Friday, May 11, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 1

உலகின் மிகப் பிரமாண்டமான ஒலிம்பிக்கை நடத்த இங்கிலாந்து தயாராகி விட்டது. ஜூலை மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் ஒலிம்பிக் திருவிழா ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதிவரை நடைபெறும். தடகளம், மரதன், சைக்கிள் ஓட்டம், டெனிஸ், ஹொக்கி, துப்பாக்கி சுடுதல், கைப்பந்து, உதைபந்தாட்டம், குத்துச்சண்டை, நீச்சல், ஜிம்னாஸ்ரிக், கூடைப்பந்தாட்டம் உட்பட சுமார் 90 க்கும் அதிகமான போட்டிகளில் தங்கப் பதக்கம் பெறுவதற்காக வீரர்கள் தயாராகியுள்ளனர். சுமார் 10,500 க்கும் அதிகமான போட்டிகளைக் கண்டு மகிழ ரசிகர்கள் தயாராகி விட்டனர்.
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தடகள வீரர்களின் கனவாகும். பழைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பல வீரர்களிடம் உள்ளது. வளமான நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களுக்கு பல வசதிகளைச் செய்துள்ளன. வறுமையில் வாடும் öகன்யா, எத்தியோப்பியா போன்ற நாட்டுத் தடகள வீரர்கள் மிக எளிதாக தங்கத்தைத் தட்டிச் சென்று விடுகிறார்கள். உசைன் போல்ட் புதிய சாதனை செய்வார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
100 மீ, 200 மீ , 400 மீ தடைதாண்டல் ஆகிய போட்டிகளைப் பார்க்கும் ரசிகர்கள் பதற்றத்தின் உச்சிக்கே போய் விடுவார்கள். தகுதிகாண் போட்டிகளே பரபரப்பை ஏற்படுத்தி விடும். இப்போட்டிகளைப் பார்ப்பதற்கே ரசிகர் கூட்டம் அதிகமாக இருக்கும். ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கும் போட்டிகளில் ரி@லயும் ஒன்று வீரர்களின் மின்னல் வேக ஓட்டம் இதயத் துடிப்பை அதிகமாக்கி விடும். நீச்சலில் போட்டி மட்டுமல்ல நளினமும் உண்டு. பல வீர வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நடத்தும் அசைவுகள் ரசிகர்களை வியக்க வைக்கும்.
இது உடம்பா அல்லது இறப்பரா என்று வியர்க்க வைப்பது ஜிம்னாஸ்டிக். வீர வீராங்கனைகள் அந்தரத்தில் சுழலும் போது கீழே விழுந்து கையை காலை முறித்து விடுவார்களோ என்ற பதைபதைப்பு ஏற்படும். கோடிக் கணக்கான ரசிகர்கள் எதிர்பார்க்கும் போட்டியில் உதைபந்தாட்டமும் ஒன்று. ஒலிம்பிக் உதைபந்தாட்ட போட்டியில் 16 நாடுகள் விளையாடத் தகுதியை பெற்றுள்ளன. ஆறு மைதானங்களில் உதைபந்தாட்டப் போட்டி நடைபெறவுள்ளது.
ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து எகிப்து, காபோன், மொராக்கோ, செனகல், ஆசியக் கண்டத்தில் இருந்து ஜப்பான், தென்கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்காமத்திய அமெரிக்காவிலிருந்த ஹொண்டூராஸ், மெக்ஸிக்கோ ஓசியானாத் தீவுகளில் இருந்து நியூஸிலாந்து, தென் அமெரிக்காவிலிருந்து பிரேஸில் உருகுவே, ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து பெலாரஸ், ஸ்பெ#ன், சுவிற்ஸர்லாந்து ஆகிய நாடுகள் ஒலிம்பிக் உதைபந்தாட்ப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் இங்கிலாந்து நேரடியாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது. 2004 ஆம் ஆண்டும் 2008 ஆம் ஆண்டும் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற ஆர்ஜென்டீனா இம்முறை தகுதி பெறவில்லை.
ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
குழு "ஏ' இல் இங்கிலாந்து, செனகல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உருகுவே.
குழு  "பி' இல் மெக்ஸிக்கோ, தென்கொரியா, கெபொன், சுவிற்ஸர்லாந்து.
குழு  "சி' இல் பிரேஸில், எகிப்து, பெலாரஸ், நியூஸிலாந்து.
குழு  "டி' இல் ஸ்பெயின், ஜப்பான், ஹொன்டூரஸ், மொராக்கா ஆகியன உள்ளன.

