Friday, March 8, 2024

நாடாளுமன்றத் தேர்தலுக்காக வியூகம் வகுக்கும் கட்சிகள்


 இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி  இன்னமும் அறிவிக்கப்படவில்லை. மத்திய, மாநில அரசியல்கட்சிகள் அனைத்தும்  வெளிப்படையாகவும், திரைமறைவிலும்  பேச்சு வார்த்தைகளை  ஆரம்பித்துவிட்டன. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சில கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டது. தேசிய ரீதியில் பாரதீய ஜனதாக் கட்சி முதல் கட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.

பாரதீய ஜனதாக் கட்சியை எதிர்க்கும்  இந்திய கூட்டணிக்குள்  இருந்த கசப்புகள் களையப்பட்டு நம்பிக்கைக்  கீற்றுத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியைக்  கடுமையாக எதிர்க்கும் மமதா, கெஜ்ரிவால் போன்றவர்கள் சுமுகமான  முடிவை எட்டியுள்ளனர்.  பாரதீய ஜனதாக் கட்சியை வீழ்த்த  வேண்டும் என்ற  ஒற்றைக் குறிக்கோளுக்காக காங்கிரஸ் கட்சி  இறங்கி வந்துள்ளது.

தமிழகத்தில்  திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி மிகப் பலமாக  இருக்கிறது. கமல் கூட்டணியில் இருப்பதால் சாதகமான நிலை தோன்றியுள்ளது.   காங்கிரஸ்,வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,   திருமாவளவனின்  விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடனான  தொகுதிப் பங்கீடு   இழுபறிப்படுகிறது. ஆனாலும் ஸ்டாலினின் தலைமையிலான  கூட்டணியில் இருந்து வெளியேற அந்தக் கட்சிகள் விரும்பவில்லை.

தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சனையால்  கூட்டணியில் இருந்து காங்கிரஸும், திருமாவளவனின் தலைமையிலான கட்சியும்  வெளியேறும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காத்திருக்கிறது. இம்முறை அதிக தொகுதிகளிக் கேட்டுப் பெறுவதற்கு காங்கிரஸ் விரும்புகிறது. கேட்ட  தொகுதிகள்  கிடைக்காவிட்டால் கூட்டணியில் இருந்து  வெளியேறுவோம் என்ற தொனிப்பட  தமிழக காங்கிரஸின்  புதிய தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார். அந்தத் தகவல் டெல்லிக்கு அனுப்பப்பட்டதால் அங்கிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அடுத்த நிமிடம் கரணமடித்த செல்வப் பெருந்தகை  கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டோம் என  உறுதிபடச் சொன்னார்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  பக்கம் திரும்பியும் பார்க்க மாடேன் என   திருமாவளவனும் அறிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருக்கும்  சில கட்சிகள் தம்முடன்  தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்த ஜெயக்குமாரின் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கிறது.

டாக்டர் ராமதாஸ், விஜய்ந்தின் மனைவி பிரேமலதா ஆகிய  இருவரும்  திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் சேர்வதர்கு  ஆர்வமாக  இருந்தனர். அவர்களைச் சேர்ப்பதற்கு ஸ்டாலின் விரும்பவில்லை. திருமாவளவனும், டாக்டர் ரமதாஸும்  ஒரு கூட்டணிக்குள்  இருக்க மாட்டார்கள். விஜயகாந்தின் வாக்கு வங்கி பிரேமலதாவுக்குச் செல்லும் என உறுதிபடச் சொல்ல முடியாது. அவர்கள்  இருவருக்கும் வலைவீசிக் காத்திருந்தது  பாரதீய ஜனதா. பாரதீய ஜனதாவுக்கு டாட்டா காட்டிவிட்டு  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் இருவரும் திரும்பி  விட்டார்கள். பிரேமலதாவுடனான தொகுதிப் பங்கீடு முடிந்து  விட்டது.  ராமதாஸுடனான  தொகுதிப் பங்கீடும் சுமுகமாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியில்  இருந்து  வெளியேறிய டாக்டர் ராமதாஸும், பிரேமலதாவும் மீண்டும் ஐக்கியமாகி விட்டனர்.  இதனால் எடப்பாடி பழனிச்சாமி நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார். பாரதீய  ஜனதாவைத் தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்த எடப்பாடியைப் பெரிய கட்சிகள் எவையும்  கண்டு கொள்ளவில்லை என்ற  குறைபாடு நீங்கி உள்ளது. பாரதீய ஜனதாவைக் கைகழுவி விட்டேன் என்று எடப்பாடி பலமுறை சத்தியம் செய்தாலும்,அவரின் வரவுக்காக கதவு,ஜன்னல் எல்லாவற்றையும்   அகலத் திறந்து  காத்துக்கொண்டிருக்கிறது பாரதீய ஜனதாக் கட்சி. இதனால் தம்மை நம்பி இருக்கும் .பன்னீர்ச்செல்வத்தை மோடியும், அமித்ஷாவும் கண்டும்  காணாமலும்  இருக்கின்றனர்.

