Thursday, December 21, 2023

ஐபிஎல் அணிகள் ஏலத்தில் வாங்கிய வீரர்கள் பட்டியல்


  2024 ஐபிஎல் மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பத்து ஐபிஎல் அணிகளும் வீரர்களை போட்டி போட்டு வாங்கினர். அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடி வரை விலை பெற்று ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை புரிந்தார். இந்த ஏலத்தில் மொத்தமாக பத்து அணிகளும் சேர்ந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 77 வீரர்கள் வாங்கப்பட்டனஎ. ஆனாலும், அத்தனை இடங்களையும் அணிகள் நிரப்பவில்லை.

10 அணிகளும் 72 வீரர்களை மட்டுமே வாங்கி உள்ளன. அதில் 30 வெளிநாட்டு வீரர்களின் இடங்கள் மட்டும் முழுமையாக நிரப்பப்பட்டன. ஏலத்திற்கு பின் 8 அணிகளில் தலா 25 வீரர்கள் உள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 23 வீரர்களும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 22 வீரர்களும் மட்டுமே உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

  அஜய் மண்டல் அஜிங்க்யா ரஹானே தீபக் சாஹர் டெவோன் கான்வே* மகேஷ் தீக்ஷனா* மதீஷ பதிரானா* மிட்செல் சான்ட்னர்* மொயின் அலி* எம்எஸ் டோனி முகேஷ் சவுத்ரி நிஷாந்த் சிந்து பிரசாந்த் சோலங்கி ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ரவீந்திர ஜடேஜா ருதுராஜ் கெய்க்வாட் ஷேக் ரஷீத் சிவம் துபே சிமர்ஜீத் சிங் துஷார் தேஷ்பாண்டே ரச்சின் ரவீந்திரா* (  1.80 கோடி) ஷர்துல் தாக்கூர் (ஏலம் - 4.00 கோடி) டேரில் மிட்செல்* (  14.00 கோடி) சமீர் ரிஸ்வி ( 8.40 கோடி) முஸ்தாபிசுர் ரஹ்மான்* ( 2.00 கோடி) அவனிஷ் ராவ் ஆரவெல்லி ( 20 லட்சம்)

 

டெல்லி கேப்பிடல்ஸ் -

 அபிஷேக் போரல் அன்ரிச் நார்ட்ஜே* அக்சர் படேல் டேவிட் வார்னர்* இஷாந்த் சர்மா குல்தீப் யாதவ் லலித் யாதவ் லுங்கிசானி என்கிடி* மிட்செல் மார்ஷ்* முகேஷ் குமார் பிரவின் துபே பிருத்வி ஷா ரிஷப் பந்த் சையத் கலீல் அகமது விக்கி ஓஸ்ட்வால் யாஷ் துள் ஹாரி புரூக்* (ஏலம் - 4.00 கோடி) டிரிஸ்டன் ஸ்டப்ஸ்* (ஏலம் - 50 லட்சம்) ரிக்கி புய் (  20 லட்சம்) குமார் குஷாக்ரா ( 7.20 கோடி) ரசிக் தர் ( 20 லட்சம்) ஜே ரிச்சர்ட்சன்* (  5.00 கோடி) சுமித் குமார் ( 1.00 கோடி) ஷாய் ஹோப்* (ஏலம் - 75 லட்சம்) ஸ்வஸ்திக் சிகாரா (  20 லட்சம்)

 

 குஜராத் டைட்டன்ஸ் -

 அபினவ் மனோகர் ,சாய் சுதர்சன் தர்ஷன் ,நல்கண்டே, டேவிட் மில்லர்* ,ஜெயந்த் யாதவ், ஜோசுவா லிட்டில்* கேன் வில்லியம்சன்* மேத்யூ வேட்* முகமது ஷமி மோஹித் ஷர்மா நூர் அகமது* ஆர் சாய் கிஷோர் ராகுல் தெவாடியா ரஷித் கான்* சுப்மன் கில் விஜய் சங்கர் விருத்திமான் சாஹா அஸ்மத்துல்லா ஒமர்சாய்* (  50 லட்சம்) உமேஷ் யாதவ் (  5.80 கோடி) ஷாருக் கான் ( 7.40 கோடி) சுஷாந்த் மிஸ்ரா (  2.20 கோடி) கார்த்திக் தியாகி ( 60 லட்சம்) மானவ் சுதர் (  20 லட்சம்) ஸ்பென்சர் ஜான்சன்* (  10 கோடி) ராபின் மின்ஸ் ( 3.60 கோடி)

