதன் பயிற்சியாளரான மஹிட் அலியே முக்கிய காரணம். இவரின் பயிற்சியின் கீழ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உதைபந்தாட்ட அணி பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. 20 வயதுக்குட்பட்ட 19 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட அணிகள் பல தொடர்களில் வெற்றி பெற்று சம்பியனாகியது. ஒலிம்பிக் தகுதி காண் போட்டிகளில் ஐக்கிய அரபு எமிரேஸ்ட் தோல்வியடையவில்லை. ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளைச் சம நிலையில் முடித்தது. அஹமட் ஹலில், ஹம்டன் அல் கமலி, ஒமார் அப்துர் ரஹ்மான், மொஹமட் அஹமட் ஆகியோரின் செயற்பாடு எதிரணிகளைத் திக்கு முக்காடச் செய்யும்.    
    ரமணி
மெட்ரோநியூஸ் 13/05/12

Thursday, May 17, 2012

வேகத்தை அதிகரிக்க நவீன ஆடை

லண்டன் 2012  ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடவுள்ள அமெரிக்க மெய்வல்லுனர்கள் தங்கள் எதிர் போட்டியாளர்களை விட அதிவேகமாக செயற்படும் விதத்தில் உயர் தொழில் நுட்பம் வாய்ந்த கோல்ப் பந்தொன்றால் உணர்ச்சியூட்டும் வகையில்  வடிவமைக்கப்பட்ட ஆடை வகைகளை அமெரிக்க அணியின் அனுசரணையாளரான  நைக்   நிறுவனம் வெளியிட்டுள்ளது. 100 மீற்றர்  குறுந்தூர அதிவேக  ஓட்டத்தை 0.23  விநாடிகளில் ஓடி முடிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திருக்கை மீன் வேகம் கொண்ட  ஒரே வகைத் துணியால் தைக்கப்பட்டுள்ள  ஆடைவகை வெளிவந்துள்ளது. உலகில் அதிவேக ஓட்டப் போட்டிகள் நிகழுமிடத்து ஒவ்வொரு மில்லி விநாடியும் கணக்கிடப்படுகிறது. அமெரிக்க குறுந்தூர அதிவேக ஓட்ட வீரர் வோல்டர் டிக்ஸின் கடந்த 2008  இல் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் 100 மீற்றர்  போட்டியில் எடுத்திருந்த நேரத்தை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
அப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்த ஜமேக்காவின் உசைன் போல்ட்டை விட அவர் 0.22 விநாடிகள் மட்டுமே கூட எடுத்து வெண்கலப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
ஒலிம்பிக் போட்டியின்போது உசைன் போல்டுக்கு பியுமோ நிறுவனமே அனு சரணை வழங்குகிறது. எனவேநைக் நிறுவனத்தின்  இந்த உறுதி மொழி நம்பப்படுமானால் அமெரிக்க வீரர் டிக்ஸ் உசைன் போல்டை இம்முறை வித்தியாசமான  ஓட்ட ஆடையணிவதன்  மூலம் இலகுவாக வீழ்த்த முடியும். மேலும் முன்னர்  0.02 விநாடிகள் கூட எடுத்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த ரிச்சர்ட் தொம்சனையும் நிச்சயமாக அவர் முந்திவிடலாம். அடிடாஸ்  நிறுவனத்தின்  அனுசரணையில் விளையாடியிருந்த ட்ரினிடாட் டொபாகோ அணியின் ஒரு வீரராகவே தொம்சன் களமிறங்கி இருந்தார்.
நைக் நிறுவனத் தயாரிப்பான வாயு இயக்க இழுவையைக் குறைக்கும் சக்தி கொண்ட இந்த ஓட்ட @வகத்தை அதிகரிக்கும் ஆடையில் கோல்ப் பந்தின் சிறிய குழிவுகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கு மேலான காலப் பகுதியில் காற்று சுரங்கமொன்றில் நூற்றுக்கணக்கான மணித்தியாலங்களாக இதன் செயற்றிறன் பரீட்சிக்கப்பட்டது.
இத்தகைய ஒவ்வொரு  ஓட்ட ஆடையும் சுமார் 14 பிளாஸ்டிக் போத்தல்களை மீளுருவாக்கம் செய்து 82 சதவீத பொலிஸ்டர் துணி கொண்டு மிகவும் சிக்கனமான முறையில் வடிமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
அத்துடன்  ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள ரஷ்ய மற்றும் ஜேர்மன் அணிகளுக்கும் இந்த விளையாட்டு ஆடை அணிகலன் உற்பத்தி நிறுவனமேநைக் அனுசரணை  வழங்கியுள்ளமையும் கவனிக்கத்தக்கது
மெட்ரோநியூஸ்16/05/12