எகிப்து
ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் எகிப்து 12 தடவைகள் பங்குபற்றியுள்ளது. 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்ரர் டாம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 1964 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற போட்டியிலும் நான்காம் இடத்தைப் பெற்றது. 1928 ஆம் ஆண்டு இத்தாலியு டனும் 1964 ஆம் ஆண்டு மேற்கு ஜேர்மனியுடனும் மூன்றாவது இடத்தைப் பிடிக்க போராடித் தோல்வியடைந்தது. உள்நாட்டு அரசியல் காரணமாக 1956, 1980 ஆம் ஆண்டுகள் நடைபெற்ற ஒலிம்பிக்கில் எதிலும் பங்குபற்றவில்லை.
12 தகுதிகாண் போட்டிகளில் விளையாடிய எகிப்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒரு போட்டியை சமன் செய்தது. எகிப்து 12 கோல்களை அடித்தது. எகிப்துக்கு எதிராக ஆறு கோல்கள் அடிக்கப்பட்டன.
அஹமட் எல் ஜெனவி, ஷகீப் எல் டின் அஹமட், அஹமட் ஷேசிடா மாவன் மொசீன், மொஹமட் எல் நெனி ஆகிய வீரர்கள் மீது எகிப்து ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அஹமட் ஹேவிடனா மாவன் மொசீன் ஆகியோர் தகுதி காண் போட்டிகளில் தலா மூன்று கோல் அடித்துள்ளனர்.
பிரேஸில், பெலாரஸ், நியூஸிலாந்து ஆகியவற்றுடன் குழு "சி'யில் உள்ளது எகிப்து.


கெபொன்
ஒலிம்பிக் உதைப்பந்தாட்டப் போட்டியில் முதன் முதலாக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது கெபொன். இளம் வீரர்களைக் கொண்ட கெபொன் உதைபந்தாட்ட அணி, ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள பலம் வாய்ந்த அணிகளுக்குச் சவாலாக உள்ளது.
எகிப்து,. தென்னாபிரிக்கா ஆகியவற்றுடனான முதல் சுற்றுப் போட்டிகளை வெற்றி தோல்வியின்றி சமமாக முடித்தது கெபொன், ஐவரிகோஸ்டை 3  1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நம்பிக்கையளித்தது கெபொன். குழு "ஏ'யில் முதலிடம் பெற்ற செனகலுடனான போட்டியில் மேலதிக நேரத்தில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது கெபொன்.
இமானுவில் டொப் மபா மீது ரசிகர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர். பெற்றி எம்ரிக், ரெமி எபெங்கா, அலென் நொறொ, அன்ரி பியங் பொகோ ஆகியோரின் பங்களிப்பு கைபொன் உதைபந்தாட்ட அணியை ஒலிம்பிக் போட்டி வரை கொண்டு சென்றது.
மொராக்கோ
டோக்கியோவில் 1964 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் மொராக்கோ உதைபந்தாட்ட அணி முதன் முதல் விளையாடும் தகுதியைப் பெற்றது. ஏழு தடவை ஒலிம்பிக்கில் விளையாடிய தகுதி பெற்ற மொ@ராக்கா இரண்டாவது சுற்றுக்குச் செல்லவில்லை. 2011ஆம் ஆண்டு 23 வயதுக்குட்பட்ட ஆபிரிக்கக் கிண்ண இறுதிப் போட்டியில் கபோனிடம் 2  1 என்ற கோல் கணக்கில் மொராக்கோ தோல்வியடைந்தது. அப்போது ""இத்தோல்வி பற்றி நாம் கவலைப்படவில்லை. 2012 ஒலிம்பிக்கில் நாம் விளையாடுவோம்'' என்று பயிற்சியாளர் கூறினார். அவர் கூறியது போன்றே மொ@ராக்கோ ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றது.
செனகலுடனான போட்டியில் 1  0 என்ற கோல் கணக்கிலும் கெபானுடனான போட்டியில் 2  0 என்ற கோல் கணக்கிலும் மொ@ராக்கோ தோல்வியடைந்தது. 23 வயதுக்குட்பட்ட ஆபிரிக்கக் கிண்ணப் போட்டியில் 3  2 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தியது.
செனகல்
செனகல் உதைபந்தாட்ட அணி முதன் முதலில் ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. கெபானுடனான தகுதி காண்போட்டியில் 2  0 என்ற கோல் கணக்கில் செனகல் தோல்வியடைந்தது. அல்ஜீரியாவுக்கு எதிரான தகுதிகாண் போட்டியில் தோல்வியடைந்தது செனகல், நைஜீரியா, மொ@ராக்கோ ஆகியவற்றுக்கு எதிரான போட்டிகளிலும் செனகல் தோல்வியடைந்தது. கொபõனுடனான அரையிறுதிப் போட்டியில் 1  0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ரமணி

