தாய்மை அடையும் போது தான் ஒரு பெண் மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள். சகல வசதிகளும் உடைய ஒரு பெண் திருமணம் முடித்த பின்னும் தாயாகவில்லை என்றால் அவளைநோநாக்கி வீசப்படும் அவச் சொற்கள் மிக ஏராளம். ஒரு பெண் வயதுக்கு வரவில்லை என்றால் அவளுடைய பெற்றோருடயவேதனையையும் அவளூடையபிரச்சினைகளையும்வெளிப்படுத்தும் படம் தான் 1975 ஆம் ஆண்டு வெளியான தென்னங்கீற்று.
விஐயகுமாரும் சுஜாதாவும் ஒன்றாக படித்தவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு உண்டாகிறது. நட்பு காதலாக மாறுகிறது. சுஜாதாவின் வீட்டிலே வாடகைக்கு தங்குகிறார் விஜயகுமார். இவர்களின் காதல் சுஜாதாவின் பெற்றோருக்கு தெரியவருகிறது. சுஜாதாவின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். வயதுக்கு வராத பெண்ணுக்கு எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்றுகேட்கிறார்கள் சுஜாதாவின் பெற்றோர்.சுஜாதா வயதுக்கு வரவில்லை என்பது சுஜாதாவின் பெற்றோருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. இந்த உண்மையை தெரிந்த மூன்றாவது ஆளான விஜயகுமார் அதிர்ந்து விட்டார்.
சுஜாதாவின் குறையைத் தீர்ப்பதற்கு பிரபல வைத்தியர்களிடம் ஆலோசனை பெறுகிறார்கள்.சுஜாதாவை பரிசோதித்த வைத்தியர்கள் இது வைத்தியத்திற்கு அப்பால்பட்டது என்று கையை விரிக்கிறார். உள்ளங்கள் இணைவதே திருமணம். உடல்கள் இணைவது திருமணமல்ல என்பதை சுஜாதாவின் பெற்றோருக்கு விளங்கப்படுத்திய விஜயகுமார் சுஜாதாவை திருமணம் செய்கிறார்.
சுஜாதாவுக்கு எந்த குறையும் இல்லாது பார்க்கிறார் விஜயகுமார். கணவனை திருப்திபடுத்த முடியவில்லை என்ற மனக்குறையுடன் குடும்பம் நடத்தினார் சுஜாதா. ஒரு நாள்சுஜாதாவுக்கு அதிர்ச்சியான செய்தி கிடைக்கிறது. அந்த அதிர்ச்சியின் காரணமாக அவளது உடலில் மாறுதல் உண்டாகிறது. அவள் வயதுக்கு வந்துவிடுகிறாள். அந்த சந்தோதாஷமான செய்தியைகேகட்க விஜயகுமார் உயிருடன் இல்லை. விஜயகுமார் இறந்துவிட்டதாக கேள்விப்பட்ட அதிர்ச்சியால் சுஜாதாவின் உடல் குறை நீங்கியது.
விஜயமார், சுஜாதா, செந்தாமரை, கமல்ஹாசன், வி.ஆர்.திலகம்,ஹேமமாலினி, டைப்பிஸ்ட் கோபு, கிரிஜாதேவி ஆகியோர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியவர் பிரபல எழுத்தாளர் கோவி.மணிசேக"ரன். நாவலாக வெளிவந்து பரப்பரப்பாக பேசப்பட்ட இக்கதையை துணிச்ணிலுடன் படமாக்கினார்கள்.
ரமணி
மித்திரன் 18/02/12
Saturday, March 10, 2012
Tuesday, March 6, 2012
கொக்கு வெடி
மழை இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. வண்டுகளின்ரீங்கார ஒலிக்குப் போட்டியாக தவளைகள் அகோரமாக கோஷ்டிகானம் இசைத்தன. காரிருள் சூழ்;ந்த அவ்வேளையில் ஆங்காங்கே இருந்த காவற்கொட்டில்களின் லாம்புகள் கோலங்காட்டின. மணி ஓசையும், வெடிகளும், ஹோ ஹோ என்ற சத்தமும் இடையிடையே காற்றில் கலந்தன. நெல் அறுவடை நெருங்கியதால் முழுமையான பயனைப் பெறுவதற்கு தூங்காமல் இருந்தனர்.செல்லையா கறுத்தக் கோட்டைப் போட்டுக் கொண்டு தலையில் ஒரு துண்டைக் கட்டினான். ஐந்து புதுப்பற்றிகளைப் போட்டுவிட்டு இருட்டுக்குள் ரோச்சை அடித்து வெளிச்சம் ஓரிடத்தில் குவிந்திருக்கிறதா எனச்சரி பார்த்தான். சாம்பலுக்குள் இருந்த தோட்டாக்களை எடுத்து பொலித்தீன் பாக்கினுள் போட்டான். நெருப்புப் பொட்டியும் பீடிகளும் தோட்டாக்களுடன் ஒட்டிக்கொண்டன.
மூலையில் இருந்த துவக்கை எடுத்து கைவிளக்கு வெளிச்சத்தில் குறிபார்த்த பின்னர் குழல் முனையில் சுண்ணாம்பைப் பூசினான். அனைத்தையும் மீண்டும் ஒரு முறை சரிபார்த்த பின்னர் கைவிளக்கை அணைத்துவிட்டு காவற்கொட்டிலை விட்டு வெளியேறினான்.
பீடியை ருசித்தவாறு இருளைப் பார்த்துக் கொண்டிருந்தான் செல்வன். அவனுடைய காவற்கொட்டிலின் நடுவே பிரம்பு போன்ற மெல்லிய காட்டுத்தடிகளினால் கட்டப்பட்டசிறாம்பி இருந்தது. அதன் கீழே இருந்த நெருப்புச்சட்டி காவற்கொட்டிலை வெதுவெதுப்பாக்கியது. மூலையிலே இரண்டு பெரிய தகரங்களும், இரண்டு சிறிய கொட்டன்களும் இருந்தன. செல்வனின் காவற்கொட்டிலினுள் செல்லையா நுழைந்த அதே வேளை மழை பெரிதாகப் பெய்யத் தொடங்கியது.
"என்ன செல்லையா கையோடை மழையையும் கூட்டி வந்திட்டாய் போலை".
"வரவேண்டாம் எண்டு தான் சொன்னனான் பின்னாலை வந்திட்டுது. இந்தச் சிறாம்பியிலை கிடக்கிறன். ஒன்பது மணிபோலை எழுப்பிவிடு" எனக் கூறிவிட்டு காட்டுத் தடிகளினால் கட்டப்பட்ட சிறாம்பியில் படுத்தான். நெருப்புச் சட்டியின் வெதுவெதுப்பு அவனுக்கு இதமாக இருந்தது.
மழைவிட்டதும் செல்வனின் மனைவி மீனாட்சி சாப்பாட்டுடன் வந்தான். செல்லையாவை எழுப்பி சாப்பிடுமாறு கூறினான் செல்வன். அவன் முதலில் மறுத்தான். செல்வனும் மனைவியும் வற்புறுத்தியதனால் சாப்பிட்டான். சுடுறொட்டியும், கருவாடு போட்ட பூசனிக்காய்க் குழம்பும் செல்லையாவுக்கு மிகவும் பிடித்த சாப்பாடு. செல்லையாவுக்கு தாயின் நினைவு வந்தது.
செல்லையா படிக்க வேண்டும் என்று அவனது தாய் மீனாட்சி விரும்பினாள். செல்லையாவுக்கு படிப்பில் விருப்பம் இல்லை. மீனாட்சியின் கணவன் இன்னொருத்தியுடன் ஓடியதால் செல்லையாவை வளர்க்க தாய் மிகவும் கஸ்ரப்பட்டாள். ஆசிரியரின் வயலுக்கும் தோட்டத்துக்கும் காவலாளியாக செல்லையா சென்றதும் அவளது கஸ்ரம் ஓரளவு தீர்ந்தது. அருவி வெட்டும் போது பாம்பு கடித்து மீனாட்சி இருந்ததால் ஆசிரியரின் வீட்டிலேயே செல்லையா சரணடைந்தான். அதன் பின்னர் அவன் நிரந்தரக் காவலாளியாகினான்.