Tuesday, May 15, 2012

பொன்வண்ணமயமாகப்போகும் லண்டன் ஒலிம்பிக் பூங்கா

பிரித்தானியாவில் மனித முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள காட்டுப் பூக்கள் நிறைந்த புல்லினங்கள், லண்டன் 2012  ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பூங்காவில் இந்த வாரம் நாட்டப்பட்டுள்ளன
மேற்படி போட்டிகள் தொடங்க இன்னும் 73 நாட்களே இருக்கும் நிலையில் ஒலிம்பிக் விளையாட்டரங்கைச் சுற்றிலும் அவை பொன்னிற மயமாகும் வகையிலேயே இவ்வாறு நாட்டப்பட்டுள்ளனவாம்.
பத்துக்கு @மற்பட்ட கால்பந்தாட்ட மைதானங்களில் கடந்த இரண்டு வருடங்களாக பரீட்சித்துப் பார்க்கப்பட்ட பின்னரே மேற்படி விளையாட்டுகள் இடம்பெறும். விளையாட்டரங்கிற்கு அழகு சேர்க்கும் வகையில் தேன் சிந்தும் காட்டு மலர்ச் செடிகள் நாட்டப்பட்டுள்ளன. இது  குறித்து லண்டன் 2012  ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான செபஸ்தியன் கோ தெரிவிக்கையில்,
மேற்படி போட்டிகளுக்கான தெரிவு நிகழ்வுகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செ#த பின்னர் மில்லியன்  கணக்கான  விளையாட்டு இரசிகர்களின் இதயங்களை இந்தக் கோடை காலத்தில் ஈர்த்தெடுக்கும் நடவடிக்கையில் நாம் தற்போது ஈடுபட்டு வருகின்றோம்.
எதிர்வரும் ஜூலை மாதத்தில் ஒலிம்பிக் விளையாட்டரங்கைச் சுற்றியுள்ள பகுதியெங்கும் இந்தச் செடிகள் பூத்துக்  குலுங்கி அதனைப் பொன்னிறமயப்படுத்தும் வகையில் இத்துறைசார் நிபுணர்கள் பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொன்மயமான தேன் நாடா
(A Ribbon of Gold) )
ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச வன புஷ்ப நிபுணரும் பேராசிரியருமான நைகல் டனெட் (Nigel Dunnett) ) இனால் வடிவமைக்கப்பட்ட ஆற்றங்கரையோரப் புல்வெளிகள் எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதி  நடை பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின்போது பொன்னிறமாகப் பூத்துக் குலுங்கும் நிலையில் இருக்கப் போகின்றன. இதுபற்றி பேராசிரியர் நைகல் குறிப்பிடுகையில்,
வருடக் கணக்கான பரீட்சார்த்த நடவடிக்கைகள்  மற்றும் இரண்டு பயிற்சிகளின் பின்னரே ஒலிம்பிக் விளையாட்டரங்கைச் சுற்றியுள்ள பொன்மயமானதோர் நாடாவைப் போன்று  காட்சியளிக்கவுள்ள இந்த இறுதி வடிவம் பெற்ற புல்லினங்களை  நாட்டியுள்ளோம். இப்போது வெறும் சேற்று நிலமாகக் காட்சியளிக்கும்  இப்பிரதேசங்கள் இன்னும்  ஒரு சில வாரங்களில் தேனீக்களும் பட்டாம் பூச்சிகளும் தேன் சிந்தும்  மலர்களில் ரீங்காரமிட்டபடி அமர்ந்து தேன் உண்ணும் காட்சிகளை இரசிகர்கள் நேரிலும் தொலைக்காட்சியிலும் கண்டு களிக்கப் போகின்றனர் என்றார்.
மனங்கவர் சிகரம்
ஒலிம்பிக் விநியோக அதிகார சபை ஒலிம்பிக் பூங்காவில் 4,000 மரங்கள் 300,000 ஈர நிலத் தாவரங்கள் மற்றும் 150,000 க்கு மேற்பட்ட  வருடம் முழுவதும் பூக்கும் தாவரங்கள் மற்றும் புதர்களையும் இதுவரை நாட்டியுள்ளது.  மாரிகாலம் மற்றும் வசந்தகாலம் முழுவதும் தோட்டக் கலை  நிபுணர்கள் குழுவினர் பொது அர்ப்பணிப்புடன் தேவையான பூர்வாங்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு இதனை இந்தக் கோடை காலத்தில் காண்போரைக்   கவர்ந்திழுக்கும்  சிகரமாக்கியுள்ளனர்  என்றே கூறலாம்.
மேற்படி ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்ததும்  இந்த பொன் வண்ணமயமான செடிகள் காலப் போக்கில் படிப்படியாக வளர்ந்து எதிர்காலத் தலைமுறையினருக்கான புதியதோர்  பூங்காவாகவும் வனவிலங்கு சரணாலயமாகவும் காட்சியளிப்பதில் சந்தேகமில்லை.
மெட்ரோநியூஸ்15/05/12

