2023 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் ஒக்டோபர் , நவம்பர் மாதங்களில் நடத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கத்தின் (POA) பிரதிநிதிகள் முன்மொழிந்துள்ளனர். தெற்காசிய ஒலிம்பிக் கவுன்சிலின் (SAOC) நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
இந்தியா,
பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலத்தீவுகள், பூட்டான் , இலங்கை ஆகிய ஏழு உறுப்பினர்
தேசிய ஒலிம்பிக் கமிட்டிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட SAOC கூட்டத்தில் முன்மொழியப்பட்ட
தேதிகள் குறித்த உடன்பாடு எட்டப்பட்டதாக அதே வெளியீடு தெரிவித்துள்ளது.
லாகூர், இஸ்லாமாபாத், சியால்கோட், பைசலாபாத் ,குஜ்ரன்வாலா ஆகிய நகரங்களில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. 1989 , 2004 இல் இஸ்லாமாபாத்தில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
No comments:
Post a Comment