"செல்வன் என்ரை வயலிலையும் ஒரு கண் வைச்சிரு. அங்காலை ரத்தினத்துக்கும் சென்னனான்" எனக் கூறியபடி வேட்டைக்குத் தயாரானான் செல்லையா.
"நீ கவலைப்படாதை செல்லையா. நான் பாத்துக் கொள்ளுறன்" என்றான் செல்வன். ஏதாவது கிடைத்தால் தனக்கும் ஒரு பங்கு இறைச்சி கிடைக்கும் என்று செல்வன் எதிர்பார்த்தான்.
அம்மியான் மோட்டையில் மரை ஒன்று திரிவதாகக் கேள்விப்பட்ட செல்லையா அம்மியான் மோட்டையை நோக்கிச் சென்றான். மழை இருளிலும் பாதை தவறாது அரை மணித்தியாலத்தில் அம்மியான் மோட்டையைச் சென்றடைந்தான். அம்மியான் மோட்டையைச் சூழவுள்ள மரங்களில் பரண் கட்டப்பட்டிருந்தது. காற்று வளம் பார்த்தது ஒரு வீரை மரத்தின் பரணில் ஏறி வசதியாக இருந்தான் செல்லையா.இடது கையால் குறிபார்த்துச் சுடும் மிகத்திறமையான வேட்டைக்காரனான செல்லையா தனது முதலாவது வேட்டையை என்றைக்குமே மறந்ததில்லை. ஆசிரியருடன் வேட்டைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை செல்லையாவின் மனதில் இருந்தது. அதற்குரிய சந்தர்ப்பம் என்றைக்குமே கிடைத்ததில்லை. ஆசிரியர் தனது குடும்பத்துடன் ஊருக்குச் சென்ற ஒரு நாள் தனது நண்பர்களுடன் பகலில் வேட்டைக்குச் சென்றான் செல்லையா.
ஆசிரியருடன் அடிக்கடி வேட்டைக்குச் செல்வதாக செல்லையா கூறிய பொய்யை நம்பிய அவனது நண்பர்கள் செல்லையாவின் திறமையைப் பார்க்க அவனுடன் கூடச் சென்றனர். பாடசாலைக்குச் செல்வதால் தமக்கு வேட்டையைப் பற்றி எதுவுமே தெரியாது. வேட்டைக்குச் செல்லும் செல்லையா கொடுத்து வைத்தவன் என்று அவனது நண்பர்கள் நம்பினார்கள்.
செல்லையாவி; நல்ல காலம் எதிரே பெரியதொரு பன்றிக் கூட்டம் தென்பட்டது. செல்லையாவின் நண்பர்கள் ஆனந்தப்பட்டார்கள். ஒரு வேட்டையை அவர்கள் நேரடியாகக் காணும் முதலாவது சந்தர்ப்பம் இதுதான். சுடு சுடு என்று நண்பர்கள் அவசரப்படுத்தினார்கள். சுடத் தெரியாத செல்லையாவுக்கு கை கால் எல்லாம் நடுங்கியது.
ஏதோ ஓர் அசட்டுத்துணிவில் எல்லோரையும் மரங்களின் பின்னால் மறையும்படி கூறினான் செல்லையா. மரத்தின் பின்னால் மறைந்த செல்லையாவின் நண்பர்கள் மெதுவாக எட்டிப்பார்த்தார்கள். துவக்கை கமக்கட்டினுள் வைத்த செல்லையா குதிரையைத் தட்டினான். யாரோ துவக்கைப் பறித்தது போன்று உணர்ந்தான். கண்மூடித் திறப்பதற்குள் கையிலிருந்த துவக்கைக் காணவில்லை. வெடிச்சத்தம் கேட்டதும் பன்றிக் கூட்டம் கலைந்து ஓடியது.
செல்லையாவின் நண்பர்கள் மறைவிலிருந்து வெளியே வந்தார்கள். செல்லையாவுக்குப் பின்னால் கிடந்த துவக்கை ஒருவன் காட்டினான். அப்பொழுது தான் செல்லையாவுக்கு உயிர் வந்தது. துவக்கை அணைக்கத் தெரியாது வெடி வைத்ததை நினைத்தால் செல்லையாவுக்கு இப்போதும் சிரிப்பு வரும்.
நட்சத்திரங்கள் நிற்கும் நிலையைப் பார்த்த செல்லையா பன்னிரண்டு மணிதாண்டி இருக்கும் என்று நினைத்தான். மரையை இன்னும் காணவில்லை என்று சலித்துக் கொண்டான்.
செல்லையா மீண்டும் பழைய சிந்தனையில் ஆழ்ந்தான். கோயில் பொங்கல் முடிந்த மறுநாள் செல்லையாவும் வேறு சிலரும் இரவு கதைத்துக் கொண்டிருக்கையில் சுந்தரம் மூச்சிரைக்க ஓடிவந்தான்.
"செல்லையா அண்ணா செல்லையா அண்ணா அந்தப் பெரிய கலை வளவுக்கை நிக்குது உடனை வாங்கோ" என்றான் சுந்தரம்.
அவனை அனுப்பிவிட்டு ரோச் லைற்றையும் துவக்கையும் எடுத்துக் கொண்டு செல்வனுடன் சுந்தரத்தின் வளவு நோக்கிச் சென்றான் செல்லையா.
"என்ன செல்லையா தோட்டா இல்லை எண்டனி இப்ப என்னண்டு வெடி வைக்கப்போறாய்" என தனது சந்தேகத்தைக் கேட்டான் செல்வன்.
தயாராக வைத்திருந்த கட்டுத் துவக்கை வெடிக்க வைத்துவிட்டு ரோச்லைற்றை அங்கும் இங்கும் அடித்தான் செல்லையா. சிறிது நேரத்தில் சுந்தரத்தின் வீட்டுக்குச் சென்ற செல்லையா "நுரையீரல் வெடி தப்பாது. விடிஞ்சாப் போலை காட்டுக்கை போய்ப்பாப்பம்" என்றான். சிரிப்பை அடக்க வெகுவாக கஸ்ரப்பட்டான் செல்வன்.
விடிந்ததும் வேப்பங்குச்சியுடன் பல்லு விளக்கியபடி வயலுக்குச் சென்றான் செல்லையா. அப்போது எதிரே வந்தான் ரத்தினம்.
"என்ன செல்லையா கலை தப்பிட்டுது போலை. பசுபதி வேலைக்குப் போகேல்லை நாயளையும் கூட்டிக் கொண்டு காட்டுக்குப் போய்விட்டான்" என்றான் ரத்தினம். செல்லையா சிரித்துவிட்டுச் சென்றான்.
சிந்தனை கலைந்த செல்லையா வானத்தைப் பார்த்தான். மூன்று மணி இருக்கும் இனிமேல் மரைவராது என்பதைத் தெரிந்து கொண்ட செல்லையா மரத்திலிருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்தான்.
"நாளைக்கு யாழ்ப்பாணத்திலை இருந்து ஆக்கள் வருகினம். மான், மரை எண்டாலும் வேணும்"என வல்லிபுரம் முதலாளி கூறியது செல்வனின் மனதில் வந்து போனது. தாண்டிக் குளத்தை அண்மித்த செல்லையாவின் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் படர்ந்தன. ஜோஸப்பின் மாடுகள் செல்லையாவைக் கண்டதும் ஆசிரியரைக் கண்ட மாணவரைப் போன்று எழுந்து நின்றன. ஒன்றை ஒன்று பார்த்து "ம்மா" என்றன. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சில கன்றுகள் பாலைக் குடித்தன.