 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -

நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ்*, ஷ்ரேயாஸ் ஐயர் ,ஜேசன் ராய்*, சுனில் நரைன்* ,சுயாஷ் சர்மா, அனுகுல் ராய் ஆண்ட்ரே ரஸ்ஸல்* ,வெங்கடேச ஐயர், ஹர்ஷித் ராணா ,வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி ,கே.எஸ்.பாரத் (  50 லட்சம்) சேத்தன் சகாரியா (ஏலம் - 50 லட்சம்) மிட்செல் ஸ்டார்க்* (ஏலம் - 24.75 கோடி) அங்கிரிஷ் ரகுவன்ஷி ( 20 லட்சம்) ரமன்தீப் சிங் (ஏலம் - 20 லட்சம்) ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்* (ஏலம் - 1.50 கோடி) மணீஷ் பாண்டே ( 50 லட்சம்) முஜீப் உர் ரஹ்மான்* (  2.00 கோடி) கஸ் அட்கின்சன்* (  1.00 கோடி) சாகிப் உசேன் (  2.00 லட்சம்)

 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

  கேஎல் ராகுல் ,குயின்டன் டி காக்*, நிக்கோலஸ் பூரன்*, ஆயுஷ் படோனி, கைல் மேயர்ஸ்* ,மார்கஸ் ஸ்டோனிஸ்*, தீபக் ஹூடா ,ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக்*, க்ருணால் பாண்டியா, யுத்வீர் சிங் பிரேரக், மன்கட் யாஷ் தாக்கூர் அமித் மிஸ்ரா, மார்க் வூட்*, மயங்க் யாதவ், மொஹ்சின் கான் ,கே கௌதம் ,தேவ்தத் படிக்கல் ,சிவம் மாவி ( 6.40 கோடி) அர்ஷின் குல்கர்னி ( 20 லட்சம்) எம் சித்தார்த் (  2.40 கோடி) ஆஷ்டன் டர்னர்* (  1.00 கோடி) டேவிட் வில்லி* (  2.00 கோடி) முகமது அர்ஷத் கான் (  20 லட்சம்)

 மும்பை இந்தியன்ஸ் 

ரோஹித் சர்மா ,டெவால்ட் ப்ரீவிஸ்* ,சூர்யகுமார் யாதவ் ,இஷான் கிஷன் ,திலக் வர்மா, டிம் டேவிட்* ,விஷ்ணு வினோத் ,அர்ஜுன் டெண்டுல்கர் ,ஷம்ஸ் முலானி ,நேஹால் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா ,ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்*, ஹர்திக் பாண்டியா ,ரொமாரியோ ஷெப்பர்ட்* ,,ஜெரால்ட் கோட்ஸி* (  5.00 கோடி) தில்ஷன் மதுஷங்க (  4.60 கோடி) ஷ்ரேயாஸ் கோபால் ( 20 லட்சம்) நுவான் துஷாரா* ( 4.80 கோடி) நமன் திர் (  20 லட்சம்) அன்ஷுல் கம்போஜ் (  20 லட்சம்) முகமது நபி* (  20 லட்சம்) ஷிவாலிக் சர்மா ( 20 லட்சம்

 

 பஞ்சாப் கிங்ஸ்

 -  ஷிகர் தவான் ,லியாம் லிவிங்ஸ்டோன்* ,ஜானி பேர்ஸ்டோ* ,ஜிதேஷ் சர்மா, சிவம் சிங், ராகுல் சாஹர் ,பிரப்சிம்ரன் சிங், அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் பாட்டியா ,ஹர்ப்ரீத் ப்ரார், அதர்வ தைடே ,வித்வத் கவேரப்பா, ரிஷி தவான் ககிசோ ரபாடா*, சாம் கர்ரன்* ,நாதன் எல்லிஸ்* ,சிக்கந்தர் ராசா* ,ஹர்ஷல் படேல் (  11.75 கோடி) கிறிஸ் வோக்ஸ்* ( - 4.20 கோடி) அசுதோஷ் சர்மா (  20 லட்சம்) விஸ்வநாத் பிரதாப் சிங் ( 20 லட்சம்) ஷஷாங்க் சிங் (  20 லட்சம்) தனய் தியாகராஜன் (ஏலம் - 20 லட்சம்) பிரின்ஸ் சவுத்ரி (  20 லட்சம்) ரிலீ ரோசோவ்* (  8.00 கோடி)

 