மெட்ரோநியூஸ் 06/05/12

லண்டனில் தங்கத் திருவிழா

Wednesday, May 9, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 32

 முதியவர் ஒருவர் இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்வதற்குப் பக்கத்து வீட்டு இளைஞனையும் அழைத்துக் கொண்டு பெண் பார்க்கச் செல்கிறார். முதியவருடன் வந்த இளைஞனின் அழகில் மனதைப் பறிகொடுத்த  பெண் இளைஞன் தான் மணமகன் என நினைத்து சந்தோஷக் கனவில் மிதக்கிறõள். தன்னைப் பெண் பார்க்க வந்தது முதியவர் என்பதை மண மேடையில் அறிந்து அதிர்ச்சியடைகிறாள். இளைஞனை மனதில் நினைத்துக் கொண்டு முதியவரின் தாலியைக் கழுத்த்தில் சுமக்கும் இளம் பெண் ணின் கதை தான் தாலி பாக்கியம்.
எம்.ஜி.ஆரின் பக்கத்து வீட்டில் சரோஜாதேவி வசிக்கிறார்.  சிறு வயது முதலே பழகும் எம்.ஜி. ஆரும் சரோஜாதேவியும் பருவ வயதை அடைந்ததும் காதல் வலையில் வீழ்கிறார்கள். சரோஜாதேவியின் தகப்பன் மறுமணம் செய்வதற்காகப் பெண் பார்க்கப் போகும் போது எம்.ஜி. ஆரையும் அழைத்துச் செல்கிறார். மணமகளான எம்.என். ராஜம் தனது எதிர்காலக் கணவன் எம்.ஜி.ஆர் எனத் தவறாக நினைத்து மனதைப் பறிகொடுக்கிறாள். எஸ்.வி. சுப்பையாவுக்கு எம்.என். ராஜத்தைப் பிடித்து விடுகிறது. ஆகையால் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கிறார் எம்.ஜி.ஆர். தான் தனது கணவன் என்ற கனவில் மிதக்கும் எம்.என். ராஜம் திருமண நாளை எதிர்பார்க்கிறாள்.மணமேடையில் எஸ்.வி. சுப்பையாவைக் கண்ட எம்.என். ராஜம் அதிர்ச்சியடைகிறாள். சந்தர்ப்ப சூழ்நிலையினால் எஸ்.வி. சுப்பையாவுக்கு மனைவியாகிறாள் எம்.என். ராஜத்தின் மனதில் எம்.ஜி. அதன் உருவம் ஆழமாகப் பதிந்ததனால் எம்.ஜி. ஆரை மறக்க முடியாது தடுமாறுகிறார் எம்.என். ராஜம். தன் மனதில் உள்ள ஆசையை ஒருநாள் எம்.ஜி.ஆரிடம் கூறுகிறார் எம்.என். ராஜம். எம்.என்.ராஜத்தின் விபரீத ஆசை தவறெனக் கூறுகிறார் எம்.ஜி.ஆர். எம்.என். ராஜத்துக்கும் புத்திமதி கூறி அனுப்புகிறார். இவர்கள் பேசியதை மறைந்திருந்து கேட்ட நம்பியார் தனது குள்ளநரித்தனத்தால் எம்.ஜி. ஆரின் குடும்பத்துக்கும் எஸ்.வி. சுப்பையாவின் குடும்பத்துக்கும் இடையில் பூசலை உருவாக்குகிறார். நம்பியாரின் மிரட்டலுக்குப் பணிந்த எம்.என். ராஜமும் இதற்கு உடந்தையாகச் செயற்படுகிறார்.
குடும்பப் பிரச்சினை விஸ்வரூபமானதால் எம்.ஜி.ஆ.ரின் மீதான சரோஜாதேவியின் காதலுக்குத் தடை ஏற்படுகிறது. சரோஜா தேவியின் கழுத்தில் தாலி கட்டுவேன் என்று எம்.ஜி.ஆர். சவால் விடுகிறார். சரோஜாதேவியின் கழுத்தில் எம்.என். ராஜம் தாலியைக் கட்டி விட்டு எம்.ஜி.ஆர். திருட்டுத் தாலி கட்டி விட்டதாகக் கூறுகிறார். இந்தப் பிரச்சினையை விசாரித்த ஊர்ப் பஞ்சாயம் எம்.ஜி.ஆரை ஊரைவிட்டு விலக்கி வைக்கிறது. தான் குற்றமற்றவன் என்பதை இறுதியில் நிரூபிக்க எம்.ஜி.ஆர். சரோஜாதேவியை கரம் பிடிக்கிறார்.
எம்.ஜி.ஆர். சரோஜாதேவி, எஸ்.வி. சுப்பையா எம்.என். நம்பியார், வி. நாகையா நாகேஷ், மனோரமா ஆகியோர் நடித்தனர். புளுவாரூர்சுந்தராமவின் மூலக் கதைக்கு ஆருர்தாஸ் வசனம் எழுதினார். பாடல்கள் வாலி, இசை கே.வி. மகாதேவன். அன்னை இல்லாமல் பிறந்தவர் யார், கண் பட்டது நெஞ்சம் புண்பட்டது நெஞ்சம், உள்ளம் ஒரு கோயில், இதயத்தை அந்த இறைவன் படைத்து வைத்தான் ஆகிய பாடல்கள் கதைக்கு வலுச் சேர்த்தன.
வரலஷ்மி நிறுவனத்தின் பெயரில் கண்ணாம்பா தயாரித்த இப்படத்தை அவரது கணவன் கே.பி. நாகபூஷணம் இயக்கினார்.
ரமணி
மித்திரன்13/05/12