செல்லையாவின் துப்பாக்கி வெடித்ததும் மாடுகள் சிதறி ஓடின. வெடிபட்ட மாடு அலறியபடி காலைத் து}க்கிக் கொண்டுகாட்டுக்குள் ஓடியது. தனது துரதிஷ்டத்தை நினைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்ற செல்லையா தன்னையும் அறியாமல் படுத்துத் தூங்கிவிட்டான்.
"செல்லையா செல்லையா" விதானையாரின் குரல் கேட்டதும் துடித்துக் கொண்டு எழுந்த செல்லையா வெளியே போனான். அங்கே செல்லத்துரை விதானையார், மாட்டுக்கார ஜோஸப் இன்னும் இரண்டு மூன்று பேர் நின்றனர்.
"செல்லையா ராத்திரி வேட்டைக்குப் போனனிதானே?" விதானையார் கேட்டார்.
"ஓம் விதானையார்"
"என்ன மிருகம் கிடைச்சது"
"ஒண்டும் கிடைக்கேல்லை விதானையார்"
"தாண்டிக் குளத்திலை என்னத்துக்கு வெடி வைச்சனி?"
"கொக்கு கொக்கு" தன்னையும் அறியாமல் பதறினான் செல்லையா.
"கொக்கோ உண்மையைச் சொல்லு ஜோஸப்பின் மாட்டுக்குத் தானே வெடிவைச்சனி" என்று விதானையார் மிரட்டினார்.
"தெரியாமல் வெடி வைச்சிட்டன் அறுவடை முடிஞ்ச பிறகு காசு தாறன்" என்று செல்லையா கெஞ்சினான். செல்லையாவிடம் காசு வாங்குவதற்கு ஜோஸப் சம்மதித்தால் விதானை அதனைப் பெரிதாக்கவில்லை. ஜோஸப்பின் மாடு காட்டுக்குள் செத்திருக்கும் என செல்லையா நம்பினான்.
செல்லையாவும் பசுபதியும் பகலில் உடும்பு வேட்டைக்குச் சென்றனர். அப்போது அவர்களின் எதிரே செல்லையாவிடம் சூடுவாங்கிய ஜோஸப்பின் மாடு நின்றது. சூடுபட்ட காயத்திலிருந்து ஊனம் வடிந்து கொண்டிருந்தது. அந்தக்கால் நிலத்தில் பட்டும் படாமலும் இருந்தது. மாட்டின் பார்வையைச் சகிக்க முடியாத செல்லையா துப்பாக்கியைத் தூக்கி குறிபார்த்தான். என்ன நினைத்ததோ தெரியாது நொண்டியபடி காட்டுக்குள் ஓடி மறைந்தது மாடு.
செல்லையாவும் பசுபதியும் எதுவும் பேசாமல் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென செல்லையா அவலக்குரல் எழுப்பினார். ஜோஸப்பின் மாட்டின் கொம்பில் செல்லையா துடிப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார் பசுபதி.
ஜோஸப்பின் மாடு தலையை நாலா பக்கமும் சுழற்றியது. அப்போது மாட்டின் கொம்பிலிருந்த செல்லையா கீழே விழுந்தார். ஜோஸப்பின் மாடு மீண்டும் மீண்டும் தன் கொம்பி
னால் செல்லையாவைத் தாக்கியது. கோபம் தீர்ந்ததும் நொண்டியபடி மாடு காட்டை நோக்கிச் சென்றது. மாடு சென்றதும் செல்லையாவின் அருகில் சென்று பார்த்தான் பசுபதி, செல்லையாவின் உடலில் எந்த அசைவும் இல்லை.
சூரன்.ஏ.ரவிவர்மா
யாதும் 2011
Monday, March 5, 2012
வெற்றிக்களிப்பில் ஜெயலலிதா தோல்விப் பயத்தில் எதிர்க்கட்சிகள்
தமிழக அரசின் செல்வாக்குக்குச் சவால்விடும் சங்கரன் கோவில் இடைத் தேர்தல் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. 21 ஆம் திகதி இடைத் தேர்தல் முடிவு வெளியாகும். சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 40 வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். தமிழக சட்ட சபைத் தேர்தலின்போது விஜயகாந்துடனும் இடதுசாரிகளுடனும் கைகோர்த்து பிரமாண்டமான வெற்றியைப் பெற்று முதல்வர் அரியாசனத்தில் வீற்றிருக்கும் ஜெயலலிதா விஜயகாந்தையும் இடதுசாரிகளையும் கைவிட்டுத் தனது செல்வாக்கை நிலை நாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளõர்.சங்கரன்கோவில் இடைத் தேர்தல் ஜெயலலிதா கருணாநிதி, விஜயகாந்த், வைகோ ஆகியோருக்கு இடையேயான போட்டியாக இருக்குமே தவிர அவர்களின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களின் போட்டியாக இருக்காது. சட்ட சபைத் தேர்தலின்போது சங்கரன்கோவில் தொகுதியில் வெற்றி பெற்றதை விட அதிகப்படியான வெற்றியைப் பெற வேண்டும் என்பதில் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதற்கு முக்கியமானவர்கள் விஜயகாந்தும் இடதுசாரிகளும் என்பது வெளிப்படை. ஆனால் இதனை ஜெயலலிதா நிராகரித்துள்ளõர். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான அலையே தன்னை முதல்வராக்கியதாக கருதுகிறார் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான ஊழல் அலையும் ஜெயலலிதாவின் வெற்றிக்குப் பிரதான காரணம். இடதுசாரிகளும் விஜயகாந்தும் இல்லையென்றால் இவ்வளவு பிரமாண்டமான வெற்றியை ஜெயலலிதா பெற்றிருக்க முடியாது.
ஜெயலலிதாவின் சவாலை ஏற்று சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ள விஜயகாந்த் தனது செல்வாக்கை ஜெயலலிதாவுக்கு புரிய வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் போது நடைபெற்ற தேர்தல்களில் ஜெயலலிதாவுக்குச் சவாலாக இருந்தார் விஜயகாந்த். ஆயினும் சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. ஜெயலலிதாவின் சவாலுக்குப் பதிலளிப்பதற்காகவே தனது கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலமான கோட்டைகளில் சங்கரன்கோவில் தொகுதியும் ஒன்று. 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட சபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. அன்றைய தேர்தலின் போதும் சங்கரன்கோவில் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் வெற்றி பெற்றார். ஆகையினால் சங்கரன் கோவில் தொகுதியில் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில் உள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் செல்வாக்கைச் செல்லாக் காசாக்கப் போவதாக கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ள விஜயகாந்தால் வெற்றி பெற முடியாத அதேவேளை ஜெயலலிதாவின் செல்வாக்கைச் சிதறடிக்கவும் முடியாது.
சங்கரன்கோவில் எனது மண். இங்கு போட்டியிட்டு மூக்குடைய வேண்டாம் என்ற கோஷத்துடன் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் களமிறங்கியுள்ளார் வைகோ. வைகோவை முன்பொரு தடவை குப்புற விழுத்திய தொகுதி சங்கரன் கோவில் என்பதை மறந்துவிட்டு பிரதான கட்சிகளுக்கு சவால் விட்டு சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் களமிறங்கியுள்ளார் வைகோ. இடைத் தேர்தல் அறிவிப்பு முன்பே தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த வைகோவுக்கு வெற்றி மிகத் தூரத்திலேயே உள்ளது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்றுத் தனது இருப்பை வெளிப்படுத்த நினைக்கும் வைகோவின் எதிர்பார்ப்பு நிறைவேறக் கூடிய சூழ்நிலை இல்லை.
திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வியடைந்ததனால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்க்கவே திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பியது. வைகோவும் விஜயகாந்த்தும் தமது பலத்தை வெளிக்காட்டுவதற்கு சங்கரன்கோவில் இடைத் தேர்தலை காரணமாக்கியதால் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை நிரூபிப்பதற்காகவே சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார் கருணாநிதி.