 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

 ஃபாஃப் டு பிளெசிஸ்* ,கிளென் மேக்ஸ்வெல்* ,விராட் கோலி ,ரஜத் படிதார் ,அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக்,, சுயாஷ் பிரபுதேசாய் ,வில் ஜாக்ஸ்* ,,மஹிபால் லோமரோர் ,கர்ண் சர்மா ,மனோஜ் பந்தகே,, வைஷாக் விஜய்குமார், ஆகாஷ் தீப் ,முகமது சிராஜ் ,ரீஸ் டோப்லி*, ஹிமான்ஷு சர்மா, ராஜன் குமார், மயங்க் தாகர், கேமரூன் கிரீன்* ,அல்ஜாரி ஜோசப்* ,(  11.50 கோடி) யாஷ் தயாள் (  5.00 கோடி) டாம் கர்ரன்* (  1.50 கோடி) லாக்கி பெர்குசன்* ( 2.00 கோடி) ஸ்வப்னில் சிங் (  20 லட்சம்) சவுரவ் சுவாஹான் ( 20 லட்சம்)

 

 ராஜஸ்தான் ராயல்ஸ்

 

 சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர்*, ஷிம்ரோன் ஹெட்மியர்* ,யஷஸ்வி ஜெய்ஸ்வால் ,துருவ் ஜூரல், ரியான் பராக் ,டோனோவன் ஃபெரீரா* ,குணால் ரத்தோர் ,ரவிச்சந்திரன் அஸ்வின் ,,குல்தீப் சென் ,நவ்தீப் சைனி ,பிரசித் கிருஷ்ணா ,சந்தீப் சர்மா, ட்ரெண்ட் போல்ட்* ,யுஸ்வேந்திர சாஹல் ,ஆடம் ஜம்பா*, அவேஷ் கான் ,ரோவ்மேன் பவல்* ,(  7.40 கோடி) சுபம் துபே ( - 5.80 கோடி) டாம் கோஹ்லர் காட்மோர்* (  40 லட்சம்) நந்த்ரே பர்கர்* ( 50 லட்சம்) அபித் முஷ்டாக் (  20 லட்சம்)

 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

  அப்துல் சமது ,ஐடன் மார்க்ரம்*, ராகுல் திரிபாதி, க்ளென் பிலிப்ஸ்* ,ஹென்ரிச் கிளாசென்* ,மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், உபேந்திர சிங் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி ,அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன்* ,வாஷிங்டன் சுந்தர், சன்வீர் சிங் ,புவனேஷ்வர் குமார் ,டி நடராஜன் ,மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், ஃபசல்ஹக் ஃபாரூக்கி* ,ஷாபாஸ் அகமது ,டிராவிஸ் ஹெட்* (  6.80 கோடி) வனிந்து ஹசரங்க* ( 1.50 கோடி) பாட் கம்மின்ஸ்* ( 20.50 கோடி) ஜெய்தேவ் உனத்கட் (  1.60 கோடி) ஆகாஷ் சிங் (  20 லட்சம்) ஜாதவேத் சுப்ரமணியன் ( 20 லட்சம்)

 

Wednesday, December 20, 2023

ஐபிஎல் வரலாற்றில் மிட்செல் ஸ்டார்க்குக்கு அதிக விலை

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று  துபாயில் நடைபெற்றது. அதில் அனைத்து 10 அணிகளிலும் உள்ள வெறும் 77 இடங்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 33 வீரர்கள் போட்டி போட்டதால் அதிக தொகைக்கு விலை போகப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டது.

அவுஸ்திரேலியாவின் நட்சத்திர பௌலரான மிட்செல் ஸ்டார்க்கை கடும் போட்டிக்குப் பிறகு ரூ.24.75 கோடிக்கு வாங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஸ்டார்க்கை ஏலம் எடுக்க குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. நிலையில் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து கொல்கத்தா எடுத்துள்ளது.  2023 சீசனில் இங்கிலாந்து வீரர் சாம் கரண் 18.5 கோடிக்கு பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்டதே முந்தைய சாதனையாகும். 

அவுஸ்திரேலியாவின் பட் கமின்ஸை வாங்குவதற்கு பெங்களூரு ,ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கிடையே மெகா போட்டி ஏற்பட்டது.    ஹைதராபாத்   20.50 கோடி என்ற பிரம்மாண்டத் தொகைக்கு பட் கமின்ஸை வாங்கியது.  

  2023 டெஸ்ட் சாம்பியன்

ஷிப் ஃபைனல் , உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியாவை அடித்து நொறுக்கி வெற்றியை பறித்த அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை வாங்குவதற்கு சென்னை , ஹைதராபாத் அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால் கடைசியில் ஹைதராபாத் நிர்வாகம் விட்டுக் கொடுக்காமல் 6.80 கோடிக்கு போட்டி போட்டு அவரை வாங்கியது.ரோவ்மன் போவல் ராஜஸ்தான் அணிக்காக வாங்கப்பட்ட நிலையில் நியூசிலாந்தை சேர்ந்த இளம் வீரர் ரச்சின் ரவீந்தராவை சென்னை சூப்பர் கிங்ஸ் 1.8 கோடி என்ற குறைந்த தொகைக்கு வாங்கி அசத்தியது. குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் 523  ஓட்டங்கள் குவித்த அவர் அறிமுக தொடரிலேயே அதிக  ஓட்டங்கள் அடித்த வீரராக மாபெரும் உலக சாதனை படைத்தார்.

உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடிய நியூசிலாந்து வீரரான டேரில் மிட்செலை 14 கோடி ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியிருக்கிறது.ஹர்ஷல் படேலை 11.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியிருக்கிறது.ஹர்ஷல் படேலை வாங்க குஜராத், பஞ்சாப், லக்னோ அணிகளிடையே கடும் போட்டி நிலவியது.முன்பு சென்னை அணிக்கு ஆடிய ஷர்துல் தாகூரை ஏலத்தில் 4 கோடிக்கு மீண்டும் வாங்கியிருக்கிறது சென்னை அணி.இலங்கை அணியின் ஸ்பின்னரான வனிந்து ஹசராங்காவை அடிப்படை விலையான 1.50 கோடிக்கே வாங்கியது சன்ரைசர்ஸ்.டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஹாரி ப்ரூக்கை 4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது.கரீபிய வீரரான ரோவ்மன் பவலை 7.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியிருக்கிறது.உமேஷ் யாதவை குஜராத் டைட்டன்ஸ் அணி 5.80 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியிருக்கிறது.அல்சாரி ஜோசப்பை 11.50 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது பெங்களூர் அணி.

மிகப்பெரிய தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி போட்டு வாங்கியது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் கடந்த வருடம் எந்த அணியும் வாங்காததால் விலை போகாத அவரை இம்முறை சென்னை இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. இருப்பினும் இதன் பின்னணியில் தோனி இருப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஏனெனில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான அவர் 2023 உலகக் கோப்பையில் தரம்சாலா நகரில் பேட்டிங்க்கு சாவலான மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து நியூசிலாந்தின் வெற்றிக்கு போராடினார். அதை விட மும்பையில் நடைபெற்ற முதல் செமி ஃபைனலில் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக 7 விக்கெட்களை எடுத்து மிரட்டிய ஷமி போன்ற அனைத்து பவுலர்களையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்ட அவர் சதமடித்து 134 (119) ஓட்டங்கள் விளாசி வெற்றிக்கு போராடினார்.

அந்த வகையில் 2023 உலகக் கோப்பையில் சிறந்த பவுலிங்கை கொண்ட இந்திய அணிக்கு எதிரான 2 போட்டிகளிலும் மிட்சேல் 2 சதங்கள் அடித்து இந்திய சூழ்நிலைகளில் தம்மால் அசத்த முடியும் என்பதை காண்பித்தார். இது மட்டுமல்லாமல் கடந்த வருடத்துடன் அம்பத்தி ராயுடு ஓய்வு பெற்ற நிலையில் பென் ஸ்டோக்ஸையும் சென்னை விடுவித்தது. எனவே மிடில் ஆர்டரில் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடக்கூடிய திறமையும் தேவைப்படும் நேரங்களில் மித வேகப்பந்து வீச்சாளராக செயல்படும் தன்மையையும் கொண்டுள்ள காரணத்தாலேயே அவரை சென்னை இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது என்றே சொல்லலாம். மொத்தத்தில் ராயுடு, ஸ்டோக்ஸ் ஆகியோரது இடத்தை நிரப்புவதற்காக 2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அசத்திய மிட்சேலை கப்டன் தோனியுடன் விருப்பத்துடன் சென்னை வாங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வம் மவியை ரூ.6.8 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வாங்கியுள்ளது. இந்திய பௌலரான இவர் இதற்கு முன்னர் கொல்கத்தா அணிக்காக விளையாடியுள்ளார்.உமேஷ் யாதவை குஜராத் டைட்டன்ஸ் அணி 5.80 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியிருக்கிறது.

கருண்நாயரையும் ஸ்மித்தையும் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. 50 லட்சத்தை அடிப்படை விலையாக கொண்டிருந்த மனீஷ் பாண்டேவும் விற்கப்படவில்லை

Sunday, December 17, 2023

அரசியல் அதிகாரத்தை இழந்த விஜயகாந்த்


 தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய வியஜகாந்த், அரசியல் அரங்கிலும்  புரட்சிய ஏற்படுத்தி தனக்கென இரு இடத்தை ஏற்படுத்தினார். அரசியல் அரங்கில் வெற்றி, தோல்வி சகஜம். முதல்வர் கனவுடன் அரசியல் அரங்கில் காலடி எடுத்து வைத்த வியஜகாந்த், எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்குப்பின்னர் குப்புறப் படுத்து விட்டார்.