தமிழகத்தில் அரச வைபவங்களிலும் , பொது வைபவங்களிலும் கலந்து கொள்வதற்காக கடந்த  இரண்டு மாதங்களில் நான்கு முறை  பிரதமர் மோடி தமிழகத்துக்கு விஜயம் சென்றுள்ளார். அங்கெல்லாம்  திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கடுமையாகச் சாடி தேர்தல் பிரசாரம் செய்தா மோடி. தேர்தல் காலத்தில் பிரதமர் தனது கட்சிக்காகப் பிரசாரம் செய்வதில் எதுவிதத தவறும் இல்லை. ஆனால், தேர்தல் அரிவிக்கப்பட முன்பே  பிரதமரின்  பேச்சு  தேர்தல் பிரசாரம்  போல் இருக்கிறது. தேர்தல் பயமும், பதறமும் அவரை ஆட்டிப்படைப்பதை  வெளிப்படுத்துகின்றன.

  தமிழக மேடையில் மோடி ஏறும்போது கூட்டணித் தலைவர்களுடன் கை கோர்க்க வேண்டும் என விரும்பினார். கூட்டணி பேரம் தொடரக்தையானதால் பாரதீய ஜனதாவுடன் கை கொடுக்கத்தயாராக  இருக்கும்  பன்னீரும் தவிர்க்கப்பட்டார். எஸ்.எச். வாசன், சரத்குமார், பாருவேந்தர் ஆகிய மூவரும்  பாரதீய ஜனதாக் கூட்டணியில் இணைந்துள்ளனர்.  தமிழகத்தில்  தாமரை மலரும் என  முன்னாள தமிழக பாரதீய ஜனதாத் தலைவர் தமிழிசை கொக்கரித்தார். அடுத்துத் தலைமைப் பொறுப்பேற்ற எல்.முருகனும் வேல் யாத்திர செய்து தாமடை மலரும் என அடித்துச் சொன்னார்.அரை மொட்டைக் கூட  கண்ணுக்கெட்டிய தூரத்தில் காணவில்லை. அவர்கள் இருவருக்கும் சலைத்தவரல்ல எனப்து போல அண்ணாமலையும் தாமரையை மலர வைக்க படாத பாடு படுகிறார்.

 தகப்பனான மூப்பனாரைப் போன்ற கறைபடாத அரசியல்வாதி வாசன்.  அவருக்குப் பின்னால்  யாருமே  இல்லை. சரத்குமார் கட்சித் தலைவர்.  அவருக்குத் துணையாக துணைவியார் ராதிகா  இருக்கிறார்.  இவர்கள்  இருவரும்  தேர்தலில் வெற்றி பெற மாட்டார்கள்.  அவர்கள் கூட்டணியில்  சேர்ந்ததைப் பெருமையாகச் சொல்கிறார்கள்.  தேர்தலின்  போதுதான்  அவர்களின் செல்வாக்கு வெளிச்சத்துக்கு வரும். பாரிவேந்தர் பச்சைமுத்து,   எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தரும் மற்றும் அரசியல்வாதியும்  இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் ஆவார். இவர் டாக்டர் பாரிவேந்தர் எனவும் அழைக்கப்படுகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்  போது திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில்  உதயசூரியன்  சின்னத்தில் போட்டியிட்டு  வெற்றி பெற்றவர். இம்முறை பாரதீய  ஜனதாக் கட்சியின் தாமரை சின்னத்தில்   போட்டியிடப்போகிறார்.