தமிழக அமைச்சர் பட்டாளம் சங்கரன்கோவில் தொகுதியில் முகாமிட்டு பிரசாரத்தை நடத்துகிறது. அரச அதிகõரம் அத்து மீறல் தாராளமாக நடைபெறும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. தேர்தல் நடைபெற முன்பே வெற்றி நமதே என்ற எண்ணத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தொண்டர்கள் பிரசாரம் செய்கின்றனர். சங்கரன்கோவில் இடைத் தேர்தல் வெற்றியை ஜெயலலிதாவின் கையில் ஒப்படைப்போம் என்று கங்கணம் பூண்டுள்ளனர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்.
தமக்கிடையேயான பிரச்சினைகளையும் தலைமைத்துவப் போட்டிகளையும் புறத்தே ஓரம் கட்டி வைத்துவிட்டு சங்கரன் கோவில் இடைத் தேர்தல் வெற்றியை கருணாநிதியின் காலடியில் சமர்ப்பிப்பதற்காக ஸ்டாலினும் அழகிரியும் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்டாலின் அழகிரி ஆகியோருக்கிடையோன பிரச்சினை பெரிதாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறையும் அறிகுறி தெரியவில்லை. இவர்களின் பிரச்சினையை முடிவுக்குக் கெண்டு வருவதற்கு கருணாநிதி முயற்சி செய்யவில்லை. இவர்களின் பிரச்சினையால் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாகப் பிரிந்துள்ளது.ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் அழகிரிக்கு ஆதரவாகவும் ஒரு சில தலைவர்கள் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இன்னும் சிலர் இவர்கள் இருவர் பக்கமும் சாராது கருணாநிதியின் பின்னால் உள்ளனர். ஸ்டாலினுக்கு எதிராக வீரபாண்டி ஆறுமுகம் வெளிப்படையாக போர்க் கொடி தூக்கியுள்ளார். சங்கரன் கோயில் இடைத் தேர்தலின் பின்னர் ஸ்டாலின் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கிடையேயான பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கலாம்.
ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், வைகோ ஆகியோர் தமது பலத்தை வெளிக்காட்டுவதற்காகச் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். தமிழகத்தில் செல்வாக்கிழந்துள்ள பாரதீய ஜனதாக் கட்சியும் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. ஜெயலலிதா கருணாநிதி ஆகியோரின் உதவி இன்றி வைகோ விஜயகாந்த் ராமதாஸ் ஆகியோரே தமிழகத் தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளும் வீம்புக்காகத் தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது பாரதீய ஜனதா கட்சி.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 04/03/12
Saturday, March 3, 2012
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில்இரண்டாவது இடத்திற்கு கடும்போட்டி
வெற்றி நமதே என்ற நம்பிக்கையுடன் இடைத்தேர்தலுக்கு தயாராக உள்ளார் ஜெயலலிதா.
இழந்த பெருமையை மீட்டெடுக்க வைகோவும் விஜயகாந்த்தும் களத்தில்
இறங்கியுள்ளனர்
சங்கரன் கோவில் இடைத்தேர்தலினால் தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது நடைபெற்ற இடைத் தேர்தல்கள் அனைத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிரயோகம், பண பலம் என்பனவற்றின் மூலமே திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவதாக அன்றைய எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. திருமங்களம் தொகுதி இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி இருந்தன. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் இடைத்தேர்தல்களை புறக்கணித்தது. சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் நிலைமை மாறியுள்ளது. இப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் உள்ளது. திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சியையும் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்துள்ளது.
வெற்றி நமதே என்ற நம்பிக்கையுடன் சங்கரன் கோவில் இடைத்தேர்தலை சந்திக்கிறது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கு கடும்போட்டி ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, விஜயகாந்த் ஆகிய நான்கு தலைவர்களும் தமது பலத்தை நிரூபிக்கும் களமாக சங்கரன் கோவில் இடைத்தேர்தலைக் கருதுகிறார்கள். சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின்போது ஊழல் தலை விரித்தாடியது. அராஜகம் கோலோச்சியது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. மின் வெட்டினால் தமிழகம் இருண்டு போயுள்ளது என்ற பிரசாரத்தை முக்கிய ஆயுதமாகப் பாவித்து ஜெயலலிதா முதல்வரானார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அசைக்க முடியாத தூண்களில் ஒன்றாக இருந்த இராவணன் மீது ஊழல், கொலை முயற்சி, பாலியல் வல்லுறவு போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் மீது சுமத்தப்பட்ட நில அபகரிப்புக் குற்றச்சாட்டு சசிகலாவின் சகாக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மின் வெட்டு திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் போது இருந்ததை விட அதிகரித்துள்ளது. தேர்தல் கால வாக்குறுதி என்பனவற்றை ஜெயலலிதா இன்னமும் நிறைவேற்றவில்லை. சமச்சீர் கல்வித்திட்டம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், புதிய தலைமைச் செயலகம் ஆகியவற்றை மாற்ற தமிழக அரசின் முடிவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக அரசின் செயற்பாடுகள் நீதிமன்றத்தாலும் பொதுமக்களாலும் விமர்சிக்கப்பட்டுள்ளன என்றாலும் வெற்றி நமதே என்ற நம்பிக்கையுடன் சங்கரன்கோவில் இடைத்தேர்தலைச் சந்திக்க உள்ளார் ஜெயலலிதா.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி பீடம் ஏறியதால் கடந்த ஒக்டோபரில் நடத்த திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் படுதோல்வி அடைந்தது. ஆகையினால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் போடியிடாது என்றே எதிர்பார்க்கப்பட்டது. தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய வைகோ இழந்த பெருமையை மீண்டும் பெற வேண்டும் என்ற சமரசத்துடன் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தனது வேட்பாளருடன் களம் இறங்கியுள்ளார். ஜெயலலிதாவின் சவாலை ஏற்று விஜயகாந்த் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வேட்பாளரை அறிவித்துள்ளார். வைகோவையும் விஜயகாந்தையும் தோற்கடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே திராவிட முன்னேற்றக் கழகம் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் களமிறங்கியுள்ளது.
தமிழக சட்ட சபையில் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலையிலுள்ளார் கருணாநிதி. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக்கழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இரண்டாவது இடத்தை இழக்கக்கூடாது என்ற எண்ணத்தில் களமிறங்குகிறது திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் யார்? என்ற போட்டியில் ஸ்டாலினும் அழகிரியும் முரண்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கழகத்தின் எதிர்கால நலனுக்காக இருவரும் இணைந்து சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் பிரசாரம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ளது.
வைகோவின் பலமிக்க கோட்டைகளில் சங்கரன் கோவில் தொகுதியும் ஒன்று. வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி இத்தொகுதியிலே தான் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறுவதற்கு சங்கரன் கோவில் தொகுதியை ஒதுக்காததும் ஒரு காரணம். வைகோவுக்கு சங்கரன்கோவில் தொகுதியில் கணிசமான வாக்கு வங்கி உண்டு. சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் ஆவலில் உள்ளார் வைகோ. ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மனக் கசப்பினால் தமிழக சட்ட சபைத் தேர்தலைப் புறக்கணித்தார் வைகோ. தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போடியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்று தனது கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபித்தார் வைகோ.
2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான கட்சி ஒன்றுடன் கூட்டணி சேர வேண்டிய நிலையுள்ளதால் தனது கட்சியின் செல்வாக்கை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார் வைகோ. சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுவிட்டால் இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிக தொகுதிகளைப் பெறலாம் என்று கருதுகிறார் வைகோ. 1996ஆம் ஆண்டு மார்க்ஸ்சிஸ்ட், ஜனதாதளம் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சுமார் 30 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. 2001ஆம் ஆண்டு சங்கரன் கோவிலில் தனித்துப் போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சுமார் 21 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. இந்த முறையும் தனித்துப் போட்டியிடும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அதிக வாக்குகளைப் பெற வேண்டும். குறைவான வாக்குகளைப் பெற்றால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.