விஜய‌காந்தின் பின்னால் அவருடைய ரசிகர்  படை இருந்தது. அரசியல் உச்சாணிக்கொம்பில் வியஜகாந்தை ஏற்றி அழகுபார்த்தவர்  ஜெயலலிதா. அவரைக் படு குழுயில் விழுத்தியவரும் அதே ஜெயலலிதா தான். 

தமிழக அரசியலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்த வியஜகந்தின் செல்வாக்கு படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. 5 சத வீதமாக இருந்த வியஜகாந்தின் வாக்கு வங்கி ஒரு சத வீதமாக வீழ்ச்சியடைந்தது.இந்த நிலையில் விஜயகாந்தின் இடத்தை  தன்னால் நிரப்ப முடியும் என்ற நப்பாசையுடன் அவருடைய மனைவி  பிரேமலதா தனக்குத் தானே முடி சூட்டிக்கொண்டுள்ளார். 

 நடக்க முடியாத, கைகால் அசைக்கமுடியாத நிலையில் இருக்கும் விஜயகாந்தை  முன்னிறுத்தி அரசியல் நடத்துகிறார்  பிரேமலதா.  பொம்மை போல்  இருக்கும் விஜயகாந்தை  பொது வெளியில்  கறுத்தக் கண்ணாடி அணிந்து  சக்கர நாற்காலியில் இருத்தி காட்சிகாட்டி  அசிங்கப்படுத்துகிறார் பிரேமலதா. அதன் உச்சக்கட்டமாக விஜயகாந்தின் பதவியைக் கையகப்படுத்தினார்.

டிசம்பர் 14 ஆம் திகதி செயற்குழுக்கூட்டம் நடைபெறுவதாக   அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்தை பார்க்க பலர் ஆர்வம் காட்டி திருவேற்காடு அருகே உள்ள திருமண மண்டபத்தில் குவிந்தனர்.   விஜயகாந்த் விழா மேடைக்கு வந்ததும் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது. கப்டன் கப்டன் என முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து பொதுக் குழு கூட்டம் கூடியது. தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளராக இருந்தவருமான விஜயகாந்த் அங்கு நாற்காலியில் பிரேமலதாவுக்கு பக்கத்தில் உட்கார வைக்கப்பட்டார்.

அவர் பிரத்யேக நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் முன்பை விட தற்போது தெம்பாகவே உள்ளார். அருகே இருந்த நிர்வாகி பார்த்தசாரதியிடம் பேசினார். இந்த நிலையில் தேமுதிக பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் பிரேமலதாவை பொதுச் செயலாளராக அறிவித்து விஜயகாந்த் உத்தரவிட்டார். இதையடுத்து பிரேமலதாவின் கைகளை பிடித்து விஜயகாந்த் உயர்த்தினார். பிறகு பிரேமலதா, விஜயகாந்தின் காலில் விழுந்து வணங்கினார். கட்சியில் செயற்குழுவைக் கூட்டிய பிரேமலதா,  செயற்படாமல்  இருக்கும் விஜயகாந்திடம் இருந்த செயலளர் பதவியைக் கைப்பற்றினார்.

கட்சியில் சகல அதிகரங்களும் பிரேமலதாவின் கைகளுக்குச் சென்றுவிட்டது. மிகவும் முக்கியமான முடிவுகளை அவர் எடுப்பார். தேர்தல் வியூகம் வகுப்பது, கூட்டணி பேரம் அனைத்தும்  பிரேமலதாவின் முடிவே இறுதியானதாகும்.  விஜயகாந்துக்கு கிடைத்த வரவேற்பு பிரேமலதாவுக்கு கிடைக்காது.  தேமுதிகவின் எதிர்காலம் கேள்விக்குறி தான். பத்தோடு பதினொன்றாக தான் அந்தக் கட்சி இனி பார்க்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

விஜயகாந்த் என்ன நோக்கத்திற்காக கட்சி ஆரம்பித்தாரோ அந்த நோக்கத்திற்கான பாதையிலிருந்து தேமுதிக விலகி பல வருடங்கள் ஆகிவிட்டது.  விஜயகாந்துக்கு கிடைத்த வரவேற்பும், மரியாதையும் பிரேமலதாவுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை.  தேமுதிகவின் தேவை தமிழ்நாட்டில் குறைந்துவிட்டது.  2014, 2016, 2019, 2021 என எல்லா தேர்தல்களிலும் தேமுதிகவின் வாக்கு வங்கி சரிவை நோக்கியே  சென்றன.  விஜயகந்டி இடத்தி சீமான்  கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளார். 