Tuesday, May 8, 2012

திரைக்குவராதசங்கதி36

துரை இயக்கிய "அவளும்பெண்தானே'படம் பெருவெற்றி பெற்றது. தமிழில் பெற்றஅதே வெற்றியை கன்னடத்திலும் பெறவேண்டும் என விரும்பிய துரை அதேகதையை "முகியதசுரா' என்ற பெயரில்இயக்கினார். தமிழில் துரையால் அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல நடிகை எனப் பெயர்பெற்ற சுமித்ராதான் கதாநாயகி. கன்னட நடிகர் ராஜேஸ்சுதா நாயகனாக நடித்தார். தமிழில் கிடைத்த வெற்றி கன்னடத்தில் கிடைக்கவில்லை.கன்னடப் பட இயக்குனர் புட்டண்ணா ஒருபடத்தில் மூன்று வித்தியாசமான கதைகளைக்கூறியிருந்தார். அந்த மூன்று கதைகளில்ஒரு கதையில் ரஜினி நடித்தார். கன்னடரசிகர்களிடையே அந்தக் கதை மூலம் ரஜினிபிரபல்யமானார். ரஜினியின் புகழ் ஏறிக்கொண்டிருந்தபோது அவரை வைத்து ஒருபடமாவது இயக்க வேண்டும் என்று துரைவிரும்பினார். அவரின் ஆசை தீர சதுரங்கம் பாவத்தின்சம்பளம் ரகுபதிராகவராஜாராம் ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய நான்குபடங்களை ரஜினியை வைத்து இயக்கினார்துரை.
சதுரங்கம் படத்தில் அப்பாவி வேஷம். பாவத்தின் சம்பளத்தின் கதை ரஜினியிலிருந்துஆரம்பமாகும். யக்ஷகானம் என்ற மலையாளப் படத்தையே ஆயிரம் ஜென்மங்கள்என்ற பெயரில் இயக்கினார் துரை.ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்தார் ரஜினி. அப்படத்தில் லதாநடித்தால் நன்றாகஇருக்கும் எனநினைத்தார்துரை. உலகம்சுற்றும் வாலிபனில்எம்.ஜி. ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்லதா. எம்.ஜி.ஆர். முதல்வரானதும் லதாநடிக்க மாட்டார் என்று பலர் நினைத்தார்கள்.லதாவைச் சந்தித்து நடிப்பதற்கு முடியுமாஎனக் கேட்டார் துரை. எந்தவிதமான தயக்கமும் இன்றி ஒப்புக் கொண்டார் லதா. அதன்பின்னர் பல நடிகர்களுடன் இணைந்து நடித்தார் லதா.ஸ்ரீப்ரியா தயாரித்த நீயா படத்தை துரைஇயக்கினார். அந்தப் படம் அவருக்கு பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது.இயக்குனர் துரைக்கு அகில இந்திய அளவில்பெரும் வரவேற்பைக் கொடுத்த படம்"பசி'.
 "பசி' படத்தின் கதை துரையின் மனதில்மிக நீண்ட நாட்களாக இருந்தது. தனக்குசந்தர்ப்பம் கிடைத்த வேளைகளில் எல்லாம்அந்தக் கதையை பலருக்கும் கூறினார்.சிறந்த கதை எனக் கூறினார்களே தவிர அதனைப் படமாக்க எவரும் முன்வரவில்லை.குறைந்த பட்ஜட்டில் தயாரான துரையின்படங்கள் எல்லாம் 50 நாட்களைத்தாண்டிஓடும் என்றதால் துரையிடம் கதை கேட்கபலர் ஆவலாக இருந்தார்கள்.பசி கதையில் நம்பிக்கை கொண்ட துரைஅதனை தானே தயாரிக்க முடிவு செய்தார்.ஷோபாவின் நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்துவருவதால் ஷோபாவையே கதாநாயகியாக்க முடிவு செய்தார். புதிய நடிகர்கள்நடித்தால்தான் பசியின் தாக்கத்தை ரசிகர்கள்உணர்வார்கள் என்பதால் புது முகங்களைத்தேடினார்.பிரவீணா செந்தில் சத்யாநாராயணன்ஆகியோர் துரையின் கண்டுபிடிப்புகள். பிரவீணா சிறந்த நடிகை. பின்னர் பாக்யராஜைமணந்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப்போட்டு விட்டார்.செந்திலைப் பற்றிசொல்லவே வேண்டா
ம். செந்தில்என்ற பெயரைக்கேட்டால் சிரிப்புத்தான்வரும். சத்யாவும் நாராயணனும்பசி சத்தியா பசி நாராயணன் என்றேஅழைக்கப்படுகின்றனர்."பசி' படத்தில்பிராமணப் பெண்ணாகஷோபா நடித்ததனால் பிராமணப் பெண்களின் நடை உடை பாவனைகளைக் கவனிக்கச் செய்தார்.படப்பிடிப்பு முழுவதும் சேரியிலே நடந்ததால்சேரி வாழ்க்கை பற்றியும் ஷோபா அறிவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்.
டெல்லிகணேஷ் ரிக்ஷா ஓட்டுபவராக நடித்தார். அதற்காக புது ரிக்ஷா ஒன்று வாங்கி ரிக்ஷாவைஎப்படி ஓட்டுவது என்று டெல்லிகணேஷ் பழகுவதற்கும் ஏற்பாடு செய்தார்துரை.படப்பிடிப்பு ஒத்திகையை ஸ்ரூடியோவில்நடத்திய பின்பு சேரியில் உண்மையானபடப் பிடிப்பு நடைபெறும். சேரியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்பது தெரியாதவகையில் மிகவும் யதார்த்தமாகப் படப்பிடிப்பை நடத்தினார் துரை.மேக்கப் இல்லை. பாட்டு இல்லை. டான்ஸ்இல்லை. ரசிகர்களைக் கவரும் எவையுமேஇல்லாமல் 22 நாட்களில் படப்பிடிப்புமுடிந்தது. படப்பிடிப்பு முடிந்து விநியோகஸ்தர்களுக்குப் போட்டுக் காட்டினார்.பார்த்தவர்கள் பாராட்டினார்கள். விநியோகிக்க யாருமே முன்வரவில்லை. சற்றும்சளைக்காத துரை எழுத்தாளர்களையும் தயாரிப்பாளர்களையும் எல்லா மொழிஇயக்குனர்களையும் அழைத்து படத்தைக்காட்டினார். அனைவரும் பாராட்டினார்களேதவிர படத்தை வாங்க முன்வரவில்லை.பசி படத்தை துரை வெளியிட்டார். ஓடாதுஎன விநியோகஸ்ர்களால் ஒதுக்கப்பட்ட பசிஓகோ என ஓடியதுடன் விருதுகளையும்அள்ளிக் குவித்தது. பசி படத்தைப் பார்த்தபெண்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.அகில இந்திய சிறந்த நடிகைக்கான "ஊர்வசி' விருதை ஷோபா பெற்றார். சிறந்த மாநில மொழிப் படத்துக்கான மத்திய அரசின்விருது. தமிழக அரசின் விருது. மாநில மொழிப் படத்தின் சிறந்த இயக்குனர் துரை எனபல விருதுகளை "பசி' பெற்றது.
ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும் "பசி' திரையிடப்பட்டு பாராட்டுதல்களைப் பெற்றது.
"பசி' படத்தின் வெற்றி விழா சென்னையில்நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.வெற்றி விழா நடைபெறும் தினத்தில்தான்ஷோபா தற்கொலை செய்தார். வெற்றிவிழாவை ரத்துச் செய்து ஷோபாவுக்குஇறுதி அஞ்சலி செலுத்தினார் துரை.
ரமணி
மித்திரன்19.11.2006