தமிழகத் தேர்தல்களின் போது கூட்டணி இன்றிப் போட்டியிட்டு ஜெயலலிதாவுக்கு தொல்லை கொடுத்த விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்த பின்னர் தனது சுயத்தை இழந்துள்ளார். கூட்டணித் தலைவர்களை அவமானப்படுத்துவதில் ஜெயலலிதாவுக்கு நிகர் யாரும் இல்லை. விஜயகாந்த்தை அவமானப்படுத்தியது போன்று வேறு யாரையும் இவ்வளவு தூரம் அவமானப்படுத்தவில்லை. துணிவிருந்தால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுமாறு விஜயகாந்துக்கு அறை கூவல் விடுத்தார் ஜெயலலிதா. மிக நீண்ட தயக்கத்தின் பின்னர் தனது கட்சியின் வேட்பாளரை அறிவித்தார் விஜயகாந்த்.
ஜெயலலிதா விதித்த வலையில் வசமாக விழுந்துள்ளார் விஜயகாந்த். ஜெயலலிதாவின் சவாலை புறந்தள்ளி தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியிருந்தால் ஜெயலலிதாவின் கோபதாபங்கள் விஜயகாந்த்தைச் சிதைத்திருக்கும். ஜெயலலிதாவுடன் இணைந்ததனால்தான் விஜயகாந்த்துக்கு அரசியல் அந்தஸ்து கிடைத்தது. விஜயகாந்தின் கட்சிக்கு தேர்தல் ஆணையகம் அங்கீகாரம் அளித்தது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற உச்சாணிக் கொப்பில் விஜயகாந்தை ஏற்றி வைத்த ஜெயலலிதா சங்கரன்கோவில் இடைத்தேர்தலின் மூலம் விஜயகாந்தைக் புறந்தள்ளியுள்ளார்.
2006ஆம் ஆண்டு தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது சங்கரன்கோவில் தொகுதியில் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கட்சி சுமார் ஐந்தாயிரம் வாக்குகளைப் பெற்றது. இப்போது நடைபெறும் தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுத் தனது செல்வாக்கை நிலை நாட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் விஜயகாந்த். இடது சாரிகள் விஜயகாந்த்துக்கு துணையாக உள்ளனர் என்றாலும் இரண்டவாது இடம் மிகத் தொலைவிலேயே உள்ளது.
சங்கரன்கோவில் தொகுதியில் பார்வாட் பிளாக், புதிய தமிழகம் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் கணிசமான வாக்கு உள்ளது. இந்த இரண்டு கட்சிகளையும் தம் பக்கம் இழுப்பதற்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றன. 2006ஆம் ஆண்டு சங்கரன்கோவில் தொகுதியின் சமாஜவாதி சின்னத்தில் போட்டியிட்ட புதிய தமிழகம் சுமார் எட்டாயிரம் வாக்குகளைப் பெற்றது. அ@த அளவில் கார்த்திக் தலைமையிலான பார்வாட் பிளாக் கட்சி 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்று விஜயகாந்தின் கட்சியை விட இந்த இரண்டு கட்சிகளும் அதிக வாக்குகளை பெற்றதால் இவற்றின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புதிய தமிழகத் தலைவர் டாக்டர் கிருஷ்ண"வாமி யும், கார்த்திக்கும், ஜெயலலிதாவுக்கும் மிக நெருக்கமாக இருந்தார்கள். இவர்கள் இருவரையும் கவனத்தில் எடுக்காது ஜெயலலிதா சங்கரன்கோவில் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார். ஆகையினால் எதிர்க்கட்சிகள் இவர்கள் இருவருக்கும் வலை வீசி உள்ளனர். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு வைகோவும் இடதுசாரிகளும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி யடைந்தன. எதிர்க்கட்சிகள் பிரிந்து இருப்பதனால் ஜெயலலிதாவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
வர்மா,
இழந்த பெருமையை மீட்டெடுக்க வைகோவும் விஜயகாந்த்தும் களத்தில்
இறங்கியுள்ளனர்
வெற்றி நமதே என்ற நம்பிக்கையுடன் சங்கரன் கோவில் இடைத்தேர்தலை சந்திக்கிறது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கு கடும்போட்டி ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, விஜயகாந்த் ஆகிய நான்கு தலைவர்களும் தமது பலத்தை நிரூபிக்கும் களமாக சங்கரன் கோவில் இடைத்தேர்தலைக் கருதுகிறார்கள். சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின்போது ஊழல் தலை விரித்தாடியது. அராஜகம் கோலோச்சியது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. மின் வெட்டினால் தமிழகம் இருண்டு போயுள்ளது என்ற பிரசாரத்தை முக்கிய ஆயுதமாகப் பாவித்து ஜெயலலிதா முதல்வரானார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அசைக்க முடியாத தூண்களில் ஒன்றாக இருந்த இராவணன் மீது ஊழல், கொலை முயற்சி, பாலியல் வல்லுறவு போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் மீது சுமத்தப்பட்ட நில அபகரிப்புக் குற்றச்சாட்டு சசிகலாவின் சகாக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மின் வெட்டு திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் போது இருந்ததை விட அதிகரித்துள்ளது. தேர்தல் கால வாக்குறுதி என்பனவற்றை ஜெயலலிதா இன்னமும் நிறைவேற்றவில்லை. சமச்சீர் கல்வித்திட்டம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், புதிய தலைமைச் செயலகம் ஆகியவற்றை மாற்ற தமிழக அரசின் முடிவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக அரசின் செயற்பாடுகள் நீதிமன்றத்தாலும் பொதுமக்களாலும் விமர்சிக்கப்பட்டுள்ளன என்றாலும் வெற்றி நமதே என்ற நம்பிக்கையுடன் சங்கரன்கோவில் இடைத்தேர்தலைச் சந்திக்க உள்ளார் ஜெயலலிதா.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி பீடம் ஏறியதால் கடந்த ஒக்டோபரில் நடத்த திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் படுதோல்வி அடைந்தது. ஆகையினால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் போடியிடாது என்றே எதிர்பார்க்கப்பட்டது. தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய வைகோ இழந்த பெருமையை மீண்டும் பெற வேண்டும் என்ற சமரசத்துடன் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தனது வேட்பாளருடன் களம் இறங்கியுள்ளார். ஜெயலலிதாவின் சவாலை ஏற்று விஜயகாந்த் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வேட்பாளரை அறிவித்துள்ளார். வைகோவையும் விஜயகாந்தையும் தோற்கடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே திராவிட முன்னேற்றக் கழகம் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் களமிறங்கியுள்ளது.
தமிழக சட்ட சபையில் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலையிலுள்ளார் கருணாநிதி. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக்கழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இரண்டாவது இடத்தை இழக்கக்கூடாது என்ற எண்ணத்தில் களமிறங்குகிறது திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் யார்? என்ற போட்டியில் ஸ்டாலினும் அழகிரியும் முரண்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கழகத்தின் எதிர்கால நலனுக்காக இருவரும் இணைந்து சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் பிரசாரம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ளது.
2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான கட்சி ஒன்றுடன் கூட்டணி சேர வேண்டிய நிலையுள்ளதால் தனது கட்சியின் செல்வாக்கை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார் வைகோ. சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுவிட்டால் இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிக தொகுதிகளைப் பெறலாம் என்று கருதுகிறார் வைகோ. 1996ஆம் ஆண்டு மார்க்ஸ்சிஸ்ட், ஜனதாதளம் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சுமார் 30 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. 2001ஆம் ஆண்டு சங்கரன் கோவிலில் தனித்துப் போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சுமார் 21 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. இந்த முறையும் தனித்துப் போட்டியிடும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அதிக வாக்குகளைப் பெற வேண்டும். குறைவான வாக்குகளைப் பெற்றால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.