Monday, May 14, 2012

ஒலிம்பிக் கனவை நனவாக்ககாதலைத் துறந்த உசைன் போல்ட்


உலகின் குறுந்தூர அதிவேக ஓட்ட வீரரான ஜமெய்க்காவைச் சேர்ந்த உசைன் போல்ட் லண்டனில் நடைபெறவுள்ள கோடை கால ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் தனது கனவை நனவாக்கும் பொருட்டு தான் மனதாரக் காதலித்துவரும் வெள்ளையின நவநாகரிக வடிவமைப்பாளரான லூபிகா சுடஸ்லோவாக்கிடமிருந்து பிரிந்து செல்லத் தீர்மானித்துள்ளார்.
இருபத்தைந்து வயதான உசைன் போல்ட் தனது தாயக மண்ணில் நடைபெற்ற ஓட்டப் போட்டி அமளிதுமளியின் போது வெள்ளை இனப் பெண்ணொருவருடன் வெளியே சென்றதாக எழுந்த விமர்சனத்தை தொடர்ந்தே இந்தப் பிரிவு பற்றிய செய்தி கசிந்துள்ளது. ஆயினும் அவரது நெருங்கிய நண்பர்களின் கூற்றுப்படி அவர்களிருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளமை நிரூபிக்கப்பட்டது.

ஆயினும் அவர்களிருவரும் பிரிந்து கொள்வதில் அன்னியோன்னியமான முறையில் தீர்மானித்துள்ளதாக ஜ@மக்காவில் தெரிவிக்கப்பட்டது. ஜமெய்க்காவில் உசைன் போல்ட் லண்டன் ஒலிம்பிக்கில் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஆகிய போட்டிகளில் தான் முடிசூடிக்கொண்ட தங்கப் பதக்க சாதனைகளைத் தக்க வைத்துக் கொள்ளவும் தனது முன்னைய சாதனைகளை முறியடிக்கவுமென கங்கணங் கட்டிய நிலையிலேயே இத்தகையதோர் முடிவை எடுத்துள் ளார்.
தனது பதினா ன்கு வயதில் கனடாவுக்குக் குடிபெயர்ந்து அங்கு நவநாகரிக வடிவமைப்புக் கலையைக் கற்றுத் தேர்ந்த 28 வயதான லூபிகா வருட விடுமுறையொன்றின் போது உசைன் போல்ட்டை பாடக நண்பர் ரமிசின் மூலம் சந்தித்தார். அதன் பின்னர் அவர்களிருவரும் நெருக்கமான முறையில் இராப்போசன கேளிக்கை நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர்களிருவரும் முத்தமிடும் காட்சியொன்று கடந்த மாதம் வெளியாகியிருந்த பின்னர் அவர்கள் அடுக்கடுக்கான அவதூறுகளைச் சந்திக்க நேர்ந்தது.
உசைன் போல்ட்டுக்கு நெருங்கிய வட்டாரமொன்று இதுபற்றி கூறுகையில், அவர் ஏராளம் உறவுகளை வைத்திருப்பார். தற்போது அவர் தனது ஓட்டத்துறையில் அதிக கவனஞ் செலுத்தி வருகின்றார். போல்டின் முகவரான றீக்கிசிம்ஸ் இதுபற்றி தெரிவிக்கையில், மெய்வல்லுநர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை என்றார்.
மெட்ரோநியூஸ் 14/05/12