பிரேமலதா கட்சியின் செயலாளராகிவிட்டார். அவர்  வகித்து வந்த பொருளாளர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜயகாந்த் கட்சியில் செயல்பட முடியாத போது பிரேமலதாவுடன் பக்க பலமாக தம்பி சுதீஷும், மகன்  விஜய பிரபாகரனும் இருந்தார்கள் பொதுக் கூட்டத்திலேயே விஜய பிரபாகரனுக்கு தலைவர் பதவி வழங்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் இதற்கு விஜயகாந்தின் உண்மையான தொண்டர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்து கொண்டே அந்த அறிவிப்பு  அமுக்கப்பட்டது.  பொருளாளர் பதவி  விஜய பிரபாகரனுக்கு கொடுக்கப்படுமா இல்லை சுதீஷுக்கு கொடுக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொதுச் செயலாளராக பதவியேற்ற பிரேமலதா இனி கட்சியின் பொருளாளர் பதவியை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்.  தம்பியா, மகனா என எடுத்துக் கொண்டால் பிரேமலதாவின் விருப்பம்  மகனாத்தான் இருக்கும். தம்பி சுதீஷுக்கு பொருளாளர் பதவி வழங்காமல் தனது மகனுக்கு வழங்கினாலும் வழங்குவார் என சொல்லப்படுகிறது. 

தேசிய முன்னேற்ற திராவிடக் கழகத்தின்  முகமாக இருந்த விஜயகாந்த் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட நிலையில் அந்த கட்சிக்கான ஆதரவு தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெகுவாக குறையலாம்,அல்லது மற்ற கட்சிகள் தேமுதிகவுக்கு போதிய ஆதரவு அளிக்காமல் போகலாம். கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில்  தமிழ்நாட்டில்   மெகா கூட்டணி அமைந்தது. அதிமுக , பாஜக ,பாமக ,தேமுதிக  உடன் மேலும் பல சிறிய இணைந்து  தேர்தலை சந்தித்தன. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது. தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது. அதன்பின் அமமுகவுடனும் தேமுதிக கூட்டணி முறிந்தது. இதை தொடர்ந்து தேமுதிக எந்த பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தது.  விஜயகாந்தின் கட்சிக்கான செல்வாக்கு மோசமாகச் சரிந்த நிலையில்  கட்சியின் புதிய பொதுச்செயலாளராக பிரேமலதா தெரிவாகி உள்ளார். 

தேமுதிக தொடங்கப்பட்டதில் இருந்து அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து வந்த பிரேமலதா விஜயகாந்த், 2018ஆம் ஆண்டில் அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

இந்தக் காலகட்டத்தில் விஜயகாந்த்தின் உடல்நலம் வெகுவாகக் குன்றிய நிலையில் முக்கிய முடிவுகளை பிரேமலதாவே எடுத்து வந்தார். தற்போது அதை அதிகாரபூர்வமாக்கும் வகையில், அவர் இந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் மூலம் கட்சியின் முழுமையான கட்டுப்பாடு பிரேமலதாவிடம் வந்து சேர்ந்திருக்கிறது.

கட்சி தொடங்கப்பட்டபோது விஜயகாந்த்தின் ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்த ராமு வசந்தனே கட்சியின் பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டார்.

விஜயகாந்த்தின் நீண்டகால நண்பராக இருந்தவரும் முதன்முதலில் விஜயகாந்த் பெயரில் நற்பணி மன்றம் அமைத்தவருமான மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2006ஆம் ஆண்டுத் தேர்தலில் கட்சிக்கு பெரும் எண்ணிக்கையில் வாக்குகள் கிடைத்த நிலையில், வேறு கட்சிகளில் இருந்து மருங்காபுரி பொன்னுச்சாமி, ஆஸ்டின், கு.ப. கிருஷ்ணன் போன்ற தலைவர்களும் தொண்டர்களும் இணைய ஆரம்பித்தனர். கட்சி வேகமாக வளரத் தொடங்கியது. இந்தத் தருணத்தில், அதாவது 2009 வாக்கில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ராமு வசந்தன் காலமானார்.