Sunday, May 6, 2012

ஒதுங்கினார் கருணாநிதிமகிழ்ச்சியில் ஜெயலலிதா


புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடாம@ல அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இடைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவது மிகவும் அபூர்வமாகவே நடைபெறும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது நடைபெற்ற இடை தேர்தல்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணித்தது. அதேபோன்ற ஒரு நிலை தான் இப்போது ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்த அதேபோன்ற ஒரு முடிவினையே இப்போது திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துள்ளது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கட்டுப்பணத்தை இழந்தன. அதேபோன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்ற எச்சரிக்கையினால் திராவிட முன்னேற்றக் கழகம் இடைத் தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளது.
புதுக்கோட்டைத் தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெரியண்ணன் அரசு மீண்டும் இடைத் தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. முன்னாள் அமைச்சர் ரகுபதியின் பெயரும் பரிசீலனையில் இருந்தது. இவர்கள் இருவரும் ஸ்டாலினின் ஆதரவாளர்கள் என்பதால் இடைத் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் யாருக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே இருந்தது. இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கருணாநிதி அறிவித்தலால் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாந்துள்ளனர்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடாது ஒதுங்கிக் கொண்டதனால் காங்கிரஸ் கட்சி போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் தமது செல்வாக்கை இழந்துள்ள காங்கிரஸ் கட்சி, புதுக்கோட்டை இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் களமிறங்கக் காத்துள்ளது. புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தோல்வி உறுதி என்று தெரிந்தும் தமக்கு உள்ள வாக்கு வங்கியை கணிப்பிடும் ஒரு சந்தர்ப்பமாகவே இந்த இடைத் தேர்தலைக் கணிக்க உள்ளது காங்கிரஸ் கட்சி.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சிகள் இன்னமும் தயாராகவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புதுக்கோட்டையில் முகாமிட்டுத் தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டது சங்கரன் கோவில் தேர்தலில் விழுந்த பலத்த அடியினால் எதிர்க்கட்சிகள் புதுக்கோட்டைத் தொகுதியில் இன்னமும் காலடி எடுத்து வைக்கவில்லை. வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் தமிழக அமைச்சு பட்டாளம் புதுக்கோட்டையை முற்றுகையிட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து புதுக்கோட்டை இடைத் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தக் கூடிய நிலை இல்லை. எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமாக@வ உள்ளது. தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இருந்து கொம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. திராவிடக் கழகங்களின் ஆதரவுடன் தமிழகத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டை இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து ஒதுங்கி கொண்டுள்ளது.
தமிழக அரசியலில் அசைக்க முடியாத பெரும் சக்தியாக விளங்கும் ஜெயலலிதா முன்னதாக@வ இடைத் தேர்தல் கோதாவில் இறங்கியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்குத் துணிவின்றி எதிர்க்கட்சிகள் தடுமாறுகின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் இருந்து பின்வாங்கியுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான கார்த்திக் தொண்டமான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2001 ஆம் ஆண்டு அடியாட்களுடன் சென்று சித்தி முறையான பெண்மணியை மிரட்டியதாக கார்த்திக் தொண்டமான் மீது புகார் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் 2003 ஆம் ஆண்டு மூன்று மாத சிறையும் 3 ஆயிரம் ரூபா அபராதமும் கார்த்திக் தொண்டமானுக்கு விதிக்கப்பட்டது.
நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறை யீடு செய்துள்ளார் கார்த்திக் தொண்டமான். இக் குற்றச்சாட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை பாதிக்கப் போவதில்லை, எதிர்க்கட்சியினர் இதனை பெரிய விசயமாகத் தூக்கிப் பிடித்தாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இதனையிட்டு கவலைப்படப் போவதில்லை.
ஜெயலலிதாவின் தயவினால் தமிழக சட்ட சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் விஜயகாந்த் புதுக்@காட்டை இடைத்@தர்லில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளார். இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பியவர்களிடம் விருப்பு மனுக்கள் வாங்கப்படுகின்றன. தமிழக சட்ட சபையின் எதிர்க்கட்சியாக விஜயகாந்த் இருந்தாலும் இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பின்னாலேயே விஜயகாந்தின் கட்சி உள்ளது. பலமான கூட்டணி இன்றி விஜயகõந்த் வெற்றி பெற முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது.
மாக்ஸிட் கொம்யூனிஸ்ட் கட்சி, விஜயகாந்தின் @வட்பாளருக்கு ஆதரவு வழங்கும் தமிழகத்தில் அதிக செல்வாக்கு இல்லாத மாக்சிஸ்ட் கட்சியினால் விஜயகாந்துக்கு மிகப் பெரிய இலாபம் எதுவும் கிடைக்கப்போவ தில்லை. புதுக்கோட்டைத் தொகுதியில் வெற்றிபெற்ற கொம்யூனிஸ்ட் கட்சி இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளது.
ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்ட கொம்யூனிஸ்ட் கட்சி, அண்ணா திராவிட முன்@னற்றக் கழகத்தை எதிர்த்துப் பிரŒõரம் öŒ#யுமா அல்லது ஒதுங்கி இருக்குமா என்று அறிவிக்கவில்லை.
புதுக்கோட்டை இடைத்தேர்தல் மும்முனைப் போட்டியாக நடைபெற உள்ளது. வேறு சில உதிரிக் கட்சிகளும் சுயேட்சைகளும் இடைத் தேர்தலில் போட்டியிட்டாலும் அவற்றினால் மிகப் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படப் போவதில்லை.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு06/05/12