  தமிழக  மேடைகளில் உரையாற்றிய  மோடி காங்கிரஸைய்டும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும்  மிக மோசமாகத்தாக்கிப் பேசினார். காங்கிரஸ் குடும்பக் கட்சி,  திராவிட முன்னேற்ற்றக் கழகம் வாரிசுக் கட்சி என  மோடி  அடையாளப்படுத்தியுள்ளார். பாரதீய ஜனதாக் கட்சியில் 31 அரசியல் வாரிசுகள்  இருப்பதாகப் பதிலடி வழங்கப்பட்டுள்ளது.  இந்திய அரசியல் கட்சிகளில் அதிகமானவை கூடும்ப, வாரிசு  அரசிலயைக் கையில் எடுத்து:ள்ளன.

 வாரிசு அரசியலைக் கடுமையாக எதிர்க்கும்  பாரதீய ஜனதாவும் வாரிசு  அரசியலுக்கு விதிவிலக்கல்ல.  வாரிசு அரசியலில் காங்கிரசுக்குச் சளைத்ததல்ல பாஜக என்று சில ஆதாரங்களைச் சுட்டிக்காட்டுகிறது . காங்கிரஸ் கட்சியில் சுமார் 36 வாரிசுகள் எம்பி ஆக இருந்தால், பாஜகவில் 31 வாரிசுகள் உள்ளனர்.  கடந்த 1999லிருந்து இந்த இரண்டு கட்சிகளின் நிலைமையும் ஒரே மாதிரிதான் உள்ளது என்றுஇந்தியா ஸ்பெண் சொல்கிறது. இதே மாதிரி 'தி பிரிண்ட்' தளம் ஒரு ஆய்வை முன்வைத்திருந்தது. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி.ஆனவர்களில் 11% பேர் வாரிசுகள் என அது சுட்டிக்காட்டி இருக்கிறது. பாஜகவில் வாரிசுகளின் ஆதிக்கம் எந்தளவுக்குத் தலைவிரித்தாடுகிறது என்பதற்குக் கடந்த ஒரு வருடம் முன்பாகவே விளக்கம் அளித்திருந்தது 'முரசொலி'. பாஜகவில் 46 வாரிசுகள் அரசியலில் உள்ளனர் என்று விளக்கம் அளிக்கிறார் திமுகவைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

ஆனால், தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, வாரிசு அரசியல் பற்றி விமர்சித்துவிட்டுச் சென்றுள்ளார். இது ஏதோ முதல்முறை அல்ல. நாட்டில் காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளில் குடும்ப அரசியல் தலைவிரித்து ஆடுவதாக ஜெ.பி.நட்டா முன்பே பலமுறை விமர்சித்திருந்தார். ஒரு ஆண்டு முன்னதாக கூட தெலங்கானா மாநிலத்தில் பேசிய போது மோடியும் அமித்ஷாவும் குடும்ப அரசியல் பற்றி மிகக் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த இருவரின் பேச்சுக்கும் விளக்கமளிக்க முன்வந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, கர்நாடக மாநிலத்தில் மட்டும் பாஜகவில் 16 வாரிசுகள் உள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருந்தார். பாஜகவும் குடும்ப அரசியலின் சங்கிலிதான் என்று விமர்சித்திருந்தார்.

அரசியலில் இதெல்லாம் சகஜம் என  கவுண்டமணி எப்பவோ சொல்லிவிட்டார்.

ரமணி

Wednesday, March 6, 2024

வழுக்கும் பலகையால் நீளம் தாண்டுபவர்கள் ஆபத்தில் இருக்கிறார்களா?


 நீளம் தாண்டும்  வீரர்களின் டேக்-ஆஃப் போர்டு நழுவுவதற்கு காரணமான புகார்களைத் தொடர்ந்து, 'விரிவான ஆராய்ச்சி' நடந்து வருவதாகவும், அவர்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களுடன் பேசி வருவதாகவும் உலக தடகளப் பிரிவு தெரிவித்துள்ளது.

 " உலக தடகளப் போட்டிகள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான பிரச்சினை, காயங்களை ஏற்படுத்தக்கூடிய சறுக்கல் டேக்-ஆஃப் போர்டு ஆகும்" என கடந்த வாரம், ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கர்.