Sunday, May 13, 2012

ஜெயலலிதாவின் கோட்டையை தகர்க்குமா புதுக்கோட்டை

 தமிழகத்தின் பிரதான கட்சிகள் புதுக்கோட்டை இடைத் தேர்தலைப் புறக்கணித்த நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துக் களமிறங்குகிறார் விஜயகாந்த். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரச இயந்திரத்தை எதிர்த்து இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதனால் கருணாநிதி, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வைகோ ஆகியோர் தமது கட்சி போட்டியிடாது என்று அறிவித்துவிட்டனர். தமிழகத் தேர்தலின் போது புதுக்கோட்டைத் தொகுதியில் வெற்றிபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதாவின் ஆதரவுடன் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பியது. ஜெயலலிதா கைவிட்டதால் கம்யூனிஸ்ட் கட்சி ஒதுங்கியது.
காங்கிரஸ் கட்சி பாரதீய ஜனதாக் கட்சி ஆகியன இடைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றிய முடிவை இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. விஜயகாந்தின் அறிவிப்பால் மாக்சிஸ்ட் அமைதியாகிவிட்டது.
திராவிட முனனேற்றக் கழக ஆட்சியின்போது தொண்டா முத்தூர், கம்பம் ஸ்ரீ வைகுண்டம் உட்பட ஐந்து தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை. தோல்வியைப் பற்றி சிறிதும் கவலைப்படாத விஜயகாந்த் சகல இடைத் தேர்தல்களிலும் தனது கட்சியின் வேட்பாளரை போட்டியிடச் செய்து கணிசமான வாக்குகளைப் பெற்றார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான வாக்குகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவான வாக்குகளும் விஜயகாந்தின் கட்சிக்குக் கிடைத்தன. இதனால் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் வாக்கு வங்கி அதிகரித்தது. விஜயகாந்தின் வளர்ச்சியை தடுப்பதற்காக பொன்னாகரம் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சி போட்டியிட்டால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்கும். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் புதுக்கோட்டை இடைத் தேர்தலை புறக்கணித்ததனால் பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
. திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் 40 ஆயிரம் மேலதிக வாக்குகளாலும், சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் 68 ஆயிரம் அதிகப்படியான வாக்குகளாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. திருச்சி மேற்கிலும் சங்கரன் கோவிலிலும் பல முனைப்போட்டி இருந்ததனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. சங்கரன் கோவிலில் எதிர்க்கட்சிகள் கட்டுப்பணத்தை இழந்தன. அப்படி ஒரு நிலை புதுக்கோட்டை இடைத் தேர்தலிலும் ஏற்படக்கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளனர் ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் இது பற்றி வெளிப்படையாகப் பேசாதுள்ளனர்.
கருணாநிதி, வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் வெளிப்படை யாக விஜயகாந்துக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள். இவர்களின் ஆதரவை விஜயகாந்தும் வெளிப்படையாகக் கேட்கமாட்டார். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் விஜயகாந்தின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்த்திருந்தது. விஜயகாந்ததும் ஒதுங்கினால் புதுக்@காட்டையில் @பாட்டியிட மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு விஜயகாந்த் விட்டுக் கொடுந்திருந்õல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து  எதிர்க்கட்சி பொது வேட்பாளர் போட்டியிடும் வாய்ப்பு உருவாகியிருக்கு. ஜெயலலிதாவை அச்சுறுத்தும் ஆயுதம் விஜயகாந்தின் கையில் இல்லை.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் விஜயகாந்தின் கட்சி போட்டியிடாது ஒதுங்கிகி இருந்தõல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது வேட்பாளரை நிறுத்தும் நிலை உருவாகி இருக்கும். மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள், கருணாநிதி, வைகோ, திருமாவளன், டாக்டர் ராமதாஸ் ஆகியோரைச் சந்தித்து தமக்கு ஆதரவு தரும்படி வேண்டுகோள் விடுத்திருப்பர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு வழங்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் ஒரு கூட்டணியில் உள்ளன.  அசுர பலத்துடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தனித்து நின்று எதிர்க்கும் சக்தி விஜயகாந்திடம் இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் துணை இன்றி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து வெற்றி பெற முடியாது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாகும் சூழல் உள்ளது. புதுக்கோட்டை இடைத் தேர்தல் அதற்கான கால்கோளாக அமையும் ச‌ந்தர்ப்பம் தவற விடப்பட்டுள்ளது.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு13/05/12