Friday, May 4, 2012

திரைக்குவராதசங்கதி35


தமிழ்த் திரை உலகின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் துரை. திரைப்படத் துறையால் கவரப்பட்ட ஆர்வமுள்ள இளைஞர்களைப் போலவே இயக்குனராக வேண்டும்என்ற ஆர்வம் துரையிடமும் இருந்தது. சினிமாத்துறைக்கு கொஞ்சமும் சம்பந்தம்இல்லாத குடும்பத்தில் பிறந்தவர் துரை.கதை எழுதுவதில் அதீத ஆர்வம் இருந்ததால்சினிமாவில் ஜெயித்து விடலாம் என்றநம்பிக்கை துரையிடம் அளவுக்கு அதிகமாகஇருந்தது.
துரையின் சினிமா ஆசைக்கு பாதைஅமைத்துக் கொடுத்தவர் பிரபல இயக்குனர்யோகானந்த். யோகானந்தின் குடும்ப டாக்டரிடம் துரையின் சகோதரி உதவியாளராகஇருந்தார். அந்த டாக்டரின் சிபார்சுக் கடிதத்துடன் மனதில் ஏராளமான கனவுகளை சுமந்தபடி இயக்குனர் யோகானந்தைச் சந்தித்தார்துரை.
டாக்டர் கொடுத்த சிபார்சுக் கடிதத்தைக்கொடுத்து யோகானந்தின் காலைத் தொட்டுக்கும்பிட்டு தனது சினிமா ஆசையைக்கூறினார் துரை. தமிழ் சினிமாக் கதையைஅறிஞர்களும், கலைஞர்களும் புடம் போட்டுக்கொண்டிருந்த காலம். புதியவரானதுரையின் கதை எடுபடுமா என்று யோகானந்த் சிந்தித்தார்.
துரையின் சினிமா ஆசைக்கு தடை போடவிரும்பாத அவர் சினிமாத் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டால் எழுத்தாளராகவோ அல்லது இயக்குனராகவோ நிலைத்துநிற்க முடியும் என்றுஆலோசனை வழங்கினார். அவரது ஆலோசனையின்பிரகாரம்ஒலிப்பதிவாளர் ரங்கசாமியிடம் உதவியாளராகச் சேர்ந்தார் துரை.
சினிமாதான் வாழ்க்கை என்ற ஆர்வம் மனதில்ஆழப் பதிந்ததனால் மிகுந்த அக்கறையுடன் பயிற்சி பெற்றார். ஓய்வு நேரங்களில்எடிட்டிங் ரூமிக்குச்சென்று எடிட்டிங்பயின்றார். நாகேஸ்வரராவ், அஞ்சலி தேவிநடித்த "அனார்கலி'என்ற தெலுங்குப்படத்தில் "ஒலிப்பதிவுஉதவி  துரை' என்றஎழுத்து மின்னியது.
தனது பெயரைப்பார்ப்பதற்காக உறவினரையும், நண்பர்களையும் தியேட்டருக்கு அழைத்துச்சென்றார்.ஒலிப்பதிவில் திறமையைக் காட்டினாலும் இயக்குனர் என்றகனவு அடிக்கடி துரையின் மனதில் தோன்றிமறைந்தது. ஒலிப்பதிவாளராகக் கடமையாற்றும் படத்தின் இயக்குனர்களிடம்வாய்ப்புக் கேட்டார். வேலை இல்லாதவேளையில் திரைப்படக் கம்பெனிகளுக்கும் சென்று வாய்ப்புக் கேட்டார். யாரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை.
கல்யாண்குமார் தான் நடித்த படத்தின் பாடல்காட்சி ஒன்றைப் பார்ப்பதற்காக துரைவேலை செய்த ஸ்டூடியோவிலுள்ளதியேட்டருக்குச் சென்றார். அப்போதுபுரொஜக்டரை இயக்குபவர் வெளியில்சென்று விட்டார். ஏமாற்றத்துடன் திரும்பியபோது எனக்கு புரொஜக்டரை இயக்கத் தெரியும் வாருங்கள் என்று துரை அழைத்துச்சென்று அப்பாடல் காட்சியை போட்டுக்காட்டினார்.