தமிழகத் தேர்தல்களின் போது கூட்டணி இன்றிப் போட்டியிட்டு ஜெயலலிதாவுக்கு தொல்லை கொடுத்த விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்த பின்னர் தனது சுயத்தை இழந்துள்ளார். கூட்டணித் தலைவர்களை அவமானப்படுத்துவதில் ஜெயலலிதாவுக்கு நிகர் யாரும் இல்லை. விஜயகாந்த்தை அவமானப்படுத்தியது போன்று வேறு யாரையும் இவ்வளவு தூரம் அவமானப்படுத்தவில்லை. துணிவிருந்தால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுமாறு விஜயகாந்துக்கு அறை கூவல் விடுத்தார் ஜெயலலிதா. மிக நீண்ட தயக்கத்தின் பின்னர் தனது கட்சியின் வேட்பாளரை அறிவித்தார் விஜயகாந்த்.
ஜெயலலிதா விதித்த வலையில் வசமாக விழுந்துள்ளார் விஜயகாந்த். ஜெயலலிதாவின் சவாலை புறந்தள்ளி தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியிருந்தால் ஜெயலலிதாவின் கோபதாபங்கள் விஜயகாந்த்தைச் சிதைத்திருக்கும். ஜெயலலிதாவுடன் இணைந்ததனால்தான் விஜயகாந்த்துக்கு அரசியல் அந்தஸ்து கிடைத்தது. விஜயகாந்தின் கட்சிக்கு தேர்தல் ஆணையகம் அங்கீகாரம் அளித்தது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற உச்சாணிக் கொப்பில் விஜயகாந்தை ஏற்றி வைத்த ஜெயலலிதா சங்கரன்கோவில் இடைத்தேர்தலின் மூலம் விஜயகாந்தைக் புறந்தள்ளியுள்ளார்.
2006ஆம் ஆண்டு தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது சங்கரன்கோவில் தொகுதியில் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கட்சி சுமார் ஐந்தாயிரம் வாக்குகளைப் பெற்றது. இப்போது நடைபெறும் தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுத் தனது செல்வாக்கை நிலை நாட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் விஜயகாந்த். இடது சாரிகள் விஜயகாந்த்துக்கு துணையாக உள்ளனர் என்றாலும் இரண்டவாது இடம் மிகத் தொலைவிலேயே உள்ளது.
சங்கரன்கோவில் தொகுதியில் பார்வாட் பிளாக், புதிய தமிழகம் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் கணிசமான வாக்கு உள்ளது. இந்த இரண்டு கட்சிகளையும் தம் பக்கம் இழுப்பதற்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றன. 2006ஆம் ஆண்டு சங்கரன்கோவில் தொகுதியின் சமாஜவாதி சின்னத்தில் போட்டியிட்ட புதிய தமிழகம் சுமார் எட்டாயிரம் வாக்குகளைப் பெற்றது. அ@த அளவில் கார்த்திக் தலைமையிலான பார்வாட் பிளாக் கட்சி 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்று விஜயகாந்தின் கட்சியை விட இந்த இரண்டு கட்சிகளும் அதிக வாக்குகளை பெற்றதால் இவற்றின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புதிய தமிழகத் தலைவர் டாக்டர் கிருஷ்ண"வாமி யும், கார்த்திக்கும், ஜெயலலிதாவுக்கும் மிக நெருக்கமாக இருந்தார்கள். இவர்கள் இருவரையும் கவனத்தில் எடுக்காது ஜெயலலிதா சங்கரன்கோவில் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார். ஆகையினால் எதிர்க்கட்சிகள் இவர்கள் இருவருக்கும் வலை வீசி உள்ளனர். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு வைகோவும் இடதுசாரிகளும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி யடைந்தன. எதிர்க்கட்சிகள் பிரிந்து இருப்பதனால் ஜெயலலிதாவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
வர்மா,
சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு29/02/12
Thursday, February 23, 2012
தடம் மாறிய தமிழ்ப்படங்கள்23
மகனுக்கு மனைவியாக வந்தவளை அடைய துடிக்கும் காமுகனின் கதை தான் 1936 ஆம் ஆண்டு வெளியான நவீன சாரங்க தரா. குடும்ப உறவைக் கேள்விக்குறியாக்கிய இப்படம் அன்றைய ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.அஸ்திரபுரத்து மன்னன் நரேந்திரன்(எஸ்.எஸ்.மணி பாகவதர்) தன் மகன்சாரங்க தராவுக்கு(எம்.கே.தியாகராஜ பாகவதர்) திருமணம் செய்வதற்கு முடிவு செய்கிறார். தனக்கு பிறகு நாட்டை ஆட்சி செய்யப்போகும் மகனுக்கு ஏற்ற பெண்ணை தேடும் பொறுப்பை ராஜ குருவிடம் ஒப்படைக்கிறார். மன்னனின் ஆசையை நிறைவேற்றுவதற்கு புறப்படுகிறார் ராஜகுரு. சாரங்க தராவுக்கு ஏற்ற பெண்ணைத் தேடி பல நாடுகளுக்கு அலைந்த ராஜகுரு. சித்திராங்கியை கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். தனது நாட்டு இளவரசன் சாரங்க தராவுக்கு ஏற்ற பெண் சித்திராங்கி தான் என்று முடிவு செய்கிறார்.
சித்திராங்கியின் தகப்பன் சித்திராங்க ராஜனிடம்சென்று தன்னை அறிமுகப்படுத்தி தனது பயணத்தின் காரணத்தைக் கூறுகிறார் ராஜகுரு. தனது நாட்டு இளவரசன் சாரங்க தராவுக்கு ஏற்ற இளவரசி சித்திராங்கி தான் என்று கூறுகிறார். சாரங்க தராவின் ஓவியத்தை பார்த்த சித்திராங்கி தன் மனதைப் பறிகொடுக்கிறாள். தந்தையின் அனுமதியுடன் அஸ்தனாபுரம் நோக்கி ராஜகுருவுடன் செல்கிறாள் சித்திராங்கி.
இளவரசன்சாரங்க தராவை எதிர்பார்த்து அஸ்தனாபுரத்து அந்தபுரத்தில் இருந்த இந்திராங்கியை பார்ப்பதற்குச் சென்ற மன்னன் நரேந்திரன் அவளது அழகில் மயங்கிவிடுகிறார். மருமகளாக வந்தவளை மனைவியாக்க ஆசைப்பட்டான். தன் விருப்பத்தைச் சித்திராங்கியிடம் கூறுகிறான். தான் ஆபத்தில் சிக்கி இருப்பதை உணர்ந்த சித்திராங்கி தான் விரதம் இருப்பதாகப் பொய்சொல்லி விரதம் முடிந்ததும் ஏற்றுக் கொள்வதாகக் கூறுகிறாள். சித்திராங்கி கூறிய பொய்யை உண்மையென நம்பிய மன்னன் சந்தோஷத்துடன் தன் இருப்பிடம் செல்கிறார்.
சாரங்க தராவும் சித்திராங்கியும் ஒரு நாள் சந்திக்கின்றனர். இதனை கண்ட மன்னன் சாரங்க தராவை சிறையிலடைத்து அவனது கைகளை வெட்டுகிறான். மன்னனின் சபல புத்தியை அறிந்த மக்கள் மன்னனுக்கு எதிராக கிளர்ந்தெழுகிறனர். திடீரென சிறையில் தோன்றிய சந்நியாசினி சாரங்க தராவுக்கு கைகளை கொடுத்து சாரங்க தராவையும் சித்திராங்கியையும் சேர்த்து வைக்கிறார்.
பவளக் கொடிக்கு பின் எம்.கே.தியாராஜ பாகவதர் நடித்த இரண்டாவது படம் நவின சாரங்க தரா. டைரக்ஷன் கே.சுப்பிரமணியம். பாபநாசம் சிவன் இப்படத்துக்காக 41 பாடல்களை எழுதினார். கல்கத்தா மிஸ் கோமளா பாட்டியின் குரூப் டான்ஸ் பார்க்கத்தக்கது என்ற வாசகத்துடன் விளம்பரம் செய்யப்பட்டது. விபரீதமான கதை என்றாலும் ரசிகர்களின் பேராதரவுடன் 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடியது. 1953 ஆம் ஆண்டு இப்படத்திற்கு மறு தணிக்கை செய்யப்பட்டது.