கடந்த ஆண்டு புடாபெஸ்டில் நடந்த உலக சம்பியன்ஷிப் போட்டியின் போது ஜமைக்காவின் கேரி மெக்லியோட் , சகநாட்டவரான ஜெஸ்வின் ஆல்ட்ரின் ஆகியோர் டேக்-ஆஃப் போர்டில் நழுவியதற்கு  ஸ்ரீசங்கர் உதாரணங்களை மேற்கோள் காட்டினார். ஐரோப்பிய சம்பியன்ஷிப்பில் மூன்றாவது இடத்தைப் பிடித்த பிரான்சின் ஜூல்ஸ் பொம்மெரி, பலகையால் 'மூன்று-நான்கு முறை' நழுவி தனது

கணுக்காலில் காயம் அடைந்தார் என்று ஸ்ரீசங்கர்   தெரிவித்தார் .

"பிரச்சினை புறப்படும் போர்டில் உள்ளது. புறப்படும் பலகையின் பொருள் காரணமாக அனைவரும் நழுவினர். இது 2021 ஒலிம்பிக்கிற்கு (டோக்கியோ) பிறகு அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் அனைவரும் இதை விமர்சித்து வருகின்றனர். இது நிச்சயமாக மரம் அல்ல. டேக்-ஆஃப் போர்டின் மெட்டீரியல் மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்,” என்றும் ஸ்ரீசங்கர் கூறினார்.

 முன்மொழியப்பட்ட டேக் ஆஃப் மண்டலத்தின் நோக்கம், ஜம்பர்ஸ் அதிகமாகத் தாண்டுவதால் நேரத்தை வீணடிப்பதைக் குறைப்பதாகும் என்று  உலக தடகள தலைமை நிர்வாக அதிகாரி ஜான் ரிட்ஜியன், கூறினார்.

"கடந்த கோடையில் புடாபெஸ்டில் நடந்த உலக சா\ம்பியன்ஷிப் போட்டிகளில், அனைத்து தாவல்களிலும் மூன்றில் ஒரு பங்கு நோ-ஜம்ப்கள், விளையாட்டு வீரர்கள் டேக்-ஆஃப் போர்டின் முன்புறத்தில் அடியெடுத்து வைத்தனர்.   எனவே நாங்கள் சோதனை செய்கிறோம், எடுத்துக்காட்டாக, டேக்-ஆஃப் போர்டுக்கு பதிலாக டேக்-ஆஃப் மண்டலம் பற்றி பரிசீலிக்கொறோம். , எனவே தடகள வீரர் எங்கிருந்து குழிக்குள் இறங்குகிறார் என்பதை நாங்கள் அளவிடுகிறோம். அதாவது, ஒவ்வொரு தாவும் கணக்கிடப்படுகிறது…”  என்றுரிட்ஜன் கூறினார்.

 முன்னாள் அமெரிக்க ஜாம்பவான்  நான்கு  முறை தொடர்ச்சியாக  ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரான

கார்ல் லூயிஸ், டேக்-ஆஃப் மண்டல திட்டத்தை விமர்சித்தார்.

உலக தடகளம் தற்போது பல இடங்களில் மற்றும் பல பயிற்சி குழுக்களில் டேக்-ஆஃப் மண்டலங்களுடன் சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த சோதனை வெளிப்புற சீசன் முழுவதும் தொடரும். எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி கூறியது போல், நீளம் தாண்டுதல் குறித்த இந்த முன்மொழியப்பட்ட கண்டுபிடிப்பு சோதனையில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படாது என  உகல தடகளப் பிரிவு  அறிவித்துள்ளது. 

ரமணி

ஒலிம்பிக் பாதுகாப்பு தகவல்கள் திருடப்பட்டன

பரிஸ் சிட்டி ஹால் இன்ஜினியர் ஒருவர் ரயிலில் பயணம் செய்தபோது  ஜூலை இறுதியில் பரிஸில் தொடங்கும் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்புத் திட்டங்களுடன் கணினி , இரண்டு யூ.எஸ்.பி   கொண்ட அவரது பை திருடப்பட்டது. இந்த திருட்டு குறித்து ஒலிம்பிக் அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.