துரையின் அந்த உதவி கல்யாண்குமாரின்மனதைக் கவர்ந்து விட்டது. எந்த உதவியும்எப்போது வேண்டுமானாலும் தயங்காமல்கேட்கலாம் என்று வாக்குக் கொடுத்தார் கல்யாண்குமார். அதன் பின்னர் கல்யாண்குமாரும் துரையும் மிகவும் நெருக்கமானார்கள்.
தான் எழுதிய கதைகளை கல்யாண்குமாருக்குக்காட்டினார் துரை. துரையின் கதைகளைப் படித்த கல்யாண்குமார் பிரபல கன்னடஇயக்குனரான ஜி.வி. அய்யரிடம் துரையைஅறிமுகப்படுத்தினார்.
துரையின் கதைகளைப் படித்துப் பார்த்தஜி.வி. அய்யர் கதை எழுதும் வேலையைதுரைக்கு கொடுத்ததுடன் உதவி இயக்குனர்பணியையும் ஒப்படைத்தார்.தமிழ்ப்படஇயக்குனராக வரவேண்டும் என்று விரும்பிய துரை கன்னடப்பட உதவி இயக்குனராகினார். கன்னட சூப்பர்ஸ்டாரான ராஜ்குமார், கல்யாண்குமார், உதயகுமார் ஆகியகலைஞர்களுடன் ப‌ணியாற்றியபடி கன்னடம் கற்றுக் கொண்டார்.பெங்களூர் ரயில் நிலையத்தில் தனியாகச்செல்லும் பெண்ணை வழிமறித்து கத்தியைக் காட்டி வில்லன் மிரட்டும் காட்சிஅன்று படமாக்கப்பட்டது. எப்படி நடிக்கவேண்டும் என்று பல தடவை துரை நடித்துக்காட்டியும் வில்லனாக நடித்தவரால் நடிக்கமுடியவில்லை. வெறுப்புற்ற இயக்குனர்ஜி.வி. அய்யர், நீ நல்லா நடிக்கிறாய் நீயேவில்லனாக நடி என்றார். இயக்குனர் கனவில்திரைத் துறைக்குள் நுழைந்த துரை வில்லன் நடிகரானார்.துணை இயக்குனராக இருந்து கொண்டேகன்னடப் படங்களுக்கு கதை எழுதினார்.
அவருடைய கதையில் வெளியான கன்னடப் படங்கள் வெற்றி பெற்றன. துரைதுணை இயக்குனராகப் பணியாற்றிய படங்கள் சிலவற்றில் பண்டரிபாய் நடித்தார்.துரையின் கடின உழைப்பையும் திறமையையும் நேரில் பார்த்த பண்டரிபாய் தான் தயாரிக்கப் போகும் படத்துக்கு துரையை இயக்குனராக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.பண்டரிபாயின் கணவர் துரையிடம் தமதுவிருப்பத்தைத் தெரிவித்தார். துரை உடனடியாக ஒப்புக் கொண்டார். பெண்களைக் கவரும் கதைதான் வேண்டும் என்று பண்டரிபாய் கூறினார். தன் மனதில் இருந்த "அவளும் பெண்தானே' என்ற கதையைக் கூறினார் துரை.இந்தக் கதையில் புதுமுகம் நடித்தால்தான்நன்றாக இருக்கும் என்று துரை கூறினார்.பண்டரிபாயும் சம்மதித்தார். அவர்கள் தேடிய போது அகப்பட்டவர்தான் சுமித்ரா.கதையைக் கூறி காட்சிகளை விளக்கப்படுத்திய போது சுமித்ரா நடிக்க சம்மதித்தார். சிலநாட்கள் ஒத்திகை பார்க்கப்பட்டது. அப்போது அப்படத்தின் பாத்திரமாகவே மாறிவிட்டார் சுமித்ரா.1975 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த "அவளும் பெண்தானே' 100 நாட்கள்கடந்து ஓடி நல்ல கதை, நல்ல இயக்குனர்என்ற பெயரை துரைக்குத் தேடிக் கொடுத்தது.
ரமணி
மித்திரன்12/11/2006