வள்ளித் திருமண நாடகத்தில் தனது பிரபலமான பாடலான நளினகுமாரி நடன சிங்காரி என்ற பாடலைசாரங்க தராவில் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என்று எம்கேக.தியாகராஜ பாகவதர் விரும்பினார். இயக்குநர் கே.சுப்பிரமணியம் அதனை விரும்பவில்லை. சக்தியிடமிருந்துவேல் பெறுவதற்காக முருகன் பாடும் பாடல் நம் படத்திற்கு பொருந்தாது என்றார். இதனால் இருவருக்கும் சிறு அபிப்பிராய பேதம் ஏற்பட்டது. அரை மனதுடன் இயக்குநர் ஒப்புக்கொண்டார் படம் வெளியானதும் சிவபெருமான் கிருபை வேண்டும் என்று பாகவதர் பாடிய பாடல் வெற்றிபெற்றது.
இதே காலகட்டத்தில் கொத்தமங்கலம் சீனு சாரங்க தராவாகவும், டி.எம்.சாரதாம்பாள் சித்திராங்கியாகவும் நடித்தசாரங்க தரா என்ற படம் வெளியாகிதோதால்வியடைந்தது.
ரமணி
மித்திரன்11/02/12
Wednesday, February 22, 2012
தடம் மாறிய தமிழ்ப்படங்கள்22
அழகான கிராமத்துப் பெண் அழகில்லாத கிராமத்தவனை மணப்பதனால் ஏற்பட்ட உணர்வுப் போராட்டமே ரோஜாப்பூ ரவிக்கைக்காரி.
வண்டிச்சோலை என்ற அழகான கிராமத்தில்செம்பட்ட என்ற இளைஞன். அந்த ஊரில் உள்ள அனைவரும் அவனை செம்பட்ட என்றே அழைப்பார்கள். அழுக்கான உடையும் அவலட்சணமாக உள்ள அவனை முதன் முதலில் பார்ப்பவர்கள் வெறுத்து ஒதுக்குவார்கள். அந்த கிராமத்திலுள்ள சகலரின்தேவைகளையும் நிறைவேவற்றுபவன். அக்கிராமமக்கள் அவனிடத்தில் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு செம்பட்டபோபாகும்போது தமக்குதேதவையானவைகளை சகலரும் சொல்லி விடுவார்கள். அவர்கள் சொல்லிவிட்ட பொருட்களை மறக்காமல் வாங்கி வந்து அவர்களிடம் கொடுப்பான் செம்பட்ட.
செம்பட்டயாக சிவகுமார் மிக இயல்பாக நடித்தார். சிவகுமாரின் மனைவி தீபா மிகவும் அழகானவள். தன் அழகு பற்றி மிகப் பெருமைக் கொள்வாள். தன் கணவன் அழகற்றவன் என்ற எண்ணம் தீபாவின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. வெறுப்புடனேயே கணவனுடன் வாழ்ந்து வந்தாள் தீபா. அந்த கிராமத்துக்கு வன இலாகா அதிகாரியாக வருகிறார் சிவச்சந்திரன். சிவச்சந்திரனின் அழகும் நாகரிக நடை உடை பாவனையும் தீபாவைக் கவர்ந்துவிட்டது.
தீபாவும் சிவச்சந்திரனும் நெருங்கி பழகுகின்றார்கள். சிவச்சந்திரனின் அழகில் மயங்கிய தீபா கால போக்கில் சிவச்சந்திரனிடம் தன்னை@ய இழக்கிறாள். தீபாவுக்கும் சிவச்சந்திரனுக்கும் இடையேயான உறவு பற்றி ஊர் மக்களுக்கு தெரிய வருகிறது. தீபாவைப் பற்றி சிவகுமாரிடம் ஊர் மக்கள் கூறுகின்றனர். தன் மனைவி மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள சிவகுமார். அவற்றை நம்பவில்லை. சிவச்சந்திரனுடன் தீபா ஊரை விட்டு ஓடியதால் அதிர்ச்சியில் சிவகுமார்தற்கொலைசெய்கிறார் இறந்துவிடுகிறார்.
சிவகுமார், தீபா, சிவச்சந்திரன், வினு சக்கரவர்த்தி, ஹெரான் ராமசாமி ஆகியோர் நடித்தனர். சிவகுமாரின் 100 வது படமான ரோஜாப்பூ ரவிக்கைக்காரி 100 நாட்கள் ஓடி வெற்றிவிழா கொண்டாடியது. வசனம் கிருஷ்ணா இயக்கம் இரட்டையர் தேவாஜ்மோகன்.
புலமைப் பித்தன், கங்கை அமரன் ஆகியோரின் பாடல்களுக்கு இமை அமைத்தவர் இளையராஜா. வெத்தல வெத்தல வெத்தலயோ, மாமன் ஒரு நாள் மல்லிகை பூ கொடுத்தான், என்னுள் எங்கோ ஏங்கும் கீதம், உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி உச்சி மலைப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.
ரமணி
மித்திரன் 04/02/12

Sunday, February 19, 2012
ஸ்டாலினுக்குப் போட்டியாகக்களமிறங்கும் அழகிரி
அழகிரி அரசியலுக்கு வரும் வரை அண்ணன், தம்பி உறவு சுமுகமாக இருந்தது. அழகிரியின் ஆசை அதிகரிக்க தி.மு.க. மெதுவாகப் பிரியத் தொடங்கிவிட்டது.
பெங்களூரில் நடக்கும் வழக்கின் ஜெயலலிதாவின் மீதான பிடி இறுகியதால் அரச வழக்கறிஞருக்கு நெருக்குதல் அதிகமானது
திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் இருக்கும் பிரச்சினைகள் பெரும் பூதங்களாக வெளிவரத் தொடங்கிவிட்டன. அழகிரி அரசியலுக்கு வரும்வரை ஸ்டாலினுக்கு போட்டியாக கழகத்தினுள் யாருமே இல்லை. தனக்குப் பின் ஸ்டாலின் தான் என்ற அசையாத நம்பிக்கை வைத்திருந்த கருணாநிதியின் எண்ணத்தில் அழகிரியின் அதிரடி அறிக்கைகள் சலனத்தை ஏற்படுத்தின. மாணவப் பருவத்தில் இருந்தே அரசியலில் ஆர்வம் காட்டியவர். பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றவர். ஸ்டாலின் கருணாநிதியின் மகன், மதுரையில் கட்சியை வளர்த்தவர் என்ற தகுதியுடன் அசியல் அரங்கில் அடி எடுத்து வைத்தவர். அழகிரி அரசியலுக்கு வரும்வரை அண்ணன் தம்பி என்ற உறவு சுமுகமாகவே இருந்தது. அழகிரியின் ஆசை அதிகரிக்க திராவிட முன்னேற்றக் கழகம் மெது மெதுவாகப் பிரியத் தொடங்கியது.
கருணாநிதி இருக்கும்வரை அடுத்தத் தலைவர் யார் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்பதில் உறுதியாக இருப்பவர் அழகிரி. அழகிரிக்கு ஆதரவாக ஒரு சில தலைவர்கள் இருந்தாலும் ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியை முன்னிறுத்துவதற்கு வெளிப்படையாக எவரும் கருத்துச் சொல்வதில்லை. ஸ்டாலினுக்கு எதிராகவும் அழகிரிக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்து கழகத்தினுள் புயலைக் கிளப்பி உள்ளார் மூத்த தலைவர்களில் ஒருவரான வீர பாண்டி ஆறுமுகம். பொதுக் குழுவில் சிறிய இந்துக் குலத்துச் சிங்கம் ஸ்டாலினுக்கு எதிராகத் தன் மகனைக் களமிறக்கி மூக்குடைபட்டு உள்ளது.