இதற்குப் பிறகு, விஜயகாந்த்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷின் செல்வாக்கு வளர ஆரம்பித்தது. 2013 வாக்கில் கட்சியில் இருந்து பலர் வெளியேற ஆரம்பித்தனர். விஜயகாந்த்தின் நண்பராக இருந்த சுந்தர்ராஜன் உட்படப் பலர் தேமுதிகவின் அதிருப்தி எம்எல்ஏக்களாக மாறி, அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.விஜயகாந்தால்  தூக்கி  நிருத்த முடியாத கட்சியை பிரேமலதாவால்   தூக்கி நிறுத்த முடியாது என்பது  நிதர்சனம். கட்சியின்   பொதுக்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

செய்யப்பட்டு உள்ளது.  விஜயகாந்த் உடல்நலம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பிரேமலதாதான் இனிமேல் கூட்டணி குறித்து முடிவு எடுப்பார். ஆனால் அவர் பொதுவாக இறங்கி போகும் இயல்பு கொண்டவர் இல்லை. அதிக இடங்களை கேட்பார். அந்த இடங்களை கொடுக்கும் வரை வாதம் செய்வார். அரசியலில் கட்சிகள் இறங்கி செல்லும் . ஆனால் பிரேம  அவர் கேட்ட இடங்களில் விடாப்பிடியாக இருப்பார். அதனால் தேமுதிகவுடன் கூட்டணி வைப்பதே கடினம் என்ற நிலை அதிமுக , திமுகவிற்கு இருக்கும். ஏற்கனவே பிரேமலதா உடன் பேச்சுவார்த்தையில் எடப்பாடிக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டு உள்ளது. அதேபோல் துரைமுருகனுக்கும் கசப்பான அனுபவம் ஏற்பட்டு உள்ளது. இதனால் திமுக, அதிமுக இரண்டும் தேமுதிகவுடன் கூட்டணி வைப்பதைத் தவிர்க்கலாம்.  விஜயகாந்த்  இல்லாமல் கட்சியின் பிரசாரம் எப்படி இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. 

ரோஹித்தை வெளியேற்றிய மும்பை பாண்டியாவை கப்டனாக்கியது

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2024 ரி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் திகதி துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் கப்டனாக செயல்பட்டு வந்த நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் டிரேடிங் முறையில் வலுக்கட்டாயமாக வாங்கியது சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. கடந்த 2015இல் தம்முடைய ஐபிஎல் பயணத்தை மும்பையில் துவங்கிய ஹர்திக் பாண்டியா 2020 வரை 4 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக இந்தியாவுக்காக அறிமுகமாகி முதன்மை வீரராக உருவெடுத்த பாண்டியா    2021இல்  தடுமாறிய போது மும்பை  அவரைக்  கைவிட்டது.   15 கோடிக்கு  பாண்டியாவை வாங்கிய    குஜராத அவரை கப்டனாக்கியது.

குஜராத் அறிமுகமான  முதல் வருடத்தில்  முதல் வருடத்திலேயே சம்பியனாகியது   இரண்டாவது வருடத்தில்இறுதிப் போட்டிவரை குஜராத்தை அழைத்துச் சென்று இந்திய  அணியின்  கப்டனாகும் அளவுக்கு முன்னேறினார் பாண்டியா  பாண்டியாவின்  மீது மும்பையின்  கன் விழுந்தது.ஏற்கனவே 5 கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா இருக்கும் போது பாண்டியாவை மும்பை வலுக்கட்டாயமாக வாங்கியது.  அப்போதே ரோஹித்தைக்  கழற்ரிவிட மும்பை முடிவு செய்தது என்ர  செய்தி பரபரப்பானது.

இந்நிலையில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோஹித்  சர்மாவுக்கு பதிலாக 2024 சீசன் முதல் ஹர்திக் பாண்டியா தங்களுடைய புதிய கப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனால் 2013இல் கப்டனாக பொறுப்பேற்று 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் 5 கோப்பைகளை வென்று மும்பையை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க வைத்த ரோஹித் சர்மாவின் கப்டன்ஷிப்  பயணம் முடிவுக்கு வந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இதன் காரணமாக சுமார் இரண்டு இலட்சம் ரசிகர்கள்  மும்பை  அனியில் இருந்து வெளியாரினார்லள்

 ஐபிஎல் வரகாற்றில்   வரலாற்றின் வெற்றிகரமான கப்டனாக  சாதனை படைத்துள்ளார் ரோஹித். இருப்பினும் 2022, 2023 ஆகிய சீசன்களில் ரோஹித்தை தலைமையில் மும்பை படுமோசமான தோல்விகளை சந்தித்தது. மேலும் சமீபத்திய வருடங்களில் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டாகி ரோகித் ரோஹித்தைசர்மா மோசமான சாதனை படைத்து சுமாராக செயல்பட்டு வருகிறார்.