Thursday, May 3, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 31

கணவனின் விருப்பத்துக்காக மது அருந்தி விருந்துகளில் ஆடிப்பாடி மகிழும் சீரழிவை வெளிப்படுத்திய படம் தான் 1972ஆம் ஆண்டு வெளியான அவள் திரைப்படம். வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற குறிப்புடன் வெளியான இப்படத்திற்கு பலத்த விமர்சனங்கள் எழுந்த போதும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.வெண்ணிற ஆடை நிர்மலாவைக் கற்பழிக்கத் துரத்துகிறார் ஸ்ரீகாந்த். மூக்கு முட்டக் குடித்து விட்டு மனைவியின் அபயக்குரலுக்கு உதவ முடியாத நிலையில் கிடக்கிறார். அப்போது குளோசப்பில் தெரியும் துப்பாக்கியிலிருந்து புறப்படும் தோட்டா ஸ்ரீகாந்தின் உயிரைக் குடிக்கிறது. ஸ்ரீகாந்தைச் சுட்டுக்கொலை செய்தது யார் என்ற பரபரப்புடன் படம் ஆரம்பமாகிறது.
சசிகுமாரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும் தம்பதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் ஸ்ரீகாந்தினால் சசிகுமாரின் வாழ்க்கை திசை மாறுகிறது. எந்தவிதமான தீய பழக்கமும் இல்லாத சசிகுமாருக்கு மதுப்பழக்கத்தை அறிமுகப்படுத்துகிறார் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்தின் விருப்பத்துக்காக வேண்டா வெறுப்பாக மது அருந்திய சசிகுமார் இறுதியில் மதுவுக்கு அடிமையாகிறார்.
விருந்துகளில் மது அருந்தி வந்த சசிகுமார் வீட்டிலும் மது அருந்த ஆரம்பித்து வருகிறார். தனக்குத் துணையாகக் குடிப்பதற்கு ஸ்ரீகாந்தின் வீட்டிற்கு அழைக்கிறார். மனைவி வெண்ணிற ஆடை நிர்மலாவையும் வற்புறுத்திக் குடிக்க வைக்கிறார். சசிகுமாரின் விருப்பத்துக்காக குடிக்க ஆரம்பித்த வெண்ணிற ஆடை நிர்மலாவும் குடிக்கு அடிமையாகிறார். விருந்துகளுக்குச் செல்லும் சசிகுமார் மனைவி நிர்மலாவையும் நண்பன் ஸ்ரீகாந்தையும் அழைத்துச் செல்கிறார். விருந்துக்குச் செல்லும் வெண்ணிற ஆடை நிர்மலா குடித்து விட்டு ஆடிப்பாடுவார் சசிகுமார் மற்றவர்களுடன் சேர்ந்து பார்த்து ரசிப்பார்.
ஸ்ரீகாந்தை தனது உற்ற நண்பனாக நம்புகிறார் சசிகுமார். ஸ்ரீகாந்தின் காமக்கண்கள் வெண்ணிற ஆடை நிர்மலாவின் உடம்பை மேயத் தொடங்குகிறது. வெண்ணிற ஆடை நிர்மலாவை அனுபவிக்க வேண்டும் என்ற காமத் தீ ஸ்ரீகாந்தின் மனதில் கொளுந்து விட்டுஎரியத் தொடங்கியது. ஸ்ரீகாந்த் எதிர்பார்த்த அந்த சந்தர்ப்பம் ஒருநாள் கிட்டியது. அளவுக்குமிஞ்சிய மது அருந்திய சசிகுமார் மதுபோதையில் வீழ்ந்து கிடக்கிறார். அப்போது தன் ஆசையைத் தீர்ப்பதற்காக வெண்ணிற ஆடை நிர்மலாவை நெருங்குகிறான் ஸ்ரீகாந்த். மது அருந்தினாலும் மானமிழக்க விரும்பாத வெண்ணிற ஆடை நிர்மலா ஸ்ரீகாந்திடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறாள். அப்போதுதான் அந்தத் துப்பாக்கி ஸ்ரீகாந்தை சுட்டுத்தள்ளுகிறது.
சசிகுமார் வெண்ணிற ஆடை நிர்மலா, ஸ்ரீ காந்த் ,டி.கே.பசுபதி சந்திரபாபு, மனோரம்மா, விஜயமாலா , வீரசாமி ஆகியோருடன் திருப்பு முனையான கதாபாத்திரத்தில் ஏ.வி.எம். ராஜன் நடித்தார். சசிகுமாரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இப்படம் வெளியான சில நாட்களில் தீ விபத்தில் சசிகுமாரும் மனைவியும் மரணமானார்கள் வளர்ந்து வந்த சிறந்த நடிகரைத் திரை உலகம் இழந்து விட்டது.
வெண்ணிற ஆடை நிர்மலா பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்தார். அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன் என்ற பாடலும் வெண்ணிற ஆடை நிர்மலாவின் நடிப்பும் இன்னமும் மனதைவிட்டு நீங்கவில்லை. இப்படத்துக்குப் பின்னர் கற்பழிக்கும் வில்லனாக மாறிவிட்டார் ஸ்ரீகாந்த்.
தோரஹா என்ற பெயரில் ஹிந்தியில் வெளியாகி பரபரப்புடன் வெற்றி பெற்ற படத்தை தமிழில் அவள் என்ற பெயரில் சுந்தர்லால் நஹாதா தயாரித்தார். சங்கர் கணேஷின் இசை படத்துக்கு மெருகூட்டியது. வசனம் ஏ.எல்.நாராயணன். இயக்கம் ஏ.சி.திருலோகசுந்தர்.
ரமணி
மித்திரன்06/05/12