பரிஸ் சிட்டி ஹால் ஊழியர்  பெப்ரவரி 26 திங்கட்கிழமை பாரிஸில் உள்ள  Gஅரெ டு ணொர்ட் இலிருந்து (10த் அர்ரொன்டிச்செமென்ட்) இருந்து Cரெஇல் (ஓஇசெ) வரை ரயிலில் ஏறியபோது, அவரது பை திருடப்பட்டது. பரிஸ் நகர சபையில் பணிபுரியும் 56 வயதான பொறியியலாளர் ரயிலில் திருடப்பட்டபோது இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று பொலிஸ் வட்டாரம் செவ்வாயன்று உறுதிப்படுத்தியது.

பையின் உரிமையாளர் ரயிலில் தனது இருக்கைக்கு மேலே உள்ள லக்கேஜ் பெட்டியில் அதை வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அது காணாமல் போனதை அவர் கவனித்தார், பாதிக்கப்பட்டவர் பொலிஸில் புகார் செய்தார். புலனாய்வாளர்களுக்கு அவர் அளித்த வாக்குமூலத்தில், பொறியாளர் தனது பணி கணினி மற்றும் இரண்டு ஊஸ்B ஸ்டிக்களில் மாநகர காவல்துறை தயாரித்த ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பான முக்கியமான தகவல்களைக் கொண்டிருந்ததாக விளக்கினார். பாரிஸ் சிட்டி ஹால் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

பிராந்திய போக்குவரத்து பாதுகாப்பு சேவையின் (ஸ்ற்T) ஆரம்ப விசாரணையின்படி, திங்கட்கிழமை காலை 18:30 முதல் 19:00 வரை கரே டு நோர்ட் நிலையத்தின் பிளாட்பாரம் 18 இல் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் திருட்டு நடந்துள்ளது.

பிரெஞ்சு தலைநகரில் உள்ள பல திருட்டுகளில் ஒன்று, நவீன சகாப்தத்தின் முப்பத்து மூன்றாவது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு பாரிஸ் அதிகாரிகளை கவலையடையச் செய்தது, விளையாட்டுகளின் பாதுகாப்பில் மற்றொரு சிக்கலைச் சேர்த்தது. அதிகாரப்பூர்வமாக ஜூலை 26 அன்று தொடங்கும், ஆனால் முதல் போட்டிகள் கால்பந்து , ரக்பி போட்டிகளுடன் ஜூலை 24 அன்று நடைபெறும்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு (ஜூலை 26 - ஆகஸ்ட் 11) 2,000 மாநகர காவல்துறை அதிகாரிகளை அணிதிரட்ட பரிஸ் திட்டமிட்டுள்ளது, அவர்கள் 10,000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட சுமார் 35,000 காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளுடன் இணைவார்கள்.

Monday, March 4, 2024

இந்திய அரசியலுக்காக பலிக்கடாவான சாந்தன்

இந்தியத் தேர்தல்களம்  மிகச் சூடாக மிகச் சூடாக  இருந்த காலகட்டத்தில் தேர்தல்பரப்புரைக்காக தமிழகத்துக்கு  விஜயம் செய்த முன்னாள்  பிரதமர் ராஜீவ் காந்தி குண்டு  வெடிப்பில் பலியான செய்தி உலகை அதிர்ச்சியடையச் செய்தது. தற்கொலைக் குண்டுதாரியால் ராஜீவ் காந்தி  படுகொலை செய்யப்பட்டார். அந்தக் குற்றப் பின்னனியில் விடுதலைப்பு புலிகள்  இருப்பதாக வெளியான செய்தியால்  இலங்கைத் தமிழர்கள்  நிலை குலைந்தனர்.  இந்தியாவின்  புலனாய்வாளர்கள்  குற்றவாளிகளைத் தேடி  வலை விரித்தார்கள்.