Friday, May 11, 2012

திரைக்குவராதசங்கதி37


பசி' திரைப்படத்தின் வெற்றி துரையைதிரை உலகில் பிசியாக்கியது. 1979 ஆம்ஆண்டு ஒன்பது படங்களை இயக்கினார்துரை. பசி'யைத் தொடர்ந்து கிளிஞ்சல்கள்என்ற படம் வியாபார ரீதியில் துரையைஉயர்த்தியது. மோகன் கதாநாயகனாகநடித்த கிளிஞ்சல்கள் படத்தின் மூலம் பூர்ணிமா ஜெயராம் தமிழில் கதாநாயகியாகஅறிமுகமானார்.பிரபல ஹிந்தி நடிகையான ஹேமமாலினியின் தாயாரான ஜெயா ச‌க்கவர்த்திதான்பூர்ணிமாவைப் பற்றி துரைக்குக்கூறினார். பூர்ணிமாவை சென்னைக்குஅழைத்து புகைப்படமெடுத்துப் பார்த்தார் துரை. பூர்ணிமாவின் அழகு துரையை வெகுவாகக் கவர்ந்து விட்டது.
மஞ்சில் விரிங்ச பூக்கள் என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் பூர்ணிமாமுதன் முதலில் திரைப்படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தின் மூலம் அவருக்கு பெரும்புகழ் கிடைத்தது. அந்தப்புகழை விட அதிகமான புகழை கிளிஞ்சல்கள் பெற்றுக் கொடுத்தது.கிளிஞ்சல்கள் படம் 250 நாட்களைக் கடந்துஓடி வெற்றிப்பட இயக்குநர் என்ற பெயரைதுரையின் மீது அழுத்தமாக பதித்தது. ரூபிமைடார் லிங் என்றபெயரில் கிளிஞ்சல்கள் மலையாளத்தில்வெளியானது. துரைதான் அப்படத்தையும்இயக்கினார். மலையாளப் படமும் வெற்றிபெற்றது.
மலையாளத்தில்இருந்துபிரேமக்கோபாதாபிஷேகம் என்றபெயரில்தெலுங்கில்டப் செய்யப்பட்டது. அங்கும் 100 நாட்கள் ஓடியது.கிளிஞ்சல்களின் தொடர் வெற்றிதுரையை ஹிந்தித் திரை உலகுக்கு அழைத்துச்சென்றது. பிரபல ஹிந்தித் தயாரிப்பாளரான மதன்லால் துரையைச் சந்தித்து கிளிஞ்சல்களை ஹிந்தியில் தயாரிக்க அனுமதிகேட்டார். துரையும் சம்மதம் தெரிவித்தார்.பிரபல ஹிந்திப் பட இயக்குனரும் தயாரிப்பாளருமான மனோஜ் குமாரின் மகன்குணால் கோஸ்வாழி கதாநாயகனாகவும்மனீஷா என்ற புதுமுகம் கதாநாயகியாகவும்நடித்தனர். தோகுலாப் என்ற ஹிந்திப் படம்கிளிஞ்சல்கள் போன்றே வெள்ளி விழாக்கொண்டாடியது.