கட்சியின் மிகப் பெரிய பலங்களில் ஒன்று இளைஞர் அணி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணிக்கு புது இரத்தம் பாய்ச்சுவதற்காக மாவட்டம் தோறும் நேரில் சென்று நேர்முகப் பரீட்சை நடத்தி வருகிறார் ஸ்டாலின். கட்சித் தலைவர்கள் மேடை ஏறிப் பேசுவார்கள். அவர்களின் பேச்சில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அந்தக் கூட்டங்களைச் சிறப்பாக செய்து முடிக்க இளைஞர் பட்டாளத்தின் உதவி கண்டிப்பாகத் தேவை. கட்சித் தலைவர் என்ற சிம்மாசனத்தில் தான் அமரும் போது இளைஞர் அணி பூரண ஆதரவு வழங்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் விருப்பம். ஸ்டாலினின் இந்த எண்ணத்துக்கு ஆப்பு வைக்க முயற்சித்து அகப்பட்டுக் கொண்டார் வீரபாண்டி ஆறுமுகம்.
சேலம் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான நேர்முகத் தேர்வு வீரண்பாண்டி ஆறுமுகத்தின் மகனின் தலைமையில் நடைபெறும் என்று வீரபாண்டி ஆறுமுகன் தன்னிச்சையாக அறிவித்தார். வீரபாண்டி ஆறுமுகத்தின் இந்த அறிவிப்பு மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் விழித்துக் கொண்டது கட்சித் தலைமை. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக எவரும் இளைஞர் அணி நிர்வாகிகளைத் தெரிவு செய்யக் கூடாது என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்ப் பத்திரிகையான முரசொலியில் அறிக்கை பிரசுரமானது. முரசொலியில் பிரசுரமான அறிக்கையைப் படித்ததும் இளைஞர் அணியில் சேர விரும்புபவர்களின் விண்ணப்பத்தைத் தான் பெறப் போகிறேன். புதிய இளைஞர் அணியினர் தெரிவு செய்யவில்லை என்று கரணம் அடித்தார் வீரபாண்டி ஆறுமுகன்.
வீரபாண்டி ஆறுமுகத்துடன் தொலைபேசியில் கதைத்து சேலம் இளைஞர் தேர்வை நிறுத்தும்படி உத்தரவிட்டிருக்கலாம் அல்லவீரபாண்டி ஆறுமுகத்தை நேரில் அழைத்து இப்படி செய்ய வேண்டாம் என்று கூறி இருக்கலாம். கட்சித் தலைவருக்கு எதிராக நடக்க வேண்டாம் என்று முரசொலியில் பிரசுரமான அறிக்கை வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மட்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அல்ல. ஸ்டாலினுக்கு எதிராக யாரும் எதுவும் செய்யக் கூடாது என்று பகிரங்கமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையே இது. ஸ்டாலினை எதிர்த்தால் கட்சியிலிருந்து வெளியேற்றப்படலாம் என்ற எச்சரிக்கை வெளியான அதேவேளை, அழகிரியின் பேட்டி கிலியை உண்டாக்கி உள்ளது.
தலைவர் இருக்கும்வரை அடுத்த தலைவர் யார் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அடித்துக் கூறி வந்த அழகிரி தலைமையில் பொறுப்பை ஏற்கத் தயார் என்று பேட்டியளித்து ஸ்டாலினுக்கு எதிரான தனது போட்டியைப் பகிரங்கப்படுத்தியுள்ளார். ஸ்டாலினுக்கு வழிவிட்டு ஒதுங்கி இருக்க வேண்டிய சந்தர்ப்பங்களை கருணாநிதி விட்டு விட்டார். அரசியலை விட்டு ஒதுங்க முடியாத சூழ்நிலைக் கைதியாக உள்ளார் கருணாநிதி. சமாதானம், ஒத்துப்போதல், இணங்கி நடத்தல் என்பன அழகிரிக்கு பிடிக்காத விடயங்கள். தலைமைப் பதவிக்குப் போட்டி போட வேண்டாம் என்று அழகிரிக்கு கூறக் கூடியவர்கள் யாரும் கட்சிக்குள் இல்லை. வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி போன்ற தலைவர்கள் ஸ்டாலினுக்கு எதிராக உள்ளனர். அழகிரியின் பின்னால் இவர்கள் நின்றாலும் திராவிட முன்னேற்றக் கழகம் ஸ்டாலினின் பின்னால் தான் இருக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும். இலட்சக்கணக்கான தொண்டர்களும் ஸ்டாலினின் பின்னால் உள்ள முரசொலியின் நிர்வாகப் பொறுப்பு ஸ்டாலினின் மகன் உதயநிதியிடம் உள்ளது. சன் தொலைக்காட்சியில் புதிய நிர்வாகியாக ஸ்டாலினின் விசுவாசி கலியப் பெருமான் நியமிக்கப்பட்டுள்ளார். மாறன் சகோதரர்கள்ஸ்டாலினையே ஆதரிப்பார்கள்.அடுத்ததலைவர் யார் என்றகேள்வி எழுந்தால்ஸ்டாலினின்கையே ஓங்கும்.வைகோ,விஜயாகந்த் போன்று புதியகட்சியை வழிநடத்தும் தலைமைப்பொறுப்பு அழகிரியிடம் இல்லை.
ஜெயலலிதாவுக்கு எதிராகக் கர்நாடகாவில் நடைபெறும் வருமானங்களுக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கின் பிடி இறுகுவதில ஜெயலலிதாவுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரச தரப்பில் ஆஜராகி வாதாடும்வழக்கறிஞர் ஆச்சாரியாவின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது ஜெயலலிதா பலமுறை திண்டாடினார். இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவைக் காப்பாற்றுவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி முயற்சிக்கிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 50 வருடங்களாக நீதித்துறையில் இருக்கும் இவர் 2004 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் ஆஜராகி வாதாடி வருகிறார். அரசு தரப்பு வக்கீலாக கடமையாற்றும்ஆச்சார்யாவை அட்வகேட் ஜெனரலாக கர்நாடக அரசு நியமித்தது.
அட்வகேட் ஜெனரல், அரச தரப்பு வழக்கறிஞர் ஆகிய இரட்டைப் பதவியை ஒருவர் வகிக்கக் கூடாது என்று வக்கீல் வீரபத்தையா என்றவர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். ஒருவர் இரட்டைப் பதவி வகிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அட்வகேட் ஜெனரல் பதவி மதிப்புமிக்கது. கௌரவமானது. ஆகையினால் அரச தரப்பு வழக்கறிஞர் பதவியை க்கைவிடுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். கௌரவப் பதவியை விட நீதியை நிலை நாட்டுவது தான் முக்கியம் எனக் கருதிய ஆச்சாரியா அட்வகேட் ஜெனரல் பதவியைத் துறந்தார்.
பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமாக பழகுகின்றார்கள். அடுத்த நாடாளுமன்றத்தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க பாரதீய ஜனதாக் கட்சி முயற்சிக்கிறது. இதேவேளை, அடுத்த பிரதமர் ஆசையில் ஜெயலலிதா மிதக்கிறார். பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஜெயலலிதாவின் ஆதரவு தேவைப்படும் போல் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவை ஜெயலலிதா எதிர்பார்க்கிறார்.
பாரதீய ஜனதாக் கட்சியுடனான ஜெயலலிதாவின் இணைப்பின் முதற் கட்டமே ஆச்சாரியா தான்மீதான பாய்ச்சலாகச்
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவிடம் விசாரணை நடைபெறவுள்ளது. சசிகலாவின் சாட்சியில் ஜெயலலிதாவுக்கு எதிராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஜெயலலிதாவைத்திணறவைத்த ஆச்சார்யா வின் கேள்விகள்சசிகலாவையும் திணற வைக்கும் என்பது வெளிப்படையே. சசிகலாவிடம் தான் கேள்விகள் கேட்கக் கூடாது என்று மறைமுகமாகச் செயற்பட்டவர்களில் முகத்தில் கரியைப் பூசி உள்ளார் ஆச்சார்யா.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 26/02/12

Subscribe to:
Posts (Atom)