 அந்த வலையில் சிக்கிய சாந்தன்     உடல் நலக் குறைவால் கடந்த  புதன்கிழமை வைத்தியசாலையில் காலமானார். விசாரணை, கைது, தடுப்பு , மரணதண்டனை, விடுதலை என 1991 ஆம்  ஆண்டு  ஆரம்பமான  சிறை வாழ்க்கைக்கு இயற்கை முற்றுப்புள்ளி வைத்தது. மிகுந்த  போராட்டத்தின்  மத்தியில்   விடுதலை செய்யப்பட்ட  சாந்தனை இலங்கைக்கு அனுப்ப  இந்திய மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்கவில்லை. காலம் தாழ்ந்து அனுமதி   கொடுக்கப்பட்டபோது  கோமா நிலையில் இருந்த சாந்தனுக்கு  எதுவுமே தெரியாது.

இந்திரா காந்தியைக் கொடூரமாகக் கொலை செய்த சீக்கியர்களை மன்னித்தவர்களால்,  ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை வெளியில் விட மனம்  இல்லை.  ராஜீவ்  கொலையில் சம்பந்தப்பட்டவர் என  குற்றம் சாட்டப்பட்ட  நளினியை சிறையில்  சந்தித்த   ராஜீவ் காந்தியின்  மகள்  பிரியங்கா சந்தித்து உரையாடினார். ராஜீவ் காந்தியின் குடும்பம் மன்னித்தது. ஆனால், இந்திய அரசியல்களம் அவர்களை மன்னிக்கவில்லை. கடைசி நேரத்திலாவது தாயின்  கையால் சாப்பிஅட  வேன்டும் ந்ன  சாந்தன் விரும்பினார். தாயாரும்  உணவுடன் காத்திருந்தார்.  சாந்தனின் உடல்தான  இலங்கைக்கு வந்துள்ளது.

ராஜீவ்  கொலைக் குற்றச் சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட எழு பேரின் விடுதலையும்  மிகுந்த  போராட்டத்தின்  மத்தியில்  நிறைவேறியது. தமிழகத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்கள்   நெடுமாறன், வைகோ போன்றவர்கள்  முழு முயற்சி செய்தனர்.  புகழ்  பெற்ற சட்டவல்லுநர்கள்  பணம் வாங்காமல்  ஆஜரானார்கள்.  நளினியின்  மரண தண்டனைகருணாநிதி காலத்தில் ஆயுள் தண்டனையானது.  ஏனைய ஆறு பேரின்  மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ப்பட்டது. ஆயுள்  தண்டனை காலம் 20  வருடங்களின்ன்  பின்னர் விடுதலை செய்யலாம் என்ற கோரிக்கை  நிராகரிக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றம், சிறப்பு விசாரணை என்று முட்டுக்கட்டை போடப்பட்டது. அன்றைய  முதலமைசரான  ஜெயலலிதா ஏழு பேரின் விடுதலையைக் கையில் எடுத்து அரசியலாகினார்.  மத்திய அரசு  தடுப்பணை போட்டது.

யார் இந்த சாந்தன்

1991ம் ஆண்டு மே 21ம் திகதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்  அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்திய பிரதமர் மரணம் என்பது உலகத்தையே உலுக்கும் ஒரு நிகழ்வாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான் ராஜீவ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக நளினி கைது செய்யப்ட்டார். இதே வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர்தான் சாந்தன்.

சுரேந்திர ராஜா என்று அழைக்கப்பட்ட இந்த சாந்தன் ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். இவர் இலங்கையில் பிறந்தவர். சாந்தன் விடுதலை புலிகள் அமைப்பின் உளவு பிரிவில் பணியாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படியில் 1991 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி சாந்தன்  கைது செய்யப்பட்டார்.

பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் மரண தண்டணை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த சாந்தன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 2022ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் இலங்கை தமிழரான சாந்தன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த புதன் கிழமை  அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாந்தன் மறைவு குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரும், மருத்துவருமான தேரணி ராஜன் கூறுகையில்,

"கல்லீரல் செயலிழப்பு காரணமாக அவருக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த துறையின் தலைவரும், மருத்துவருமான பிரேம்குமார் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயற்சித்தோம்.