நடிகர் சரத்குமாரை திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் துரை. சமாஜ முலோஸ்ரீஎன்ற தெலுங்கு படத்தின்மூலம் சரத்குமார் திரை உலகில் நுழைந்தார்.எம்.ஜி.ஆருடன் அவரதுராமாவதார தோட்டத்தில்துரை ஒரு நாள் கதைத்துக்கொண்டிருந்தபோது தான்முதலமைச்சரானதால் துரையின் இயக்கத்தில் நடிக்கமுடியவில்லை என்று கூறினார். எம்.ஜி.ஆர். துரையின்பசி என்ற படம் எம்.ஜிஆரை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.சிவாஜியை வைத்து துரைஒரு படத்தை இயக்க வேண்டுமென எம்.ஜி.ஆர். வேண்டுகோள் விடுத்தார். அதனைக் கேட்ட துரைநெகிழ்ந்து போனார். எம்.ஜி.ஆரின் விருப்பத்தை சிவாஜிகணேசனிடம் துரை கூறியபோது அவர் முதலில் நம்பவில்லை.மக்கள் திலகத்தின் சிபாரிசில்நடிகர் திலகத்தைத் தேடி துரைவந்ததை அறிந்த நடிகர் திலகம்சந்தோஷப்பட்டதுடன் நடிப்பதற்கும் ஒப்புதல் வழங்னார்.
சிவாஜிக்காகவே துணை என்றகதையை உருவாக்கினார் துரை.எம்.ஜி. ஆரின் படங்கள் உருவான சத்யாஸ் ஸ்டூடியோவுக்குநடிகர் திலகம் சென்றார். துரையின் வேண்டுகோளின் படிதனது மேக்கப் அறையை சிவாஜிக்குபாவிக்க எம்.ஜி.ஆர். அனுமதியளித்தார். சிவாஜியை இயக்குவதை நினைத்துதுரை பதற்றப்பட்டார். துரையின் பதற்றத்தைஉணர்ந்த நடிகர் திலகம் அவருக்குதைரியம் கொடுத்தார்.துரை படத்தின் படப்பிடிப்பு ஓடும் ரெயிலில் நடிக்க வேண்டி இருந்ததால் மின்சாரரயில் ஒன்றை வாடகைக்குப் பெற்று படப்பிடிப்பை நடத்தினார் துரை.அதிர்ச்சியான செய்தியை கேட்டால் நடிகர்
திலகத்துக்கு காக்கா வலிப்பு வந்து விடும்.அன்றைய காட்சியை விபரித்தபோது ஒரேஷொட்டில் நடிச்சிடுவேன். அப்புறம் மிடில்ஷொட் குளோசப் ஷொட் என்று குழப்பம்செய்யக்கூடாது என்ற நடிகர் திலகம் கூறினார்.அப்படியானால் ஒரு மணி நேர அவகாசம்தரும்படியும் அதன் பின்னரே படப்பிடிப்புநடத்த முடியும் என துரை கூறினார்.எதற்காக ஒரு மணி நேரம் என்று நடிகர் திலகம் கேட்டபோது இன்னும் இரண்டு க‌மராக்கள்வேண்டும் என துரை விளக்கினார்.
துரை கூறியது போன்றே ஒரு மணித்தியாலயத்தின் பின்னர் நடிகர் திலகத்தை வைத்துஅந்தக் காட்சியைப் படமாக்கினார்.துணைபடம் வெற்றிப் படமானது.நடிகர் திலகத்துடன் சகல இளம் நடிகர்களும் நடித்து விட்டனர். விஜயகாந்த் மட்டும்நடிக்கவில்லை என்று நினைத்த துரை நடிகர்திலகத்துடன் விஜயகாந்தை இணைத்து வீரபாண்டி என்ற படத்தைத் தயாரித்தார். அப்படம் வியாபார ரீதியில் வெற்றி பெற்றது.
ரமணி
மித்திரன்26..11.2006
96