 தொலைநோக்கு பார்வையுடன் வருங்காலத்தை கருத்தில் கொண்டு பாண்டியா புதிய கப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது தலைமையில் ரோஹித் விளையாடுவார் என்றும் மும்பை கூறியுள்ளது. ஆனாலும் 5 கோப்பைகளை வென்று கொடுத்து விராட் கோலி (4994) டோனிக்கு (4660) பின் அதிக  ஓட்டங்கள் அடித்த கப்டனாக சாதனை படைத்த ரோகித் சர்மாவுக்கு இப்படி டாட்டா காட்டி பாண்டியாவை புதிய கப்டனாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது மும்பை ரசிகர்களிடமே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி காயமடையும்  பாண்டியாவின்  கைகளில் பொறுப்பை  ஒப்படைத்துள்ளது மும்பை நிர்வாகம்.

 

Friday, December 15, 2023

சூரியகுமார் சதம் இந்தியா வெற்றி

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக  ஜோகன்னஸ்பர்க்கில்  நடைபெற்ற 3 ஆவது ரி20 போட்டியில் இந்தியா  106 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரைச் சமப்படுத்தியது.  முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில்  7 விக்கெற்களை இழந்து 201    ஓட்டங்கள் எடுத்தது. சூரியகுமார் யாதவ் 100, ஜெய்ஸ்வால் 60 ஓட்டங்கள் எட்டுத்தனர்.  ரிக்கு சிங் 14 ஓட்டங்கள் எடுத்தார். இருவர்  ஓட்டம் எடுக்காது ஆட்டமிழந்தனர்.  ஏனையவர்கள்  ஒற்றை இலக்கத்துடன் வெளியேரினர்.

தென் ஆபிரிக்கா 13.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்கள் மட்டுமேஅடித்தது. டேவிட் மில்லர் அதிகபட்ஷமக 35 ஓட்டங்கள் எடுத்தார்.   இந்திய அணி 106  ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் ஒன்றுக்கு ஒன்று (1௧) என்ற கணக்கில் சமன் செய்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது அதிரடியாக விளையாடி சதம் விளாசிய கப்டன் சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

                                  பிறந்த நாளில் குல்தீப் சாதனை 

ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளைவீழ்த்தினார். கடைசி 7 பந்துகளில் 4 விக்கெட்டுகள் எடுத்த குல்தீப் பிறந்தநாளில் மொத்தம் 5 விக்கெட்டுகள் சாய்த்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 2.5 ஓவரிலேயே 17 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்த குல்தீப் அறிவிக்கப்படாத ஆட்டநாயகன் அசத்தினார் என்றே சொல்லலாம்.

டிசம்பர் 14ஆம் திகதி  29வது பிறந்த நாளை கொண்டாடிய குல்தீய   சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி டேவிட் மில்லர் உட்பட தன்னுடைய கடைசி 7 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்து இந்தியா மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதை விட இதன் வாயிலாக சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் தம்முடைய பிறந்தநாளில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர்,  சிறந்த பந்து வீச்சைப்  (5/17) பதிவு செய்தவர் ஆகிய 2 தனித்துவமான உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இற்கு முன் கடந்த 2021ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் வணிந்து ஹஸரங்கா தனது  பிறந்தநாளில் 9 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது.  2018ஆம் ஆண்டு மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் 5/24 விக்கெட்களை எடுத்த குல்தீப் யாதவ் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு உதவினார்.

 ஜோஹன்ஸ்பர்க், மான்செஸ்டர் ஆகிய  இரண்டு வெளிநாட்டு மைதானங்களில் நடைபெற்ற  டி20 போட்டிகளில் குல்தீப் 5 விக்கெட்களை எடுத்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் 2 முறை ஒரு போட்டியில் 5 விக்கெட்களை எடுத்த முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற பும்ரா, சஹால் போன்ற யாருமே செய்யாத மாபெரும் சாதனையையும் குல்தீப் யாதவ் படைதுள்ளார்.

                               மூன்று  வருடங்களில்  சூரியகுமார் உலக சாதனை 

சூரியகுமார் யாதவ் ரி20 யில் நான்கு சதங்கள் அடித்து   ரோஹித் சர்மா,கிளன் மேக்ஸ்வெல் ஆகியோருடன்  இணைந்துள்ளார். 2007இல் அறிமுகமான  ரோஹித்  சர்மா 16 வருடங்களில் 140  ஆவது  போட்டியில் 4 ஆவது சதத்தை அடித்தார். 2012இல் அறிமுகமான மேக்ஸ்வெல் 11 வருடங்களில் 92 ஆவது போட்டியில் 4 ஆவது சதத்தை  அடித்தார்.    2021இல் அறிமுகமான சூரியகுமார் வெறும் 3 வருடங்களுக்குள் 57  ஆவது போட்டியில் 4 ஆவது சதத்தை அடித்து  வியப்பை ஏற்படுத்தினார்.