அதன் காரணமாக பயாப்சி சோதனை மேற்கொள்ள முயன்றோம். அதற்கு சாந்தன் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து கிரிப்டோஜெனிக் சிரோசிஸ் பாதிப்பு காரணமாக சில சமயம் சுயநினைவு குறைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார். அதன் காரணமாக தீவிர கண்காணிப்பிள்ல இருந்தார். நேற்று இரவு அவரது உடல் நிலை கடும் பின்னடைவை சந்தித்து சுயநினைவை இழந்தார். இந்நிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டது. சிபிஆர் சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்" என தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை குற்றவாளிகள் கைது, தண்டனை, விடுதலை

1991 மே 21  ஆம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில்  கைது செய்யப்பட்ட 26 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 1998 ஜனவரி 28 ஆம் திகதி, 26 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கியது பூந்தமல்லி தடா நீதிமன்றம்.

அதனைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு மே 11 திகதி 26 பேரில் 19 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டது. 1999 அக்டோபர் 8 ஆம் திகதி தூக்கு தண்டனையை குறைக்கக் கோரிய சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 1999 அக்டோபர் 10ஆம் திகதி நால்வரும் ஆளுநருக்கு கருணை மனு அனுப்பினர். 1999 அக்டோபர் 29ஆம் திகதி அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார்.

1999 நவம்பர் 25 ஆம் திகதி ஆளுநரின் உத்தரவை ரத்து செய்து அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவு கொடுக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் திகதி நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ஆனால் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனை இரத்து செய்யப்படவில்லை.

2000 ஏப்ரல் 26ஆம் திகதி பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட மூவரும் இந்திய ஜனாதிபதிக்குக்  கருணை மனு அனுப்பினர். அன்றைய ஜனாதிபதியான     கே.ஆர்.நாராயணன் அவருக்குப் பிறகு வந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோர் கருணை மனுக்களின் மீது முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டனர். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியான  பிரதீபா பாட்டீல் 2011 ஆகஸ்ட் 12ஆம் திகதி கருணை மனுக்களை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார். அதன் விளைவாக தமிழ்நாட்டில் அதனைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்தது.

பின்னர் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவரும் சேர்ந்து, தாங்கள் அதிக வருடங்கள் சிறையில் கழித்துவிட்டோம் என்று, தூக்கு தண்டனையை இரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் 2014 பிப்ரவரி 18ஆம் திகதி பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனையை இரத்து செய்து சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

2014 பிப்ரவரி 19ஆம் திகதி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய கைதிகள் விடுதலை என ஜெயலலிதா அறிவித்திருந்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி சிபிஐ விசாரித்த வழக்குகளில் எடுக்கும் முடிவை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று கூறி, மத்திய அரசுக்கு தெரிவித்த போது, அப்போது இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி விடுதலைக்குத் தடை பெற்றது. பின்னர் நடைபெற்ற அந்த வழக்கில், 2015 டிசம்பர் 2  ஆம் திகதி மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அவர்களை விடுவிக்க முடியாது என நீதிபதி இப்ராஹீம் கலிபுல்லா அமர்வு தீர்ப்பளித்தது.

2016 மார்ச் 2 ஆம்  திகதிபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. 2018 மார்ச் 6, 7 பேரை விடுவிப்பு தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கலாம் என ரஞ்சன் கோகாய் அமர்வு தீர்ப்பளித்தது. 2018 டிசம்பர் 6ஆம் திகதி 161 சட்ட விதிப்படி ஆளுநர் இறுதி முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அதிகாரம் வழங்கியது.

அதனைத் தொடர்ந்து பேரறிவாளன் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் , ஜெயக்குமார் ஆகியோர் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் அவர்களில் பேரறிவாளனைத் தவிர மற்றவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். வரலாற்றில் இடம்பிடித்த துயர சம்பவமான ராஜீவ் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட ஏழு  பேரில், சாந்தன் சொந்த நாடு திரும்பாமலேயே உயிரிழந்துள்ளார்.

விடுதலை கோரிய   சாந்தனின் கடிதம்

திருச்சியில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில்   முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தபடி கடந்த ஆண்டு இலங்கை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்அந்த கடிதத்தில்,

"இலங்கை குடிமகனான நான், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன். தற்போது நான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன். கடந்த 32 வருடங்களாக எனது தாயாரைப் பார்க்கவில்லை. அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன்நான் இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட பிறகு, கடவுச்சீட்டு, அடையாள அட்டையை புதுப்பிப்பது சம்பந்தமாகவும், இலங்கைக்கு திரும்புவது சம்பந்தமாகவும் ஆலோசனை பெற வேண்டி இலங்கை துணை தூதருக்கும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஏற்கனவே மனு அனுப்பினேன். இலங்கையில் என் மீது வழக்கு இல்லை. தயவு செய்து எனது சிரமத்தை கருத்தில் கொண்டு இலங்கைக்கு நான் வர உதவ வேண்டும் என கோரியிருந்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சாந்தன் தரப்பில் வழக்கும் தொடரப்பட்டது. அதில், இலங்கையில் முதுமையில் இருக்கும் தாயாரை கவனித்துக்கொள்ள திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்ப கோரி மனு கொடுத்திருந்தேன். இம்மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் தம்மை இலங்கைக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என சாந்தன் கோரியிருந்தார்.

 இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்  இரண்டு  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், சாந்தன் இலங்கைக்கு செல்வதற்காக தற்காலிக பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் வழங்கி இருக்கிறது. இந்த ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுஆனால் மத்திய அரசு தரப்பிலோ, தமிழ்நாடு அரசு அனுப்பிய ஆவணங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசு அனுப்பிய ஆவணங்கள் கிடைத்த உடன் ஒரு வாரத்தில் சாந்தன் இலங்கைக்கு செல்வதற்கான உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 இந்த நிலையில்தான் சாந்தனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாந்தனின் உடல் நிலையில் நேற்றைய தினம் பின்னடைவு ஏற்பட்டது. கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருப்பதாகவும், பிற பாதிப்புகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சாந்தன் இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட்டுகள் விரைவில் முன்பதிவு செய்யப்படும் என தகவல் வெளியானது. சாந்தன் இலங்கை செல்வதற்கான அனுமதி கடிதத்தை திருச்சி கலெக்டருக்கு மத்திய அரசு அனுப்பியது. இலங்கை தூதரக அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின் சாந்தன் அந்நாட்டுக்கு அனுப்பப்படுவார் என்ற நிலை உள்ளது. இப்படியான சூழலில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று உயிரிழந்தார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 32 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான பின்னர் சொந்த மண்ணான இலங்கைக்கு சென்று வசிக்க வேண்டும் என்று நினைத்த சாந்தனின் ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போனது. அவரது உயிர் ராஜீவ்காந்தி மருத்துமனையில் பிரிந்து விட்டது.

விடுதலையான  பேரறிவாளனை  தமிழக  முதல்வர் கட்டி அணைத்தது விமர்சனத்துக்குள்ளானது. பேரறிவாளனின் வாக்குமூலம் என்ற ஒற்றை சாட்சியம்தான், ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு எதிரான வலுவான சாட்சி. அதுதான் பேரறிவாளனை இப்போது தூக்குக் கொட்டடியில் துடிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த சி.பி.. அதிகாரி தியாகராஜன்,அந்த வாக்குமூலம் முழுமையாகப் பதிவாகவில்லை. பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலமும் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பேரறிவாளன் ஒரு நிரபராதி என்று  ஓய்வு பெற்ற பின்னர்  தெரிவித்துள்ளார். இது ஒரே  ஒரு உதாரணம்  இது போன்றபல தகவல்கள் ஆங்காங்கே  சந்தேகத்துடன்  இருக்கின்றன.

பேரறிவாளனின் தாய் நடத்திய போராட்டங்கள்  வெற்றி பெற்று அவர் விடுதலையானார். பேரறிவாளனின் தாய் மகிழ்ச்சியில் உச்சத்துக்குச் சென்றார்.   சாந்தனின் தாயார் நடத்திய  போராட்டங்கள் சமூக  வலைத் தளங்களில்  பதிவாகி இருந்தன  உரிய நடவடிக்கை  எடுக்கப்ப்டவில்லை. சாந்தன் உயிருடன்  இலங்கைக்கு வருவார் என  உணவுடன் காத்திருந்த தாயார் ஏமாற்றமடைந்துள்ளார்திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும்  மற்றைய மூவரையுமாவது  இந்தியா  ஊயிருடன் விடுதலை செய்யுமா என்ற கேள்வி  பலமாக எழுந்துள்ளது.

ரமணி